உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

வஸந்தமல்லிகா

சமீபகாலத்தில் உங்களிருவருக்கும் கொஞ்சம் மனஸ்தாபம் கூட ஏற்பட்டது போலிருக்கிறது.

துக்கோ : ஆம், ஆம். என்னவோ கால வித்தியாசத்தினால் அவருக்கும் எனக்கும் மனஸ்தாபம் உண்டாயிற்று. என் வீட்டில் அநாதையாய் வளர்ந்து வந்த ஒரு பெண்ணின் துர் நடத்தையால் கொஞ்சம் மனஸ்தாபம் ஏற்பட்டது.

தம : அவளுடைய பெயர் என்ன? யாரோ மல்லிகா என்றார்களே அவள்தானே?

துக்கோ : ஆமாம்; அந்தத் துஷ்டைதான். அவளை நாங்கள் ஜாதியை விட்டு விலக்கி விட்டோம். அவளுக்கும் எங்களுக்கும் இனி யாதொரு சம்பந்தமும் இல்லை.

தம : ஆம். அதைப் பற்றி நானும் கேள்விப்பட்டேன். நீர் செய்தது சரியான காரியம்.

துக்கோ : ஆனால் இது வஸந்தராவுக்கு சரியாகப் படுமோ படாதோ!

தம : அதை அவர்தான் சொல்ல வேண்டும்.

கமலா : அவர் வந்திருக்கிறாரா?

தம : இன்னம் வரவில்லை .

துக்கோ : ஆனால் அவருடைய வருகையை எதிர்பார்க்கிறீர்களோ? அவரைப் பார்க்க என்னுடைய குழந்தைகள் நிரம்பவும் ஆசைப்படுகிறார்கள். அவர் தம்முடைய ஜெமீனை விட்டுப் போய் அநேக மாதங்கள் ஆகின்றன அல்லவா?

தம : ஆம், ஆம். இருக்கும், இருக்கும். இதைப் பற்றிச் தெரிவிக்கும் பொருட்டே நான் உங்களை வரவழைத்தேன். இந்த ஜெமீன் இனிமேல் அவருடையதல்ல. இதற்கு முன்னும் அவருடையதல்ல. கடைசியாக பரசுராம பாவா எழுதிய சாஸனம் அகப்பட்டு விட்டது. அதன்படி வஸந்தராவுக்கு ஒன்றுமில்லாமல் போய்விட்டது.

துக்கோ : என்ன ஆச்சரியமிது! அவருக்கு ஒன்றுமில்லாமலா போய்விட்டது? யாருக்குப் போய்ச் சேர்ந்தது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/262&oldid=1234108" இலிருந்து மீள்விக்கப்பட்டது