பக்கம்:வைணமும் தமிழும்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சம்பிரதாயங்களாக - மேலும் சில

329


(எ) வலப்புறக் கழுத்தில் - திரிவிக்கிரமன் : இவர் அக்கினி காந்தியோடு கட்கங்களை நான்கு புயங்களிலும் தாங்கிக் கொண்டு வராரோகிணி பிராட்டியாருடன் சேவை பாலிப்பார்.

(ஏ)இடப்புறவயிற்றில்-வாமனன்: இவர் இளஞாயிறு வண்ணத்துடன் நான்கு கைகளிலும் வச்சிராயுதங்களைத் தாங்கியவராய் அரிப்பிரியை பிராட்டியாருடன் கருணை செய்வார்.

(ஐ) இடப்புயத்தில்-சிரீதரன் : இவர் தாமரையின் நிறத்தோடு நான்கு கைகளிலும் நான்கு வாள்களைக்கொண்டு சாரங்கணி பிராட்டியாருடன் சேவையளிப்பார்.

(ஒ) இடப்புறக் கழுத்தில்-இருடிகேசன் : இவர் மின்னல் நிறத்துடன் நான்கு திருக்கைகளிலும் நான்கு உழலைத் தடிகளைத் தாங்கிய வண்ணம் தேவதேவி பிராட்டியாருடன் தயை செய்தருளிப் பொலிவார்.

(ஓ). முதுகடியில்-பதுமநாபன் : இவர் சூரிய ஒளியுடன் நான்கு கைகளிலும் நான்கு பஞ்சாயுதங்களைத் தாங்கிக் கொண்டு மகாலட்சுமி பிராட்டியாருடன் குளிர நோக்கி வாழ்த்துவார்.

(ஒள) பிடரியில்-தாமோதரன் : இவர் இந்திர கோபம் போன்ற ஒளியுடன் நான்கு கைகளிலும் நான்கு பாசாயுதங் களைக் கொண்டவராய் சர்வலோகசுந்தரி (சர்வாங்க சுந்தரி)ப் பிராட்டியாரோடு எழுந்தருளியிருந்து காத்தருள்வார்.