உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

89


ஒதுக்கவும், தமிழில் இலக்கணம், சங்கநூல், நீதிநூல், பெருங்காப்பியங்கள், சிறுகாப்பியங்கள், சமயநூல், சோதிட நூல் நீதிநூல், மருத்துவநூல், யோகநூல், இசைநூல், கணக்கு நூல், ஓவியம், சிற்பம், முதலியவற்றைத் தனித்தனி செம்மையாக ஆராய்ச்சி செய்யவும், ஆங்கிலத்திலே யுள்ளபடி பலவகைப் பேரகராதிகள் அமைக்கவும் வேண்டிய நிலையங்கள் ஏற்படுகின்றவரை தமிழ் வளர்ச்சி செம்மையாக நடைபெற முடியாது.

வி. சங்கரலிங்கம்பிள்ளை

இதழ் : செந்தமிழ்ச் செல்வி
சிலம்பு 3 : பரல், 9, 1925 செப்டம்பர். பக்கம் - 493, 494
ICE - நீர்கட்டி

சூன்மீ2. சத்தியநேசனில் பிரசுரிக்கப்பட்ட வைத்திய சாத்திரக் குறிப்புக்களைப் படித்துப் பார்த்தேன். அவற்றில் இலங்கையில் பல்வலியைக் குறித்துப் பேசப்பட்டிருக்கிறது. இந்த விசனத்துக்குரிய நோய் நம்மூரில் புதிதாக உற்பத்தியாகி விட்டது. இதற்குக் காரணம் (ice) நீர்கட்டி பாவித்தலே. கொழும்பிலும் கண்டியிலும் தெருக்களிலும் வீடுவீடாகவும் ஒரு சதத்துக்கு வாங்கக்கூடிய (ice Cream) வியாபாரிகள் திரிகிறார்கள். இந்தக் குளிர்ந்த தித்திப்பு குழந்தைகளுடைய பற்களை முதலாய் கெடுத்துப் போடுகிறது.

இதழ் : சத்தியநேசன் (1926-ஜூலை) தொகுதி - 1 பகுதி - 7, பக்கம் - 280;
சொல்லாக்கம் : பிறாஞ்சீஸ்கு - சூ. அந்தோனி
சொற்பொழிவு

சிவனடியார் திருக்கூட்டம்

இஃது

திருக் கற்குடிச் சிவனடியார் திருக்கூட்டத்தின் 5, 6, 7-வது ஆண்டுகளின் நிறைவு விழாவில் (இருக்தாட்சி ௵ ஆவணி ௴ 9உ) தலைமை வகித்த பஞ்சாட்சரபுரம் உயர்திரு. வாலையானந்த சுவாமிகள் முன்னுரையாகச் செய்த சொற்பொழிவு.

சென்னை திருவல்லிக்கேணி சோல்டன் கம்பெனியாரால் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.

நூல் : சிவனடியார் திருக்கூட்டம் (1925) பக்கம் - 1