பக்கம்:ஈட்டி முனை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

 பர்களே, நீங்கள் எழுதுங்கள். சிந்தித்து கலையை இலக்கியத்தை வளப்படுத்த முன்வாருங்கள். பழமைக்கு, இருள் எண்ணங்களுக்கு, மடக் கருத்துகளுக்கு, மதக் கற்பனைகளுக்கு, இலக்கியப் புல்லுருவித்தனத்துக்கு சீட்டுக்கிழியுங்கள். சிறுமை காணும் போது, சிறுமைகளை வஞ்ச கத்தை, பொறாமையை - மனிதப்பண்பை மாய்க்க வல்ல அனைத்தையும் - வேரறுக்க வல்ல ஈட்டி முனைகளாக்குக எழுதுகின்ற பேனாக்களே. நிலவையும் காட்சியையும் நீராமின்னாளையும் பற்றி மலைமலையாகக் கலைநூல்கள் எழுதிக் குவித்து விட்டார்கள், அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள், கண்களைக் கண்கள் கவ்வ வெடித்தது காதல் என்று கூறி புராணம் பாடும் ஏடுகள் எவ்வளவோ எழுதிக்கிழித்துவிட்டார்கள். போதும் அவை, தம்பி, உலகைக் கவனி. உலக இலக்கியம் எவ்வளவு வளர்ந்துள்ளது என்பதை எண்ணிப் பார், நமதுஅருமைத் தமிழ் மொழி பழங்குட்டையாய் தேக்கமுற்றுக் கிடப் பதைத் தான் விரும்புகிறாயா? புதுயுகத்தின் பிரதிநிதியாகிய அப்படி அவா வுற மாட்டாய். அது எனக்குத் தெரியும். எதைப் பற்றி எழுதுவது என்று மருளாதே. ஏழைகளோடு ஏழைகளாய், உழைப்போரோடு உழைப்போராய் பழகும் நீ அவர்கள் துயரை, அவர் கள் உரிமை மூச்சை, அவர்கள் எண்ணங்களை, அவர்கள் வாழ்க்கையை எழுத்திலே சித்திரிக்க முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/37&oldid=1370331" இலிருந்து மீள்விக்கப்பட்டது