கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/பாம்பாட்டம்

விக்கிமூலம் இலிருந்து

27. பாம்பாட்டம்

அமைப்பு:

ஆடுகளத்தின் அமைப்பு, முன் ஆட்டத்திற் குரியதுபோல்தான்.

எல்லைக்குள்ளே ஒருவர் மட்டும் நின்று கொண்டிருக்க, ஆடவந்தவர்கள் அனைவரும் விரட்டித் தொடுபவர்களாக மாறிவிடுவர்.

ஆடும் முறை:

பாம்பு ஒன்றைப் பார்த்தவுடன், அத்தனை பேரும் ஓடிச் சென்று பாம்பை விரட்டுவதுபோல, தனியாள் ஒருவரைப் பார்த்தவுடன், எல்லோரும் விரட்டிப் பிடிக்க முயற்சி செய்யவேண்டும்.

ஒட முடியும் வரை ஓடி, அயர்வுற்ற பிறகு, அவர் என்ன செய்யலாம் என்றால், முன்னரே முடிவு செய்து கொண்டிருப்பதுபோல, கீழே உட்கார்ந்து கொள்வது போன்ற வழிகளைக் குறித்து, அவைகளையே கடை பிடிக்க வேண்டும்.

தான் தப்பிக்க இருக்கின்ற வழிகளைக் கடைப்பிடித்து, அவர் தப்பிக்க முயல்வார். அனைத்திலும் தோல்வியுற்று, அவர் பிடிபட்டுவிட்டால், யார் அவரைப் பிடித்தாரோ, அவரே பாம்பாக மாறி விளையாட, மற்றவர்கள் அவரை விரட்ட, ஆட்டம் தொடரும்.