உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

பிஸ்ஸாம் பறத்தல்

குழந்தைகளுடைய விளையாட்டுக்குக் கணக்கே இல்லை. பள்ளிக்கூடத்திலே கற்றுக்கொள்ளும் விளையாட்டுக்கள் பல. இவையல்லாமல் குழந்தைகள் தலைமுறை தலைமுறையாக விளையாடி வரும் விளையாட்டுக்கள் எத்தனையோ.

விளையாட்டு என்பது குழந்தையின் பிறப்புரிமை என்று கூறலாம். பூனைக் குட்டிகளைப் பார்த்திருப்பீர்கள். நாய்க் குட்டிகளைப் பார்த்திருப்பீர்கள். அவைகள் விளையாடுவதைப் பார்ப்பதே ஒரு தனி இன்பம். அவை விளையாட்டின் மூலமாகவே வாழ்க்கைக்கு அவசியமான பயிற்சிகளைப் பெறுகின்றன. மனிதக் குழந்தைகளும் அப்படித்தான். விளையாட்டின் மூலம் அவைகளுக்குக் கிடைக்கும் அனுபவம் பெரிதும் பயன்படுகிறது. உடல் வளர்ச்சிக்கும், மன வளர்ச்சிக்கும் விளையாட்டு உதவுகின்றது. மற்றவர்களோடு சேர்ந்து பழகுவதிலும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று குழந்தை விளையாட்டின் மூலம் கற்றுக்கொள்கிறது. தனது இன்பம் ஒன்றை மட்டுமே எப்பொழுதும் எண்ணிக் கொண்டிருக்கக்கூடாது என்றும் குழந்தை அறிந்து