பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிப்பான் நாட்டுக் கவிதைகள்

55

பொதிந்து நிற்பது. கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்திக் குறுகத் தறித்த குறள் அன்னது. வடித்து வடித்துத் திரட்டித் திரட்டிச் சிறிதாக்குவதிலேயே அதன் உயிராகிய ஒளி மேலோங்குகின்றது.

இவ்வாறு குறுகிய வடிவில் இக்கவி அமைவதால் கவிஞன் தான் சொல்ல வந்த பொருளைப் பற்றி ஒரு சில முக்கிய குறிப்புக்களையே எழுதி அவற்றின் மூலமாகவே படிப்போர் உள்ளத்தில் தான் விரும்பிய உணர்ச்சித் துடிப்புக்களைத் தூண்ட முயல்கிறான். அங்ஙனம் எழுதிய சொற்கள் கவிஞனின் மன எழுச்சியில் வெடித்த மின்னல்களாகும். அவற்றின் ஒளியாலும், ஒலியாலுமே உணர்ச்சியின் முழு உருவத்தையும் படிப்போர் அறிந்து கொள்ள வேண்டும்.

அரிமரோ என்ற கவிதன் ஒருவன் செதுக்கிய 'தங்கா'வைப் பாருங்கள்:

காதலால் வாடி இன்னுயிர்
தேய்த்தேன் என்றால்
அவள் துடிப்பாளே! ஐயகோ!
ஈரமில்லா உயிரே

வெறுத்தேன் நான் உனை.

காதலியை அடைய முடியாமல் கலிஞன் தன் உள்ளம் வெதும்புகிறான்; வாழ்வையும் வெறுக்கிறான். ஆனால் உயிரைப் போக்கிக் கொள்ள மட்டும் கருதவில்லை. ஏன்? உயிர்மேலுள்ள ஆசையாலா? இல்லையில்லை; தான் இறந்தால் காதலி வருந்துவாளாம். அவள் வருந்தச் சகியாததால் அவன் தன் உயிர் சுமந்து திரிகிறான். இக்கவிதையின் ஆழத்தையும்,