இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வீரகாவியம்
174
இயல் 79
வேந்தன் சுடுசொல் வேழன் கேட்டதும் காந்தும் மனத்தொடு கழறினன் வெகுண்டே.
காவலன்றன் ஆணைக்கங் கஞ்சி நின்ற
காவலனும் சீயத்தை அணுகி வந்தான்; மேவலர்தம் படைநடுக்கும் வேழன் சீறி
வீரனுக்கோர் அறைகொடுக்க, ஐயோ என்று நாவலற மெய்யதிர மயங்கி வீழ்ந்தான்;
நாடாள்வோன் முகம்நோக்கிச் சூரன் சொல்வான், காவலனே! நாட்டுக்கோர் பழியாய் வந்தாய்!
கருத்தில்லாய்! பொறுப்பில்லாய்! கடமை யில்லாய்! 348
என்னுயிரும் மதியாமல் போரில் உன்னை
எத்தனையோ முறைகாத்தேன்; அதற்கோ என்னைச்
சின்னவனைக் கொண்டவையில் இகழ்ச்சி செய்தாய்?
செருக்கொண்டு சிறிவரும் பகைவ ருக்கு
முன்னணுக மாட்டல் அஞ்சிச் சாகும்
மொய்ம்புடையோய்! வாய்மதமோ பேசு கின்ருய்?
உன்னையொரு கடுகளவும் அஞ்ச கில்லேன்;
ஒருவருக்கும் அடிபணியேன்; வீரங் கொள்வேன். 349