பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவாரம்

7


பருமதில் மதுரைமன் அவை எதிரே
Parumadhil madhuraiman avai edhire

பதிகமது எழுது இலை அவை எதிரே
padhigamadhu ezhudhu ilai avai edhire

வருநதி இடை மிசை வருகரனே
varunadhi idai misai varukarane

வசையொடும் அலர்கெட அருகு அரனே
vasaiyodum alarkeda arugu arant

கருதல் இல் இசை முரல் தரும் அருளே
karudhal il isai muraltharum arula

கழுமலம் அமர் இறை தரும் அருளே
kazhumalam amar irrai tharum arullē

மருவிய தமிழ்விரகன மொழியே
maruviya Thamizhviragana Mozhiye

வல்லவர் தம் இடம் திடம் ஒழியே.
vallavar tham idar dhidam ozhiye.

திருச்சிற்றம்பலம்

பருத்த மதில்களை உடையது மதுரை. அம்மதுரையின் அரசன் முன்னிலையில், ஒரு பதிகம், ஓலையில் எழுதிச் சபையினர் முன்னே (வைகை) நதியில் இடப்பட்டது. (வெள்ளத்தில் போகாமல்) அதனைக் கையில் ஏந்தியவனே!

குற்றம் பொருந்திய பொய்யுரை கெடுமாறு அருகர்களை அழித்தவனே. விவரிக்க முடியாத இசை ஒலிக்கும் அருள் வடிவம் ஆனவனே.

ழுமலம் எனும் சீகாழியில் வீற்றிருக்கிறார் இறைவன். அவ் இறைவன் அருள் பெற்றவர் தமிழ் விரகன் (என்னும் சம்பந்தர்) இவர் பாடிய பாடல்களை வல்லவர்களுடைய தீவினை நீங்குவது உறுதி.

பருமதில் - strong enclosure
மன்--king
எதிர்--before
எழுதி-write
நதஇடை-in the river
மன் அவை-court of the king
பதிகம்-pathigam-ten verses
வரு-flowing
மிசை-on