பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 லிருந்து பளிக்கு வில்லையை (லென்ஸ்) வெளியே எடுப்பதற்கு இது உதவுகிறது. இதனை வாய் வழி உட்கொள்ளும்போது வீக்கம் ஏற்படாமல் தடுக்கிறது.

alphafeto protein : ஆல்ஃபா - ஃபெட்டோ - புரதம்: முதிர்கரு இயல்பு திரிந்து இருக்கும் நேர்வுகளில் தாயின் நிண நீரிலும், கருவை அடுத்துச் சுற்றியுள்ள சவ்வுப் படலத்தின் நீர்மத்திலும் இருக்கும் பொருள்.

alpha-toco-pherol : ஆல்ஃபா - டோக்கோ - ஃபெரோல் : வைட்டமின் E' என்ற ஊட்டச்சத்தின மருத்துவப் பெயர்.

alpronolol : ஆல்பிரனோலால் : அண்ணீரகச் சுரப்பியிலிருந்து இயக்குநீர் சுரப்பதைத் தடுக்கும் மருந்து. இடது மார்பு வேதனை தரும் இதய நோயில், நெஞ்சுப்பையின் இயக்கத்தைக் குறைக்கிறது. இதயத் துடிப்பு வேகவீதத்தையும், நெஞ்சுப்பை இயக்குநீர் சுரக்கும் அளவையும், தமனி அழுத்தத்தையும் குறைக்கிறது.

alrine : வயிறு சார்ந்த.

alternative medicine : மாற்று மருத்துவம் : அலகுமுனை மருத் துவம் (அக்குபங்க்சா ), உயிரியல் பின்னூட்டு. வர்ம மருத்துவம். இனமுறை மருத்துவம் (ஓமியோ பதி), தசைத் தளர்ப்பீடு யோகம் போன்ற மாற்று மருத்துவ முறை கள். alum: படிக்காரம் - பொட்டாசியம் அல்லது அம்மோனிய அலுமினிய சல்ஃபேட்டு இதன் இறுகச் செய்யும் தன்மை காரணமாக, வாய் கொப்புளிக்கும் திரவமாகவும் (1%), நச்சுப் பொருளை வெளியேற்ற பீற்று குழலின் தாரையாகவும் (0.5%) பயனபடு கிறது. aluminium hydroxide : அலுமினியம் ஹைட்ராக்சைடு : வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்து; புளிப்பு மாற்று மருந்து; புளிப்புத் தன்மைக்கு எதிரீடானது. இரைப்பைப் புண்ணைக் குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தும்போது நீண்ட நாட்கள் வினை புரிகிறது. இது பெரும்பாலும் மென்மையான பாலேடு அல்லது கூழ் வடிவில் இருக்கும்.

aluminium paste : அலுமினியம் களிம்பு : அலுமினியத்தூள், துத்தநாக ஆக்சைடு, திரவக் கன்மெழுகு பாரஃபின்) ஆகியவை கலந்த ஒரு களிம்பு. இது தோல் காப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது இதனை 'பால்ட்டிமோர் களிம்பு' என்றும் கூறுவர்.

alupent : அலுப்பென்ட் : ஆர்சிப் எனலீன் சல்ஃபேட்' என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

alveolar capillary block syndrome : நுரையீரல் கண்ணறைத் தந்துகி அடைப்பு நோய் : நோய்க் காரணம் கண்டறியப்படாத ஓர் அரிய நோய். இதில் நுரையீரல் கண்ணறை உயிரணுக்கள் பருத்து பிடுவதன் காரணமாக ஆக்சிஜன் பரவுதல் நடைபெறாமல் மூச்சடைப்பு, தோல் நீலநிறமாதல், வலது இதயம் செயலிழத்தல் போனற கோளாறுகள் உண்டாகின்றன

alveolitis : நுரையீரல் கண்ணறை பக்கம், நுரையீரல் கண்ணறைகளில் வீக்கம் ஏற்படுதல். பூந்தாது மகரந்தம்) போன்ற ஓர் அயற் பொருளைச் சுவாசிப்பதால் இது உண்டாகிறது. இதனை 'அயற் பொருள் ஒவ்வாமை நுரையீரல் கண்ணறை வீக்கம்' என்பர். alveolus : மூச்சுச் சிற்றறை; கண்ணறை. (1) நுரையீரலிலுள்ள மாற்றுக் கண்ணறைகள் (2) பல்லுக்கு ஆதரவாகவுள்ள பல் பாருந்து குழி.