உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

தமிழ்மொழி-இலக்கிய வரலாறு

".................. விழுநிதி
விதல் உள்ளமோ டிசைவேட் குவையே."

(மதுரைக்காஞ்சி, வரிகள் 204-205)

"3. வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி

மிச்சின் மிசைவான் புலம்."(குறள்-85)

"விருந்துண் டெஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னோ டுண்டலும் புரைவதென் றாங்கு."

(குறிஞ்சிப் பாட்டு, வரிகள் 206-207)

இங்ஙனம் குறட்பாக்களையும் அவற்றின் தொடர்களையும் கருத்துகளையும் தம் பாக்களில் எடுத்தாண்டவர்கள் பல்வேறிடத்தவர்-பல்வேறு காலத்தவர் ஆதலின், அவர்தம் காலத்திற்கும் முன்னரே திருக்குறள் அறப்பெரு நூலாக நாட்டில் வழக்குப் பெற்றிருந்தது என்னும் உண்மை தெற்றென விளங்கும்.

சிலப்பதிகாரமும் திருக்குறளும்

சிலப்பதிகாரத்திலும் பல இடங்களில் திருக்குறட் சொற்களும் தொடர்களும் கருத்துகளும் பயின்று வருகின்றன. அவற்றுள் இரண்டினைக் காண்க :

1. "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா

பிற்பகல் தாமே வரும்."

(குறள்-319)

1"முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு

பிற்பகல் காண்குறுஉம் பெற்றிகாண்"

(சிலப்பதிகாரம்-வஞ்சினமாலை)

2. “தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை."

(குறள்-55).

"தெய்வந் தொழாஅள் கொழுகற் றொழுவாளைத்

தெய்வந் தொழுந்தகைமை திண்ணிதால்."

(சிலப்பதிகாரம்-கட்டுரை காதை)