பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

I8

டித்து எடுப்பது உடலில் விதைப் பைக்கும் கருவாய்க்கும் இடைப் பகுதியில் ஒர் அறுவை செய்வதன் மூலம் முடிக்கப்படுகிறது.

அடிவயிற்று வலி : என்பது, குழந்தை களுககு அடிககடி உணடாகும குடைவு வலியும். குமட்டலும் ஆகும். இது பெரும்பாலும் தலை வலியுடன தொடர்புடையது.

abdomino centesis : வபை வலி; அடிவயிற்றுத் துளை : இது, அடி வயிற்று உட்பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப்பை (வபை) உட்குழிவின் பக்க வலியாகும்.

abdomino-pelvis : வயிற்றையொட்டிய இடுப்பு :

abdomino perineal : கீழ்வயிற்று மூல உறுப்புப் பகுதி; அடிவயிற்று விதை-கருவாய இடைப்பகுதி : அடி வயிறறுக்கும் உடலில் விதைப் பைக்கும கருவாய்க்கும் இடைப்பட்ட பகுதிக்கும் தொடர்புடைய நோய்.

abduct : உடல் நடுத் தசைப்பிடிப்பு; விரி : உடலின நடுப்குதியிலிருந்து தசையைப் பிடிததிழுத்தல்.

abduction : உடல்கடுத்தசை இழுப்பு; புறபபெயர்ச்சி; விரிப்பு வெளிவாங்கல : உடலின நடுப்பகுதியிலிருந்து தசையை பிடிததிழுத்தல.

abductor : பிடித்திழுக்கும் தசை; வெளிவாங்கி; விரிபபி : உடலின நடுப்பகுதியிலுள்ள தசையானது சுருங்குவதால், அது உடலின் நடுப் பகுதியிலிருந்து பிடிததிழுக்கும் தசை.

aberrant : நெறிதிறம்பிய; மாறுபட்ட : இயல்புக்கு மாறுபடுகிற. பொதுவாக, இது தனது இயல்பான நெறியிலிருநது பிறழ்ந்து திரிகிற இரத்த நாளததை அல்லது நரம்பின்னக் குறிககிறது.

aberration : நெறிதிறம்புதல்; திரிபு : இயல்பான நெறியிலிருந்து பிறழ்ந்து சுற்றித் திரிதல். உயிரணுக்களின் இனக்கீற்றுகளில் (குரோமோசோம்) மரபணுப் பொருள்களில் இயல்புக்கு மாறாக இழப்பீடு, சேர்மானம் அல்லது பரிமாற்றம் ஏற்படுவதால், மரபணு அழிவு, இருமடிப் பெருக்கம், தலைகீழ் மாற்றம் அல் லது உள்நிலைப் புடைபெயர்ச்சி உண்டாகி மனக்கோளாறுகள் உண்டாதல்.

abiogenesist : முதல் உயிர்த் தோற்றம்; உயிரிலாப் பிறப்பு : உயிரறற பொருளினின்றும் உயிர்ப்பொருள் தோற்றம் பெற்றதெனும் கேர்ட்பாடு.

abiogenetic : தற்பிறப்புள்ள : உயிரறற பொருளிலிருந்தே உயிர்ப் பொருள் தோற்றம் பெற்றதெனக் கருதும் கோட்பாடு சார்ந்த கொள்கை.

abiogenist : உயிரற்ற பொருளிலிருந்தே உயிர்ப் பொருள் தோற்றம் பெற்றதெனக் கருதும் கோட்பாடு.

ablotrophy : உயிர்வீரியச் சீர்கேடு : மரபணுசார்ந்த சிலவகை உயிர னுக்களின், திசுக்களின உயிர் வீரியம் உரியகாலத்திற்கு முன்னரே அழிந்துபடுதல் அலலது சீர்கேடுறுதல்.

ablation : நீக்கல்; அகற்றல்; உறுப்பு நீககம் : அறுவைச் சிகிச்சையில் துண்டித்தல் அல்லது அறுத்து எடுத்தல் மூலம் உறுப்பினை அகற்றுதல்.

abort : கருச்சிதைவுறுத்தல் : உரிய காலத்திறகு முன்பு கருவைச் சிதை வுறச் செய்தல்.

abortifacient : கருச்சிதைவிப்பி; கருககுலைப்பான்; சிதைவியம்; கருச்