பக்கம்:தம்ம பதம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16 ☐ தம்ம பதம்

18. நற்கருமத்தைச் செய்தவன் உலக வாழ்வில் இன்பமடைகிறான், மறுமையிலும் இன்பமுறுகிறான்; இரண்டிலும் அவனுக்கு இன்பமே. ‘நான் செய்த புண்ணியம்!' என்று அவன் இன்பமடைகிறான். பேரின்ப வீட்டிலும் அவன் மேலும் அதிகமாய் இன்புறுகிறான். (18)

19. சாத்திரங்கள் அனைத்தையும் கற்று ஒப்பித்தாலும், வாழ்க்கையில் அவற்றின்படி நடக்காதவன், ஊரார் பசுக்களைக் கணக்கிட்டு எண்ணும் ஆயனைப் போன்றவன். சமய வாழ்வில் சமணன்[1] அடைய வேண்டிய பயனை அவன் பெறமுடியாது. (19)

20. சாத்திரங்கள் சிலவற்றையே கற்றவனாயினும் வாழ்க்கையில் அவற்றின்படி நடப்பவனாயும், ஆசை, துவேஷம், மோகம் முதலியவற்றைக் களைந்து, மெய்யறிவும் தெளிந்த சித்தமும் பெற்று, இவ்வுலகிலும் பரத்திலும் உலக ஆசைகளிலிருந்து நீங்கப் பெற்றவனாயும் உள்ளவனே சமணன் அடைய வேண்டிய பயனைப் பெறுவான். (20)


  1. சமணன்–சிரமணன்–சிரத்தையோடு பௌத்த தருமத்தைப் பின்பற்றுவோன்: தமிழில் சமணன். ஜைன சமயத்தோரையும் சமணர் என்பது வழக்கம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/18&oldid=1357424" இலிருந்து மீள்விக்கப்பட்டது