உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

மனைவியைத் தேர்ந்தெடுக்கும்பொழுது கிழவனின் பார்வை வேண்டும்; குதிரையைத் தேர்ந்தெடுக்கையில் இளைஞனின் பார்வை வேண்டும். -ஆர்மீனியா

அதிக அழகுள்ளவர்களைக் காட்டிலும் குருட்டுப் பெண் தேவலை. -பர்மா

ஒரு பெண்ணைப் பற்றித் தெரிந்து கொள்ள அவள் தாயை அறியவேண்டும்; மேலும் தெளிவாகத் தெரிந்து கொள்ள அவள் தாய்வழிப் பாட்டியைப் பற்றியும் விசாரித்து அறியவேண்டும். -சயாம்

காதைக் கொண்டு பெண்ணைப் பார், கண்ணைக் கொண்டு பார்க்க வேண்டாம். - போலந்து

கலியாணத்திற்குப் பெண் தேடி நெடுந்தூரம் செல்பவன் யாரையோ ஏமாற்றப் போகிறான். அல்லது தான் ஏமாறுவான். - இங்கிலாந்து

பெண் எடுத்தல் பக்கத்திலும், களவாடுதல் தூரத்திலும் இருக்க வேண்டும். -ஸெக்

செழிப்பான பண்ணையிலிருந்து குதிரையை வாங்கு; ஏழைப் பண்ணையிலிருந்து பெண்ணை வாங்கு.

- எஸ்டோனியா

மாதாகோயிலுக்குச் செல்லும் பாதையிலிருந்து கொண்டு உனக்கு மனைவியைத் தேர்ந்தெடுக்காதே. -( ,, )

ஒரு மனைவியைத் தேர்ந்தெடுக்க மனிதனுக்குப் போதிய நேரம் இருக்கிறது. - ஃபின்லந்து

ஏழை வீட்டில் பெண் எடு, செல்வர் வீட்டில் குதிரை வாங்கு. -( ,, )

எல்லாப் பெண்களிலும் உனக்கு மிகவும் அருகிலுள்ள பெண்ணையே மணந்துகொள். - கிரீஸ்

குதிரைகள் வாங்கும் போதும், பெண் எடுக்கும் போதும், உன் கண்களை இறுக மூடிக்கொண்டு, கடவுளின் பொறுப்பில் விட்டுவிடவும். -லத்தீன்

முதலில் உணவுக்கு வழிசெய், பிறகு மனைவியைத் தேடிக்கொள்ளலாம். - நார்வே