பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

விழுந்த கல்லு வண்ணானுக்கு

நட்ட கல் பார்ப்பானுக்கு!

நட்ட கல்லிலே நாதன் இருக்கிறான் எனப் பறையறைவது பார்ப்பனியம் - புரோகிதம். ஏன் கல்லைக் கழுவி உயிர் வாழ்வதையே பிழைப்பாகக் கொண்டுவிட்ட ஒரு கும்பல் உடல் கொழுக்கும் வகை காண்பதற்காக, மதத்தின் பெயரால் கடவுள் பெயரால் பத்தியின் பெயரால் மக்களைச் சுரண்டுவதற்காக.

தூணிலும் துரும்பிலும் சாமியென்றால் கண்ட கல்லையெல்லாம் தம்பிட்டு உய்யலாமே உயிரினங்கள்! அது கூடாது. தெய்வம் ஆவிர்த்திருப்பது யோக யாக குண்டங்களாலும் மந்திரங்களாலும் புனிதப்படுத்தப்பட்டு, அக்னி சாட்சியாக, சக்கரம் முதலியன வரைந்து கும்பாபிஷேகதிகள் செய்து யாருக்கும் விளங்காத வடமொழி வறட்டுத்தவளைக் கூச்சல் முழங்க பிரதிஷ்டை செய்யப்பட்ட கற்களிலே தான். அவற்றைத் தான் கும்பிடவேண்டும்' என்கிறது புரோகிதம், அதற்கு ஆஸ்திகம் மேளதாளம் தட்டுகிறது! இந்த விதமாக அறியாமைக் கொடியேற்றுவிக்கப்படுகிற கோயில்கள் வர வர பாவமாளிகைகளாக வளர்ந்துள்ளன.

கோயிலில் கலை இருக்கிறது: கலை வளர்கிறது என்றெல்லாம் சொல்லப்படுகிறது. கலை கொலை செய்யப்படாமலிருந்தால் அதுவே பெரும் பாக்கியமாகும்!

நான் கூறுவது கட்டுக்கதையல்ல, கோயில்களின் வண்டவாளங்களைச் சிறிது ஆராயலாம்.