பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டிக்காய்ச் சுரப்பியின் புறப்பகுதி இயல்புக்கு மீறுதலாகச் செயற்படு வதைக் கண்டறிவதற்கான ஒரு சோதனை. இதில் நிணநீர் சுரக்கும் அளவினைக் கணக்கிடுவதன் மூலம் இது கண்டறியப்படுகிறது.

adrenalectomy : அண்ணீரகச் சுரப்பி அறுவைச் சிகிச்சை : கட்டி ஏற்பட்டுள்ள ஒரு குண்டிக்காய்ச் சுரப்பியை அகற்றுவதற்கான அறுவைச் சிகிச்சை. குண்டிக்காய்ச் சுரப்பிகள் இரண்டையுமே அகற்றி விட்டால், உட்சுரப்பு இயக்குநீர் களை (ஹார்மோனகள்) உட்செலுத்துதல் வேண்டும்.

adrenaline : அண்ணீரகச் சுரப்பு நீர் ! பாலூட்டிகளில் குண் டிக்காய்ச் சுரப்பியிலிருந்து ஊறும் இயக்குநீர் (ஹார்மோன்). இந்த நீர் உடலை போராடுவதற்கு (அல்) தப்பிப்பதற்குத் தயார் செய்கிறது. இந்த இயக்குநீரைச் செயற்கை முறையிலும் தயாரிக்கலாம். புறத தாண்டுதலால் உயிர்மம் முழுதும் எதிரியங்குறுவதில், இந்த நீர் பான மாக உட்கொள்ளப்படுகிறது. நிண நீரூசியால் உண்டாகும் கொப் புளக் காய்ச்சல், மூச்சுத்தடை யுடன் கூடிய ஈளை நோய் (ஆஸ்த் மா). காஞ்சொறித் தடிப்பு போன்ற ஒவ்வாமை நோய்களுக்கு ஊசிமூலம் இது செலுத்தப்படு கிறது. உறுப்பெல்லை உணர்வு நீக்கக் கரைசல்களில் விரவிப் பரவு வதைக் குறைப்பதற்காகவும். உணர்விழப்பு நிலையை நீடிப்ப தற்காகவும் இது சேர்க்கப்படு கிறது. இரத்தவோட்டச் சீர் குலைவு நிலைகளில், மிகவும் நீர்த்த கரைசலாக (1:1,00,000) மெது வாக, மெதுவாக நரம்பு மூலம் செலுத்தப்படுகிறது.

adrenal glands : அண்ணீரகச் சுரப்பி; அண்ணீரகச் சுரப்பி : இவை சிறுநீரகத்தை அடுத்துள்ள சுரப்பிகள். இந்தச் சுரப்பியின் உட்பகுதியான உட்கருவிலிருந்து ஊறும் 'அட்ரினலின்' எனப்படும் சுரப்பு நீர் இரத்தத்தில் பாய்ந்து. திடீர் அச்சம் அல்லது கோபத்தின் போது விரைவான இதயத்துடிப்பு. வெறுத்த முகம் போன்ற விளைவுகளை உண்டாக்குகிறது. இந்தச் சுரப்பியின் புறப்பகுதி உள்ளுறுப்பு மாறுதல்களை உண்டாக்குகிறது. பறவைகளிலும் மீன்களிலுமுள்ள இந்தச் சுரப்பிகள் முற்றிலும் வேறானவை.

adrenergic : அண்ணீரகச் சுரப்பு நீர் நரம்புகள் : குண்டிக் காய்ச் சுரப்பு நீரையோ, குண்டிக் காய்ச் சுரப்பு அல்லாத இயக்கு நீரையோ அவற்றின் சேர்முனையங்களிலிருந்து வெளியேற்றுகிற நரம்புகள். பெரும்பாலான பரிவு நரம்புகள், குண்டிக்காய்ச் சுரப்பு அல்லாத இயக்குநீரை வெளி யேற்றுகின்றன.

adrenogenital syndrome : உட் சுரப்புக் கோளாறு; அண்ணீரகப் பாலுறுப்பு நோய்த் தொகுப்பு: குண்டிக்காய்ச் சுரப்பியின் புறப்பகுதியின் இயல்புக்கு மீறிய நடவடிக்கையின் விளைவாகப் பிறவியிலேயே தோன்றும் ஒருவகை உட்சுரப்புக் கோளாறு இதனால் ஒரு பெண்குழந்தையிடம் விரிவடைந்த மகளிர் கந்தும், உதட்டு இதழ்கள் இணைந்தும் காணப்படலாம். அப்போது அந்தக் குழந்தையை ஆண் என்று தவறாகக் கருத இடம் ஏற்படும். ஆண் குழந்தையிடம் வெளிப்படையான மயிரும், விரிவடைந்த ஆண் குறியும் காணப்படும். ஆண் பெண் குழந்தைகள் இரண்டிலும் விரைவான வளர்ச்சியும். திண்ணிய தசைப் பற்றும். மிகுந்த எலும்பு முதிர்ச்சியும் காணப்படும்.

adriamycin : அட்ரியாமைசின் 'டாக்சோரூபிக்கன்' என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

adsorbents : (ஆவி) உறிஞ்சிகள் : தங்கள் மேற்பரப்புகளிலுள்ள வாயுக்களை அல்லது கரைசல் பொருள்களை உறிஞ்சிக் கொள்கிற திடப்பொருள்கள். கட்டைக் கரி . வாயுக்களை உறிஞ்சி, ஒரு மணம் அகற்றுப் பொருளாகச் செயற்படுகிறது. காவோன் பாக் உரியா நச்சுப் பொருள்களையும் பிற நச்சுப் பொருள்களையும் உறிஞ்சிக் கொள்கிறது. இதனால் இது உணவு நஞ்சூட்டு நேர்வுகளில் பயன்படுத்தப்படுகிறது.

adsorption : ஆவியை உறிஞ்சு தல்; புறத்துறிஞ்சல் ; மேலீர்ப்பு: தனது மேற்பரப்பிலுள்ள ஒரு