உண்மை விளக்கம்-வெண்பா 11-20
வெண்பா 11 (ஞானேந்தி )
[தொகு]ஞானேந்திரியங்கள் நன்றா வுரைக்கக்கே () ஞான இந்திரியங்கள் நன்றா உரைக்கக் கேள்
ளூன மிகுபூத முற்றிடமா - வீனமாஞ் () ஊனம் மிகு பூதம் உற்று இடமா - ஈனம் ஆம்
சத்தாதி யையறியுந் தானஞ் செவிதோற்கண் () சத்தாதியை அறியும் தானம் செவி தோல் கண்
ணத்தாலு மூக்கென் றறி. () அத் தாலு மூக்கு என்று அறி.
வெண்பா 12 ( வானிடமா)
[தொகு]வானிடமா நின்றுசெவி மன்னு மொலியதனை () வான் இடமா நின்று செவி மன்னும் ஒலி அதனை
யீனமிகுந் தோற்கா லிடமாக- வூனப் () ஈனம் மிகும் தோல் கால் இடமாக- ஊனப்
பரிசந் தனையறியும் பார்வையிற்கண் ணங்கி () பரிசம் தனை அறியும் பார்வையின் கண் அங்கி
விரவியுரு வங்காணு மே. () விரவி உருவம் காணுமே.
வெண்பா 13 (நன்றாக )
[தொகு]நன்றாக நீரிடமா நாவிரதந் தானறியும் () நன்றாக நீர் இடமா நா இரதம் தான் அறியும்
பொன்றா மணமூக்குப் பூவிடமா - நின்றறியு () பொன்றா மணம் மூக்குப் பூ இடமா - நின்று அறியும்
மென்றோது மன்றே யிறையா கமமிதனை () என்று ஓதும் அன்றே இறை ஆகமம் இதனை
வென்றார்சென் றாரின்ப வீடு. () வென்றார் சென்றார் இன்ப வீடு.
வெண்பா 14 (கண்ணுதல் )
[தொகு]கண்ணுதனூ லோதியிடுங் கன்மேந் திரியங்க () கண்ணுதல் நூல் ஓதியிடும் கன்ம இந்திரியங்கள்
ளெண்ணுவச னாதிக் கிடமாக - நண்ணியிடும் () எண்ணு வசன ஆதிக்கு இடமாக - நண்ணி இடும்
வாக்குப்பா தம்பாணி மன்னு குதமுபத்த () வாக்குப் பாதம் பாணி மன்னு குதம் உபத்தமாக்
மாக்கருது நாளு மது. () கருதும் நாளும் அது.
வெண்பா 15 (வாக்காகா )
[தொகு]வாக்காகா கயமிடமா வந்துவச னிக்குங்காற் () வாக்கு ஆகாயம் இடமா வந்து வசனிக்கும் கால்
போக்காருங் காற்றிடமாப் புல்கியன - லேற்கு () போக்க ஆரும்காற்று இடமாப் புல்கி அனல் - ஏற்கும்
மிடுங்கை குதநீ ரிடமா மலாதி () இடும் கை குதம் நீர் இடமா மல ஆதி
விடும்பா ரிடமுபத்தம் விந்து. () விடும் பார் இடம் உபத்தம் விந்து.
வெண்பா 16 (அந்தக்கரண)
[தொகு]அந்தக் கரண மடைவே யுரைக்கக்கே () அந்தக்கரணம் அடைவே உரைக்கக் கேள்
ளந்தமனம் புத்தியுட னாங்காரஞ் - சிந்தையிவை () அந்த மனம் புத்தியுடன் ஆங்காரம்- சிந்தை இவை
பற்றியது நிச்சயித்துப் பலகா லெழுந்திருந்தங் () பற்றியது நிச்சயித்துப் பலகால் எழுந்திருந்து அங்கு
குற்றதுசிந் திக்கு முணர். () உற்றது சி்ந்திக்கும் உணர்.
வெண்பா 17 (ஓதியிடு )
[தொகு]ஓதியிடு நாலாறு முற்றான்ம தத்துவமென் () ஓதியிடும் நால் ஆறும் உற்று ஆன்ம தத்துவம் என்று
றாதி யருணூ லறையுங்காண்- தீதறவே () ஆதி அருள் நூல் அறையும் காண்- தீது அறவே
வித்தியா தத்துவங்க டம்மை விளம்பக்கே () வித்தியா தத்துவங்கள் தம்மை விளம்பக் கேள்
ளுத்தமனே நன்றாக வுனக்கு. () உத்தமனே நன்றாக உனக்கு.
வெண்பா 18 (காலநியதி )
[தொகு]கால நியதி கருதும் கலைவித்தை () காலம் நியதி கருதும் கலை வித்தை
யேலவிரா கம்புருட னேமாயை - மாலறவே () ஏல இராகம் புருடனே மாயை- மால் அறவே
சொன்னோ மடைவாகச் சொன்னவிவை தன்னுண்மை () சொன்னோம் அடைவாகச் சொன்ன இவை தன் உண்மை
யுன்னி யுரைக்குநா முற்று. () உன்னி உரைக்கும் நாம் உற்று.
வெண்பா 19(எல்லை )
[தொகு]எல்லை பலம்புதுமை யெப்போது நிச்சயித்த () எல்லை பலம் புதுமை எப்போதும் நிச்சயித்தல்
லல்லல் தருங்கிரியை யான்மாவுக் - கொல்லை () அல்லல் தரும் கிரியை ஆன்மாவுக்கு - ஒல்லை
யறிவாசை யைம்புலனு மாரவருங் காலங் () அறிவு ஆசை ஐம் புலனும் ஆரவரும் காலம்
குறியா மயக்கென்று கொள். () குறியா மயக்கு என்று கொள்.
வெண்பா 20 (வித்தியா )
[தொகு]வித்தியா தத்துவங்க ளேழும் விளம்பினோஞ் () வித்தியா தத்துவங்கள் ஏழும் விளம்பினோம்
சுத்தமாந் தத்துவங்கள் சொல்லக்கேள்- நித்தமாஞ் () சுத்தமாம் தத்துவங்கள் சொல்லக் கேள்- நித்தமாம்
சுத்தவித்தை யீசுரம்பின் சொல்லும் சதாசிவநற் () சுத்த வித்தை ஈசுரம் பின் சொல்லும் சதாசிவம் நல்
சத்திசிவங் காணவைக டாம். () சத்தி சிவம் காண் அவைகள் தாம்.
பார்க்க
[தொகு][[]] உண்மை விளக்கம்-வெண்பா 01-10காப்பு உண்மை விளக்கம்-வெண்பா 21-30 உண்மை விளக்கம்-வெண்பா 31-40 உண்மை விளக்கம்-வெண்பா 41-53