பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அல்லது உணர்ச்சிகள் தொடர்பான உணர்ச்சிப் பைத்தியம்' என்று ஒரு முக்கிய மனநிலைக் கோளாறாகும். பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான உணர்ச்சி அல்லது மனநிலைச் சீர்குலைவுக்கு ஆளாகிறார்கள்.

afferent : அகமுக நோக்கிய; நடு ஈர்ப்புவழி : நரம்பு மையங்களுக்கு உணர்ச்சிகளைக் கொண்டு சேர்க் கிற.

afferent nerve : உணர்ச்சி நரம்பு மூளைக்கும் தண்டுவடத்திறகும் உணர்ச்சிகளைக் கொண்டு சோக்கிற நரம்பு.

affiliation : மூலம் காண்டல் : முறையற்ற வகையில் பிறந்த குழந்தையைத் தந்தை இன்னாரென்று கண்டுபிடித்து அவரிடம் சேர்த்தல்

affinity : இணைப்பீர்ப்பு; நாட்டம்: இரண்டு பொருள்கள் வேதியியல் முறையில் இணைதல். எடுத்துக்காட்டு: ஆக்சிஜன், சிவப்பணு (ஹேமோகுளோபின்).

afibrinogenaemia : குருதி உறையாமை : குருதிக்கட்டு (இரத்தம் உறைதல்) இன்மை என்னும் ஒரு கடுமையான நோய், இரத்தத்தை இறுகி உறையச் செய்யும் பொருள் போதிய அளவு இல்லாமையால் இது உண்டாகிறது.

aflatoxin : புற்றுத் தூண்டு பொருள் ; பூசண நச்சு : வெது வெதுப்பும் ஈரமும் வாய்ந்த தட்ப வெப்ப நிலைகளில் சேமித்துவைக்கப் பட்டிருக்கும் நிலக்கடலை, கார்போஹைட்ரேட் உணவுகள் ஆகியவற்றைப் பாதிக் கக்கூடிய ஒருவகைப் பூஞ்சைக் காளானிலுள்ள புற்றுநோய் வள ரத் தூண்டுதல் செய்யும் பொரு ளின் வளர்சிதை மாற்றப் பொருள் கள் இவற்றில் நான்கு முக்கிய பிரிவுகள் உண்டு B1, B,. G. G..

31 IL மனிதரின் நுரையீரல் உயிரணுக்களில் இந்தப் பொருள்களை உற்பத்தி செய்வதற்கும் போதுமான செரிமானப் பொருள்கள் (என்சைம்) உள்ளன. இது நுரையீரல் புற்று நோய் பீடிப்பதற்கு முன் அறிகுறியாகும்.

afterbirth : பேறுகால இளங்கொடி ; நச்சுக் கொடி : குழந்தை பிறந்த பின்பு கருப்பையிலிருந்து வெளியேற்றப்படும் நச்சுக் கொடி மற்றும் சவ்வுகள். கருவில் வளரும் குழந்தை தாயிடமிருந்து உணவும் ஆக்சிஜனும் பெறுவதற்கு உதவும் உறுப்பு. குழந்தை பிறந்த பின்பு இது தாயிடமிருந்து வெளியே வந்து விடும். இதனுடன் குழந்தை உருவாகும் கருப்பையின் உள்படலமும் வெளிவரும். இவை இரண்டும் சேர்ந்து பேறுகால இளங்கொடி எனப்படும்.

aftercare : பிற்காப்பு: மருத்துவத்துக்குப் பின் பேணுவது : நோயிலிருந்து குணமடைந்து உடல்தேறி நலம் பெறும் போதும், மீண்டும் பழைய வாழ்க்கைக்குத் திரும்பும் போதும் அளிக்கப்படும் பிற்பாது காப்பு அல்லது கவனிப்பு.

after effect - பின்விளைவு : உயிர்த்தசை இயக்கத்தைத் தூண்டும் பொருளின் தொடக்க விளைவுக்குப் பின்பு ஏற்படும் ஓர் எதிரெதிர் விளைவு.

after image : பின் தோற்றம்; மீள் வடிவம்: ஒரு பொருளைப் பார்த்த பின்பு மனத்தில் சிறிது நேரம் பதிந்திருக்கும் உருவம். இந்த உருவம் அதன் இயல்பான முனைப்பு வண்ணங்களுடன இருக்குமானால் அது நேர் பின் தோற்றம்' எனப்படும். ஒளிரும் பகுதிகள் கருப்பாக வும், கரும் பகுதிகள் ஒளிர்வுட னும் இருக்குமாயின் அது எதிர் பின் தோற்றம்' எனப்படும்.