உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

179


தொலைக்காட்சி

நாட்டிய நடிகை செளதாமினி 'ஸ்வர்க்கசீமா'வில் தொலைக்காட்சிகளில் பானுமதிக்குப் பதிலாக ஆடியிருக்கிறார்.

நூல் : சினிமா நக்ஷத்திரங்களின் ரகசியங்கள் (1955), பக்கம் . 8
நூலாசிரியர் : சுந்தர்
நவநீத கிருஷ்ணன் - பொன்னி வளவன் (1956)
ஆசிரியர், சிறந்தகவிஞர்
Botany – பயிரியல்

ஆங்கிலச் சொற்களையும் பிறமொழிகளிலுள்ள சொற்களையும் தேவையான போது எடுத்தாளலாம் என்பர் சிலர். இப்போது அங்ங்ணம் எடுத்தாள்வதிலே பாரதூரான குறை வராவிட்டாலும் - இனி வருங்காலத்தில் ஆங்கிலத்துடன் இணைந்த பிறமொழிகளும் நது நாட்டிலே செல்வாக்குக் காட்டாத காலத்தில் - அப்படிப்பட்ட சொற்களின் வரலாறு இன்னதென்று கூடத் தெரியாமல், உயிரற்ற வெறுஞ் சடலங்களாகவே அவை உலவுவனவாம். எனவே, இவற்றையெல்லாம் நாங்கள் சிறிது கவனிக்க வேண்டும். Botany எனப்படும் 'பயிரியல்' நூலில் எத்தனையெத்தனை பிறமொழிச் சொற்களை மனனஞ் செய்து அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

நூல் : பயிற்சித் தமிழ் (1956), இரண்டாம் பாகம்) பக்கம் : 97
நூலாசிரியர் தென்புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை
Thermometer – அனற்கோல்

அனலின் அளவை நமது உறுப்புகளின் உணர்ச்சியால் பிழையின்றி அறிய முடியுமா? முடியாது. மிகவும் சூடாகவுள்ள நீரிலும், குளிர்ந்த நீரிலும் நமது கைவிரல் வைத்து உணர்வோமானால், ஒன்று ஒன்றைவிட சூடாக உள்ளதா, தன்மையாக உள்ளதா என்று உணர முடியுமே ஒழிய, எந்த அளவுக்கு அவைகள் அனலைப் பெற்றுள்ளன. அவைகளின் அனல் நிலை (Temperature) என்ன என்பவற்றைச் சரியான முறையில் தெரிந்து கொள்ள முடியாது. இம்மாதிரியான சிக்கல்கள் மனிதனை மேலும் எண்ணத் தூண்டியது.