இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
171
மகப்பெறு படலம்
விருந்துண் டு களிப்போம்வா! இவனை மோதி
விளையாட்டாக் கொல்வ னென எண்மை யாகப் பருந்தனைய நோக்குடையான் பகர்ந்தி ருந்தான்; பரியேறி வந்தமகன் வருந்திச் சொல்வான், பொருந்தொழிலோய்! விருந்துண்ணும் நேரம் அன்று!
போர்தொடங்கும் முன்பாக விரைதல் வேண்டும்; நிறைந்தபுனல் வருமுன்பே அணைகள் கோலி
நிறுத்துவதே கடனுகும்' என்ருன் வீரன். 343
ஒல்லையில் நாம் செல்வமென உரைத்த மாற்றம் ஒன்றேனும் அவன் செவியிற் புகுத வில்லை; எல்லையிலாக் களிப்புடனே ஆடிப் பாடி எக்களிப்பு மீதுார விருந்த யர்ந்தான்; எல்லனையான் ஈரிருநாள் கழிந்த பின்றை
இனிதெழுந்து போர்க்கோலம் பூண்டு நின்று வல்லியம்போல் மறவர்புடை சூழ வந்தான்
மாமன்னன் மதலைக்கோ நகரை நோக்கி. 344
எண்மை-எளிது. கோலி-கட்டி, ஒல்லையில்-விரைவில், எல்-குரியன் வல்லியம்-புலி.