உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பின் உருவம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்பின் உருவம்

15

கண்ணாற் காணும் காட்சிகள். இவற்றோடு உள்ளம் வெதும்புதலும் பொய் தவிர்தலும் தளர்ச்சியின்றி நிற்றலுமாகிய பண்புகளும் கருத்துக்குட் பதிகின்றன. அன்புக்கு உருவம் இல்லை; ஆனாலும் அதன் விளைவுகளையெல்லாம் ஒருங்கே காணும்போது," இதுதான் அன்பின் உருவம்!" என்று சொல்வதில் தடை என்ன?