இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கண்கள் இரண்டும் சிவக்கவே,
காதும் நிமிர்ந்து நிற்கவே,
என்ன கோபம், கோபமோ !
எங்கே அவைகள் போகுமோ ?
சீன வெடியைக் கொளுத்தியே
சின்னப் பூனைக் குட்டிமேல்
சீனு போட்டு விட்டதால்
தேம்பித் தேம்பி அழுததாம்.
அண்ணன் மாரி டத்திலே
அழுது கொண்டே வந்ததாம்;
கண்ணீர் வழிய நடந்ததைக்
கலக்கத் தோடே சொன்னதாம் !
கேட்ட வுடனே அண்ணன்மார்
கிளம்பி விட்டார்; சீனுவின்
வீட்டைத் தேடிச் செல்கிறார்.
மேலே என்ன நடக்குமோ ?
32