இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்
61
குறிப்பு: முழங்கால்களை வளைக்காமல் கைகளை வைக்கமுடியவில்லை என்றால், கொஞ்சம் வளைந்தாற் போல இருந்தாலும் பரவாயில்லை.
தலையை சற்று நிமிர்த்தி நேராகப் பார்க்கவும்.
பின்னர் முழங்கால்களை கொஞ்சமாக வளைத்து அப்படியே அமர்ந்து வலது முழங்காலை இரு கைகளுக்கிடையில் நுழைக்கவும். இடது காலை இடது கைக்கு வெளிப்புறமாகக் கொண்டு செல்லவும். குறிப்பு: முழங்காலை எவ்வளவு தூரம் முன்னோக்கிச் செலுத்தி வைக்க முடியுமோ, அந்த அளவுக்கு முன்னே கொண்டு சென்று வைக்கவும்.
பிறகு, தொடக்க நிலைக்கு வரவும்.
இரண்டாம் வகை: (Both Knees Between Hands)
குனிந்து செய்யும் பஸ்கியின் தொடக்க நிலையில் இருந்து அமர்ந்து, பின்னர், இரண்டு முழங்கால்களையும் இரண்டு கைகளுக்கிடையில் வைக்கவும்.
வைத்தபிறகு, முடிந்த முன்புறமாக முழங்கால்களை எவ்வளவு. தூரம் தள்ளி செலுத்திட முடியுமோ அவ்வளவு தூரம் முன் செலுத்தி,பிறகு, தொடக்க நிலைக்கு வந்து வேண்டும்.
இந்த பஸ்கியை பலமுறை செய்யவும்.