கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/ஊர்ந்தோடும் போட்டி

விக்கிமூலம் இலிருந்து

87. ஊர்ந்தோடும் போட்டி

முன் ஆட்டத்தைப் போலவே, அமைப்பு இருக்க * வேண்டும். குழுவினர் வரிசையாக நிற்பதுடன் மட்டுமன்றி, கால்களையும் அகலமாக விரித்து நிற்க வேண்டும்.

போட்டி தொடங்கிய உடனேயே, கடைசியில் நிற்கும் கடைசி ஆட்டக்காரர், விரித்து வைத்திருக்கும் கால்களுக்குக் கிடையில் நுழைந்து ஊர்ந்து, முன் பகுதிக்கு வந்து சேர்ந்து விடவேண்டும்.

வந்து சேர்ந்து முன்னாட்டக்காரரின் முன்னால் நின்றவுடனேயே, கை தட்டி, சமிக்ஞை செய்து விடவேண்டும். அப்பொழுதே குழுவினர் ஓரடி பின்னால் நகர்ந்து இடத்தை சரிசெய்து கொள்ளவும் வேண்டும்.

கையொலி கேட்ட உடனே கடைசி ஆளாக இப்பொழுது மாறியவர், முன்னவர் போலவே, கால்களுக்கிடையில் ஊர்ந்து வர, இவ்வாறாக, முன்னே நின்றவர், பின்னே நகர்ந்து நகர்ந்து கடைசி ஆட்டக்காரராக மாறி அவரும் கால்களில் நுழைந்து ஊர்ந்தோட ஆட்டம் முடிவு பெறும்.

முதலில் ஊர்ந்து வந்து முடிக்கின்ற குழுவே வெற்றி பெறும்.