68 ☐ தம்ம பதம்
283. சடரத்காலத்தில் தோன்றும் குமுத புஷ்பத்தைக் கையால் பறித்தெடுப்பதுபோல், ஆன்ம நேயத்தை [1] அறுத்தெறிக. புத்தர் போதித்த நிருவாண முக்திக்குரிய சாந்தி மார்க்கத்தைப் போற்றி நடக்கவும். (13)
284. முடனாயிருப்பவன், ‘கார் காலத்தில் இங்கே வசிப்பேன்!’ என்றும், ‘குளிர் காலத்திலும், கோடை காலத்திலும் அங்கே வசிப்பேன்?’ என்றும் கருதுகிறான்; (இடையிலே வரக்கூடிய மரணம் என்ற) இடையூற்றைப் பற்றி அவன் எண்ணுவதில்லை. (14)
285. (மக்கள்) உறங்கிக் கொண்டிருக்கையில் பெரு வெள்ளம் வந்து கிராமத்தையே அடித்துக் கொண்டு போய்விடுகிறது; அதுபோல், தன் மக்கள் பசுக்கள் முதலிய செல்வங்களில் மகிழ்ந்து மயக்கத்திலுள்ள மனிதனை எமன் வந்து அடித்துக் கொண்டு போகிறான். (15)
286. எமனால் பிடிக்கப்பட்ட ஒருவனை அவன் பெற்ற மக்கள் காக்க முடியாது; தந்தையும் தமர்களும் காக்க முடியாது; உற்றாரை நம்பியும் பயனில்லை. (16)
287. இதன் உண்மையை உணர்ந்து , நற்குணமுள்ள ஞானி நிருவான முக்திக்குரிய வழியிலேயுள்ள தடைகளை உடனே நீக்கிக் கொள்ளட்டும். (17)
- ↑ ஆன்ம நேயம் - தன்னை நேசித்தல், சுயநலம்