உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்ம பதம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் பதினேழு

கோபம்


219. கோபத்தை விடு, செருக்கைக் கைவிடு, உலகப் பற்றுக்கள் அனைத்தையும் ஒழி. நாம-உருவங்களில் தொடர்பற்றவனுக்கு, எதையும் ‘எனது’ என்று கொள்ளாதவனுக்குத் துக்கங்கள் ஏற்படுவதில்லை. (1)

220. வழிதவறிச் செல்லும் இரதம் போலப் பொங்கி வரும் கோபத்தை அடக்கியாள்பவனையே நான் சரியான சாரதி என்று சொல்வேன்; மற்றையோர் கடிவாளக் கயிற்றைக் (கையில்) வைத்திருப்பவர்களே. (2)

221. வெகுளியை விநயத்தால் வெல்லவேண்டும்:

தீமையை நன்மையால் வெல்லவேண்டும்;
கருமியை ஈகையால் வெல்லவேண்டும்;
பொய்யனை மெய்யால் வெல்லவேண்டும்.

(3)

222. சத்தியமே பேசு, வெகுளிக்குப் பணியவேண்டாம், யாசிப்பவர்க்கு இயன்றதைக் கொடு-இந்தமூன்று வழிகளாலும் ஒருவன் தேவர்களுடைய சந்நிதியை நிச்சயம் அடையலாம். (4)

228.முனிவர்கள் அஹிம்சையோடு இருப்பவர்கள், எப்போதும் உடலைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்கள். அவர்கள் நிலையான இடத்தை அடைவார்கள்; அடைந்த பின்பு அவர்கள் வருந்துவதில்லை. (5)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/57&oldid=1381854" இலிருந்து மீள்விக்கப்பட்டது