பக்கம்:வீர காவியம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109

மகப்பெறு படலம்




கண்ணில்லாக் காமத்தின் வெம்மை தாக்கக்
கணவன்றன் நினைவதகுல் உருகும் நெஞ்சம் புண்ணில்லாப் புண்பட்டுப் போன தாலே
புழுவாளுள் மெழுகானுள் அந்தத் தீயில்; எண்ணில்லாத் துயராலே நையும் பாவை
இரவென்றும் பகலென்றும் மாலை என்றும் மண்ணில்லாப் பொழுதனைத்தும் மாறி மாறி
வந்துதுயர்ப் படுத்துவதால் புலம்பு கின்ருள். 210
'உறவுக்குத் துணையாளுன் இன்பந் தந்தான்
உழல்கின்ற பிரிவுக்கும் துணையாய் நின்ருன்; வரவுக்கு வழிநோக்கி ஏங்கும் என்றன்
வாழ்வுக்கு மலர்ச்சிதர வரும் நாள் என்ருே? நறவுக்குச் சுற்றிவரும் வண்டே போல
நாள்முழுதும் எனச்சுற்றிச் சுற்றி நின்ருன் செருவுக்குப் போய்விட்டான் தவிக்க விட்டுச்
செயலிழந்து துயிலிழந்து புலம்ப விட்டு. 211
மறைக்கின்றேன்; இந்நோயைப் பிறர்க்கு ணர்த்த மாட்டாமல் தவிக்கின்றேன்; ஆயி னுந்தான் இறைக்கின்ற நீர் போல ஊறி ஊறி
ஏறுவதைக் காண்கின்றேன்; நட்பா லன்பு சுரக்கின்ற என்னிடமே இதுசெய் தாரேல்
சூழ்பகைமை கொண்டோரை என்செய் வாரோ? பிறைக்கொன்றும் துதலார் தம் பிரிவால் நேரும்
பெருந்துயரம் ஆடவர்க்கு வாரா தேயோ? 212
--
மண் நில்லா-உலகில் நி3லத்து தில்லாத, செரு-போர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/112&oldid=911181" இலிருந்து மீள்விக்கப்பட்டது