இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
40
காற்றில் வந்த கவிதை
காடு மலை வந்திருப்பாள்-சிங்கத்து
மேலேறியவள், சிங்கத்து மேலேறி
என்ன சொல்வோம் உன்மகிமை-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி
எங்களே நீ காக்கவேணும்-சிங்கத்து
மேலேறி அம்மா, சிங்கத்து மேலேறி
தஞ்ச மென்று வந்தடைந்தோம்-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி
தயவு வச்சுக் காக்கவேணும்-சிங்கத்து
மேலேறி யம்மா, சிங்கத்து மேலேறி
பார்க்காமலே நீயிருந்தால்-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி
பஞ்சமெல்லாம் தீர்ந்திடுமோ-சிங்கத்து
மேலேறி யம்மா, சிங்கத்து மேலேறி
மாவிளக்குக் கொண்டு வந்தோம்-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி
மனசு வச்சுக் காக்கவேணும்-சிங்கத்து
மேலேறி யம்மா, சிங்கத்து மேலேறி.