உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 இவர் காலம் அச்சோழன் காலமேயென ளிதிற துணியகம். இவர் காலத்துச் சூரியன் அவுணர் கணத்தால் ஒளிக்கப்பட்ட போலப் பகைவேந்தரான் ஒளிக்கப்பட்டு, "முள்ளூர் மீமிசை யருவழி யிருந்த பெருவிறல் வளவன்" அக் கிள்ளிவனவனாதல் தெளியப் படின், இந்த 174-ஆம் புறப்பாட்டின்கண் அப்புலவர் குறித்த வளவன் அக்கிள்ளி வளவனின் வேறாகாமை நன்கு துணியலாம் என்க. இவனுக்கடுத்து முன்னரரசி ருந்த சேட்சென்னி நலங்கிள்ளி காலத்தே, தாய வழக்காலோ பிறவேதுவாலோ இச் சோழர் குலத்துப் பகைமை பெரிதாகிப் பல படியாகக் கலகப்பட்டு நின்ற செய்தி நெடுங்கிள்ளி வரலாற்றானும் நலங்கிள்ளி வரலாற்றானும் நன்கறியலாம். (புறம். 44, 45). அவ்விருவருள் நலங்கிள்ளி மகனோ அல்லது அவன் அரசிற்குரிமை யுடையவனோ இக் கிள்ளிவளவனாவன்; இவன் இக் கலகத்திற் பகைவர் கையிலகப்பட்டு முள்ளூர் மலைக்காட்டில் அருவழியிலடைக்கப்பட்டவனாயினன் என்று கொள்ளத்தகும். முள்ளூர்க் கானத்தைக் குறித்ததும் இக்கிள்ளிவளவன் அம்மலையை யுடைய மலையமான் மக்களை யானைக்கிடப்புக் கவனாதலான் (புறம்.46) அம்பலையரசர் வழியினர் இவனுக்கு உதவார் என்று பகைவர் கருதியதனாலாகும். அன்றியும் நெடுங்கிள்ளிக்குத் துப்பாகி அப்போது முள்ளூருடைய காரி முதலியோரிருந்தது கருதி அவன் மக்க ளகப்பட்டபோது இக்கிள்ளிவளவன் கொல்லப் புக்கவனாவன் எனினும் அமையும். இவ்வாறு கொள்ளாது கிள்ளிவளவன் தன் பகைவர்க்குத் துப்பாயினனென்று மலையமான்பாற் பகைமை பூண்டு அவன் மக்களை யானைக்கிடப்புக்கனன் என்றும் அச்செய்தியால் அமயம் வாய்த்தபோது இவன் காரியால் முள்ளூரிலடைத்து வைக்கப்பட்டன னென்றும் அவன் வழியின் மலையமானால் விடுவிக்கப்பட்டன னென்றுங் கூறினும் பொருந்தும் ஆண்டுச் சிலகாலத்து அக்காரி வழியினன் இச்சோழன் தன்னையுந் தன்னுடன் பிறந்தானையும் கோவூர்கிழார் பாடற்கியைந்து கொல்லாது விடுத்த றியே பாராட்டியும், சோழர்குடிக்குந் தமக்குமுள்ள தொடர்பு நள்