பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


54 காட்டு வழிதனிலே நிப்பான் வடிவிற் சிறியது; ஆளுல் அழகில் பெரியது; நீலக் கடலின் மேனியிலே திகழும் வெண் முத்துப் போன்றது. அவ்வாறே அந் நாட்டு இலக்கி யத்தின் பரப்பிலே வடிவில் சிறுத்து அழகில் பெருத்த கவிதை மணிகள் மலிந்திருக்கின்றன. கவிதை எழுது வது அங்கே பலருக்கு ஒரு முக்கியமான இன்பப் பொழுது போக்காகும். ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் அவ்வாறுதான். கவி புனேவதில் பந்த யங்களும் போட்டி விளையாட்டுக்களும் அங்கே சாதாரண நிகழ்ச்சிகள், கவிதைக்கென்றே நூற்றுக் கணக்கான சிறந்த பத்திரிகைகள் அங்கு நடத்தப் படுகின்றன. శ్రీ! நிப்பான் நாட்டுக் கவிதைகளிலே தங்கா என்ற யாப்புப் பலராலும் போற்றப்படுவதாகும். அதில் இலட்சக்கணக்கான கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. இச்சிறு யாப்பு பன்னிரண்டு முதல் இருபது வரை யுள்ள சொற்களாலேயே ஆனது, ஐந்தே வரிகளை யுடையது. அவ்வரிகளில் முறையே ஐந்து, ஏழு, ஐந்து, ஏழு, ஏழு அசைகள்தாம் உண்டு. பொதுவாக உதயச் சுடர் நாட்டு யாப்புக்களில் சீர், எதுகை, மோனை முதலான உறுப்புக்களில்லை. தங்காவிலும் அவ்வாறு தான். திப்பான் மொழியே இசையினிமை கூடிய தாதலின் அதுவே கவிதையின் உணர்ச்சியை வெளிப் படுத்தப் போதுமானதாக இருக்கிறது. தங்கா ஒவ்வொன்றும் உள்ளத்தில் எழுந்த உணர்ச்சியில் செதுக்கி எடுக்கப்பட்ட சிறுமணி யாகும். அது உருவத்தில் சிறியதெனினும் பொருள்