பக்கம்:இரு விலங்கு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

இரு விலங்கு

 வள்ளிநாயகியை அவன் திருமணம் செய்துகொண் டான். அப்பெருமாட்டி ஒரு மானுக்கு மகளாகத் திரு அவ தாரம் செய்தாள். செம்மான் மகளாகத் திகழ்ந்தாள். திருமகள் அம்சம் பெற்றது அந்தச் சிவந்த மான். கரிய திருமாலினுடைய மருகனாக இருக்கிறவன் சிவந்த திரு மகளாகிய மானின் மகளைக் கல்யாணம் செய்துகொண் டான். அவன் எப்படி வள்ளியைத் திருமணம் செய்து கொண்டான் என்பதை இதில் சொல்கிறார்.

வள்ளியைக் களவுகொண்டவன்

கருமால் மருகனைச் செம்மான் மகளைக் களவுகொண்டு

வரும் ஆகுலவனை,

 குலம் - கவலை. 'வள்ளி நாயகியைத் திருட்டுத்தன மாகவாவது எடுத்துச் செல்ல வேண்டும்!’ என்ற கவலை முருகனுக்கு இருந்தது. நேர்மையாக அவளுடைய தந் தையை அணுகி, "எனக்குத் திருமணம் செய்துகொடு" என்று ஆண்டவன் கேட்கவில்லை. தினைப் புனத்தில் தினை காத்துக்கொண்டிருந்த வள்ளி நாயகியிடம் த ன் னை மறைத்துக்கொண்டு சென்றான். திருடர்கள் எப்போதும் தம்முடைய உருவத்தை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள மாட்டார்கள். முருகன் வேடனாகவும், கிழவ னாகவும், வேங்கை மரமாகவும் தன்னுடைய கோலத்தை மாற்றிக்கொண்டான். திருடன் செய்கிற காரியம் இது. பொருளுக்குரியோர் அறியாமல் அந்தப் பொருளை எடுத்துச் செல்வதுதான் களவு. வள்ளிநாயகியை வள்ளி மலைக்கு அரசனாகிய நம்பி ராஜன் வளர்த்து வந்தான். கண்ணை இமை காப்பது போல அவளைக்காப்பாற்றினான். தன்னுடைய மகள் என்று எண்ணி நலங்கள் செய்தான். அவனையும் அறியாமல் திருட்டுத்தனமாக முருகப்பெரு மான் வள்ளியெம்பெருமாட்டியை எடுத்துச் சென்றான்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/66&oldid=1298494" இலிருந்து மீள்விக்கப்பட்டது