44
அண்டை வீட்டுக்காரருக்கு நஷ்டமில்லாமல் நாம் அடையும் இலாபமே இலாபம். - ஜெர்மனி
பக்கத்து வீட்டுக்காரரே நாம் முகம் பார்த்துக் கொள்ளும் கண்ணாடி. - இங்கிலாந்து
நண்பர்கள் இல்லாமல் நாம் வாழலாம், அண்டை அயலார் இல்லாமல் வாழ முடியாது. -( ,, )
இல்வாழ்க்கை
பழைய வீட்டைச் சீர்ப்படுத்து, பழைய மனைவியைப் போற்று. -இந்தியா
வீட்டுக் குப்பையை வீட்டிலேயே அள. -( ,, )
ஏழு திரைகளைத் தாண்டியும் வேலைக்காரியின் குறையைக் கண்டு விடுவாய்; யசமானி அம்மாளின் குறை ஒரே திரையில் மறைந்து விடும். -( ,, )
கட்டிலிலே கணவனும் மனைவியும், வெளியிலே அவர்கள் விருந்தினர்கள். -சீனா
கணவன் மனைவி சண்டை ஓர் இரவோடு சரி. -( ,, )
இல்வாழ்வு முற்றுகைக்கு உட்பட்ட கோட்டை போன்றது; வெளியே யிருப்பவர்கள் உள்ளே செல்ல விரும்புகின்றனர், உள்ளே யிருப்பவர்கள் வெளியேற விரும்புகின்றனர். -அரேபியா
ஒரே வீட்டில் இரண்டு சக்களத்திகள் இருப்பதைவிட இரண்டு பெண் புலிகள் இருப்பது நலம். -பாரசீகம்
கணவன் கரண்டியால் சேகரித்து வருவதை, நீ மண் வெட்டியால் வெளியே வாரி வாரி இறைக்க வேண்டாம். - இங்கிலாந்து
பெண் இல்லை யென்றால், வீடில்லை. - பல்கேரியா
நீ வெளியில் எங்கே சுற்றினாலும், இன்பமயமான உன் வீட்டுக்கு வந்துவிடு. -( ,, )
உன் வீடு-உனது ராஜ்யம். -( ,, )