இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வரும்.
59. பறவைக்குஞ்சுகளில் இரு வகைகள் யாவை?
- 1. தங்குகுஞ்சுகள்- பறவைகளிள் குஞ்சுகள் முட்டை பொரிந்ததும் நகர இயலா. ஆகவே, கூட்டில் தங்கித் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்.எ-டு புறாக் குஞ்சு
- 2. தங்காக்குஞ்சுகள் முட்டை பொரித்ததும் குஞ்சுகள் அதைவிட்டு வெளியேறித் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும். எ-டு கோழிக்குஞ்சு.
- 60. காதலாட்டம் என்றால் என்ன? புணர்ச்சிக்கு முன் தன் இணையைக் கவர்ந்து தேர்ந்தெடுக்கும் விலங்கு நடத்தை. மென்மையும் வன்மையும் கலந்தது. இது பறவைகளுக்குரிய தனிக் கலை.
61. பாலூட்டிகளின் சிறப்புகள் யாவை?
- 1. குட்டிப்போட்டு பால் கொடுப்பவை.
- 2. உடலில் மயிர் உண்டு.
- 3. குறுக்குத் தசை உண்டு.
- 4. உடல்வெப்பநிலை மாறா விலங்குகள்.எ-டுஎருமை, மான்.
62. இறுதி இரைப்பை என்றால் என்ன?
- பசு முதலிய அசைபோடும் விலங்குகளின் நான்காம் இரைப்பை. இதுவே உண்மை இரைப்பை.
63. அசைபோடுதல் என்றால் என்ன?
- விழுங்கப்பட்ட உணவு இரைப்பையிலிருந்து வாய்க்குக் கவளங்களாகக் கொண்டு வரப்படுகிறது. இங்கு உமிழ் நீருடன் கலந்து நன்கு அரைக்கப்படுகிறது, மீண்டும் விழுங்கப்படுகிறது. எ-டு பசு, ஆடு.
64. அசைபை என்றால் என்ன?
- பசு முதலிய அசைபோடும் விலங்குகளை முதல் இரைப்பை
அசைபோடும் விலங்குகள் யாவை?
- பசு, ஆடு, எருமை.
65. கொறிக்கும் விலங்குகள் யாவை?
- அணில், எலி முதலிய பாலூட்டிகள் கொறிக்கும் விலங்குகள் ஆகும்.
67. மரம்வாழ் விலங்கு எது?