உள்ளடக்கத்துக்குச் செல்

தேவாரம்

விக்கிமூலம் இலிருந்து

தேவாரம் எனப்படுபவை சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமான்🙏 மீது, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய மூன்று இறையடியார்களால் தமிழிற் பாடப்பட்ட பாடல்கள் ஆகும். முதல் இருவரும் கி.பி. 7ஆம் நூற்றாண்டிலும், மூன்றாமவர் கி.பி. 8ஆம் நூற்றாண்டிலும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன. பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.


10ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்துப், பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் பன்னிரண்டு சைவத் திருமுறைகளாகத் தொகுத்தார். இதில் முதலேழு திருமுறைகளும் தேவாரங்களாகும். இவற்றின் விபரங்கள் பின்வருமாறு.

இல. திருமுறை பாடியவர் பாடல் எண்ணிக்கை
1 முதலாம் திருமுறை திருஞானசம்பந்தர் 1469
2 இரண்டாம் திருமுறை 1331
3 மூன்றாம் திருமுறை 1346
4 நான்காம் திருமுறை திருநாவுக்கரசர் 1060
5 ஐந்தாம் திருமுறை 1015
6 ஆறாம் திருமுறை 0980
7 ஏழாம் திருமுறை சுந்தரர் 1026
மொத்தம் 8227

பார்க்க

[தொகு]
திருஞானசம்பந்தரின் முதற்பதிகம்
திருநீற்றுப்பதிகம்
திருவெழுகூற்றிருக்கை
பஞ்சாக்கரத்திருப்பதிகம்
நமச்சிவாயத்திருப்பதிகம்
மாலை மாற்று
கோளறு பதிகம்


வெளியிணைப்புகள்

[தொகு]

அனைத்து தேவாரப் பதிகங்கள் மற்றும் பிற திருமுறைப் பாடல்களையும் கீழ்கண்ட உரலியில் காணலாம்.- தேவாரம் தளம் ( பன்னிரு திருமுறைகள் - தேவாரம் உள்ளடங்கியது)

"https://ta.wikisource.org/w/index.php?title=தேவாரம்&oldid=1532933" இலிருந்து மீள்விக்கப்பட்டது