இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்
- தொகுக்கப்பட்ட, ஒன்றுபடுத்தப்பட்ட உரிமையான உழைப்பைத் தவிர வேறு ஆற்றலால் மனிதனை மிக உயர்ந்தவனாகவும், பேரறிவாளனாகவும் ஆக்க முடியாது. மாக்சிம் கோர்கி
- உழைப்பாளியின் உடல் ஆற்றல்களினால் வியப்புகளை விளை விக்க இயலும். மாக்சிம் கோர்கி
- எதிர்காலம் நேர்மையாக உழைக்கும் மக்களுக்கு உரிமையானது. மாக்சிம் கோர்கி
- அனைத்து உழைக்கும் மக்களையும் ஒன்று சேர்க்கும் ஒர் ஆற்ற லாக உழைப்பு நம்மைச் செய்துள்ளது. வி.இ.இலெனின்
- உழைப்பாளியிண் உழைப்பு, உழவர்களின் பயிர் . இவை இரண்டும் வாழ்க்கையெண்னும் வண்டி அதிக விரைவில் செல்ல உதவும் காலச் சகடங்களாகும். விளாடிமீர் மயாகோல்ஸ்கி
- சமுகத்தின் செல்வமனைத்தும், அனைத்துமே, இச் சமூகத்தின் உழைப்பாளிகளுக்குத் திரும்பச் சென்றடைய வேண்டியவை.
திமிட்ரி பிசரேவ்
- உழைக்கும் மனிதனுக்கும், அவன் உழைக்கும் சமுக்த்திற்கு மிடையேயான வலிமை மிகுந்த, மிகுந்த நம்பத் தகுந்த இணைப்பு உழைப்பேயாகும். திமிட்ரி பிசரேவ்
- உழைப்பு என்பது எப்போதுமே மனித வாழ்க்கையின் பண்பாட்டின்
எல்லைக் கல்லாக இருந்து வந்துள்ளது.
ஆண்டன் மெகரெண்கோ
- கடின உழைப்பு, மனிதனின் உழைப்பு, அனைத்தையும் செய்து முடித்து, குறிக்கோள்கள் அனைத்தையும் எட்டச் செய்யும்; வரலாற்றின் நோக்கம் அத்தகையதாகும்.
திமிட்ரி மென்டேலயேல்
101