பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாதைக்கேற்ற
பயணம்!

காற்றைக் கிழித்துக் கொண்டு கடுவேகமாக ஓடிக் கொண்டிருக்கும் ரயிலின் ஒரு மூலையில், கண்ணீருங் கம்பலையுமாக ஒரு பெண் உட்காந்திருக்கிறாள். அவள் கையிலே ஒரு குழந்தை. கம்பளியால் போர்த்தி மூடப்பட்டிருக்கிறது அந்தக் குழந்தை. உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் குழந்தை முகத்தைப் பார்த்துப் பார்த்து, தானும் உயிரிழந்த நிலையில் பிரயாணம் செய்கிறாள் அந்தத் தாய்.


வாழ்க்கையில் வசதியும் வளமும் நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவளா என்றால் அல்லவே அல்ல. அமெரிக்க நாட்டில், புகையிலை பயிரிடும் ஒரு எஸ்டேட்டில் கூலியாகப்பணியாற்றும் குடும்பத்தினள். உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவளா என்றால் அதுவும் இல்லை. நீக்ரோ இனவழி வந்தவள்.

வாரம் ஒரு முறை 90 மைலுக்கு அப்பால் உள்ள இலவச மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு அல்லல் அடைகின்றாளே! அதுதான் அவளுக்கு முதல்