பக்கம்:கும்மந்தான் கான்சாகிபு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

சத்தைக் கை விட்டு விட்டான். உங்கள் உத்தரவுகளை எல்லாம் உதறி எறிந்து விட்டான். தன்னைச் சுதந்திரப் புருஷனாகப் பிரகடனம் செய்து விட்டான். இந்த மனிதனின் மாமேதைமையையும், பேராசையையும் கருதும் போதும், தன்னிடமுள்ள பெரும் பட்டாளத்தை ஒரு பெரும் போருக்கு இவன் தயார் செய்வதைப் பார்க்கும் போதும், உடனடியாக இவனுடைய ஆக்கிரமிப்புகளை ஒழிப்பது மிகவும் அவசியமாகிறது. மேலும், இவன் நாளும் தரங்கம்பாடி, நாகப்பட்டினத்தில் உள்ள பிரஞ்சுக்காரர்களிடமிருந்தும், மைசூர் ஹைதர் அலியிடமிருந்தும் உதவிகள் பெற்ற வண்ணம் இருக்கிறான். இவனை இப்படியே விட்டால், நம்மால் அடக்க முடியாத அளவுக்குப் பெரும் படைப்பலம் பெற்றவனாக ஆகி விடுவான். அதன் விளைவாக, ஆர்க்காட்டு நவாபு நமக்குத் தர வேண்டிய கடன்களைத் தராமற் போவதோடு, கம்பெனி மேலும் பெருத்த செலவுக்கு இரையாக நேரிடும்; கான் சாகிபை அழிக்கக் குறைந்தது 900 ஐரோப்பியர்களும், 5000 கம்பெனிச் சிப்பாய்களும், 2000 குதிரைப் படை வீரர்களும், ஏராளமான பாளையக்காரர் உதவியும், இன்ன பிறவும் தேவை.”

இவ்வாறு லாரென்ஸ் எழுதிய கடிதத்தாலும், கான் சாகிபைப் பற்றிய வேறு பல உண்மைகளை உணர்ந்தமையாலும், தீர ஆலோசித்துக் கும்பினி அரசாங்கம் கான் சாகிபைக் கசக்கி எறிய முடிவு செய்தது. வெள்ளைத் தளபதிகளாகிய பிரஸ்டன், லாரென்ஸ் முதலியவர்களைப் பெரும் படையுடன் கான் சாகிபை அழிக்கப் புறப்படுமாறு கட்டளையிட்-