இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
56
115. முழங்காற்சில் என்றால் என்ன?
- முழங்கால் மூட்டின் முன்தசைநாணிலுள்ள எஸ் வடிவ எலும்பு. பின் காலை நீட்ட உதவுவது.
116. எலும்புகளில் மிகப் பெரியது எது?
- தொடை எலும்பு.
117. எலும்புகளில் மிகச் சிறியவை எவை?
- செவிச் சிற்றெலும்புகள்
5. தசை மண்டலம்
118. தசை இயக்க இதயம் என்றால் என்ன?
- நேரிடையாகத் தசைகளால் மட்டுமே கட்டுப்படுத்தப்படும் இதயம். எ-டு எல்லா முதுகு எலும்பு விலங்குகளுக்கும் உண்டு.
119. தசை இயல் என்றால் என்ன?
- தசைகளை ஆராயுந்துறை.
120. தசையின் தனிப்பண்புகள் யாவை?
- 1. சுருங்குதல்
- 2. கடத்தல்.
121. தசை மண்டலம் என்றால் என்ன?
- தசைகளாலான தொகுதி. எலும்புகளைப் பிணைத்து உடலுக்கு இயக்கத்தையும் அழகையும் தருவது.
122. தசை என்பது யாது?
- ஓர் இணைப்புத்திசு. சுருங்குவது இதன் தனிப் பண்பு.
123. இதன் வகைகள் யாவை?
- 1. வரித்தசை, இயக்குத்தசை - முத்தலை, இருத்தலைதசை.
- 2. வரியில்லாத்தசை, இயங்குதசை - உள்ளுறுப்புத்தசை, இதயத்தசை.
124. சுருக்குத்தசைகள் என்பவை யாவை? இவை எங்குள்ளன? எவ்வாறு வேலை செய்கின்றன?
இவை ஒருவகை இயங்குதசைகளே. இவற்றில் தசை நார்கள் வட்டமாகவும், குறுக்காகவும் அமைந்துள்ளன. இரைப்பையின் அடிப்பகுதி, கழிவாய், கண்மணி. குறுக்குநார்கள் சுருங்கும்பொழுது இவற்றின் துளை