உள்ளடக்கத்துக்குச் செல்

கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/புகலிடம்

விக்கிமூலம் இலிருந்து

31. புகலிடம்

அமைப்பு:

ஆட இருக்கின்ற அத்தனைபேரும், குறிப்பிட்ட ஆடுகள எல்லைக்குள்ளே ஆங்காங்கே, தான் நிற்கின்ற, இடத்தில் சிறு வட்டம் ஒன்றைப் போட்டுக்கொண்டு நிற்க வேண்டும்.

விரட்டுவோர் ஒருவரும், விரட்டப்படுவோர் ஒருவர் என்றும் தனித்தனியே வட்டமில்லாமல், சற்று எட்டி எட்டி நின்றிருக்க வேண்டும். ஆடும் முறை:

விளையாட்டைத் தொடங்கலாம் என்றவுடன் விரட்டுபவர், அடுத்து நிற்கின்ற விரட்டப்படுபவரை நோக்கி ஓடித் துரத்திப் பிடிக்க வேண்டும்.

ஒட சக்தியுள்ளவரைக்கும் ஓடிவிட்டுத் தன்னால் ஒட முடியாத பொழுது, பக்கத்தில் எந்த வட்டம் இருக்கின்றதோ, அந்த வட்டத்தில் ஒரு காலை வைத்தால் போதும் - அதுதான் அவருக்குப் புகலிடம்.

அந்த வட்டத்தில் நிற்பவர், வந்தவரைத் தன் இடத்திலே நிற்கச் செய்துவிட்டு, தான் தொடப்படாமல் இருக்கவும் தப்பித்துக் கொள்ளவும், முன்னவர் போலவே ஆடுகளம் முழுவதும் ஓடத் தொடங்கி விடுவார்.

குறிப்பு:

இவ்வாறு ஓடுவோர் மாறி மாறி வரவேண்டும். இதற் கிடையிலே யார் தொடப்பட்டாலும், அவரே விரட்டுபவராக மாறுவார்.