70 ☐ தம்ம பதம்
293. உண்மையான பிராமணன் ஒருவன் தன் தாயையும் தந்தையையும், குருமார்களாகிய கூடித்திரிய மன்னர் இருவரையும், ஐந்தாவதாக ஒரு வேதியனையும் கொன்றிருந்த போதிலும், அவன் பாவ மற்றவனாவான். (6)
294. கெளதமருடைய [1] சீடர்கள் எப்போதும் கருத்துடன் விழிப்பாயிருக்கிறார்கள்; இரவும் பகலும் எப்போதும் அவர்களுடைய சிந்தனை யெல்லாம் புத்தரைப் பற்றியவையே. (7)
295. கெளதமருடைய சீடர்கள் எப்போதும் கருத்துடன் விழிப்பாயிருக்கிறார்கள்; இரவும் பகலும் எப்போதும் அவர்களுடைய சிந்தனை யெல்லாம் பெளத்த தருமத்தைப் பற்றிவையே. (8)
ஒரு பிரம்மாவைப் பற்றியோ தேவர்களைப் பற்றியோ அவர் நம்புவதுமில்லை. ஆராய்வதுமில்லை இவை போன்ற ஒரு சொல்லே ‘பிராமணர்’ என்பதும், சில இடங்களில் புத்தர் பிக்குகளைப் பிராமணர் என்று கூறுவதுண்டு. பிராமண குலத்தில் பிறந்தவரை அவர் குறிப்பிடவில்லை. உண்மையான பிராமணர் எவர்கள் என்று அவர் விளக்கி யுரைத்திருப்பதை இந்நூலிலே 26வது இயலில் காணலாம். அவர் கருத்துப்படி பிராமணராயிருப்போர் ஈ எறும்புக்குக்கட்ட ஹிம்சை செய்யமாட்டார்.
இந்த 5, 6-சூத்திரங்களுக்குத் ‘தாய்’ என்பது அவா, தந்தை என்பது ‘அகங்காரம்’ என்ற முறையில் விசேட உரைகள் கூறுவதுண்டு. இப்படியெல்லாம் மறை பொருளாகக் கூறித் திகைக்க வைக்கும் முறை புத்தரிடம் அரிது.
பழைய ஹிந்துமத நூல்கள் சிலவற்றில், பிராமணன் கொலை செய்தால் பாவமில்லை என்று கூறியிருப்பதற்கும் புத்தர் கூற்றுக்கும் துளியும் சம்பந்தமிருக்க முடியாது. பெளத்த தருமத்தின்படி ஒவ்வொருவனும் தன் சிந்தனைக்கும் செயலுக்கும் தானே பொறுப்புள்ளவன். பாவ மன்னிப்பு என்பதே கிடையாது. ஒவ்வொருவனுடைய பாவத்தையும் அவனே அனுபவித்துத் தீர வேண்டும்.
- ↑ கெளதமர்-புத்தர்.