ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு/தமிழ் இலக்கியத்துள் சமஸ்கிருத நாகரீகத்தின் முதல் நுழைவு

விக்கிமூலம் இலிருந்து

தமிழ் இலக்கியத்துள் சமஸ்கிருத நாகரீகத்தின் முதல் நுழைவு


சமஸ்கிருத நுழைவு

அகத்தியனார், தம்முடைய தமிழிலக்கணத்தை இயற்றிய போது, சமஸ்கிருத நாகரிகம், தமிழிலக்கியத்தை, முதன்முதலில் பாதிக்கத் தலைப்பட்டது. தம்முடைய மலையிடைத் தவப்பள்ளியில், உணர்ச்சிக்கு ஆட்படாத அறிவு நிலை கடந்த, தவநெறி மேற்கொள்வதைக் காட்டிலும், பாண்டி நாட்டுத் தமிழிலக்கியங்களைக் கற்பதால் உளவாம் உணர்ச்சிபூர்வ அனுபவ வாழ்க்கையால் பெரிதும் ஈர்க்கப் பட்ட, பொதியமலையில், இடங்கொண்டிருந்த இந்த அகத்தியர், அகத்தியரின் தபோவனத்தைச் சேர்ந்தவர்களில், மிகமிகப் பிற்பட்டவராவர். பிற்காலப் புராணக் கதைகளில், இவர், இவருக்கு முற்பட்ட அகத்தியர் அனைவருடைய மொத்த உருவமாக்கப்பட்டு, அவ்வகத்தியர்களின் செயல் புகழ் அனைத்தும், இந்த அகத்தியரிடத்திலேயே கொண்டு குவிக்கப்பட்டன. அவர் பெயரைச் சூழக் கட்டிவிடப் பட்டிருக்கும் கதைகளை நாம் நம்புவதானால், தமிழிலக்கியம் கூறும் அந்த அகத்தியனார், நல்லுணர்வுக்கு அப்பாற்பட்ட பொறாமை, கட்டுப்படுத்தலாகாக் கடுங்கோபங்களுக்கு ஆட்படக் கூடிய சாதாரண மனிதராவர். கதைகள், ஒருபுறம் இருக்க, தமிழின் மொழிநடை இயல்புகளில் நுணுக்கமான ஆராய்ச்சியை மேற்கொண்டு அகத்தியனார், அம்மொழி பற்றிய இலக்கணத்தை இயற்றினார் என்பது, உண்மை நிகழ்ச்சியாம். அவ்வாறு இயற்றும்போது, சமஸ்கிருத இலக்கணக் கூறுகளெல்லாம், உதாரணத்திற்குப் பெயர்ச் சொற்களோடு இணையும் ஏழு அல்லது எட்டு வேற்றுமை உருபுகள் போல்வன, எல்லா மொழிகளுக்கும் உள்ள பொது நிலையாம் என அவர் கருதுகிறார். உலக மொழிகள், ஒன்றோடொன்று உறவு கொள்ளாத, பல்வேறு மொழிக் குடும்பங்களைச் சேர்ந்தவை. அடிப்படை அமைப்பிலேயே அவை, ஒன்றோடொன்று மாறுபடுகின்றன. அதனால், ஒரு மொழியின் சொல்லிலக்கண அமைப்புக்குள், வேறு ஒரு மொழியின் சொல்லிலக்கண அமைப்பைத் திணிப்பது இயலாது என்பன போலும் உண்மைகள் அகத்தியனார்க்குத் தெரியா. சமஸ்கிருதம் விரிவான , சொல்லிலக்கண வகைகளைக் கொண்ட தனக்கே உரிய, சொல்லுரு மாற்று மொழி. ஆனால், தமிழ், தனி இரு சொற்கள் இணைந்தே தொகைச் சொற்களை உருவாக்கவல்ல எளிய தெளிவான சொல்லிலக்கணத்தையுடைய , ஒரு மொழியாகும். சமஸ்கிருத முற்றுத் தொடர் வாக்கியங்களில், சொல்லுக்குச் சொல் உள்ள , சொற்றொடர் உறவு, அச்சொற்களின் இலக்கண உறவு உணர்த்த, அச்சொற்களின் ஈற்றில் இணைக்கப்படும் விகுதிகளினால் மட்டுமே உணரலாகும். ஆதலின், சொற்கள், வாக்கியத்தில் எங்கு வேண்டுமானாலும் இடம் கொள்ளலாம் என்பது, அம்மொழிநிலையாகத், தமிழ் சொற்களை வேண்டியவாறெல்லாம், இடம் மாற்றச் செய்ய இயலா, உறுதியான சொற்றொடர் நிலையினைக் கொண்டுளது. சமஸ்கிருத மொழியின் இவ்விகுதிகள், தம் நிலையில் பொருள் உணர்த்தும் சொல்லாக இடம் பெற மாட்டார் சொல்லீறுகளினால் ஆக்கப்பட்டனவாம் ஆதலின், தங்களுக்கெனப் பொருள் இல்லாதன. ஆனால், பொருள் உணர் சொற்களில், உறவினை உணரத் துணைபுரிவன ஆகும். இவைபோலும் சொல்லீற்று விகுதிகளை ஏற்றுக் கொள்வதனால், வேர்ச்சொல், வெறும் மூலமாக மாறி, அம் மூலமும் தனக்குத்தானே தடம் காணமாட்டா மிகப்பெரிய மாறுதலுக்கு ஆளாக்கிவிடுகிறது. இவ்வகையில் தத்' என்ற மூலம், 'அம் என்ற ஈறு ஏற்று "தேஸாம்" என ஆகிறது. ஹன்" என்ற வினைவேர்ச்சொல் பெறும் பல உருமாற்றங்களில் ஒன்று, "ஜக்ஹான என்பது. அதுபோல டஹ்" என்பதன் உருமாற்றம், அட்டொக்" என்பதாம். இவை, விகுதிகள் இணைவால், சொற்களின் இயலும் உருவமும் வேறுபடும் மொழிகளின் அடையாளங்களாம். தமிழ், இதற்கு மாறாகத், தனி இரு சொற்கள் இணைந்தே தொகைச் சொற்களை உருவாக்கவல்ல ஒரு சொல்லியல் முறையினைக் கொண்ட ஒரு மொழியாம். தமிழில் பொருள் வேறுபடுத்தும் சொல்லுறுப்புகளாக வருவன 1. அம்மொழியில் தமக்கெனத் தனிப்பொருளும், தனி ஆட்சியும் உடையவாய, ஏழாம் வேற்றுமை உருபுகள் என வழங்கப்படும், ஒடு, பொருட்டு, அது, உடைய, இடை, தலை, திசை எனும் இவையும், இவை போல்வனவும். தமிழிலக்கண ஆசிரியர்கள் இவற்றைச் சொல்லீறுகள் - சொல்லுருபுகள் எனப் பொருத்தமுற அழைப்பர். 2. சிறிதே உருபு திரிந்த, ஒடு, இல், அது, ஆறாம் வேற்றுமைப் பன்மை உருவாம், அவை என்ற பன்மைச் சுட்டின் திரிபு வடிவாம் அ என்பன. எந்தச் சொற்களின் திரிபு வடிவம் என்பதை உணரலாகா வகையில் திரிந்திருக்கும், வேற்றுமை உருபுகள், ஐ., என்ற இரண்டும் பெயர்ச்சொல், எழுவாய், விளி அல்லாத வேற்றுமைகளில் பன்மை வடிவு பெறும் சமஸ்கிருத முறைக்கு முற்றிலும் மாறாகத் தமிழில், பெயர்ச் சொல்லுக்கும், இவ்வேற்றுமை உருபுகளுக்கும் இடையில், பன்மை குறிக்கும் குறியீடுகள், "அவர்களுக்கு" என்பது போல் அழைக்கப்படும் உண்மை நிகழ்ச்சியால் தம் மூலச்சொல் அறியாவாறு திரிந்துவிட்ட ஐ , கு என்ற இவ்வுருபுகளும் ஓரளவு தனித்தன்மை வாய்ந்தனவே என்பது உணரப்படும்.

தமிழும், சமஸ்கிருதமும், இவ்வாறு அமைப்பு நிலையில், முழுக்க முழுக்க முரண்பட்டிருப்பதால், சமஸ்கிருத இலக்கண முடிபுகள், தமிழிலக்கணத்திற்குச் சரியாகப் பொருந்திவாரா. ஆனால், அகத்தியனார், சமஸ்கிருத மொழிக் கூற்றுண்மைகள், தமிழிலும் இடம் பெற்றுள்ள எனக் கருதுகிறார். அதனால், சமஸ்கிருதத்தில் உள்ளதுபோல், தமிழிலும் ஏழு வேற்றுமைகள் இருக்க வேண்டும் எனக் கருதுகிறார். வேற்றுமை உருபேற்ற சமஸ்கிருதப் பெயர்ச் சொற்களைத் தமிழ்ச் சொற்றொடர்களாக மொழிபெயர்க்கிறார். அச்சொற்றொடர்களை, எழுவாய்ப் பொருளில் வரும், பெயர்ச்சொற்கள், அவற்றைத் தொடர்ந்து வருவன என இரண்டாகப் பிரித்து, அவ்விரண்டாம் பிரிவுகளைத் தமிழ் வேற்றுமை உருபுகளாகக் கொள்கிறார். பாணினியைப் பின்பற்றித் தமிழில், அவர், ஏழு வேற்றுமைகளைக் காண்கிறார். சரியாகச் சொல்வதானால், உருவாக்குகிறார். அவர் மாணவர் தொல்காப்பியனார், ஐந்திரம் வழிச் சமஸ்கிருத இலக்கண ஆசிரியர்களைப் பின்பற்றி, அவற்றை எட்டு ஆக்குகிறார். காதலிபின்' என்பது "காதலி" என்பதன் வேற்றுமை உருபேற்ற பெயராயின், காதலி எதிர்" என்பதும் வேறுமை உருபேற்ற பெயராகாதோ? இம்முறையில் கணக்கிட்டால், தமிழ் மொழியில் உள்ள பெயர்ச்சொற்களிலிருந்து, பெறலாகும் வினையெச்சப் பெயரெச்சத் தொடர்கள் எத்தனை உளவோ, அத்தனை வேற்றுமைகளைத் தமிழ்ப் பெயர்கள் கொண்டிருக்க வேண்டும்.

தமிழில் சமஸ்கிருத ஏழு வேற்றுமைகளை இறக்குமதி செய்தது போலவே, சமஸ்கிருத செயப்பாட்டு வினையையும் அவர், இறக்குமதி செய்துள்ளார். செயப்படுபொருள் குன்றாவினை செயப்படுபொருள் குன்றியவினை ஆகிய எல்லா வினைச் சொற்களும், சமஸ்கிருதத்தில் அடையும், உறுதியான சொல் திரிபே. அம்மொழி, செயப்பாட்டு நிலை, செயப்படுபொருள் குன்றாவினைகள், செயப்பாட்டு வினையாக மாறும் பொழுது, அவ்வினைகள், "சிங்கம் கொல்லப்பட்டது" என்பதில் உள்ளதுபோல், செயப்படு பொருளைச், செய்வினை முதலாம் எழுவாயாக மாற்றும் அப்பணியினைச் செய்கிறது. வினை முதலாம் எழுவாய் தெரியாத போது, அல்லது அவ்வினை முதல் குறிப்பிடத் தேவையில்லாதபோது, அல்லது செயப்படுபொருள் வற்புறுத்தி உணர்த்தத் தேவைப்படும் போது இவ்வாறு வழங்குவது, பயனுடையதாகிறது. செயப்படுபொருள் குன்றிய வினைகளுக்குச் செயப்பாட்டுத் திரிந்த வடிவங்கள் தரப்படும்போது, இது போலும் அடிப்படைப் பயன் எதுவும் காணப்படுவதில்லை; என்றாலும் செயப்பாட்டுவினை ஆட்சியால், எவ்விதச் சிறப்புப் பொருளும் பெறப்படுவதில்லையாகவும், சமஸ்கிருதத்தில், செயப்படுபொருள் குன்றிய செயப்பாட்டு வினையாட்சி, செய்வினை ஆட்சியினும், மொழிநடை உடையதாம். அதன்படி, ஸஹ்ப்ஹ வதி என்பதும், ‘'தெனப்ஹீயதே'’ என்பதும் ஒன்றே. பின்னது, வேறு எம்மொழியில் மொழிபெயர்ப்பது இயலாது என்பதொன்றே, வேறுபாடு, ஆங்கிலம் சமஸ்கிருதத்தோடு உறவுடைய மொழியாயினும், "he is been” என்பது போலும் ஆட்சி, ஆங்கிலத்திலும் பொருளற்றது; நகைப்பிற்குரியது. தமிழ்ச் செயப்பாட்டு வினை அமைப்புகளை, அகத்தியனார் புகுத்தியுள்ளார். இருந்தும், "தாட்ய தெ” என்பதைப் “படு” என்ற வினைச் சொல்லை , “அடி” என்பதன் இறந்தகால வினை யெச்சத்தோடு இணைத்து, ‘'அடிக்கப்பட்டான்'’ என அவரால், மொழிபெயர்க்க முடிந்தாலும், செயப்படுபொருள். குன்றிய செயப்பாட்டு வினையினைத் தமிழுக்குக் கொண்டுவர, அவரால் முடியவில்லை. இரண்டு வினைச் சொற்களை ஒரு சொல்லாகத் தொகைப்படுத்தி, அத்தொகைச் சொல்லின் இருமூலங்களுக்கும், எழுவாய் அல்லது வினைமுதலாக வேறு வேறுபட்ட இருவர்களைக் கொள்வது, காரணகாரிய முறையினையும், தமிழைப் பொறுத்தமட்டில், காரணகாரிய முறையினையும், தமிழைப் பொறுத்தமட்டில், காரண காரிய முறையினை அடிப்படையாகக் கொண்ட இலக்கண விதிகளையும் மீறியதாகும். ஆதலின், ‘'அடிக்கப்படும்'’ என்பதை, “அடிக்க” (மற்றொருவன்) அடிக்கும் பொழுது. என்றும், ‘'படு” துன்பம் அனுபவி என்றும் பிரித்துக் காண்பது, தமிழின் சிறப்பியல்புக்கு முரணாம்.'’ அடிக்கப்படும்” என்பதன் மொழிநடைவடிவம், அத்தொகைச் சொல்லின் முற்பகுதி, உருபேலாப் பெயர்ச் சொல்லாக வரும், “அடிபடு “ அல்லது “அடியுண்” என்பதாம். சமஸ்கிருதச் செயல்பாட்டு வினைகளைத் தமிழில் மொழிபெயர்க்கத் தேவைப்பட்ட தாலும், அகத்தியனார் மாணவர், தொல்காப்பியனார், தம்முடைய இலக்கணத்தை, “எழுத்து எனப்படுவ'’ (தொல்: எழுத்து : 1) எனப் போலிச் செயப் பாட்டு வினையோடு தொடங்குவது போலச் சமஸ்கிருத மொழியில் சிந்தித்துத், தமிழில் எழுதுவார்க்குப் பெரிதும் பயனுடையதாக அமைந்ததாலும், அகத்தியனார், இச்செயல்பாட்டு வினையினைக் கண்டுபிடித்துள்ளார். இயல்பான தமிழ்ப்பேச்சு நடையில், எந்தத் தமிழனும், எந்நிலையிலும் மேற்கொள்ளாததும், சமஸ்கிருதத்திலிருந்து தமிழில் எளிதில் மொழிபெயர்க்க, சமஸ்கிருதப் பண்டிதர்களுக்குத் துணை நிற்கக் கண்டுபிடிக்கப்பட்டதாலும், இப்போலி செயப்பாட்டு வினை, நம் காலத்தில் பொருள்களைச் செயப்பாட்டு வடிவங்களில் விளக்கும் ஆங்கிலத்தில் சிந்தித்து, தமிழில் எழுதக் கற்றுக் கொண்ட காரணத்தால், எழுத்து நடைத் தமிழில், அது ஒரு நடைமுறையாகிவிட்டது, படு என்ற, மொழி மரபிற்கு ஏலா ஒரு சொல்லுருபு, பைபிளின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலின் ஒவ்வொரு பக்கத்தையும், துரதிருஷ்டவசமாகத் தமிழ்ப் பண்டிதர்களின் இலக்கியப் படைப்புகளையும் பாழ்படுத்துகிறது.

தமிழில், சம்ஸ்கிருத நாகரீக முதல் தலையீடுகளில், இவை ஒருசிலவே, அடுத்த தலையீடுகள், சொற்கள், கொள்கைகள், செய்யுட்கற்பனைகள், புராண, மற்றும் பிற கட்டுக்கதைகள், நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகள், விஞ்ஞான, ஒழுக்க, சமயப் பாடங்கள், உரைநடை, பாவகைகள், மற்றும் பிற பிற , காலம் செல்லச் செல்ல, சமஸ்கிருத நாகரீகத்தின் படையெடுப்பு, பிற்காலத் தமிழிலக்கியங்களை மட்டுமே தெரிந்த ஒருவனுக்குச் சிந்தனைகள் போல் அல்லாமல் இயற்கைச் சிந்தனைகளைக் கொண்ட தன்னுடைய மொழிநடை அவன் தாய்மொழியல்லாத வேற்று மொழி போலும். பழக்கமிலா மொழியாகத் தோன்றுமளவு, தமிழிலக்கியம், முழுக்க, முழுக்க வடவர்களின் ஆதிக்கத்தின் கீழ் அகப்பட்டுக் கொள்ளுமளவு மிகப் பெரிதாகி விட்டது.

அகத்தியனாருடைய , அவர் பெயரால், அகத்தியம் என அழைக்கப்படும் இலக்கணம் இப்போது இல்லை. ஆனால், ஜமதக்கினியார் மகன் திரணதூமாக்கினியார் இயற்றிய, தொல்காப்பியனார் எனப் பயில அழைக்கப்படும் அவர் மாணவர் இயற்றிய, இலக்கணம் இன்றும் உள்ளது. அது, தெளிவாக, அகத்தியத்தையே மூலமாகக் கொண்டுளது. இத்தமிழ் இலக்கணங்கள், எழுத்து, சொல், யாப்பு, ஆகியன, பற்றி மட்டுமல்லாமல், பாட்டின் கருப்பொருள் குறித்தும் இலக்கணம் வகுப்பது, இவற்றின் தனிச்சிறப்பாம். பாட்டின் கருப்பொருள், இலக்கிய மரபுகள் ஆகியவற்றால், தமிழ்ச் செய்யுள், சமஸ்கிருதச் செய்யுளிலிருந்து அறவே வேறுபடுவது கண்ட இப்பிராமண ஆசிரியர்கள், தம் இலக்கண நூல்களில், இப்பொருள்கள் பற்றிய ஆய்வினையும் மேற்கொள்வது தேவை என உணர்ந்தனர். திரணதூமாக்கினியாரின் நூலாம். அவர் தமிழ்ப் பெயரால் வழங்கும் தொல் காப்பியத்தின் பிற்பகுதிகள், பண்டைத் தமிழ்ப் புலவர்கள், தமக்கே உரிய தனி இயல்பிற் பாடிய பாடற்பொருள்களாம் அகம், புறம் ஆகியவற்றின் ஒவ்வொரு நிகழ்ச்சிகள் குறித்தும் ஆய்வு செய்கின்றன. பொருளதிகாரம் என்ற தொல்காப்பியத்தின் ஈற்றுப் பகுதியிலிருந்து, ஆரியர்களோடு நெருக்கமான தொடர்பு கொள்வதற்கு முன்னர், தமிழர் நடத்திய வாழ்க்கை முறை, தமிழ் உள்ளம், ஆரிய இலக்கியங்களுக்கு ஆட்படாத தற்கு முற்பட்ட தமிழ் இலக்கியம் ஆகியவற்றின் முழுப் படத்தை வரைந்து கொள்ளலாம்.

அது போலும் ஒரு படக்காட்சி, தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் காட்டியிருப்பது போல, ஆரியத்துக்கு முந்திய தமிழர் நாகரிகம்” (pre Aryan Tamil Culture) என்ற என் நூலிலும், இனி வர இருக்கம், பண்டைத் தமிழர் (Ancient Tamilis) என்ற என் நூலிலும் காட்டியிருக்கும் படக்காட்சி களை, முழுமையாக்கும். -

பொருளதிகாரத்தில் ஆரிய நுழைவு

தமிழ்ப் பாக்கள் குறித்த தம்முடைய இலக்கணத்தில், ஆரியக் கருத்துக்களை இறக்குமதி செய்யும் கவர்ச்சி யிலிருந்து, தொல்காப்பியனார் விடுபடவில்லை. பண்டைத் தமிழ்ப் பாக்களின் மரபுகளை அல்லது விதி முறைகளை விளக்கிக் கூறும்போது, அவர் காலத்தில் வழக்கில் இருந்த, மறைந்தன போக எஞ்சியிருந்த அனைத்துத் தமிழ்ப் பாக்களையும் உறுதியாகப் பின்பற்றியுள்ளார். ஆனாலும், தாம் பெற்றிருந்த, சமஸ்கிருத இலக்கிய அறிவாலும், அரசியல் நெறிமுறைகளும், சமுதாய அமைப்புகளும், தெய்வத்தன்மை யால் வகுக்கப்பெற்றவை என்ற தம் நம்பிக்கையாலும், அவர் அடிக்கடி ஆழ்த்தப்பட்டுள்ளார். சமுதாய உரிமையோடு, பாட்டுடைத் தலைவர்களாம் கல்வி உரிமையும் அனுபவிக்கும் முதல் மூன்று வருணவத்தவர் அடங்கிய நான்கு வருணத்தவர்களாக மக்களைப் பிரிப்பதே சமுதாய அமைப்பின் விதிமுறையாகும் என்பது தொல்காப்பியர்க்கு உரிய கருத்து. ஆனால், அவர் கற்ற தமிழ் பாடல்களில், ஆரியக் கொள்கைப்படி, மிகவும் இழிந்தவர்களான, வேட்டையாடும் இனத்தின் தலைவனும், மீன் பிடிக்கும் இனத்தின் தலைவனும், காதற்பாக்களின் தலைவராவர். இம்முரண்பாட்டை விளக்க, அவர் எடுத்துக் கொள்ள முயற்சி மிகவும் குறைபாடுடையது வேண்டாவிருப்பானது. மேலும், ஆரியச் சமுதாய விதிமுறைகளில் ஏற்றுக் கொள்ளப்பட்ட திருமண முறைகள் எட்டு உள்ளன. ஆனால், தமிழ்ப் பாக்களில் இரண்டே உள்ளன. இவ்விரு முறைகளையும் ஒன்று எனக்காட்ட, அவர் வீணே முயன்றுள்ளார். தமிழ் அகத்திணை ஒழுக்கம், சமஸ்கிருதக் காம ஒழுக்கத்தைவிட மென்மையானதாம்; தர்ம அர்த்த மோக்ஷங்களைத், தமிழ்ப் புறத்திணை ஒழுக்கங்களில் திணித்துவிட முடியாதாம் என்றாலும், உரையாசிரியர் பலரும் வீணே முயல்வது போலவே, தொல்காப்பியரும், காதலும், போருமே வாழ்க்கையின் குறிக்கோளாம் எனக் கருதும் தமிழர் வாழ்க்கை முறையைத் தர்ம, அர்த்த , காம மோக்ஷமே வாழ்க்கையின் குறிக்கோளரம் எனக்கருதும் ஆரியர். வாழ்க்கை முறையோடு பொருத்திக்காண முயன்றுள்ளார். பொருளதிகாரம், கடைசி அதிகாரத்தில், தம் காலத்தில் தமிழில் இடம்பெறாத, ஆனால், தமக்குத் தெரிந்த சமஸ்கிருத எடுத்துக் காட்டுக்கள் உள்ள, பல இலக்கிய வடிவங்களை விவரித்துக் கூறியுள்ளார். இவையும், இவை போலும் பல இடங்களில் தமிழுக்கு உரியன அல்லாதனவற்றைத் தமிழ்ப்பாக்கள் குறித்த தம்முடைய இலக்கணத்தில் புகுத்தியுள்ளார். அதனால், தொல்காப்பியர் இவ்வாறு செய்யுமிடங்களில், அவருடைய உரையாசிரியர்களால், அவர் கூற்றிற்குத் தேவையான எடுத்துக் காட்டுகளைத் தமிழிலிருந்து காட்ட முடியாமல் போவது வியப்பினைத் தருவதில்லை. தொல்காப்பியர், தமிழில் புகுத்தும், மற்றும் இரு ஆரியக் கொள்கைகள் பற்றி அவருடைய காலம் குறித்த ஆய்வின்போது தெளிவாகக் கூறப்படும். தமிழில் சமஸ்கிருதச் சொற்கள் நுழைவு

அகத்தியனாரும், தொல்காப்பியனாரும், தமிழ் நெடுங்கணக்கு ஒலி முறையில் வழங்கப்பட்டுவிட்ட சமஸ்கிருதச் சொற்களாம் தத்பவச் சொற்கள் சிலவற்றைத் தமிழில் புகுத்திவிட்டனர். அவ்வகைச் சொற்கள் இடைக்கால உரையாசிரியர்களின் உரையில் எடுத்ததாளப்பட்டிருக்கும் அகத்தியச் சூத்தரங்களிலும் தொல்காப்பிய இலக்கணத்திலும் காணப்படுகின்றன. ஆனால், இலக்கண விதிகளைக் குறிக்கவல்ல மரபுச் சொற்களில் பெரும்பாலன வற்றிற்குத் தமிழ்ச் சொற்களைக் காணுமளவு , தமிழின் சிறப்பினை அகத்தியனார், மதித்திருந்தார். கிடைத்திருக்கும் பழைய தமிழ் இலக்கியங்களில், சமஸ்கிருதத்திலிருந்து கடன் பெற்று வழங்கப்பட்டிருக்கும் சொற்கள் மிகமிகக் குறைவு அல்லது அறவே இல்லை. ஆனால், காலம் செல்லச் செல்ல ஒரு . பாடலில் இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களின் சதவிகிதம், அப்பாடலின் காலத்தை உணர்த்தும் அறிகுறியாம் எனக் கொள்ளுமளவு, அச்சொற்களின் நுழைவு, படிப்படியாகப், பெருகிக் கொண்டே வந்துளது. இவ்வாறு, சமஸ்கிருதச் சொற்கள், தமிழில் மேலும் மேலும் இடம் பெற்று வந்தன என்றாலும், தொல்காப்பியப் பொருளதிகாரத்துப் பெரும்பகுதிக் கருப் பொருளாக இருக்கும் தமிழிலக்கிய, மரபுகள், ஆறாவது நூற்றாண்டு வரை விடாமல் கடைப் பிடிக்கப்பட்டு வந்துள்ளன.

அகத்தியர் காலம்

அகத்தியனார், அவர் மாணவர் தொல்காப்பியனார் ஆகியோரின் காலம் எது? அகத்தியனார் இலக்கணம், இப்போது இல்லை. ஆனால், தொல்காப்பியனார், அவரை அடிக்கடி எடுத்து ஆளுகிறார். அவர் சூத்திரங்களில் எங்கெல்லாம் என்று கூறுவர் எனப் பொருள்படும் ‘'என்ப'’ என்ற சொல் இடப்பெறுகிறதோ, அங்கெல்லாம் உரையாசிரியர்கள் என்று கூறுவர் ஆசிரியர்” என்றே பொருள் கூறுகின்றனர். தொல்காப்பியர், தம்முடைய இலக்கணத்தை " எழுத்து என்று சொல்லப்படுபவை யாவை என்றால், அவை, அ என்ற எழுத்தில் தொடங்கி, ன் என்ற எழுத்தில் முடியும் முப்பது என்று ஆசிரியர் கூறுவர்" என்ற கூற்றோடு தொடங்குகிறார்.

"எழுத்து எனப்படும்,
அகரம் முதல்,
னகர இறுவாய் முப்பஃது என்ப."
                (தொல் : எழுத்து : 1)

ஆகவே, அகத்தியனார் தம்முடைய இலக்கணத்தைத் தமிழ் எழுத்துக்கள் முப்பது என்ற எண்ணிலேயே தொடங்கினார் என நாம் கொள்ளலாம். எழுத்து என்ற - சொல், தமிழ் இலக்கண ஆசிரியர்களால், குறிப்பிடத்தக்க ஒரு சிறப்பான நிலையில் ஆளப்பட்டுளது. ஒலியையும், உருவத்தையும் ஒருசேரக் குறிக்கும் வகையில், அது பெயரிடப்பட்டுளது. முன்னது ஒலிவடிவில் உள்ள எழுத்து எனப் பொருள்படும். ஒலிவடிவு எழுத்து' என்றும், பின்னது நேர்க்கோடுகளாகவும் வளைந்த கோடுகளாகவும் வரையப்பட்ட எழுத்து எனப் பொருள்படும். வரிவடிவு எழுத்து" என்றும் அழைக்கப்படும். ஆங்கிலத்தில் ஒலிவடிவெழுத்து, வரிவடிவெழுத்து என்ற இரண்டையும் ஒருசேரக் குறிக்கும் இயல்புடைய சொல் எதுவும் இல்லாமையால் எழுத்து என்ற அச்சொல்லை அப்பொருள் குறிக்கும் வகையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது இயலாது. அக்ஷரா என்ற சொல் சமஸ்கிருத ஆசிரியர்களால் இவ்விரு பொருள் குறிக்கும் வகையில், ஆளப்படுகிறது. ஆனால், அக்ஷரா என்ற அச்சொல், கேட்கக்கூடிய ஒலியை உருவாக்கும், காற்றின் அலை அதிர்வின், வானவெளி அடித்தளத்தின் மூலமாம். நிலைபேறுடைய ஒலி எனக்கருதும் மீமாம்சகர், மற்றும் வியாக்கர்னிகாக் கருத்துக்களோடு தொடர்புடையது ஆகலின், எழுத்து என்ற தமிழ்ச்சொல், அக்ஷரா என்பதன் மொழிபெயர்ப்பு ஆகாது.

எழுத்துக்கள் குறித்து அகத்தியனார் கூறும் இலக்கணப் படியே, தமிழ் வரிவடிவெழுத்துக்கள், உருது மொழிக்காகப் பயன்படுத்தப்படும் அராபிய எழுத்துக்கள் தவிர்த்து, இந்தியாவில் வழக்கத்தில் உள்ள எல்லா எழுத்துக்களையும் போலவே, ‘'பிராமி'’ எனப் பெயர் சூட்டப்பட்ட, அசோகன் கல்வெட்டெழுத்துக்களிலிருந்தே, உருப்பெற்றன என்பதை நாம் அறிவோம். எழுத்தில் வடிக்கப்பெற்ற தமிழ்ச் சொற்களின், இதுவரை கண்டுபிடிக்கப்படாத மிகப்பழைய மாதிரி வடிவங்களின் உதாரணங்கள், பாண்டி நாட்டு மலைக்குகைகளில் உள்ள கல்வெட்டுக்களில் நமக்குக் கிடைக்கின்றன. இக்கல்வெட்டுக்கள், பித்துப் பிடித்து அலையும் மக்கள் கூட்டத்திலிருந்து, வெகு தொலைவில் உள்ள, இயற்கையான மலைக்குகைகளில் தங்களை அழியாப் பேரின்ப நிலையாம் நிர்வாண நிலைக்குக் கொண்டு சொல்லும், அமைதியான தவநிலையில் வாழ்ந்து வந்த பெளத்த, ஜைன முனிவர்களின் தூண்டுதலால் எழுதப்பட்டன. இக்கல்வெட்டுக்கள் நமக்குக் கிடைத்துள்ள தமிழ் எழுத்து முறை, மிகப்பழைய மாதிரி வடிவங்கள் மட்டுமன்று, பிராமி வடிவெழுத்துக்களை, மிகப் பொருத்தமுறச் சொல்வதானால், தென்னிந்திய மெளரிய வடிவெழுத்துக்களைத், தமிழ் எழுத்து நடைக்கு மேற்கொண்ட தற்காலிக முதல் முயற்சியுமாம். அவை, தனி மெய் எழுத்திற்கும், அகரமொடு இணைந்து வரும் உயிர்மெய் எழுத்திற்கும் இடையில் எளிதில் ஒலிப்பதற்கு வாய்ப்பாக, மெய் எழுத்துக்கள், அகரமொடு இணைந்தே ஒலிக்கப்படும் (மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்” (தொல். எழுத்து : 13 எனத் தொல்காப்பியர் கூறுவது போல) எவ்வித வேறுபாடும் காட்டவில்லை; அதாவது மெய் எழுத்தை உணர்த்த, மேலே புள்ளி வைக்கும் முறை இன்னமும் - கொண்டு வரப்படவில்லை. ஆனால், அவை, தமிழுக்கே உரிய சிறப்பு மெய்யாம் “ழ” இரட்டித்தவழி, வலிந்தும் மூக்கொலி எழுத்தாம் “ன” கரம் முன் வரும்போது மெலிந்தும் ஒலிக்கப்படுவதும், நாக்கை உள்மடித்து ஒலித்து எழுவதுமான “ற” நகரத்திற்கு முன்வரும் முக்கொலி எழுத்தைக் குறிக்கத் தன்னால் மட்டுமே இயல்வதும், இன்றை ஒலிப்பு முறையில் புல்லொலி எழுத்தாம் “ந” கரத்திலிருந்து வேறுபாடு காண இயலாததுமாகிய இரு சுழி "ன" ஆகியவற்றைக் குறிக்கும் வரிவடிவங்களைக் கொண்டுள்ளன. ஆகக் கிடைக்கக் கூடிய அகச்சான்றுகளின் படி, கி.மு. மூன்றாவது நூற்றாண்டின் இறுதியில், அல்லது, அல்லது, இரண்டாவது நூற்றாண்டின் தொடக்கத்தில், கல்வெட்டு வடிப்பதில், நீடித்துப் பயின்று, அழியாப்பயிற்சி பெற்றுவிட்ட வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால், தமிழ், முதன்முதலில், வரிவடிவில் எழுதப்பட்டது எனத் தெரிகிறது. தமிழிலக்கியங்களை எழுதி வைப்பதற்குத் : தனியான நெடுங்கணக்கு இல்லாமையே கிறித்துவ ஆண்டுத் தொடக்கத்திற்கு மிகவும் முற்பட்ட காலத்திலேயே, பெருமளவில் இயற்ப்பட்டிருக்க வேண்டியவாய, தமிழ்ப் பாக்கள், மீளவும் பெறமாட்டாவகையில், அழிந்து விட்டதற்குக் காரணமாம். ஆகவே, தமிழ் எழுத்து முறை, எல்லோராலும், பெருமளவில் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய கி.மு. முதலாம் நூற்றாண்டிற்கு முன்னர், அகத்தியனார் வாழ்ந்திருக்க முடியாது என முடிவு செய்கின்றேன். தொல்காப்பிய ஆராய்ச்சி ஆசிரியரும் அவர் மாணவரும் அதற்கு, ஒரு நூற்றாண்டு அல்லது சற்று அதிகப் படியான பிற்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும் எனக் கொள்ளுமாறு நம்மை வற்புறுத்துகிறது. திருமணம், மற்றும் இனிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்புடைய நாழிகை எனும் பொருளில், ஓரை" என்ற சொல்லைத் தொல்காப்பியர் ஆண்டுள்ளார்.

"மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்,
துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை"
             (-தொல் : பொருள் : களவு : 44)

"தீய ஓரையிலும், தீய நாளிலும், புணர்ச்சியைக் கைவிட வேண்டும் என்ற கொள்கை, மறைந்த ஒழுக்கமாம், களவுக் காலத்தில் தலைவனுக்கு இல்லை"

"ஓரை" என்ற அத்தமிழ்ச் சொல், "அவர்" (Hour) என்ற ஆங்கிலச்சொல்லைப் போலவே முடிந்த முடிவாக ஹொரா (Hora) என்ற கிரேக்க மொழிச் சொல்லிலிருந்தே பெறப்பட்டதாம். "ஹெரா” என்ற அச்சொல் கிரேக்க மொழியில், கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில், "பருவம்” என்ற பொதுப் பொருளில் தான் வழங்கப்பட்டது. நாளின் இருபத்துநான்கு கூறுகளில், ஒவ்வொரு கூறும், ஏழு கோள்களில் ஒவ்வொரு கோளின் ஆட்சிக் கீழ், வருவதாகக் கொள்ளப்பட்ட, கி.மு. இரண்டாவது நூற்றாண்டில்தான், ‘'ஹொரா’ என்ற அச்சொல்லுக்கு, நாளின் இருபத்து நான்கு கூற்றில் ஒரு கூற்றை உணர்த்தும் பொருள் தரப்பட்டுள்ளது. ஹொரா என்ற அச்சொல், தான் உணர்த்தும் சோதிடப் பொருட்குறிப்போடு கிமு முதல் இரண்டு நூற்றாண்டுகளில், கிரேக்க மன்னர்களால், ஆட்சி செய்யப்பட்டு வந்த காந்தாரத்திற்குப் பயணம் செய்தது. சமஸ்கிருத நூலாசிரியர்கள் கிரேக்கர்களின் ஜோதிடக்கலையைக் கற்றுக் கொண்டபோது, அது, சமஸ்கிருதத்தில் இடம் கொண்டது. பின்னர், அது, தெற்கில் பயணம் செய்து, தமிழில் நுழைந்து விட்டது. “ஓரை’ என்ற சொல், தொல்காப்பியர் காலத்தின் மேல்வரம்பாகும். கி.பி. முதலாண்டிற்கு முன்னர்த் தமிழில் இடம்பெற்றிருக்க முடியாது என்று கொண்டால், அது, ஒரு நடுநிலை மதிப்பீடாம். தொல்காப்பியனார், தம்முடைய இலக்கண நூலில், ‘ஓரை என்ற சொல்லை ஆண்டிருந்தாலும், தமிழர்களின் பெரும்பகுதியினர், அதாவது, பார்ப்பனரல்லாதார் ஆரிய நாகரீகத்தால் அடிமை கொள்ளப்பட்டு, அதனால் கோள்கள் குறித்த வானநூல் அறிவைத் தொல்காப்பியர் காலத்துக்கு மிக மிக முற்பட்ட காலத்திலேயே பெற்றிருந்தனர்; அல்லது அதில் நம்பிக்கை - கொண்டிருந்தனர் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வானநூல் கலையோடு தொடர்புடையன, ஏழு நாட்களைக் கொண்ட வாரமும், ஒவ்வொரு நாளும் ‘ அந்தாளின் முதல் இரண்டரை நாழிகையை ஆட்சி செலுத்தும் - கோளால் பெயரிடப்படுவதுமாம். ஆகவே, வாரத்தின் நாட்களின், கோள் சார்புடைய பெயர்கள் தமிழிலக்கியங்களில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரை காணப்படவில்லை.

தொல்காப்பியப் பொருளதிகாரத்திலிருந்து பெறப்படும் . தொல்காப்பியனார் காலத்தை உறுதி செய்யத் துணைபுரியும் பிறிதொரு செய்தியும் உளது. அகத்திணைத்தலைவனின் தோழர்களாகவும், அவன் காதல் ஒழுக்கங்களுக்குத் துணைவர்களாகவும் வருவோருள், பார்ப்பார்களையும் குறிப்பிடுகிறார்.

"பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி
சீர்த்தகு சிறப்பின் கிழவன் கிழத்தியொடு
அளவியன் மரபின், அறுவகை யோரும்
களவினில் கிளவிக்கு உரியர் என்ப" .

"பாணன், கூத்தன, விறலி , பரத்தை ,
யாணம் சான்ற அறிவர், கண்டோர்,
பேணுதகு சிறப்பின் பார்ப்பான், முதலா,
முன்னுறக் கிளந்த கிளவியொடு தொகை இத்
தொன்னெறி மரபிற் கற்பிற்கு உரியர்"

"பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி,
யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே"
 
         தொல். பொருள் : செய்யுள் : 181, 182, 189

அவ்வகையில், காதல் நிகழ்ச்சிகளில் பெருந்துணை புரிபவர்களாகப் பிராமணர்கள் ஆளப்படுவதை, ஆழ்ந்து முடிவு செய்துள்ளார். இது சமஸ்கிருத நாடகத்தின் ஒரு மரபு ஆகும். அகநானூற்றிலோ, அல்லது புறநானூற்றிலோ அத்தகைய குறிப்பு எதையும் காண முடியவில்லையாதலின் தொல்காப்பியனார், அதை ஒரு கொள்கையளவில் கூறியுள்ளாரேயல்லது, ஓர் உண்மை நிகழ்ச்சியாகக் கூறவில்லை என்றே நான் எடுத்துக் கொள்கிறேன். புறநானூற்றில், பார்ப்பார் என்ற சொல், நான்கு முறை இடம் பெறுகிறது; அந்தணர் மற்றும் அவர்தம் புலமை பற்றி, மேலும் எட்டுக்குறிப்புகள் உள்ளன.

"ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும்"
                           புறம் : 9:1

"பார்ப்பார்த் தப்பிய கொடுமை"
                         - புறம் 34 : 3

"ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப் பூவும்
பொன்னும் புனல்படச் சொரிந்து”
                      -புறம் : 367 : 4 - 5

"அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கு” - புறம் 2 23 24

“புலன் அழுக்கற்ற அந்தணாளன்”
                           புறம் : 126 : 17.

"யானே பரிசிலன் மன்னும் அந்தணன்”
                           - புறம் : 200 : 13.

“அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே”
                                புறம் : 361 : 4

“கேள்வி முற்றிய வேள்வி அந்தணன்”
                              -புறம் : 361 : 4.

"ஆக்குரல் காண்பின் அந்தணாளர்'’
                          -புறம் : 362 : 8

“இறைஞ்சுக பெரும! நின் சென்னி, சிறந்த
நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே”
                           - புறம் : 6:19 - 20

"ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை,
நான்மறை முதல்வர்,”
                             புறம் 26 12 13

"அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்'’
                          புறம் 93:17.

“வேத வேள்வித் தொழில்”
                         புறம் : 228 : 9

இவையெல்லாம் அவர்களின் வேதப்புலமை, வேள்வித் தீ, ஏற்றுக் கொண்ட கொடைவளம் ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றனவேயல்லது, காதலர்களிடையே, அவர்கள் மேற்கொண்ட தூது பற்றிக் குறிப்பிடவில்லை. அகநானூற்றில் அக வேள்வி செய்தறியாத ஒரு பார்ப்பானம், "வேளாப் பார்பான்" (அகம் : 24 : 1) அரசர்களிடையே தூதுவத் தொழில் மேற்கொண்டு செல்லுங்கால், மழவர் என்ற ஆறலை கள்வரால் கொல்லப்பட்ட ஒரு பார்ப்பானும், "தூது ஒய் பார்ப்பான். மடி வெள்ளோலை... தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்" (அகம் : 337 : 7-11), குறுந்தொகையில், மணம் ஆகா இளையபார்ப்பான் ஒருவனின் உடைமைகளம், "தண்டொடு பிடித்த, தாழ்க மண்டலத்துப் படிவ உண்டிப் பார்ப்பன மகனே! எழுதாக்கற்பின் நின் சொல்" (குறுந்தொகை : 156 : 3-5) கூறப்பட்டுள்ளனர். ஆனால், காதலரிடையே தூது செல்லும் செயல் எதுவும், அவற்றில் குறிப்பிடப்படவில்லை. காதலரிடையே, பார்ப்பனர் தூது செல்லும் மரபினைத் தொல்காப்பியனார், சமஸ்கிருத நாடகத்திலிருந்தே தமிழ்ப் பாக்களுக்குக் கொண்டு வந்திருப்பதால், அவர், முறையான நாடகங்கள், சமஸ்கிருதத்தில் வளர்ந்துவிட்ட பிற்காலத்தில், வாழ்ந்திருக்க வேண்டும். பாஸர (Bhasa) என்பவர்தாம், சமஸ்கிருதப் புலவர்களில் பழமையானவர். அவர், கி.மு. மூன்றாவது நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவராவது இயலாது; அந்நாடக மரபைத் தொல்காப்பியனார், தம்முடைய இலக்கணத்தில் இணைத்துக் கொள்வதற்குத் துணை செய்வதற்கேற்ப, தென்னிந்தியாவை உடைய, சமஸ்கிருத நாடகங்களின், அவ்விலக்கிய மரபு, சில ஆண்டு காலத்தை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

சொல், யாப்பு உள்ளிட்ட அதன் இலக்கணங்களுக்கு ஆற்றிய முழு நிறைவான அடிப்படைப் பணியுட்பட, தமிழ் நாகரீக வளர்ச்சிக்கு, அகத்தியர் பங்கு, கூறிப் பாராட்டத்தக்க பெருஞ்செயலாகும். ஆனால், பண்டைய கட்டுக்கதையாளர்களும், இன்றைய வரலாற்று ஆராய்ச்சியாளர்களும், அற்புதத் திருவிளையாடல்களைக் கற்பித்து, அத்தூயவரை மாசுபடுத்த முயன்றுள்ளனர். அவ்வகையில், பழைய தமிழ்ப் புராணங்கள், அவர், சிவன் அல்லது சுப்பிரமணியரிடம் தமிழ் கற்றார். தமிழர்களுக்குத் தமிழைக் கற்பித்தார் என்று கூறுகின்றன. அகத்தியர், தம்மிடையே வந்து காட்சிதரும் வரை தமிழர், எழுத்தறிவவில்லா ஊமையராய் இருந்தனர்? என நான் கருதுகின்றேன். திருவாளர் டி. ஆர். பண்டர்கார் அவர்கள், “அதுவரைக் கண்டறியப்படாதிருந்த தென்னாட் டினுள். திராவிடர்களை நாகரீக மக்களாக மாற்றியவாறே, மேலும் மேலும் ஊடுருவிச் சென்றார்.'’ எனக் கூறுகிறார். "(Carmichal Lecturas. 1918 Page 18) திருவாளர், டி.ஆர். இராமகிருஷ்ண சாஸ்திரி அவர்கள், தமிழர்களின் சமுதாய இலக்கிய வாழ்க்கை முறையில் அகத்தியர் புகுத்திய புதுமை, வகுத்த மறுசீரமைப்புகள் பற்றிப் பேசுகிறார். (Proceedings and Transactions of Third Oriental Conference 1924 Page 205) இவையனைத்தும் வடிகட்டிய சமயச் சார்பான கட்டுக்கதைகள். மக்கள் வாழ்ந்து வளர்ந்த சுற்றுச்சூழலை அடிப்படையாகக் கொண்டே எழுந்தமையால், மாற்றவோ, அழிக்கவோ முடியாததான, தமக்கே உரிய இலக்கிய மரபுகளோடு இணைந்து, முழுமையாக வளர்ச்சி பெற்ற, ஓர் இலக்கியத்தையே அகத்தியர் கண்டார். முழுமையாக வளர்ச்சி பெற்ற இலக்கிய நடையோடு கூடிய ஒரு மொழியையும் அவர் கண்டார். அம்மொழி இலக்கியம், குறித்த இலக்கணத்தை இயற்றினார். அவ்வளவே, அதுவல்லது வேறு இல்லை.

அகத்தியர் காலத்திற்கு முன்பே, எண்ணற்ற தமிழ்ப் புலவர்கள் இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், யாப்பு குறித்த இலக்கணத்தை அவரால் இயற்றியிருக்க இயலாது. திருந்திய இலக்கிய நடையாம் செந்தமிழ் குறித்துக் கூறத் தேவையில்லை. தமிழ்ச் செய்யுள் நடையெழுந்த காலத்திற்கும், அகத்தியனார் காலத்திற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், புறத்திணை, அகத்தணைப் பாடல்களால் உருவாகிய எழுச்சி, அவ்வகை இலக்கியங்களை, அவர் காலத்திற்குப் பின்னர் ஐந்நூறு ஆண்டுவரையும், பண்டைய இலக்கியங்கள் நிலைகுலைந்து, சமஸ்கிருதக் கவிதைகளால் ஈர்ப்புண்டு, அகத்தூண்டுதல் பெற்றுப் புதிய தமிழிலக்கியங்கள் தோன்றிப் பழைய கவிதை முறைகளைப் பெரிதும் மறைத்துவிட்ட அக்காலம் வரை, கொண்டு சென்றது. பிற்காலப் புராணக் கதைகள், அகத்தியனார், தமிழைத் தோற்றுவித்தார் எனக் கூறுகின்றன. ஆம்; தமிழ் மொழியுள் , இந்த மொழியிலக்கண , முதல் ஆசிரியரின், நல்வருகையின் கீழ் நடைபெற்ற ஆரிய நுழைவின் பெரும்பயனே, பிற்காலத் தமிழிலக்கியங்கள் என்ற உண்மைக்கரு, இக்கதையுள் அடங்கியுள்ளது எனலாம். ஆகவே, அகத்தியக் கட்டுக்கதைக் களஞ்சியத்துக்குத் தமிழிலக்கியம் பெரும்பங்கு அளிக்க முடியும் என, எவரும் எதிர்பார்க்கலாம். ஆனால், அகத்தியக் கட்டுக்கதைகளுக்குத் தமிழ் ஆற்றி யிருக்கும் பங்கு மிகக் குறைவாம் என்பது அறிய, ஏமாற்றம் தருவதாய் உள்ளது. குறுந்தொகையிலும், நற்றிணையிலும், அவர் பற்றிய குறிப்பு எதையும் என்னால் காண முடியவில்லை. புறநானூற்றில், வேதவேள்வி செய்வோரின் வாழிடமாகப் பொதிய மலையைக் கூறும் குறிப்பு ஒன்று உளது. "முத்தீ விளக்கில் துஞ்சும், பொற்கோட்டு இமயமும், பொதியமும் போன்றே ." (புறம்: 2 : 23-24) அகம், புறம் என்ற இரு தொகை நூல்களில் பொதியமலை, பாண்டியர்க்கு உரியதாக, ஏழு பாக்களில் விளக்கப்பட்டிருக்க, அதை, அகத்தியர்க்கு உரியதாக்கும் குறிப்பு எதுவும் அவற்றில் இல்லை. அகத்தியனார் காலம், தொகை நூல்களில் மிகப் பழையனவாய, அந்நான்கு தொகை நூல் பாக்களுக்கு நனிமிக அண்மையானது. ஆகவே அவை அவரை மக்களுள் ஒருவராக ஓர் இலக்கண ஆசிரியராகப் பார்த்ததே அல்லது, ஒரு ரிஷியாக மதிக்கவில்லை என்ற உண்மையே, இதற்குக் காரணமாதல் கூடும்.

பாண்டியன் நெடுஞ்செழியனின் அன்புக்குரிய புலவர் மாங்குடி மருதனார் (கிபி. 450) அவனைப் பாராட்டிப் பாடிய மதுரைக் காஞ்சியில், ஒரு பகுதி உரையாசிரியர் நச்சினார்க்கினியரால், அது, அகத்தியரைக் குறிப்பதாகக் காட்டுமளவு சிதைக்கப்பட்டுள்ளது. அது, நெடுஞ்செழியனைப் பார்த்து, "பக்க மலைகளில் வீழ்ந்து ஓடும் அருவிகளைக் கொண்ட மலைக்கு உரியவனே! தென்னவர்களை ஓட்டியவனும், அணுகுவதற்கு அரிய ஆற்றல் வாய்ந்தவனுமாகிய பழம்பெரும் கடவுளுக்கு, அடுத்து இருக்க விரும்புவோனே!'’ எனப் பாராட்டுகிறது.

"தென்னவன் பெயரிய துன்னரும் துப்பின்
தொன்முது கடவுள் பின்னர் மேய
வரைத்தாழ் அருவிப் பொருப்பின் பொருந!"
                       - மதுரைக்காஞ்சி : 40-42

இப்பகுதி, பொருள், தெளிவு காணமாட்டாது உளது. "தென்னவன்” என்பது இராவணனைக் குறிக்கும் என்றால், இராமனுக்கு அடுத்தவனாக இருக்க விரும்பினான் நெடுஞ்செழியன் என்பது பொருளாதல் வேண்டும். ஆனால், இராவணனைத், தென்னவன் எனக் குறிப்பிடும் ஒரே ஒரு குறிப்பு, அதுவும் மிகவும் பிற்பட்ட பாட்டு ஒன்றில் உளது.

"தென்னவன் மலை எடுக்கச், சேயிழை ஒடுங்கக் கண்டு,
மன்னவன் விரலால் ஊன்ற”
                 -திருநாவுக்கரசர் தேவாரம் திருக்கச்சி மேற்றளி.

"தென்னவன்" என்பது, பாண்டிய மன்னர்களுக்குப் பொதுவாக இட்டு வழங்கும் ஒரு பட்டப்பெயர். அப்பாட்டு, ஆரியப் புராணக் கதைகள் தமிழ்நாட்டில் பரவ இடம் கொண்டுவிட்ட கி.பி. ஆறாம் நூற்றாண்டில் பாடப்பட்ட தாயின் அத்தொடரைத் , தென் திசைக் கடவுள் எனக் கூறப்படும் யமனை வென்ற சிவனுக்கு அடுத்த நிலையில் இருக்க விரும்பினான் நெடுஞ்செழியன் என்ற பொருள் தரும் வகையில் கொள்ளலாம். ஆனால், சிவனின், இவ்வெற்றிச் செயல், நெடுஞ்செழியன் காலத்து மதுரையில், பலராலும் அறியப்பட்டிருந்தது என, உறுதியாகக் கொள்ளமுடியாது. மேலே கூறப்பட்ட இரு பொருள்களுமே, கட்டுப்பாடற்ற கற்பனைகள்தாம். ஆனால், உரையாசிரியர் நச்சினார்க் கினியரின் விளக்கம் படுமோசம். அவர், மூலச் சொற்களையும், சொற்றொடர் களையும் தாம் கூற விரும்பும் பொருளுக்கு ஏற்றவாறு இடம் மாற்றிப் போட்டுத், தென்னவன் என்ற சொல் இராவணனைக் குறிப்பதாகக் கொண்டு, அகத்தியர், தமிழ்நாட்டின் தலைமைப் பொறுப்பிலிருந்து, இராவணனை அகற்றினார் எனக் கூறுகிறார். தம் கூற்றுக்கு ஆதரவாக, தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர், அகத்தியர், இராவணனை இசையில் வென்றார் எனக்கூறுவதை எடுத்துக் காட்டுகிறார். (இராவணனைத் தமிழ் நாட்டையாளாதபடி போக்கின, கிட்டுதற்கரிய வலியினையுடைய, பழமை முதிர்ந்த, அகத்தியன் இராவணன் தென்திசையாண்டமை பற்றித் தென்னவன் என்றார், அகத்தியனைத், தென்திசையுயர்ந்த நொய்ம்மைபோக, இறைவனுக்குச் சீரொப்ப இருந்தான், என்பது பற்றிக் கடவுள் என்றார். இராவணன் ஆளுதல், பாயிரச் சூத்திரத்து உரையாசிரியர் கூறிய உரையானும் உணர்க." (மதுரைக் காஞ்சி 40 - 42, உரை) என்ற அவர் உரையினைக் காண்க. நச்சினார்க்கினியார் தரும் இப்பொருள் விளக்கம் முழுக்க முழுக்கப் பிழைபட்டது. மதுரைக்காஞ்சி, அகத்தியனாரைக் குறிப்பிடவேயில்லை.

சிலப்பதிகாரம், பழைய தமிழ்ப் புராணக்கதைகளம், ஆரியப் புராணக்கதைகளும், பழைய தமிழ்ப் பழக்க வழக்கங்களும், ஆரியப் பழக்கவழக்கங்களும், வேறு பிரித்துக் காணாவாறு, ஒரே இனத்தைச் சேர்ந்த பிழம்பு வடிவமாக வடிக்கப்பட வில்லையாயினும், ஒன்றோ டொன்று கலக்கத் தொடங்கிவிட்ட கி.பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பாட்டு, இந்தப்பாட்டும், தமிழை முதன்முதலில் தோற்று வித்து, மக்களுக்குக் கற்பித்ததாகக் கூறும் அகத்தியப் புராணத்தின் மூலத்தைக் காணப் பெரிய அளவில் துணைபுரியவில்லை . இது, இந்திரன் மகன் சயந்த குமரன், வானுலக ஆடல் மகள் உருப்பசி, ஆகியோரை, அகத்தியர் சபித்ததைக் கூறுவதோடு, அகத்தியர் குறித்த வேறு ஒரு குறிப்பையும் தருகிறது. அது, மாடலன் என்ற பார்ப்பன யாத்திரிகன் குமரியில் நீராடச் செல்வதன் முன், அகத்தியர் இருந்த மலையை வலங் கொண்டதைக் கூறுகிறது.

"தெய்வ மால்வரைத் திருமுனி அருள
எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய

மலைப்பரும் சிறப்பின் வானவர் மகளிர்'’
          - சிலம்பு : அரங்கேற்றுக் காதை :1 - 4

"மாமறை முதல்வன் மாடலன் என்போன்
மாதவ முனிவன் மலைவலம் கொண்டு ,
குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து”
              - சிலம்பு : அடைக்கலக்காதை : 13-15

அடுத்த பெருங்காப்பியமாகிய மணிமேகலை, மேலே கூறிய காப்பியமாம் சிலப்பதிகாரக் காலத்தைச் சேர்ந்ததாகக் கொள்ளப்படினும், அது, பழைய தமிழிலக்கிய மரபுகள் எல்லாம், சமஸ்கிருத இலக்கிய மரபுகளால், தமிழிலக்’ கியத்திலிருந்து முழுமையாக வெளியேற்றப்பட்டுவிட்ட மக்களின் வாழ்க்கை முறை, ஆரிய ஆதிக்கத்தின் கீழ் முழுமையாகக் கொண்டவரப்பட்டுவிட்ட மக்களுக்கு இட்டு வழங்கிய தமிழ்ப் பெயர்களெல்லாம், சமஸ்கிருதப் பெயர்களால் இடம் கொள்ளப்பட்டுவிட்ட காலத்து “நிகழ்ச்சிகளைப் பற்றியே கூறுகிறது. ஆனால், இந்தக் காப்பியமும், அகத்தியர் பற்றிய கதைகளில் ஒரு சிலவற்றையே கொண்டுளது. அவற்றுள் ஒன்று, நீர்வேட்கையுற்ற காந்தமன் என்ற சோழ மன்னன் வேண்ட, அமர முனிவனாம் அகத்தியனடைய நீர்க்குடம் கவிழத் தோன்றிய காவிரிப் பெண்ணைக் குறிப்பிடுகிறது.

"கஞ்ச வேட்கையின் காந்தமன் வேண்ட,
அமர முனிவன் அகத்தியன் தனாது
கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை'’.
                 - மணிமேகலை : பதிகம். 10-12

ஸ்காந்த புராணம், இந்த வேண்டுகோள் விடுத்ததை, இந்திரனுக்கு ஏற்றுகிறது. சமஸ்கிருதத்தில் காவிரி, காவேரி என அழைக்கப்படுகிறது. காவேரி, கவேரன் என்ற முனிவன் மகளாகக் கூறுப்பட்டுளது. இக்கதை, மணிமேகலையில், "தவாநீர்க் காவிரிப் பாவை தன் தாதை கவேரன்” (மலர்வனம் புக்க காதை : 55-56) "கவேர கன்னி” (பீடிகை கண்டு பிறப்பு உணர்ந்த காதை : 62) எனக் குறிப்பிடப்பட்டுளது. இக்கதை; ஆக்நேய புராணத்தில் கூறப்பட்டிருப்பதாக, திருவாளர். டாக்டர். உ. வே. சுவாமிநாத அய்யர் அவர்கள் கூறுகிறார். (மணி: 9:52. அடிக்குறிப்பு காண்க) மற்றொன்று, அகத்தியர் ஆணையிட, வானிடைத் தொங்கிக் கொண்டிருந்த அசுரர்க்குரிய கோட்டையை அழித்து, அவ் வெற்றி குறித்துத் தோளில் தொடி அணிந்து, தொடித்தோள் செம்பியன் எனும் பெயர் கொண்ட சோழ மன்னன் ஒருவன், தன் தலைநகரில் காவிரிப்பூம்பட்டினத்தில் இருபத்தெட்டு நாட்கள் நடைபெறும் இந்திரவிழாவின் போது வந்திருக்குமாறு, இந்திரனை வேண்டிக்கொள்ள, அவனும் அதற்கு இசைந்து வந்திருந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறது.

"ஓங்கு உயர் மலயத்து அருந்தவன் உரைப்பத்
தூங்கஎயில் எறிந்த தொடித்தோள் செம்பியன்,
விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று
மண்ணகத்து என் தன் வான்பதி தன்னுள்
மேலோர் விழைய விழாக்கோள் எடுத்த
நாலேழ் நாளினும் நன்கு இனிது உறைகு என,
அமரர் தலைவன் ஆங்கது நேர்ந்தது.
                  - மணிமேகலை : விழாவறை காதை :3-9

இதன் பொருள் : ஓங்கி உயர்ந்த மலைக்கு உரிய, அரிய தவம் புரிந்த முனிவன் ஆணையிட, வானில் தொங்கிக் கொண்டிருந்த கோட்டையை அழித்தல், தொடி அணிந்த தோளினை உடைய சோழன், வானவர். தலைவனாம் இந்திரனை வணங்கி, அவன் முன் நின்று "மண்ணுலகில், எனக்கு உரிய சிறந்த தலைநகரில் பெரியவர்கள் விரும்ப விழாக் கொண்டாடும், இருபத்தெட்டு நாட்களிலும் வந்து நன்கு இருப்பாயாக" என வேண்டிக் கொள்ள, தேவர் தலைவனும் அது நேர்ந்தான் என்பதாம்.

கொண்டாட மறந்துவிட்டதால், தலைநகரைக் கடல் கோளாம் பேரழிவுக்கு உள்ளாக்கிவிட்ட இந்திரவிழா வந்த வரலாறு இது. அப்பாட்டின் பிற்பகுதியில், அகத்தியர் குறித்த மற்றொரு குறிப்பும் இடம் பெற்றுளது. அது, பரசுராமன், க்ஷத்திரிய அரசர்களையெல்லாம் அழித்து வரும்போது, காவிரிப் பூம்பட்டினத்துக் காவல் தெய்வம், மறைந்து கொள்ளுமாறு ஆணையிட, காந்தமன் என்ற அரசனும் துயர் தீர்ந்துவிட்டது என அகத்தியன் அறிவிக்கும் வரை, தலைநகரைக் காக்குமாறு பின்னோனுக்கு ஆணையிட்டு, அம்முனிவர் தவப்பள்ளியில் மறைந்து வாழ்ந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறது.

"மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்
தன்முன் தோன்றல் தகாது ஒளி நீ எனக்
கன்னி ஏவலின் காந்த மன்னவன்....
............................
அமர முனிவன் அகத்தியன் தனாது
துயர் நீங்கு கிளவியின் யான்தோன் றளவும்
ககந்தன் காத்தல்”
                - மணிமேகலை: சிறைசெய்காதை:25-27 மற்றும் 35-36

இதன் பொருள்: அரசர் குலத்தை அழித்த, மழு என்றவாள் ஏந்திய நெடிய திருமாலாம் பரசுராமன் முன் தோன்றுவது தகாது, நீ மறைந்து கொள் எனக் கன்னித் தெய்வம் ஆணையிட, காந்த மன்னவன் தேவமுனிவனாம் அகத்தியன் கூறும், துயர் தீர்ந்துவிட்டது என்ற சொல் கேட்டு, நான் வரும் வரை ககந்தா! காப்பாயாக என்பதாம்.)

கி.பி. முதலாம் ஆயிரத்தாண்டினைச் சேர்ந்த இந்தக் கதைகள் எதிலும், அகத்தியர், தெய்வ ஆசிரியனிடமிருந்த தமிழைப் பெற்றது அல்லது கற்றதைக் குறிப்பிடவில்லை. ஆகவே, பிற்காலத்தே வாழ்ந்த அகத்தியனார், முதல் தமிழிலக்கணத்தை எழுதிய உண்மை நிகழ்ச்சி , முதல் அகத்தியர், தமிழைச் சிவன் அல்லது சுப்பிரமணியரிடமிருந்து கற்றுத் தென்னிந்திய மக்களுக்குக் கற்றுத் தந்தார் என்ற புராணக் கதையாக மாறியது. உரையாசிரியர்கள் பெருகிப் பழங்காலம் குறித்த புராணக்கதைகளைக் கட்டிவிட்ட கிபி. இரண்டாம் ஆயிரத்தாண்டில் நிகழ்ந்திருக்க வேண்டும். பாயிரம் எனப்படும் தொல்காப்பிய முன்னுரையில் நச்சினார்க்கினியர் கூறுவதே, புராணக் கதைகளில் படுமோசமானது. அகத்தியனார், தம்முடைய மாணவர், திரணதூமாக்கினியாரைத் தம் மனைவி லோபாமுத்திரையை, விதர்ப்பத்திலிருந்து பொதி மலைக்கு அழைத்துவருமாறு பணித்தார். அதே சமயம் தம் மனைவியை நான்கு கோல் அளவிற்குக் குறைவாக அணுகக்கூடாது என்றும் எச்சரித்தார். லோபா முத்திரையும், திரணதூமாக்கினியும், வெள்ளம் பெருக்கெடுத் தோடும் வைகையைக் கடக்க நேரிட்டபோது, அவள் வெள்ளத்தால் அடித்துச் செல்லாதிருக்கத் தம் கைக்கோலை நீட்டி அதைப் பற்றிக் கொள்ளுமாறு வோபா முத்திரையிடம் கூறினார். அவ்வாறே ஆற்றைக் கடக்கும் போது, வெள்ளப் பெருக்கு மிகுதியால் கோலில், ஒரு கோல் அளவே இடை வெளி இருக்க நேரிட்டது. அவ்வகையில் திரணதூமாக்கினி ஆசிரியரின் தடையுத்தரவை மீறிவிட்டார். கடுஞ்சினம் உடைய ஆசிரியர், இதைக் கேள்வியுற்றுதும், 'நீங்கள் இருவரும் சுவர்க்கம் புகக் கடவீர் அல்லராக" எனச் சாபம் இட்டார். அது கேட்ட மாணவரும் "நாங்கள் செய்யாத பிழைக்கு எங்களைச் சபித்த நீயும் சுவர்க்கம் புகக் கடவீர் அல்லராக" என எதிர்ச்சாபம் இட்டார். தொல்காப்பியம் இருக்க அகதக்தியம் அழிந்துவிட்டதை விளக்க இக்கதை கூறப்பட்டது போலும்.