இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
134
மனத்தின் தோற்றம்
அன்றியும், - வெள்ளைக் கொடிகள் புகழ்போலவும் வெண்மையான அலைபோலவும் பரந்து பறந்தனவாம் எனக் கம்பர் கூறியுள்ளார்:
- “தானைமாக் கொடி-புகழ் எனக் கால்பொரப் புரண்ட
- வானயாற்று வெண்திரையென வரம்பில பரந்த” (3-9-7)
மற்றும், நிலவின் வெண்மையான ஒளி, இராமனது புகழ் புகுந்து உலவியதுபோல் இருந்ததாம்:
- “அன்னவன் புகழ் புகுந்து உலாயதோர்
- பொலிவும் போன்றதே” (5-1-65)
- “அன்னவன் புகழ் புகுந்து உலாயதோர்
என்பன கம்பரின் பாடல் பகுதிகள்.
3.2 கற்பு முல்லை
கற்புக்கும் முல்லைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கற்புடைய மகளிர் தம் மனையில் முல்லைக் கொடி வளர்ப்பார்களாம்; முல்லை மலரைச் சூடிக் கொள்வார் களாம். இது பல இலக்கியங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. சில காண்பாம்:
சிலப்பதிகாரத்தில்:
- “இல்வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த
- பல்பூஞ் சேக்கைப் பள்ளி” (4:27, 28)
- “மாதவி, மல்லிகை, மனைவளர் முல்லைப்
- போது விரி தொடையல்” (13:120, 121)
குறுந்தொகையில்:
- “மனை எல்லறு மெளவல் காறும்
- பல்லிருங் கூந்தல்” (மெளவல்=முல்லை 19:4,5)
நற்றிணையில்:
- “மனைகடு மெளவலொடு ஊழ்முகை யவிழ” (11:6)