உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்ம பதம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் ஒன்று

இரட்டைச் செய்யுட்கள்


[இந்த இயலில் ஒவ்வொரு கருத்தும் இரண்டு சூத்திரங்களால் விளக்கப் பெற்றிருத்தலால், இதற்கு 'இரட்டைச் செய்யுட்கள்' என்று பெயர்.]

1. மனிதரை மனோதர்மமே உருவாக்குகின்றது; சிந்தனைகளே அதன் அடிப்படை: சிந்தனைகளாலேயே அது ஆக்கப்படுகின்றது. மனிதன் தீய எண்ணத்தோடு பேசினாலும், செயல் புரிந்தாலும், வண்டிச் சக்கரம் மாட்டைத் தொடர்ந்து செல்வது போல், துக்கம் அவனைத் தொடர்ந்து செல்லும். (1)

2. மனிதனை மனோதர்மமே உருவாக்குகின்றது; சிந்தனைகளே அதன் அடிப்படை; சிந்தனைகளாலேயே அது ஆக்கப்படுகின்றறு. மனிதன் நல்லெண்ணத்துடன் பேசினாலும் செயல்புரிந்தாலும், நிழல் தொடர்ந்து செல்வதுபோல், இன்பம் அவனைத் தொடர்ந்து செல்லும். (2)

3. 'என்னை நிந்தித்தான், என்னை அடித்தான், என்னை வென்றான். என்னைக் கொள்ளையிட்டான்'–இத்தகைய எண்ணங்களை உடையாரிடம் துவேஷம் நீங்காது நிலைத்திருக்கும். (3)

4. என்னை நிந்தித்தான், என்னை அடித்தான், என்னை வென்றான், என்னைக் கொள்ளையிட்டான்’–இத்தகைய எண்ணங்கள் இல்லாதாரிடம் துவேவும் நில்லாது நீங்கும். (4)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/15&oldid=1381772" இலிருந்து மீள்விக்கப்பட்டது