உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

1. நாகாக்கும் - நா+காக்கும் எனவும், நாகு-+ஆக்கும் எனவும் பிரித்துப் பொருள் கொள்க. நாகு - இளமை.

2. காகா - கா கா - காப்பாற்று, காப்பாற்று எனவும், காகா - காக்கை கா கா எனக்கரைவது போல எனவும் இரு பொருள் கொள்க.

3. கன்னிவலை - மீன் பிடி சிறுவலை; இளம் பெண்களின் உயிர்களை அகப்படுத்தும் கருவி.

4. தாயகம் - தாய்+அகம்.

5. புதுச்சேரிக்கடுத்த அரிய நகர் வீராம்பட்டினத்தில் வாழ்ந்த வீரை வெளியனார் என்னும் புலவர்; ‘முன்றின் முஞ்ஞையொடு’ எனத் தொடங்கும் 320ஆம் புறப்பாடலைப் பாடியவர்.

6. புதுவை முதலமைச்சர் வேங்கட சுப்பா ரெட்டியார்.

7. தொண்டை வலியெடுக்க; தொண்டை நாட்டின் வலினம்.

8. வேங்கடம் முறையே வடவேங்கடம், வே-கடம் - மணியின் மாசு நீக்குதல், புதுவை முதல மைச்சர் வேங்கட சுப்பா ரெட்டியார்.

9. பாகூர் நகர மன்றத் தலைவர் திரு. எல். சதாசிவ ரெட்டியாரும், துணைத் தலைவர் திரு. ஆர். இராமச்சந்திரனும் ஆவர்.

10. எண் - எட்டு ; எண்ணம்.

11. பண்ணுருட்டி - ஓர் ஊர்; பண் + உருட்டி - இசையை உருளச் செய்து, பலா - பலாப்பழம்; பல்+ஆ - பல ஆக்களின் பால்.