பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரைப்பை - குடல் கோளாறுகள், தோல் ஊதாநிறமாக மாறுதல் போன்ற கோளாறுகள் உண்டாகின்றன.

adduction: தசைமையைச் சுரிப்பு: தசை மைய ஒடுக்கம்; அகப்பெயர்ச்சி : உடலின் தசை நார்கள் உடலின மையம் நோக்கி இழுத்தல்

adductor : மையச் சுரிப்புத் தசை நார் : உடல் உறுப்பு எதனையும் உடலின் மைய அச்சினை நோக்கி இழுக்கும் இயல்புடைய தசைநார்.

adductor muscle மைய இழுப்புத் தசை : முன்னிழுக்கும் இயல புடைய தசைநார் கையை உடலை நோக்கிக் கொண்டு வருவது இந்தத் தசைதான்.

adenectomy: சிகிச்சை நிண நீர் கணு நீக்கம்; சுரப்பி நீக்கம்: ஒரு சுரப்பியை அறுவைச் சிகிச்சை செய்து அகற்றுதல்.

adenitis : சுரப்பி அழற்சி : ஒரு சுரப்பியில் அல்லது நிணநீர்க் கரணையில் ஏற்படும் வீக்கம். மூச்சுக் குழாய் நிணநீர்க் கரணைகளில் ஏற்படும் வீக்கம் அல்லது அழற்சி.

adenocarcinoma சுரப்பிப் புற்று சுரப்பித் திசுப் புற்று : சுரப்பித் திசுக்களில் ஏற்படும் புற்றுநோய். இதனை சுரப்பிப் பிளவை என்றும் கூறுவர்.

adenoidectomy: மூக்கடித் தசை அறுவைச் சிகிச்சை ; மூக்கடித் தசைத் திசுவின் அழற்சியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல்

adenoids : மூக்கடித் தசை வளர்ச்சி (மூக்கடியான்) : மூக்கடித் தசையிலுள்ள நிணநீர்ச் சுரப்பித் தசை மிகையான வளர்ச்சி. இதனால் மூச்சடைப்பு ஏற்படுவதுடன், கேட்கும் திறனும் குறையும்.

adenoma: சுரப்பிக் கட்டி, கோளப் புற்று, சிறு சுரப்பிக் கட்டி : சுரப்பித் திசுக்களில் உண்டாகும் கழலைக் கட்டி

adenomyoma: கருப்பைக் கழலை : தசையும் சுரப்பிக் கூறுகளும் கொண்ட கழலைக் கட்டி பொது வாக இது கருப்பையில் தோன்றும் கடுமையல்லாத வளர்ச்சியைக் குறிக்கும்.

adenopathy : சுரப்பி நோய்; நிண நீர் சுரப்பிப் பெருக்கம்; கோள நோய் : ஒரு சுரப்பியில், குறிப்பாக ஒரு நிண நீர்ச்சுரப்பியில் உண்டாகும் ஏதேனும் நோய்.

adenosinase : அடினோசின் சிதைப்பி .

adenosclerosis : சுரப்பி கெட்டி யாகல் ; கோளத் தடிமன் : ஒரு சுரப்பி. வீக்கத்துடன் அல்லது வீக்கமின்றி, கட்டியாகி விடுதல். இழைமத்திசுவின் பதிலீடு அல்லது சுண்ணக மயமாக்குதல் காரணமாக ஒரு சுரப்பு கடினமாகிறது.

adenosine diphosphate (ADP): அடினோசின் டைஃபாஸ்ஃபேட் (ADP) : உயிரணுவிற்குள் நடை பெறும் எரியாற்றல் பரிமகற்றத்தில் உள்ளடங்கிய உயிர்மங்களாலான ஒரு முக்கியமாக வளர்சிதை மாற்றப் பொருள். இந்தப் பொருளின் மூலமாக உயிரணுவில் வேதியியல் எரியாற்றல் பாது காத்து வைக்கப்படுகிறது.

adenosine triphosphate (ATP): அடினோசின் டிரைஃபாஸ் ஃபேட் (ATP) : நடுத்தரமான மிகு எரி யாற்றல் கூட்டுப் பொருள். இது அடினோசின் டைஃபாஸ் ஃபேட் டினை நீரிடைச் சேர்மப் பிரிப்பு செய்யும் போது பயனுள்ள வேதி யியல் எரியாற்றலை வெளியிடு கிறது. உயிர்ப்பொருள் கட்டமைப் பின்போது இந்தப்பொருள் உண்டாகிறது.