பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்

61



குறிப்பு: முழங்கால்களை வளைக்காமல் கைகளை வைக்கமுடியவில்லை என்றால், கொஞ்சம் வளைந்தாற் போல இருந்தாலும் பரவாயில்லை.

தலையை சற்று நிமிர்த்தி நேராகப் பார்க்கவும். -

பின்னர் முழங்கால்களை கொஞ்சமாக வளைத்து அப்படியே அமர்ந்து வலது முழங்காலை இரு கைகளுக்கிடையில் நுழைக்க வும். இடது காலை இடது கைக்கு வெளிப்புறமாகக் கொண்டு செல்லவும்.

குறிப்பு: முழங்காலை எவ்வளவு தூரம் முன்னோக்கிச்

செலுத்தி வைக்க முடியுமோ, அந்த அளவுக்கு முன்னே கொண்டு சென்று வைக்கவும்.

பிறகு, தொடக்க நிலைக்கு வரவும். 6)atair ară cvadez: (Both Knees Between Hands)

குனிந்து செய்யும் பஸ்கியின் தொடக்க நிலையில் இருந்து அமர்ந்து, பின்னர், இரண்டு முழங்கால்களையும் இரண்டு ாககளுக்கிடையில் வைக்கவும்.

வைத்தபிறகு, முடிந்த வரை முன்புறமாக முழங்கால் களை எவ்வளவு துரம் தள்ளி செலுத்திட முடியுமோ ß அவ்வளவு தூரம் முன் செலுத்தி, பிறகு, , தொடக்க நிலைக்கு வந்து விட வேண்டும்.

இந்த பஸ்கியை பலமுறை செய்யவும்.