மருத்துவ களஞ்சியப் பேரகராதி/H
haemachrosis : மட்டுமீறிய இரத்தச் சிவப்பு : கார்பன்மோனாக்சைடு நஞ்சூட்டத்தில் காணப்படுவது போன்று, மட்டுமீறிய பளபளப்பாக உள்ள சிவப்பு இரத்தம்.
haemacytometer : குருதி உயிரணுமானி : குருதி உயிரணுக்களைக் கணக்கிடுவதற்கான ஒரு கருவி.
haemadsorption : ஒட்டுத்திறன் : குருதிச் சிவப்பு உயிரணுவின் மேற்பரப்பிலுள்ள ஒரு வினையூக்கியின் அல்லது பொருளின் ஒட்டுந்தன்மை.
haemagglutination : குருதியணு ஒட்டுத் திரட்சி : 1. ஒரு குறிப்பிட்ட தற்காப்பு மூலம் அல்லது நுண்ணுயிரிவினையூக்கி இருப்பதால் குருதிச் சிவப்பணுக்கள் கெட்டியாதல், 2. தடையுணர்வு வினை. 3. காப்பு மூலம் உண் டாக்கும் சிவப்பணுக்கள் ஒட்டத் திரட்சியடைவதைத் தடுக்கும் ஓர் ஏமக் காப்புவினை.
haemagglutinin : சிவப்பணுத் திரட்சி மூலம் : குருதிச் சிவப்பணுக்கள் ஒட்டத் திரட்சியடைவதை உண்டாக்கும் ஒரு தற்காப்பு மூலம்.
haemal : குருதி சார்ந்த : 1. குருதி அல்லது குருதி நாளம் சார்ந்த, 2. இதயம் அமைந்துள்ள வயிற்றுக்கும் முதுகந் தண்டுக்குமிடையிலான அச்சு.
haemanalysis : குருதிப் பகுப்பாய்வு : இரத்தத்தை வேதியியல் முறையில் பகுப்பாய்வு செய்தல்.
haemangioma : குருதிக் குழாய்க் கோளாறு : குருதிக் குழாய்கள் தவறாக எந்தப் பகுதியிலும் ஏற்படலாம். தோலில் இது செம்புள்ளியாகத் தென்படும்.
haemangion : இரத்த நாளத் தொகுதி : இரத்த நாளங்களைக் குறிக்கும் கூட்டு வடிவம்.
haemangiopericytoma : குருதி நாளக்கட்டி : குருதி நாள உயிர ணுக்களில் அல்லது பெரிசைட்டுகளில் ஏற்படும் ஒரு கட்டி இது கால்களிலும், வபையின் பின் பகுதியிலும் ஏற்படுகிறது.
haemangiosarcoma : இரத்த நாள உக்கிரக் கட்டி : இரத்த நாளங்களின் வேகமாகப் பரவி வரும் உள்வரித்தாள் சவ்விலிருந்து வளரும் உக்கிரமான கட்டி.
haemaphersis : குருதி நீக்கம் : அமைப்பான்களாகப் பகுக்கப்பட்டு, சில அமைப்பான்களை வைத்துக்கொண்டு, எஞ்சியுள்ள கூறுகளை நோயாளிக்குச் செலுத்துவதைத் தொடர்ந்து ஒரு கொடையாளிடமிருந்து அல்லது ஒரு நோயாளியிடமிருந்து குருதி முழுவதையும் அகற்றுதல். haemarthrosis : மூட்டுக் குருதி; மூட்டில் குருதிக் கசிவு; குருதி மூட்டு; மூட்டுக் குருதிமை : மூட்டுகளின் குழியில் இரத்தம் சேர்ந்திருத்தல்.
haematemesis : இரத்த வாந்தி : அண்மையில் உண்ட உணவு இரத்த வாந்தியாக வெளிவந்தால் அந்த இரத்தம் ஒளிச்சிவப்பாக இருக்கும். இல்லையெனில் இரைப்பை நீரின் வினை காரணமாகக் காப்பித்தூள் போன்று கருஞ்சிவப்பு நிறமாக இருக்கும்.
haematic : குருதிவினை மருந்து.
haematin : இரும்புச் சத்து : உலர்ந்த குருதியிலிருந்து கிடைக்கும் பழுப்பு நிற இரும்புச் சத்துப் பொருள்.
haematidrosis : குருதிவியர்வை : இரத்தம் அல்லது இரத்த நிறமிகள் அடங்கியுள்ள வியர்வை.
haematinic : சிவப்பணு உற்பத்திப் பொருள்; இரத்த விருத்தி : இரத் தச் சிவப்பணுக்களும், அதன் அமைப்பான்களும் உற்பத்தியாவதற்குத் தேவையான பொருள்.
haematobium : குருதி ஒட்டுண்ணி : இரத்த உயிரணுக்களிலுள்ள ஒற்றை உயிரணு ஒட்டுண்ணி.
haematoblast : அடிப்படைக் குருதி உயிரணு : வேறுபடுத்திக் காட்டப்படாத அடிப்படைக் குருதி உயிரணு. இதிலிருந்து எலும்பு மச்சைச் சிவப்பணுக்கள், முதுகந்தண்டுவடச் சிவப்பணுக்கள், நிணநீர்ச் சிவப்பணுக் கள் பெறப்படுகின்றன.
haematocele : குருதிக் கழிவு : இரத்தக் குழி, இரத்த வண்டம்.
haematochyluria : சிறுநீர் இரத்தம் : சிறுநீரில் இரத்தழும் நிணநீரும் இருத்தல். இது யானைக்கால் நோயில் காணப்படும்.
haematocolpus : யோனிக்குழாய் குருதி; யோனிக் குருதிமை : பெண்ணில் கருப்பைக் குழாயில் (யோனிக் குழாய்) குருதி சேர்ந்திருத்தல்.
haematocrit : குருதிக் கணு வளைவு.
haematocyst : குருதிக்குழாய் நீர்க்கட்டி : 1. ஒரு நீர்க்கட்டியில் இரத்தம் கசிதல், 2. குருதிக் குழாய் நீர்க் கட்டி.
haematocyturia : சிறுநீர் சிவப்பணு : சிறுநீரில் இரத்தச் சிவப்பு உயிரணுக்கள் இருத்தல்.
haematogenesis : குருதி உறுவாதல்.
haematogenic haematogenous : குருதி வழிப் பரவல் : 1. குருதிக் குழிவுசார்ந்த 2 குருதியிலிருந்து உண்டாகும் எதுவும். 3. இரத்த வோட்டம் மூலம் பரவுதல்.
haematogenous : குருதி உறுவாதல். haematology : குருதியியல் : குருதி உருவாதல், அதன் அமைப் பான்கள், அதன் பணி, குருதி நோய்கள் ஆகியவை பற்றி ஆராயும் அறிவியல்.
haematoma : குருதிக் கட்டி : இரத்தம் சேர்ந்து உண்டாகும் வீக்கம்.
haematometra : கருப்பைக் குருதி : கருப்பையில் குருதி திரண்டிருத்தல். இதனை மாதவிடாய் திரவம் என்றும் கூறுவர்.
haematomyelopore : தண்டுவடத்துளை : இரத்தப்போக்கு காரணமாகத் தண்டுவடத்தில் துளைகள் உண்டாதல்.
haematopathololgy : குருதி நோயியல் : குருதிநோய் ஆய்வு தொடர்பான நோயியலின் ஒரு பிரிவு.
haematopoiesis : யோனிக் குழாய்க் குருதி; குருதி உற்பத்தி; குருதியாக்கம்.
haematosalpinx : கருக்குழாய்க் குருதி; குருதி அண்டக் குழல் : மனிதக் கரு உறுப்பிலிருந்து கருவெளியேறும் குழாயில் உள்ள இரத்தம்.
haematozoa : குருதி ஒட்டுண்ணி. இரத்தத்திலுள்ள ஒட்டுண்ணிகள்.
haematuria : சிறுநீர்க்குருதி; குருதிச் சிறுநீர்; குருதியிழிவு : சிறுநீரில் இரத்தம் இருத்தல்.
haeme : குருதிச் சிவப்பு : குருதிச் சிவப்பணு நிறமியின் நிறமிப் பகுதியாக அமைந்துள்ள புரோட்டோ போர்பிரின் அடங்கியுள்ள ஓர் அயம். இது அதன் ஆக்சிஜன் கொண்டு செல்லும் திறனுக்குக் காரணமானதாகும்.
haemobilia : பித்தநீரிக்குருதி : பித்தநீரில் அல்லது பித்த நீர் நாளங்களில் இரத்தம் இருத்தல்.
haemochromatosis : திசு அயப்பெருக்கம் : இரும்பு வளர்சிதை மாற்றத்தில் பிறவிலேயே ஏற்படும் கோளாறு. இதனால் திசுக்களில் இருப்புச் சத்து அதிகரிக்கிறது. இதன் காரணமாகத் தோல் பழுப்பு நிறமாகிறது. ஈரவிறைப்பும் உண்டாகிறது.
haemoconcentration : குருதி அடர்வு; சிவப்பணுப் பெருக்கம்; குருதிச் செறிவு : இரத்தத்தில் நிணநீர் அளவைவிட இரத்தச் சிவப்பணுக்கள் அதிகமாக இருத்தல்.
haemocytoblast : எலும்பு மச்சை உயிரணு; குருதி முன்மம் : எலும்பு மச்சையின் மூல உயிரணுக்கள்.
haemocytometer : குருதியணு அளவைமானி : இரத்தத்திலுள்ள குருதியணுக்களின் எண்ணிக்கையை அளவிடுவதற்கான கருவி. haemodiagnosis : குருதிவழி நோய் நாடல் : இரத்தத்தை ஆய்வு செய்து நோயைக் கண்டறிதல்.
haemodialysis : குருதிக் கலைப் பிரிவினை : சிறுநீரகம் செய லிழக்கும் போது சிறுநீர்க் கலவைப் பொருள்களைப் பிரித்தல். இதில் இரத்தம் ஒர் எந்திரம் வழியே செலுத்தப்பட்டு, உடலுக்குத் திரும்பி வருவதற்கு முன்பு தூய்மையாக்கம் செய்யப்படுகிறது.
haemodilution : குருதி நீர்ப்பு : இரத்தப் போக்கு ஏற்பட்டு, குருதிநீர் அளவு பெருக்கமடை வதையொட்டி ஆர்பிசி அளவு குறைதல்.
haemodynamics : குருதியோட்ட இயக்கம் : உடலில் இரத்தவோட்டம் நடைபெறும் இயக்கங்கள்.
haemoglobin : செங்குருதியணு; குருதிச் சிவப்பணு நிறமி; குருதி நிறமி : செந்நிறக் குருதியணுவுடலியின் வண்ணப்பொருள். இது இரும்புச் சத்தினாலானது. இதில் மறிநிலை ஆக்சிஜனும் உள்ளது.
haemoglobinaemia : குருதி நிணநீர் சிவப்பணு நிறமி : குருதி நிண நீரில் குருதி சிவப்பணு நிறமிகள் இருத்தல்.
haemoglobinometer : குருதிச் சிவப்பணு நிறமி மானி : இரத் தத்திலுள்ள குருதிச் சிவப்பணு நிறமியை அளவிடுவதற்கான கருவி.
haemoglobinopathy : குருதிச் சிவப்பணு நிறமிக் கோளாறு : குருதிச் சிவப்பணு நிறமி இயல்பு மீறியதாக இருத்தல்.
haemoglobinuria : சிறுநீர்ச் சிவப்பணு நிறமி; குருதி நிறயிழிவு : சிறுநீரில் குருதிச் சிவப்பணு நிறமி இருத்தல்.
haemogram : குருதி ஆய்வு : உருவாக்கப்பட்ட தனிமங்கள் அனைத்திலும் உயிரின அமைப்பியல் எண்ணிக்கை, வீத அளவு ஆகிய வற்றைக் கண்டறிவதற்காகக் குருதியை விரிவாக ஆய்வு செய்தல்
haemophilia : காயக் குருதிப் பெருக்கம் : சிறிய காயங்களிலிருந்தும் இரத்தம் பெருக்கும் பரம்பரை நோய்.
haemolysin : ஹீமோலைசின்; குருதிச் சாறு இளக்கி; குருதி முறி : இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களைச் சிதைவுறச் செய்யும் மருந்து. மருந்து அல்லது நொதி.
haemolysis : குருதிச் சிவப்பணுச் சிதைவு; குருதிச் சிவப்பணு அழிப்பு; குருதிக் குலைவு : இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் சிதைந்து அதிலுள்ள குருதிச்சிவப்பணு நிறமிகள் வெளிப்படுதல். haemolytic disease of new born : குழந்தை குருதிச் சோகை : குழந்தையின் இரத்தத்திலும், தாயின் இரத்தத்திலுமுள்ள உறைமக்கூறு மாறுபடுவதால், பிறந்த குழந்தைக்கு ஏற்படும் குருதிக் கோளாறு. இதனால், குழந்தையின் சிவப்பணுக்கள் அழிந்து விடுகின்றன. இரத்த சோகை உண்டாகிறது; மஞ்சள் காமாலை நோயும் ஏற்படும்.
haemopathy : குருதி நோய் : குருதியில் அல்லது குருதி உருவாக்க முறையில் ஏற்படும்.
haemopericardium : குலையுறைக் குருதி; இதயச் சுற்றுப்பை குருதி; இதய உறை குருதிமை : குலையுறையில் குருதி சேர்ந்திருத்தல்.
haemoperitoneum : வபைக்குருதி; குருதி உதரப்பை : வயிற்றின் உட்பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப் பையில் (வபை) இரத்தம் சேர்ந்திருத்தல்.
haemophil : குருதி நுண்ணுயிர் பெருக்கம் : குருதி அடங்கியுள்ள ஊடகத்தில் நுண்ணுயிரிகள் பெருக்கமடைதல்.
haemophilias : குருதிப் பெருக்கு நோய்; குருதி உறையாக் கேடு : சிறு காயத்திலிருந்தும் குருதிப்பெருக்கம் ஏற்படும் பரம்பரை நோய்,
haemophobia : குருதி வெறுப்பு : இரத்தப் போக்கை அல்லது இரத்தத்தைப் பார்க்கும் போது ஏற்படும் வெறுப்பு
haemophthalmia : கண் விழிக்குருதிக் கசிவு : கண் விழியில் இரத்தம் கசிதல்.
haemopneumothorax : நுரையீரல் உள்வரிச் சவ்வுக் குழிக்குருதி; குருதி வளி மார்பு : உள்வரிச் சவ்வுக் குழாயில் இரத்தமும், காற்றும் சேர்ந்திருத்தல்.
haemopoiesis : குருதி உருவாதல்; குருதியாக்கம்.
haemoptysis : இரத்த வாந்தி; இரத்த இருமல்.
haemorrhage : குருதிப் போக்கு; குருதி ஒழுக்கு; இரத்தப் பெருக்கு : குருதிக் குழாய்களிலிருந்து இரத்தம் நிற்காமல் வெளிப்படுதல்.
haemorrhage, Ante paetuam : பேறு கால முன்போக்கு.
haemorrhage, uterine : கருப்பை இரத்தக் கசிவு.
haemorrhage intertinol : குடல்குருதிக் கசிவு.
haemorrhage, postpartum : பேறுகால பின் போக்கு.
haemorrhagic disease of new born : குழந்தை குருதிப் போக்கு நோய் : பிறந்த குழந்தைகளுக்கு இரப்பையிலும், குடலிலும் ஏற்படும் இரத்தப் போக்கு நோய்.
haemorrhagic fever : குருதிப்போக்குக் காய்ச்சல் : கொசுவினால் பரவும் குருதிப் போக்குக் காய்ச்சல். haemorrheology : குருதிப் போக்கு ஆய்வியல் : குருதி நாளங்களில் ஏற்படும் குருதிப்போக்கு குறித்து ஆய்வு செய்தல்.
haemorrhodial : மூல நோய் சார்ந்த : குதவாய்ப் பகுதியில் உண்டாகும் மூல நோய்.
haemorrhoidectomy : மூலநோய் அறுவை மருத்துவம்; மூல நீக்கம் : மூலத்தை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல்.
haemorrhoids : மூலநோய்; மூலம் : குதவாய்ப் பகுதியிலுள்ள நாளங்களில் உண்டாகும் நாளப் புடைப்பு.
haemosiderosis : திசு அயப் படிவு : திசுக்களில் அயச்சத்து படிதல்.
haemospermia : குருதி விந்துக் கசிவு : விந்துடன் கலந்து இரத்தம் வெளியேறுதல்.
haemostasis : குருதித் தடை; குருதிக் கழிவுத் தடை : குருதி நாளத்திற்குள்ளேயே குருதி தேங்கியிருத்தல்.
haemostat : குருதிப் போக்குத் தடைக் கருவி : குருதிப் போக்கினை நிறுத்தும் கருவி.
haemotherapy : குருதியூட்ட சிகிச்சை : குருதியூட்டம் போன்ற சிகிச்சையில் குருதி அமைப்பான்கள்.
haemothorax : மார்புவரிக் குருதி; குருதி மார்பறை; நுரையீரலுறைக் குருதிமை : மார்பு உள்வரிச் சவ்வுக் குழியில் இரத்தம் சேர்ந்திருத்தல்.
haemotrophic : குருதி ஊட்டப்பொருள் சார்ந்த : குருதியில் கொண்டு செல்லப்படும் ஊட்டச்சத்துப் பொருள்கள் சார்ந்த.
Hageman factor : ஹேக்மான் காரணி : குருதி உறைவின் உள்ளார்ந்த வழியை உண்டாக்கும் குருதி உறைவுக் காரணி XII.
hair : மயிர்; முடி : மனிதரின் உள்ளங்கை, உள்ளங்கால், உதடுகள், ஆண்குறி ஆகிய உறுப்புகள் நீங்கலாக தோலின் எல்லாப் பகுதிகளிலும் வளர்ந் திருக்கும் மயிரிழைகள்.
hair analysis : மயிரிழையைப் பகுப்பாய்வு : ஆர்செனிக் ஈயம், பாதரசம் போன்ற கடுமையான கன உலோகப் போதையைக் கண்டுபிடிப்பதற்காக மயிரிழையைப் பயன்படுத்துதல்.
hair-ball : முடிப்பந்து; மயிர்ப்பந்து : இரைப்பையில் தொகுதியாகும் மயிர்.
hairfollicle : மயிரிழைச் சுரப்பி : தோலின் கோரியம் படலத் திலுள்ள மேலடுக்கினை ஒரு நீள் உருளை உறையிலிடுதல். இதில் ஒரு மயிரிழையின் வேர் அடங்கியிருக்கும்.
hair-on end appearance : மயிரிழை முனைத் தோற்றம் : எலும்புக்குச் செங்குத்தாக உள்ள சுண்ணகமயமாக்கிய உட்குழிவுகளாகத் தோன்றுகிற ஊடுகதிர்ப்படத் தோற்றம். இது பிறவி இரத்தச்சோகை நோய்களில் காணப்படும்.
hairy cell leukaemia : மயிரிழை உயிரணு வெண்புற்று : "பி" உயிரணு வெண்புற்று நோய். இது குருதியிலும், எலும்பு மச்சையிலும், மயிரிழை உயிரணுக்களாகத் தோன்றும். இது நோய்ச்சிகிச்சைக்குப் பயன் படுகிறது.
hairy naevus : மயிரிழை மச்சம் : ஒரு நிறமி மச்சம் (மறு) இதில் மயிரிளைகள் வளர்ந்திருக்கும்.
hakeem : மருத்துவர்.
hale : உடல்திடமான; நலமுடைய; திடமான.
half breed; கலப்பினக் குழந்தை.
half brother : ஒன்றுவிட்ட உடன்பிறப்பு.
half line fracture : அரைவரி முறிவு : ஊடுகதிர்ப்படத்தில் தோன்றும் ஒரு சிறிய முறிவு. இது ஒர் எலும்பின் இரு கோடு களுக்கிடையில் ஒரு மெல்லிய கோடாகத் தோன்றும்.
haldol : ஹால்டோல் : ஹால்பெரிடோல் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
halibut liver oil : தட்டை மீன் எண்ணெய் : பெரிய தட்டைமீனின் துரையீரலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய். இதில் வைட்டமின் A, வைட்டமின் D நிறைந்துள்ளன. காட் என்னும் மீனின் துரையீரலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை விட இதைக் குறைந்த அளவில் பயன்படுத்தினால் போதும்.
halitosis : ஊத்தை நாற்றம்; வாய் நாற்றம்; நாறும் மூச்சு; மூச்சு நாற்றம் : மூச்சு விடும்போது கெட்ட நாற்றம் ஏற்படுதல்.
hallucination : மாயக் காட்சி(மருட்சி); மாயத் தோற்றம்; இல் பொருள் தோற்றம்; பிரமை; மாய்மை : உண்மையான புலன் துண்டுதல் எதுவுமின்றி ஏற்படும் பொய்யான தோற்றம். இது முரண் மூளை நோய் உட்பட உளவியல் கோளாறுகளின் போது ஏற்படும்.
hallucination,auditory : கேள்மாய்மை.
hallucination,visual : காண்மாய்மை.
hallucinogens : மாய்மையாக்கி.
hallucinosis : மாயத் தோற்றப்பித்து நிலை; இல்பொருள் தோற்ற நோயாளி : நோயாளிக்கு மாயத் தோற்றங்கள் உண்டாகும் ஒரு பைத்திய நிலை. இதில் பெரும்பாலும், மாய ஒலிகளும், பொய்க் காட்சிகளும் உண்டாகும்.
hallux : குளம்பு விரல் காற் பெருவிரல் : கால் விரல்கள் பெரிதாகக் குளம்பு போல் இருத்தல் இந்த விரல்கள் மற்ற பாதத்தை நோக்கி இருக்கும்.
hallux valgus : கோணப் பெருவிரல்.
halo : முழந்தாழெலும்பு : வட்ட இடுப்பெலும்புத் தசைச் சுரிப்பைச் சுற்றியிருக்கும் முழந்தாழெலும்பு.
halo appearance : முழந்தாழெலும்புத் தோற்றம் : வதக்கிய மாவு போன்று இலேசான அடர்த்தியுடன் கூடிய தோற்றம். இது வட்ட வடிவமான கருநிறமுடைய அடர்ந்த மண்டலங்களுக்குள்ளேயும், வெளியேயும் காணப்படும்.
halogen : உப்பீனி (ஹேலோ ஜென் : புரோமின், குளோரின், ஃபுளோரின், அயோடின் போன்ற அலோகத் தனிமங்களில் ஒன்று.
halo naewus : முழந்தாழெலும்பு மச்சம் : கரும்புற்று நோய் சார்ந்த மச்சம். இதைச் சுற்றி நிறமற்ற சுற்று வரை மண்டலம் அமைந்திருக்கும்.
halo peridol : ஹாலோ பெரிடால் : முரண் மூளைநோய் போன்ற உளவியல் கோளாறுகளைக் குணப்படுத்துவதற்கான ஒரு வகை மருந்து. இதனை வாய் வழி உட்கொள்ளலாம். தேவைப்பட்டால் ஊசி மூலமும் செலுத்தலாம்.
halothane : ஹாலேத்தேன் : சுவாச மயக்க மருந்தாகப் பயன் படுத்தப்படும், தெளிவான நிறமற்ற திரவம், இது தீப்பிடிக்காது; இதமான மணமுடையது; எரிச்சலூட்டாதது.
Halo-vest traction : அகல்வட்டக் கச்சு இழுப்பு : கழுத்து எலும்பு முறிவுகளைக் குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தப் படும் ஒரு வகை இழுவை வடிவம். இதில் அகல் வட்டக் கச்சு வடிவக் கருவியின் உலோகப் புழையில் கழுத்தை மாட்டி அசைவற்றதாக்கப் படுகிறது.
Halsted's operation : ஹால்ஸ்டெட் அறுவை மருத்துவம் : 1. அரைசார்ந்த குடலிறக்கத்துக்கான அறுவை மருத்துவம், 2. மார்பகப் புற்றுநோய்க்கான மார்பகப் புற்று அறுவை மருத்துவம் அமெரிக்க அறுவை மருத்துவ வல்லுநர் வில்லியம் ஹால்ஸ் டெட் பெயரால் அழைக்கப் படுகிறது.
hamatroma : பிறழ்ச்சிக் கட்டி : தோன்றுமிடத்திற்குரிய முதிர்த் திசுக்களின் அமைப்பான்களையுடைய ஒரு பிழையான கட்டி இந்த அமைப்பான்கள் இயல்பு திறம்பிய வகையில் அமைந்திருக்கும். குருத்தெலும்பு கொழுப்பு, இழைமத் திசுக்கள், மென்தசை, நரம்பு உயிரணுக்கள், புறத்தோல் திசுக்கள், சுண்ணகமயமாக்கிய பிளவுகளின் குவி மையங்கள் ஆகியவை அடங்கிய ஒரு தீவாக இது அமைந்திருக்கும்
Hamilton's ruler test : ஹாமில்டன் விறைப்பு வரைகோல் சோதனை : ஒரு விறைப்பான வரைகோல் ஒரே சமயத்தில் திருகு தோளையும், புய எலும்பின் இடைமட்ட வட்டப் புடைப்பையும் தொட முடியாது. ஏனெனில் புய எலும்பின் பெரிய எலும்பு மேடு உள்முகமாக துருத்திக் கொண்டிருக்கும். தோள் பிறழ்வதால் அல்லது தோள்பட்டையின் கழுத்தில் எலும்பு முறிவு ஏற்படுவதால் இந்த நிலை ஏற்படுகிறது.
Hamman's disease : ஹாம்மான் நோய் : நுரையீரல் திசு விரிவாக்க நோய். அமெரிக்க மருத்துவ அறிஞர் லூயி ஹாம்மான் பெயரால் அழைக்கப்படுகிறது.
hammer : சுத்தி.
hammer, percussion : தட்டு சுத்தி.
hammer toe : கால்விரல் கோணல்; சுத்தி விரல் : கால் விரல்களில் ஒன்று நிலையாக மேல் நோக்கி வளைந்து மடிந்திருக்கும் அங்கக் கோணல்.
hamstring : பின்தொடைத் தசை நார் : 1. தொடையின் பின் பகுதியிலுள்ள மூன்று தசைகளின் ஏதேனும் ஒன்று. இவை காலை நீட்டி மடக்க தசைகளை நீட்டவும் சுருக்கவும் செய்கின்றன. 2. முழங்கால் பின் பகுதிக் குழிவின் நடுமைய மற்றும் கிடைமட்ட எல்லைகளாக அமைகிற தசை நாண்களில் ஒன்று.
Ham's test : ஹாம் சோதனை : 37°C நோய் நுண்மப் பெருக்க நிலையில் இயல்பான குருதி வடிநீருடன், வலிப்பு இசிப்பின் இரவு நேர சிறுநீர்ச் சிவப்பணு நிறமி உடைகிறது. ஆனால், 56°C வெப்ப நிலையில் செயலற்றதாக்குவதன் மூலம் குருதி வடிநீரிலிருந்து நிரப்புக் காற்று நீக்கப்பட்டுவிட்டால் உடைதல் ஏற்படுவதில்லை.
hand : கை : மனிதருக்கு இடுப்புக்கு மேலுள்ள உறுப்பு நாற்கால் விலங்குகளுக்கு முன்னங்கால்.
Hand-arm vibration syndrome : கை-புயம் அதிர்வு நோய் : கையால் கையாளும் அதிர்வூட்டும் கருவிகளை நீண்ட நாட்கள் பயன்படுத்துவதன் விளைவாக நாளச்சுவர் இசிப்பு ஏற்பட்டு குளிர்ச்சி உண்டாவதால் ஏற்படும் ரேனாட் நிகழ்வு போன்ற நோய்.
handedness : ஒருகைப் பழக்கம் : ஒருகைக்குப் பதிலாக இன்னொரு கையைப் பயன்படுத்தும் போக்கு.
hand-foot syndrome : கை-பாதம் நோய் : அரிவாள் உயிரணுச் சோகையில் ஏற்படும் நோய்த் திருப்புமுனை. குருதி நாளங்களில் சிவப்பணுக்கள் கசடாவதால் இது ஏற்படுகிறது. இதனால் கை- கால் சிற்றெலும்புகளில் திசு அழிவு ஏற்படுகிறது. அழற்சியுடைய புதிய எலும்பு உருவாகிறது. அரிவாள் உயிரணு வீக்கம் உண்டாகி வலி ஏற்படும்.
handicapped : ஊனமுற்றவர்; முடமானவர் : இயல்பாக இயங்க முடியாதபடி உறுப்புக் குறை பாடுள்ளவர்.
handle : கைப்பிடி.
hand mirror cell : கைக்கண்ணாடி உயிரணு : கருமையத்துடன் கூடிய ஒரு நிணநீர் உயிரணு, இந்தக் கருமையம் கண்ணாடி முனையில் அமைந்து நீண்ட வடிவில் இருக்கும். இது கண்ணாடிக் கைப்பிடிபோல் தோன்றும். இது குருதி உருவாக்க நிலையில் உக்கிரமாக அல்லது உக்கிரமின்றி இருக்கும்.
hand piece : கைக்கருவி :பல் தயாரிக்கவும், அதற்கு மெருகேற்றவும் பயன்படுத்தப்படும் சாதனங்களைப் பிடித்துக் கொள்ளும் கைக்கருவி.
hanging drop method : தொங்கு துளி முறை : பாக்டீரியாவின் இயக்கத்திறனைக் கணித்தறிவதற்கான ஒரு முறை. இதில், கசையிழையாக்கிய பாக்டீரியம் ஒரு தெளிவான உடலியல் கரைசலின் ஒரு துளியில் ஒரு மூடியை கண்ணாடியில் (தலை கீழாக) வைக்கப்பட்டு, நுண் ணோக்காடியால் ஆய்வு செய்யப்படுகிறது.
Hangman's fracture : ஹாங்மன் முறிவு : ஊடுவரை அக்சின் நரம்பு துளையின் வழியாக ஏற்படும் இருமுகப் பிளவை முறிவு. இதனால், முதுகந்தண்டின் மையப்பகுதியில் கடுமையான சேதம் உண்டாகும். ஊர்தி விபத்துகளில் இது அடிக்கடி எற்படும்.
hang mail : நகத்தோல் : நகமடிப்பிலிருந்த ஒரு பகுதி விடுபட்டி ருக்கும் குறுகிய தோல் பட்டை.
H antigen : “எச்" காப்பு மூலம் : பாக்டீரியக் கசையிழையிலுள்ள திசு ஒத்தியல்புடைய காப்பு மூலம்.
haploid : இனக்கீற்றுச் செம்பாகம் : பாலின உயிரணுவில் உள்ளது போன்று இயல்பான இனக் கீற்றுகளின் பாதி எண்ணிக்கையைப் பாதியாக்குதல். இது மனிதர்களிடம் 23 என்ற எண்ணிக்கையில் இருக்கும்.
haplotype : இணைஇனக்கீற்றுக் கூட்டம் : ஒர் இனக்கிற்றின் ஒரே நிலையிடத்தில் இணை இனக்கீறுகளின் ஒரு கூட்டம் அமைந்திருத்தல்.
haptoglobin : சளிச் சவ்வுப் புரதம் : ஒரு வகைக் கோழைப் புரதம். இதனுள் உடைப்பட்ட சிவப்பணுக்கள் கொட்டப்படுகின்றன. இதனைக் குருதிநீர் சூழ்ந்திருக்கும்.
hard : கடினமான; இறுகிய.
hard metal disease : கன உலோக நோய் : கோபால்ட், டங்ஸ்டன் ஆகியவை அடங்கிய தூசியை உள் சுவாசித்தல். இது தொழில் காரணமாக ஏற்படும் ஆஸ்துமாவுடன் அல்லது நுரையீரல் நோயுடன் இணைந்திருக்கலாம்.
hard X-rays : கடின ஊடுகதிர் : குறுகிய அலை நீளம், அதிக அலைவெண், அதீத ஊடுருவு திறன் உடைய ஊடுகதிர்.
hard water syndrome : கடின நீர் நோய் : அயம், கால்சியம், மக்னீசியம் ஆகியவை அதிக அளவில் அடங்கியுள்ள கடின நீரைப் பயன்படுத்துவதால் உண்டாகும் ஒரு நோய். இது குருதிக் கலவைப் பிரிவினையின் போது ஏற்படும். இதனால், குருதிக் கலவைப் பிரிவினைக் குப் பிந்திய குமட்டல், வாந்தி வலுவிழப்பு உயர் இரத்த அழுத்தம் உண்டாகும்.
harelip : பிளவு உதடு (ஒருவாய்); பிளவு இதழ் : முயலுக்கு இருப் பதைப் போன்று பிளவுபட்ட மேல் உதடு, இது பிறவிலேயே ஏற்படுவது.
harmony : ஒத்திசைவு : சுமுகமாக ஒன்றிணைந்து செயற்படும் அல்லது வாழும் நிலை.Hartmann's solution : ஹார்ட்மன் கரைசல் : சோடியம் லாக்டேட், குளோரைட், பொட்டாசியம் குளோரைட், நியோமைசின் ஆகியவை அடங்கிய ஒருவகை மின் பகுப்புக் கரைசல்.
Hartnup disease : ஹார்ட்னப் நோய் : உடல் வளர்ச்சிக்குத் தேவையான இன்றியமையாத அமினோ அமிலங்களின் ஒன்றான டிரிப்டோபான், சிறு நீரக மற்றும் குடல் வழியே செல்வதில் ஏற்படும் கோளாறு. இது மிக அரிதாக ஏற்படும் பரம்பரை நோய். இந்த நோய் ஏற்பட்ட முதல் குடும்பத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது.
Hashimoto's disease : ஹாஷிமோட்டோ நோய் : நடுத்தர வயதுப் பெண்களுக்குக் கேடயச் சுரப்பி (தைராய்டு) விரிவடைவதால் உண்டாகும் நோய்.
haustration : ஊனீர் சுரப்பி : பெருங்குடலில் உள்ளது போன்று ஊனீர் சுரத்தல்.
Haverhill fever : ஹேவர்ஹில் காய்ச்சல் : ஹ்டிரெப்டோபா சில்வஸ் மோனிலிஃபார்மிஸ் என்ற கிருமி பரவும் காய்ச்சல் நோய், இது எலிகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. இந்த நோய் அமெரிக்காவில் ஒரு கொள்ளை நோயாகப் பரவியது. அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் மாநிலத்திலுள்ள ஒரு நகரின் பெயரால் அழைக்கப் படுகிறது.
Haversian gland : ஹேவர்சியன் சுரப்பி : உயர்வுத் திசுவின் மேற் பரப்பிலிருந்து இணைப்பு இடைவெளிக்குள் நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு நுண்ணிய சுரப்பி. இது உயவு நீர்மத்தைச் சுரக்கிறது.
Haversian system : ஹேவர்சியன் மண்டலம் : ஹேவர்சியன் குழாய், ஒரே மையமுடையதாக அமைந்த அதன் செதிளடுக்கு அடங்கிய மண்டலம் நெருக்கமான கட்டமைப்பின் அடிப்படை அலகாக இது அமைந்துள்ளது.
Hay fever : தூசுக் காய்ச்சல்; தும்மல் காய்ச்சல், மறி நீர்க்கோளம் : தூசியினால் ஏற்படும் வேனிற்காலச் சளிக்காய்ச்சல்.
Haygarth's nodes : மூட்டு வீக்கம் : விரல் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மூட்டு வலியுடைய நோயாளிகளுக்கு இது உண்டாகும்.
Hay's test : ஹேய் சோதனை : பித்தநீர் உப்புகளுக்கான சோதனை. ஒரு சிட்டிகை கந்தகத்தைச் சிறுநீரில் சேர்க்கும்போது, உப்புகள் இருந்தால் அந்தக் கந்தகம் அமிழும்; இல்லாதிருந்தால் மிதக்கும். ஸ்காத்லாந்து மருத்துவ அறிஞர் மேத்தியூ ஹேய் பெயரால் அழைக்கப்படுகிறது. Hawkinsinuria : ஹாக்கின் சினூரியா : பச்சிளங்குழந்தைகளிடம் அளவுக்கு அதிகமாக டைரோசின் என்ற வளர்சிதைமாற்றப் பொருள்கள் சுரத்தல். தாய்ப்பால் குடிப்பதை நிறுத்திய பிறகு இது ஏற்படும். அத்துடன், வாந்தி, வளர்ச்சிக் குறைபாடு, அமிலத் தேக்கம், ஒரு நீச்சல் குளத்தில் உள்ளது போன்ற நெடி ஆகியவையைம் உண்டாகும். இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஹாக்கின்சின் குடும்பத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது.
head : மண்டை; தலை.
head ache : தலை வலி :மண்டைக் குத்தல் நோய். இதில் தலையில் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் கடுமையான வலி உண்டாகிறது. இது எதேனும் நரம்பின் பகிர்மான மண்டலத்துடன் நின்றுவிடுவதில்லை.
head hunter : தலைவேடன் : தமனி இயக்க விரைவியலில் தொடைக் குருதிக் குழாயிலிருந்து கழுத்துத் தமனிகளிலிருந்து நுழைவதற்கு வடி வமைக்கப்பட்ட வளைவுள்ள செருகு குழல் முனை.
head-work : மூளைவேலை; சிந்தனை.
Heaftest : காசநோய்ச் சோதனை : ஒரு தனிவகைத் துப்பாக்கி மூலம் மேந்தோலில் பல துளைகள் இட்டு நடத்தப்படும் காச நோய்ப் பரிசோதனை. துளையிட்டதால் வீக்கம் ஏற்படுமானால், காசநோய் உள்ளது என்று அறியலாம். -
heal : குணமாதல்; குணமடைதல்.
heating : குணப்படுத்துதல்; ஆறல் : நோயாளியை மீண்டும் நலம் பெறச் செய்தல், நோயாளியை இயற்கை முறையில் குணப்படுத்துதல் அல்லது திசுக்களைச் சீர்படுத்துதல்.
heal-all : சஞ்சீவி : அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் மருந்து.
health : உடல் நலம்; நலவாழ்வு : நலன் உடல், உள்ளம் சமூகம் அனைத்தும் முழுமையான நலத்துடன் இருப்பதே ஆரோக்கியமான உடல் நலம் என்று உலகச் சுகாதார அமைவனம் கூறியுள்ளது. நோய் அல்லது ஊனம் எதுவும் இல்லாதிருப்பது மட்டும் உடல் நலம் ஆகாது, சமூக நிலையிலும், பொருளாதாரத்திலும் சுறுசுறுப்பாக இயங்கும் திறனுடன் இருப்பதே ஆரோக்கியமான வாழ்வு ஆகும்.
health centre : சுகாதார மையம் : அடிப்படைச் சுகாதார மையங்கள், ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளுக்கான துணை மையங்கள் வாயிலாக அடிப்படைச் சுகாதாரச் சேவைகளை, வழங்குதல். இது, ஒருங்கிணைந்த குணப்படுத்தும் மற்றும் நோய்த் தடுப்புச் சேவைகளை அளிக்கிறது.
health, community : சமுதாய நலவாழ்வு.
healthful : உடல்நலம் சார்ந்த; உடல்நலம் உருவாக்குகிற; உடல் நலம் பேணும்; உடல்நலம் குறித்த; உடல்நலத்துக்கேற்ற.
health, mental : மனநலன்.
health officer : நல அலுவலர்.
health, school : பள்ளிச் சிறுவர் நலம்.
health, visitor : நலப்பார்வையாளர்.
healthy : உடல் நலமிக்க.
hear : கேள்; தகவல்பெறு; அறியப் பெறு; செய்தியுணர்.
hearing : கேட்லல்;கேட்பு.
hearing-aid : கேட்புக்கருவி : கேட்புப்புலனை மேம்படுத்தும் ஒரு வகைப் பொறியமைவு.
heart : இதயம் : உடலில் குருதி ஒட்டத்தை ஊக்குவிக்கும் உறுப்பு. இது மார்பெலும்புக்குப் பின்புறம் இரு நுரையீரல்களுக்கு மிடையில் சாய்வாக அமைந்துள்ளது.
heart beat : இதயத்துடிப்பு.
heart block : இதய அடைப்பு : எஸ்.ஏ.கரணையில் இதயக் கீழறைக்கு உட்துண்டுதல் செல்வதில் ஏற்படும் கோளாறு. இது நீண்ட நேரம் நீடிப்பதாக (முதல்நிலை), துடிப்பு குறைவதாக (இரண்டாம் நிலை), அல்லது சுதந்திரமான இதயக் கீழறை ஒசை ஒழுங்கு (முழுமை) உடையதாக இருக்கலாம்.
heart,block : இதயத்தடை.
heart-blood : உயிர்க்குருதி; உயிர்.'
heart, burn : நெஞ்செரிச்சல்.
heart, diseas : இதய நோய்.
heart, failure : இதயச்சோர்வு.
heartburn : நெஞ்செரிப்பு : செரிமானக் குறைவினால் ஏற்படும் நெஞ்சு எரிச்சல், உணவுக் குழாயினுள் அமிலப் பின்னோட்டம் காரணமாக இரைப்பையில் அல்லது மார்பெலும்பின் கீழ்ப்பகுதியில் இந்தக் கோளாறு உண்டாகிறது.
heart chamber : இதய அறை : இரத்தவோட்டத்தை ஒழுங்கு படுத்துவதற்கு இதயத்தினுள் உள்ள விரிந்து சுருங்கும் நான்கு மண்டலங்களில் ஒன்று.
heart-lung, machine : இதயம் நுரையீரல் எந்திரம்; இதய நுரையீரல் பொறி : ஆக்சிஜனேற்றிய ஒரு குருதி நாளத்திலிருந்து இரத்தத்தை வெளியேற்றி மீண்டும் அதில் குருதியைச் செலுத்துவதற்கான ஒர் எந்திரம். heart valve : இதயத் தடுக்கிதழ் :சுருக்கமடைந்த அல்லது போது மானதாக இல்லாத இதயத் தடுக்கிதழுக்குப் பதிலாகப் பொருத்தப்படும் செயற்கைச் சாதனம். இது எந்திர முறையிலானதாகவோ, உயிரியச் செயற்கைச் சாதனமாகவோ அல்லது பன்றிக்குரியதாகவோ இருக்கலாம்.
heat : வெப்பம்; சூடு.
heart exhaustion : வெப்ப மயக்கம்; வெப்பச் சோர்வு : கடும் வெப்பம் காரணமாகச் சோர்வு ஏற்பட்டால் உண்டாகும் மயக்கம் அளவுக்கு மீறி வியர்வை கரந்து உடலிலுள்ள திரவமும், உப்பும் இழக்கப்படுவதால் உண்டாகிறது.
heat, opoplexy : கடுவெயில் அதிர்ச்சி.
heat, prickly : வேர்க்குரு.
heat stroke : வெப்பத் தாக்குதல்; வெப்பத் தாக்கம்; வெப்ப வாதம்; வெயில் மயக்கம் : வெப்ப மயக்கத்தின் இறுதி நிலை. உடல் வெப்பத்தை இழக்க இயலாதிருக்கும் போது இத் தாக்குதல் எற்பட்டு, மரணமும் உண்டாகலாம்.
heavy chain : கனச்சங்கிலி : இரண்டு பாலிபெப்டைடு சங்கிலிகளில் ஒன்று. இது தடை காப்புப் புரதங்களின் மூலங்களுக்கும், அதன் வகையைத் தீர்மானிப்பதற்கும் அடிப்படையாக அமைந்துள்ளது.
hebephrenia : உளச்சிதைவு : முரண் மூளை நோயில் ஒரு வகை. இதனால் பொதுவாக ஆளுமை சிதைவுறுகிறது. இது திடீரெனத் தோன்றும் பெரும்பாலும் குமரப் பருவத்தினரை இது தாக்குகிறது.
hectic : எலும்புருக்கிக் காய்ச்சல்.
hedonism : இன்ப நாட்டம்; இன்பவியல் கோட்பாடு : அளவுக்கு மீறிய இன்ப நாட்டம் கொண்டிருத்தல். இந்நாட்டம் காரணமாக ஒருவர் வெறுக்கத் தக்க நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.
heel : குதுகால்.
Hegar's sign: கருப்பை கழுத்து மென்மை : கருவுற்ற தொடக்க நிலையில், கருப்பையின் கழுத்துப் பகுதி பெரிதும் மென்மையாக இருத்தல்.
heimlich's menoeuvre : குரல்வளைத் தடை நீக்கம் : குரல்வளை முகப்பினை அடைக்கின்ற, அயல் பொருளை (உ- ம்); உணவு) வெளிக்கொணர்வதற்கு மேற்கொள்ளப்படும் முதலுதவி நடவடிக்கை, ஹிம்லிக் முறை.
heliosis : வெப்பத் தாக்கம்; சூரியத் தாக்க நோய்.
heliotherapy : சூரியக்கதிர் மருத்துவம் : சூரிய ஒளிப்படிவு மூலம் நோய் தீர்க்கும் மருத்துவம். helium : ஹீலியம் (பரிதியம்) : கதிரவன் மண்டலத்தில் இருப்ப தாகக் கருதப்பட்ட ஒரு வாயுத் தனிமம். இது 1868 இல் கண்டு பிடிக்கப்பட்டது. சில சமயம் ஈளை நோயாளிக்கு மருத்துவம் அளிக்க ஆக்சிஜனுடன் இதனைக் கலந்த கொடுக்கப்படுகிறது.
Heller's operation : ஹெல்லர் அறுவை மருத்துவம் : உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கு மிடையிலான சந்திப்பிலுள்ள தசைப்படலத்தைப் பிளவு செய்தல், விழுங்குவது சிரமமாக இருக்கும் போது இவ்வாறு செய்யப்படுகிறது.
helmet : தலைக்கவசம்.
helminth : குடற்புழு.
helminthagogue : குடற்புழு மருந்து : குடற்புழுவை வெளிக் கொண்டுவரும் மருந்து.
helminthemesis : குடற்புழு வெளியேற்றம் : வாயின் வழியாகக் குடலிலுள்ள புழுக்களை வாந்தியெடுத்தல் அல்லது வெளியேற்றுதல்.
helminthiasis : புழுநோய் : குடற்புழுவினால் உண்டாகும் நோய். புழுவின் உடல் ஆக்கிரமிப்பு.
helminthoid : குடற்புழு வடிவுடைய.
helminthology : குடற்புழுவியல் : ஒட்டுண்ணிக் குடற்புழுக்கள் பற்றிய ஆய்வியல்.
helminthoma : திசுக்கழலை : குடல்புழு அல்லது அதன் பொருள்கள் மூலம் உண்டாகும் திசுக்கட்டிக் கரணை.
hemangioblast : இரைப்பைத் தோல் உயிரணு : குருதி நாள உள்வரித் தாள் சவ்வுக்கும் குருதி உருவாக்க உயிரணுக்களுக்கும் வழி வகுக்கும் இரைப்பைத் தோல் உயிரணு.
hemangioblastoma : உள்வரிச் சவ்வுக் கட்டி : நன்கு வரையறுக் கப்பட்ட, மெதுவாக வளர்கிற, உக்கிரமற்ற கட்டி இதில் உள்வரித்தாள் சவ்வு உருவாக்குகிற தந்துகி நாளப் பரவல் அடங்கியுள்ளது.
hemeralopia : ஒளிக்கூச்சம்; பகற் குருட்டுத்தன்மை : பிரகாசமான ஒளியில் பார்வை மங்குதல். இது இரவுக் குருட்டிலிருந்து வேறுபட்டது.
hemiageusia : சுவையுணர்வு இழப்பு : நாக்கின் ஒரு பக்கத்தில் மட்டும் சுவை உணர்வு இழத்தல்.
hemianopia : அரைக்குருடு; பாதிப் பார்வை; அரைப்புலக் குருடு, பகுதிப் பார்வையிழப்பு : அரைப்பார்வை மங்கல்.
hemiatrophy : ஒரு பக்கத் தேய்வு; பகுதி உறுப்பு நலிவு; பக்கத் தேய்வு :முகத்தின் ஒரு பாதி நலிந்து தேய்வுறுதல். இது ஒரு பிறவிக் கோளாறு. hemibladder : அரைப்பை : வளர்ச்சி பிறழ்வு, இதில் தேங்குபை தனித்தனியே கசிவு நாளத்துடன் இரு பகுதிகளாக அமைந்திருக்கும் அரைப்பை.
hemiblock : இதயத் தூண்டல் தடை : திசுக்கற்றையின் இடப் பக்கக்கிளையின் இரு முக்கிய பிரிவுகளில் ஒன்றில் இதயத் தூண்டல் செல்லுதல் தடைபடுதல்.
hemichorea : ஒருபக்க வலிப்பு : காக்கா வலிப்பு நோயின் ஒரு வகை. இதில் உடலின் ஒரு பகுதி மட்டுமே வலிப்புக்குள்ளாகும்.
hemicolectomy : பெருங்குடல் அறுவை மருத்துவம் : பெருங்குடலின் ஒரு பகுதியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல்.
hemicrania : ஒருபுறத் தலைவலி; ஒற்றைத் தலைவலி; ஒரு பக்கத் தலைவலி : ஒற்றைத் தலைவலி போன்ற ஒருபக்கத் தலைவலி.
hemidiaphoresis : ஒரு பக்கவியர்வை : உடலின் ஒரு பக்கத்தில் மட்டும் வியர்த்துக் கொட்டுதல்.
hemigastrectomy : இரைப்பை அறுவை மருத்துவம் : இரைப் பையின் பாதிப்பகுதியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்.
hemiglossectomy : பாதி நாக்கு அறுவை : நாக்கின் பாதிப் பகுதியை அகற்றிவிடுதல்.
Heminevrin : ஹெமிநெவ்ரின்: குளோர்மெத்தியாசெல் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
hemiparesis : ஒருபுறவாதம்; பாதி உடல் தளர்வு; பாதி முகத் தளர்வு : முகத்தின் அல்லது உடலின் ஒரு பக்கத்தில் இலேசான வாதம் உண்டாதல்.
hemiplegia : ஒருபக்க வாத நோய் : ஒருபுறமாகச் செயலற்ற தன்மையூட்டும் வாதநோய்.
hemisphere : அரைக் கோளம்; அரைவட்டம் : ஒரு கோள வடிவின் அல்லது உறுப்பின் பாதிப் பகுதி.
hemisphere, cerebral : பெருமூளை.
hemispherectomy : மூளைப் பகுதி நீக்கம் : காக்காய் வலிப்புச் சிகிச்சையின் போது, மூளையின் இரு பெரும் பிரிவுகளில் ஒன்றை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல். இது பகுதியாகவோ முழுமையாகவோ இருக்கலாம்.
hemivertebra : முதுகெலும்பு வளர்ச்சிக் குறைபாடு : முதுகெலும்பின் ஒரு பக்கம் முழுமை பெறாமல் வளர்ந்திருத்தல்.
Henbane : நச்சு மயக்க மருந்து.
Henoch schonlein purpura : தோற்படைக் குருதி கசிவு : தோலின் மேல் காணப்படும் கருஞ்சிவப்புப் புள்ளிகள் கொண்ட படையிலிருந்து குருதி கசிதல். குறிப்பாக, முழங்கால் தண்டுகளிலும், பிட்டங்களிலும் இவ்வாறு இரத்தம் கசியும் இந் நோய் பெரும்பாலும் குழந்தைகளைப் பாதிக்கிறது.
hepadnaviridae : கல்லீரல் அழற்சி கிருமி : கல்லீரல் அழற்சி-B போன்ற நோய்க் கிருமிகள். டிஎன்ஏ கிருமிக் குடும்பத்தில் ஒன்று. இதனால், தொற்று நோய்கள் உண்டாகின்றன. கடுமையான நோய்க் கழலைகள் ஆகியவற்றுடன் தொடர்புடையது.
hepadnavirus : ஈரல் நோய்க் கிருமி : கல்லீரல் அழற்சி-B போன்ற நோய்க்கிருமிகள். இது ஈரல் உயிரணுக்களின் கருமையத்தில் பல்கிப் பெருகி, இடைவிடாது நோயை உண் டாக்குகிறது.
heparin : ஈரல் அமிலம் : ஈரல் மற்றும் நுரையீரல் திசுக்களில் உள்ள ஓர் அமிலம். இதனை நரம்பு வழியாகச் செலுத்தினால், குருதிக் கட்டுத் தடுக்கப்படுகிறது. குருதியுறைவு நோய்களைக் குணப்படுத்தப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
hepatectomy : ஈரல் அறுவை மருத்துவம்; ஈரல் பகுதி நீக்கம்; ஈரல் எடுப்பு : ஈரலை அல்லது ஈரலின் ஒரு பகுதியைத் துண்டித்து எடுத்தல்.
hepatic : ஈரல் சார்; கல்லீரல் மருந்து : கல்லீரலுக்கு நன்மை செய்யும் ஒரு வகை மருந்து.
hepatico choledochostomy : கல்லீரல்-பித்தநீர்நாள இணைப்பு; ஈரலில் பித்தக் குழல் வாயமைப்பு : கல்லீரல் மற்றும் பொதுவான பித்தநீர் நாளங்கள் துண்டுபட்டிருந்தால் அவற்றை முனைக்கு முனை இணைத்தல்.
hepaticogastrostomy : கல்லீரல் குருதிநாளப் பிணைப்பு : இரைப் பைக்குச் செல்லும் கல்லீரல் நாளத்தில் அறுவைச் சிகிச்சை மூலம் குருதி நாளப் பிணைப்பு செய்தல்.
hepatisation : திடத்திரட்சியாக்கம் : ஈரல் குலை போன்று ஒரு திடமான திரட்சியாக உரு மாற்றுதல், முக்கியமாகச் சீத சன்னியின்போது, மடல்கள் ஒன்றிணைந்து இந்தத் திரட்சி ஏற்படுகிறது.
hepatitis : ஈரல் அழற்சி; கல்லீரல் அழற்சி : நச்சுப் பொருள்கள் காரணமாக கல்லீரலில் ஏற்படும் வீக்கம். இதன் காரணமாக, காய்ச்சலும், இரைப்பை-குடல் கோளாறுகளும், தோல் அரிப்பும் ஏற்படும்.
hepatitis. viral : ஈரல் அணு அழற்சி. hepatization : கல்லீரல் இறுக்கம் : துரையீரல் போன்ற பகுதிகள் கல்லீரல் போன்ற பொருளாக இறுகிவிடும் நோய்.
hepatoblastoma : கல்லீரல் கட்டி : கல்லீரலில் ஏற்படும் உக்கிரமான கட்டி இது குழந்தைகளிடம் உண்டாகும். இந்தக் கட்டி, ஒற்றையாகவும், திண்மமாகவும், நன்கு முகம் வைத்த தாகவும், முதிராத திகவணுக்கள் உடையதாகவும் இருக்கும்.
hepatocirrhosis : ஈரலரிப்பு; கடின ஈரல் : ஈரல் உறுப்பின் இழைமம் இற்று இணைமங்கள் மட்டுமீறி வளர்ச்சியடையும் கோளாறு.
hepatogastric : ஈரல் சார்ந்த : ஈரற்குலை, இரைப்பை தொடர்புடைய.
'hepatogenous : கல்லீரலில் தோன்றும்.
hepatogram : ஈரற்குலை ஊடு கதிர்ப்படம் : 1. ஈரற்குலையின் ஊடுகதிர்ப் படம். 2, ஈரற்குலைத் துடிப்பினை வரைபடமாக வரைதல்.
hepatology : ஈரல் ஆய்வியல் : ஈரற்குலை பற்றியும் அதைப் பீடிக்கும் நோய்கள் குறித்தும் அறிவியல் முறையில் ஆய்வு செய்தல்.
hepatoma : ஈரல்புற்று : 1. ஈரல் குலையில் ஏற்படும் கட்டி 2. ஈரல் குலை உயிரணுப் புற்று.
hepatosis : ஈரல் அழற்சி : ஈரல் குலையில் ஏற்படும் செயல் முறைக் கோளாறு எதுவும்.
hepatomegaly : ஈரல் விரிவு; ஈரல் பெருக்கம்; பேரீரல்; ஈரல் வீக்கம் : ஈரல் சரிவடைதல்.
hepatotoxic : ஈரல் நச்சு : ஈரல் உயிரணுக்களுக்குத் தீங்க விளை விக்கும் நச்சுப் பொருள்.
herald bleed : முன்னோடிக் குருதிப்போக்கு : அடிவயிற்றில் வலியுடன் உண்டாகும் இரத்தப் போக்கு. இது கடும் குருதிப் போக்குக்கு முன்னதாக ஏற்படும்.
herald patch : முன்னோடி நைவுப்புண் :கரனைப் பொக்குளத்தின் தொடக்க நிலை நைவுப்புண். இது தனியாக, நீள்வட்ட வடிவில், செதிள் களுடன் தோன்றும் மற்ற நைவுப்புண்கள் தோன்றுவதற்கு ஒருவாரம் முன்னதாக இது உணடாகும்.
herb : மூலிகை : மருந்தாக அல்லது நறுமணப் பொருளாகப் பயன்படும் இலைத் தாவரம்.
herbívora : இலையுண்ணி.
hereditary : மரபுப் பண்பு; பாரம் பரிய; மரபியல்.
heredity : மரபுவழி; பாரம்பரியம்.
heritability : மரபுத் திறம்பாடு : பரம்பரையாக வரும் ஒரு குணம். மரபு சார் வடிவத்தினால் எந்த அளவுக்கு மரபுக் குணம் பாதிக்கப் படுகிறது என்பதை அளவிடுதல்.
hermaphrodite : இருபால் இயிரினம்; இருபாலினவுடலி : பெண் கூறும் ஆண்கூறும் ஒருங்கேயுடைய உயிரினம்.
herma phroditism : இரு பாலியம்.
hernia : விரிசல்; குடலிறக்கம்; குடல் பிதுக்கம் : ஒர் உறுப்பு அல்லது ஒர் உறுப்பின் ஒரு பகுதிச் சுவர்ப் பகுதி விரிசல் வழி நீட்டிக் கொண்டிருத்தல். குடலின் ஒரு பகுதி, உடலின் முன்புறமுள்ள தசைச் சுவரின் வலுக்குறைந்த பகுதி வழியாக வெளித் தள்ளப்படுதல்.
hernia, femorol : குடல் துடையிறக்கம்.
hernia, injurinal : குடல் அறையிறக்கம்.
hernia, stranguiated : நெரிப்பிறக்கம்.
hernia, umbilical : உந்திப்பிதுக்கம்.
herniation : குடல் பிதுக்கம் : பொதியுறையில், சவ்வில், தசையில் அல்லது எலும்பில் இயற்கையாக ஏற்படும் கோளாறு அல்லது பிளவு காரணமாக ஒர் உறுப்பில் அல்லது கட்டமைப்பில் உண்டாகும் அளவுக்கு மீறிய பிதுக்கம்.
herniopiasty : குடலிறக்க அறுவை மருத்துவம்; பிதுக்க ஒட்டறுவை மருத்துவம்; குடலிறக்க திருத்தமைப்பு : குடலிறக்கத்தை அகற்றுவதற்கான அறுவைச் சிகிச்சை.
'herniorrhaphy : குடலிறக்க வலுவூட்டம்; பிதுக்கத் தைப்பு : குடலிறக்க நோயில், நலிவாகவுள்ள பகுதியை நோயாளியின் சொந்த திசுக்களைக் கொண்டு வலுப்படுத்துவதற்குச் செய்யப்படும் அறுவை மருத்துவம்.
herniotome : குடலிறக்க அறுவைக் கத்தி; பிதுக்க வெட்டி : குடலிறக்க அறுவை மருத்துவர்களால் பயன்படுத்தப்படும் ஒரு தனி வகைக் கத்தி.
herniotomy : குடலிறக்க உட்பை அகற்றல்; பிதுக்க நீக்கம் : குடலி றக்க உட்பையினை அகற்றி விட்டு அதன் உள்ளடக்கப்பொருள்களை இயல்பு நிலைக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான அறுவை மருத்துவம்.
herpes : அக்கி.
herpes, labialis : உதட்டு அக்கி.
herpes, simplex : சிற்றக்கி.
herpes, zostev : அக்கி அம்மை.
herpes virus : தேமல் கிருமி : டிஎன்ஏ கிருமிக் குழுமத்தில் ஒன்று. இதில் எளிய தேமல், படர் தேமல், தட்டம்மை கிருமிகள், எப்ஸ்டீன்-பார் கிருமி உயிர் நுண்மக் கிருமி போன்ற செயல் தூண்ட நுண்ணுயிர்கள் அடங்கும்.
heroin (hern) : தீவிர மருந்து : மயக்க மருந்திலிருந்து உண்டாக் கப்படும் ஒருவகை மருந்து. மருந்தடிமைப் பழக்கத்தை உண்டாக்கக் கூடியது. சட்டத்தில் தடை செய்யப்பட்டது.
herpangina : அண்ணக் கொப்புளம்; அக்கி நெறிப்பு : முது கெலும்புடையவற்றின் மேல் வாயின் (அண்ணம்) பின் புறத்திலுள்ள மிக நுண்ணிய கொப்புளங்கள் மற்றும் புண்கள்.
herpes : தேமல்; படர்தாமரை : தோலில் ஏற்படும் ஒருவகை வைரஸ் நோய். இது ஒரு தொற்று நோய்; பாலுறுப்பு காரணமாகப் பெண்களுக்கு யோனிக் குழாய், பெண்குறி இதழ்கள் ஆகியவற்றில் உண் டாகும். ஆண்களுககு ஆண் குறியிலும் ஏற்படும். இது இரு வகைப்படும். ஒன்று, சாதாரணம். மற்றொன்று, சின்னம்மைக் கிருமியால் ஏற்படுவது.
herpetic : படர்தேமல்லான.
hesperidin : எலுமிச்சைப் பொருள் : பெரும்பாலான எலுமிச்சை வகைகளில் உள்ள படிகம் போன்ற பொருள். இது எலுமிச்சைச் சாறு போன்று செயற்படக் கூடியது.
heteroantibody : முரணிய தற்காப்பு மூலம் : காப்பு மூலம் தொடர்பான தாறுமாறான தற்காப்பு மூலம்.
heteroantigen : தாறுமாறு காப்பு மூலம் : ஒர் இனத்திலிருந்து இன் னொரு இனத்தில் நேரிணையான தற்காப்பு மூலத்தை உற்பத்தி செய்கிற ஒரு காப்பு மூலம்.
heteroblastic : முரணிய திசு வகை : ஒன்றுக்கு மேற்பட்ட திசுவகையிலிருந்து வளர்கிற ஒன்று.
heterodermic : மாற்று ஒட்டுத் தோல் : மற்றொரு இனத்தின் தனி வகையிலிருந்ததான ஒரு ஒட்டுத்தோல் தொடர்பான.
heterolysis : முரணிய சீரணம் : ஒர் இனத்தின் உயிரணுக்களை வேறொரு இனத்தின் லைசின் மூலம் கரைத்தல் அல்லது சீரணித்தல்,
heterogeneous : வேறின; பலவின.
heterometaplasia : அயல்திசு உற்பத்தி : திசு உருமாற்றம். இதன் மூலம், திசு எந்தப் பகுதியில் உற்பத்தியாகிறதோ அந்தப் பகுதிக்கு அன்னியமான ஒரு திசு உற்பத்தியாகிறது.
heteromorphosis : அயல்திசு வளர்ச்சி : வேறொருவகைத் திசு விலிருந்து ஒரு திசு வளர்தல். heterophagy : அயல் உயிரணுச் சீரணம் : உயிரணுவின் சுற்றுச் சூழலிலிருந்து துகள் சூழ் உயிரணுவாக்கிய ஒரு பொருளின் உயிரணுவுக்குள் நடைபெறும் சீரணம்.
heterophil : முரணிய ஊனீர் நுண்மம் : 1. பலமுனைக் கரு வெள்ளணுவின் ஊனிர் நுண்மம், 2. முரணிய மரபணுக் காப்பு மூலம் சார்ந்ததும், தற்காப்பு மூலம் தொடர்புடையது.
heterophile : பலவேறு வினைப்பொருள் : இன்னோர் இனத்திற்கு எதிராகச் செயற்படக் கூடிய ஒர் இனத்தின் பொருள். எடுத்துக்காட்டாக, மனிதரின் காப்பு மூலம் ஆட்டின் இரத்த சிவப்பணுக்களுக்கு எதிராக வேலை செய்கிறது.
heterophonia : குரல் மாற்றம் : 1. முதிர்ச்சியடையும் குரல் மாறுதலடைதல், 2. குரல் ஒலிகளின் இயல்பு மீறிய தன்மை.
heteroplasia : திசுப்பிறழ்வு : 1.உறுப்புக்கு இயல்பாக இல்லாத உயிரணு வளர்ச்சி 2 திசுவின் பிறழ்வு நிலை.
heteroplasty : திசுமாற்ற மருத்துவம் : ஓர் இனத்திலிருந்து இன்னோ ரினத்துக்கு திசு மாற்ற மருத்துவம் செய்தல்,
heterosexual : வேற்றுப்பால் கவர்ச்சி; வேற்றுப்பால் புணர்; இயற்கைப் பாலிணைவுடையவர் : இயற்கையான பால் இணைவுடையவர்கள். எடுத்துக்காட்டாக, ஒர் ஆண் பெண்ணுடன் பாலுறவு கொள்ளவிழைதல்.
heterosexuality : விசித்திர பாலுணர்வு : எதிர்பாலினத் தவரிடையே விசித்திரமான கவர்ச்சி அல்லது பாலுணர்வு நடத்தை.
heterotaxy : உறுப்பு மாறாட்ட அடுக்கம்.
heterozygote : வெவ்வேறு பாலணுர்வால் உண்டாகும் உயிருரு : இரட்டைக் குழந்தைகளில் வெவ்வேறு கருமுட்டையில் உருவாகும் உயிருரு.
heterozygous : ஈரிய.
hexachlorophane : ஹெகுளோரோஃபேன் : தோலில கிருமி நீக்கம் செய்வதற்குப் பயன்படும் ஒருவகை மருந்து. தவறாகப் பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு மூளைச் சேதம் உண்டாகலாம்.
hexamine : ஹைக்சாமைன் : சிறு நீர்க்குழாய் அறுவை மருந்துக்கு முன்பு பயன்படுத்தப்படும் நோய் நுண்மத்தடை மருந்து.
hexobarbitone : ஹெக்சோபார் பிட்டோன் : ஒருவகைத் தூக்க மருந்து.
hexopal : ஹெக்சோப்பால் : இன்னோசிட்டால் நிக்கோட்டினேட் என்ற மருந்தின் வணிகப் பெயர். hexyiresorcinol : ஹெக்சிர்ரிசோர்சினால் : கீரைப்பூச்சி, வட்டப்பூச்சி, கொக்கிப்புழு, குடற்புழு ஆகியவற்றுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் மருந்து.
hiatus : பிளவு; இடைவாய்.
Hibb's operation : ஹிப் அறுவை மருத்துவம் : முதுகந்தண்டுக் காச நோயினையொட்டி, முதுகந் தண்டுக்கூட்டிணைவு செய்வதற்கான அறுவை மருத்துவம்.
hibernation : அரிதுயில் : 1. தனிமையில் வாழ்தல், 2. குளிர் காலத்தில் உடல் வெப்பத்தையும் வளர்சிதை மாற்றத்தையும் வெகுவாகக் குறைத்துக் கொண்டு அரிதுயிலில் ஆழ்ந்திருத்தல். 3. செயற்பாடுகளைத் தற்காலிக மாக்க குறைத்துக் கொள்ளுதல்.
hibernoma : அரிதுயில் கட்டி : நோய்க்குறியுடன் வட்ட வடிவில் அரிதாக உண்டாகும் ஒர் உக்கிரமற்ற கட்டி இதில் சில அரிதுயில் விலங்குகளிடம் உள்ள கொழுப்புப் போன்ற பழுப்புக் கொழுப்பு அடங்கி யிருக்கும்.
Hibiscrub : ஹிபிஸ்கிரப் : அறுவை மருத்துவத்துக்கு முன்னர் கழுவு வதற்காகப் பயன்படுத்தப்படும் மருந்தின் வணிகப் பெயர். இது, 4% சவர்க்காரக் கரைசலில் கலந்த குளோர்ஹெக்சிடின் குளுக்கோனேட் ஆகும்.
Hibitane : ஹிபிட்டேன் : குளோர்ஹெக்சிடின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
hiccough : விக்கல் ; குரல்வளை முகப்பு திடீரென அடைத்துக் கொள்வதால், சுவாச உறுப்புகளில் விக்கல் ஒலியுடன் தன்னையறியாமல் ஏற்படும் துடிப்பு.
hidradenoma : வியர்வைச் சுரப்பிக் கட்டி : வியர்வைச் சுரப்பிகளின் புறத்தோல் உயிரணுக்களில் உண்டாகும் உக்கிரமற்ற கட்டி.
hidroacanthoma : எக்ரின் சுரப்பி கட்டி : எக்ளின் சுரப்பியில் உண்டாகும் உக்கிரமற்ற கட்டி.
hidrosis : வியர்வைச் சுரப்பு; வியர்த்தல்.
hilum : உள்வாய்ப் பள்ளம் : நாடி நரம்புக் குழாய்கள் உறுப்பினுள் நுழையும் உள்வாய்ப் பள்ளம்.
hind brain : பின் மூளை : மூளையின் கடைகோடிப் பின் பகுதி. இதிலிருந்து சிறுமூளை, முகுளம், பின் மூளை உண்டாகும்.
hind foot : பின்பாதம் : பாதத்தின் பின் பகுதி. இதில் கணுக்கால், பாத எலும்பு ஆகியவை அடங்கும்.
hindgut : பின்புற உணவுக் குழாய் : உணவுக் குழாயின் பின்பகுதி. இதிலிருந்து பெருங்குடல் தொடங்குகிறது.
hinge joint : கீல்மூட்டு : முழங்கால் முட்டில் அல்லது முழங்கை முட்டில் உள்ளது போன்று நீட்டவும், வளைக்கவும் அனுமதிக்கிற, வகையில் இரு எலும்புப் பரப்புகள் இணைகிற கீல் மூட்டு.
hip : இடுப்பு; இனம் : இடுப்பு மூட்டுக்கிடைமட்டமாக இருக்கிற, இடுப்பு மூட்டை உள்ளடக்கிய உடலின் இடுப்புப் பகுதி.
hip bone : இடுப்பெலும்பு : இடுப்புச் சந்து எலும்பு.
hip disease : இடுப்பு நோய் : இடுப்புச் சந்தில் காளான் வகை வளர்ச்சியினால் ஏற்படும் கோளாறு.
hip-joint : இடுப்புச் சந்து.
hippocampus : பின்மூளை மேடு : மூளையின் பின்புறமுள்ள இரு மேடுகளில் ஒன்று. இது நினைவாற்றல் தொடர்புடையது.
Hippocrates : ஹிப்பாக்கிரேட்டிஸ் : புகழ்பெற்ற கிரேக்க மருத்துவர்; தத்துவஞானி, தாம் பிறந்த ஊரான காஸ் என்னுமிடத்தில் ஒரு மருத்துவப் பள்ளியை நிறுவினார். "மருத்துவத்தின் தந்தை" எனப் போற்றப் படுபவர்.
hirsuties; hirsutism : மயிரடர்த்தி; மயிர் மிகைப்பு; மிகை முடி; அடர் முடி : உடலில் மயிர் காணப்படும் பகுதிகளில் அளவுக்கு மீறி மயிர் அடர்ந்து வளர்தல்.
hirudin : ஹிருடின்; குருதி உறைவுத் தடுப்பான் : குருதி உறிஞ்சும் உயிரினமாகிய அட்டையிலிருந்து சுரக்கும் ஒரு பொருள். இது குருதிக் கட்டைத் தடுக்கப் பயன்படுகிறது.
hirudinise : குருதி உறைவுத் தடுப்பு : குருதி உறைவுத் தடுப்பான் பொருளை ஊசி மூலம் செலுத்தி, குருதி உறையாமல் செய்தல்.
Hirudoid : ஹிருடாய்ட் : தோலின் மேல் நோய்களுக்குப் பயன் படுத்தப்படும் மருந்தின் வணிகப் பெயர்.
histamine : ஹிஸ்டாமின் : கம்பி உயிரணுக்களிலும், நீல வெள்ள ணுக்களிலும் சேர்த்து வைக்கப் பட்டிருக்கும் உயிரியக்க அபின், இது ஒற்றை உயிரணுக்களிலும், நரம்பு உயிரணுக்களிலும், நாளமில் சுரப்பி உயிரணுக்களிலும் சுரக்கும். தசைகள் எளிதாகச் சுருங்குவதற்கு இது உதவுகிறது. இது இரைப்பை நீர் சுரப்புக்கு வலுவான ஊக்கியாகும்.
histidine : ஹிஸ்டிடின் : இரத்தச் சிவப்பணுக்களில் பரவலாக அமைந்துள்ள இன்றியமையாத அமினோ அமிலங்களில் ஒன்று. histoclinical : திகவியல் பிறழ்வு மருத்துவம் : மருத்துவ அம்சங் களுடன் திகவியல் இயல்புப் பிறழ்ச்சியை இணைத்தல்.
histogenesis : கருமுனை உயிரணு வளர்ச்சி : கருமுனையின் நுண்ணுயிர்ப் படுகைகளின் வேறுபடுத்தப்படாத உயிரணுக்களிலிருந்து திசுக்கள் உருவாகி வளர்தல்.
histogram : அலைவெண் வரைபடம் : அலைவெண் பகிர்மானத்தின் வரைபடம். இது, செங்குத்துப் பட்டைகள் அல்லது செவ்வகங்கள் மூலம் குறிக்கப் படுகிறது.
histoid : திசு ஒத்திசைவு : உடலிலுள்ள திசுக்களில் ஒன்றின் கட்டமைப்பு ஒத்திருக்கிறது.
histology : திசுவியல்; உயிர்தசைவியல்; நுண்உடற் கூறியியல் : உயிர்த்திசுக்கள் பற்றிய நுண்ணாய்வியல்.
Histolysis : திசுச்சிதைவு; திசு முறிவு : கரிமத் திசுக்கள் சிதை வுறுதல்.
histones : ஹிஸ்டோன் : உயர் உயிரிகளின் இனக்கீற்று டி.என்.ஏ யுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு தனிவகைப்புரதம்.
histopathology : திசுநோயியல் : திசு உயிரணுக்களைப் பாதிக்கிற நோய்களை ஆராய்தல்.
histophysiology : திசு நுண்ணாய்வு : திசுக்களை அவற்றின் செயற்பாடுகளுடன் ஒப்பிட்டு நுண்ணாய்வு செய்தல்'
Histoplasma : திசு அழற்சிக் கிருமி : H-கேப்கலேட்டம் என்ற பூஞ்சண வகை திசு அழற்சியை உண்டாக்குகிறது. இது இயற்கையில் பூஞ்சண வடிவிலும், மனித உடல் வெப்ப நிலையில் நொதி வடிவிலும் அமைந் திருக்கிறது.
histoplasmosis : திசுஅழற்சி நோய் : H-கேப்சுலேட்டம் என்ற கிருமியினால் உண்டாகும் நோய். இது, வெப்ப மண்டலங்களிலும், குறிப்பாக மத்திய அமெரிக்காவில் ஆற்று வடிகால்களில் பறவைகளின் மலக்கழிவுகளினால் மாசுபட்ட ஈர மண்ணிலிருந்து உண்டாகிறது. இது கடுமையான திசு அழற்சியில் ஏற்படுகிறது.
history : வரலாறு; வண்ணனை; விவரியம்.
history, clinical : நோய் விவரியம்.
history, dietetic : உணவு விவரியம்.
history, family : குடும்பவிவரியம்.
history, menatrual : போக்கு விவரியம்.
history obstetric : பேற்று விவரியம்.
history, personal : தன் விவரியம். history, social : சூழ்விவரியம்; சார்பியம்.
history of medicine : மருத்துவ வரலாறு; மருத்துவ விவரியம்.
history of part illness : முன்நோய் விவரியம்.
history of present illness : நோய் விவரியம்.
history taking : விவரிய கணிப்பு.
HIV : எச்ஐவி (மனித நோய்த்தடை காப்புக் குறைபாட்டு நோய்க் கிருமி) : 'எயிட்ஸ்' எனப்படும் ஏமக் குறைவு நோய்க்கு மூலகாரணமான நோய்க் கிருமி.
hives : தோல் வீக்கம்; தோல் அரிப்பு : படைநோய் குடல் வீக்கம்; தொண்டைஅழற்சி.
HLA : எச் எல் ஏ : மனித வெள்ளை உயிரணு காப்பு மூலம் (Human Leucocytic Antigen) என்பதன் சுருக்கம்.
hoar : மூப்பு; முதிர் தோற்றம்.
hoars : குரல் கரகரப்பு; கம்மிய.
hoary : நரையுடைய மூப்புடைய.
hobnail liver : திரள் ஈரல்; ஆரல் கரணை : ஈரலறிப்பு நோயில் காணப்படும் திண்மையான ஈரல்.
Hodgkin's disease : ஹாட்ஜ்கின் நோய் : நிணநீர்க்கரணைகள் படிப்படியாக விரிவடைகிற கேடு விளைவிக்கக்கூடிய கட்டி.
Hoffmann's sign : ஹாஃப்மன் குறியீடு : நடுவிரலின் நகம் திடீரென, வலுகட்டாயமாகச் சுண்டி இழுக்கப்படுவதால் ஏற்படும் இயல்புக்கு மீறிய எதிர்வினை. இதனால், கட்டை விரலிலும், நடுவிரலிலும் மற்ற விரல்களில் ஒன்றின் முனை கோடி விரல் எலும்புகளிலும் திடீர் எதிர்வினை ஏற்படும். இதனை, ஜெர்மன் நரம்பியல் வல்லுநர் ரூஜாகான் ஹாஃப் மன் விளக்கிக் கூறினார்.
Hogben test : ஹாக் பென் சோதனை (கருச்சோதனை : பெண் கருவுற்றிருக்கிறாளா என்பதை அறிய நடத்தப்படும் சோதனை கருவுற்றிருப்பதாகக் கருதப்படும் பெண்ணின் அதிகாலைச் சிறுநீரை, ஒரு பெண் தேரைக்கு ஊசி மூலம் செலுத்தப்படும். பெண் கருவுற்றிருந்தால் அந்தத் தேரை 2-24 மணி நேரத்தில் முட்டையிலும். இச்சோதனை 99% துல்லியமானது.
Holdswath test : ஹோல்ட்ஸ்வாத் சோதனை : எலும்புகளுக் கிடையிலான இடைவெளியில் ஒரு பிளவு இருப்பதைக் கண்டறியும் சோதனை. எலும்புகளுக்கிடையிலான இணைப்பிழை நலிந்து போவதால் நிலையற்ற முறிவு ஏற்பட்டிருப்பதை இச்சோதனை குறிக்கிறது.
holoacardius : ஒரு ஒற்றைப் பாலணு இரட்டை முதிர்கரு : ஒரு தனியான, மிகவும் குறைபாடுடைய ஒற்றைப் பாலணு இரட்டை முதிர்கரு இது, வடிவமில்லாத, உருவமற்ற பொருண்மையுடன், இதயமில்லாமல் காணப்படுகிறது.
holoenzyme : ஒற்றைச் செரிமானப் பொருள் : முழுமையான இயல்பூக்க நடவடிக்கையைக் கொடுக்கும் ஒர் இணைச் செரிமானப் பொருள், திசுப்பட்டை செரிமானப் பொருள் இவற்றின் ஒரு கலவையினால் உருவான ஒரு பொருள்.
holography : முப்பரிமாண உருவரை : கதழ் ஒலிச் சாதனத்துடன் முப்பரிமாண உருக் காட்சிகளை உருவாக்கும் ஒரு முறை.
Holter monitor : ஹோல்ட்டர் கண் காணிப்புச் சாதனம் : ஈ.சி.ஜி வரைவினைப் பதிவு செய்யும் ஒரு சாதனம்; அல்லது கையடக்க நாடாப்பதிப்பான். நோயாளி இயல்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும்போது இது செய்யப்படுகிறது. அமெரிக்க உயிரியலறிஞர் நார்மன் ஹோல்ஸ்டர் இதனைத் தயாரித்தார்.
homaluria : இயல்பு சிறுநீர் சுரப்பு : இயல்பான வீதத்தில் சிறுநீர் உற்பத்தியாகி, வெளியேறுதல்.
Homan's sign : ஹோமன் நோய்க்குறி : கால் விரல் வளைவு காரண மாக, பின்கால் தசைப்பகுதியில் வலி ஏற்படுதல்.
home : வீடு, மனை.
home, nursing : மருத்துவ இல்லம், மருத்துவமனை.
homeopathy : இனமுறை மருத்துவம் (ஹோமியோபதி) : நோய்க் கூற்றுப் பெருக்கத்தால் நோய் நீக்கும் முறை. இதனை ஜெர்மன் மருத்துவ அறிஞர் ஹானிமன் கண்டுபிடித்தார். நோயினால் உண்டாகும் அதே அறிகுறிகளை உண்டாக்கும் மருந்துகளை நோயாளிக்குச் சிறிதளவு கொடுத்து அதன் மூலம் நோய் நீக்கும் மருத்துவ முறை. எடுத்துக்காட்டாக வேணற்கட்டியை உண்டாக்கும் ஒரு மருந்தினை உடலில் செலுத்துவதன் மூலம் வேணற்கட்டிைைய குணமாக்கல்.
homeoplasia : புதுத்திசு உருவாக்கம் : உறுப்பின் இயல்பான திசுவைப் போன்று புதிய திக உருவாதல்.
homeostasis : சமநிலை பேணல்; நீர்ச் சமநிலை; உட்சீர்மை : குருதி அழுத்தம், உடல் வெப்பம், மின்னழுத்தம் போன்ற இயக்கங்கள் சீராக நடைபெறுமாறு செய்தல்
home othermy : சமநிலை வெப்பம் பேணல் : சுற்றுச் சூழல் வெப்பநிலை மாறிய போதிலும் உடல் வெப்பநிலை மாறாமல் பேணிவருதல். homicide : மனிதக் கொலை; கொலை : ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்தல், ஒருவர் மற்றவரை வேண்டுமென்றே உட்கருத்துடன் கொன்றால், அது குற்றமுறு கொலைச் செயலாகும்; தற்செயலாக மரணம் விளைவித்தால், அது தற்செயல் கொலைச் செயலாகும்.
homo : மனித இனம்.
homoetherapy : இனமுறை மருத்துவச் சிகிச்சை : நோயைத் தூண்டுகிற பொருள் போன்ற ஒரு பொருளைக் கொண்டு நோய்க்குச் சிகிச்சையளித்தல்.
homocystinuria : சிறுநீர்க் கந்தகம் : சிறுநீரில் அமினோ அமிலம் அடங்கிய 'ஹேமேசிஸ்டைன்' என்ற கந்தகம் அடங்கியிருத்தல். இது பிறவிலேயே மரபாக உண்டாகும் வளர்சிதை மாற்றப் பிழையாகும். இதனால் மனவளர்ச்சி குன்றுதல். கண்வில்லை இடம் மாறுதல், எலும்புகள் அளவுக்கு மீறி வளர்ச்சியடைதல் போன்ற கோளாறுகள் ஏற்படும். குழந்தை களுக்கு மரணம் விளையலாம்.
homogametic : உயிரணு ஒரு சீர்மை : உயிரணுக்களை உராய்வதன் மூலம் திசுவை ஒரு சீராக்குதல்.
homogeneous : ஒரு சீரான; ஒரே படித்தான; ஓரின : உறுப்புகள் அனைத்தும் ஒரே மாதிரியாக அமைந்திருத்தல். எங்கணும் ஒரே மாதிரியான தன்மை கொண்ட.
homogenesis : ஒரேவகை இனப்பெருக்க முறை : அடுத்தடுத்த தலைமுறைகளில் ஒரே செயல் முறை மூலம் இனப்பெருக்கம் செய்தல், அதாவது, பின் தோன்றல்கள் பெற்றோர் போலவே இருந்து அதே மாதிரி வாழ்க்கைப் போக்கை உடைய இனப் பெருக்கமுறை.
homogenetic, homogenetical : பொதுவான மரபு வழிப்பட்ட.
homogenize : ஒருபடித்தாக்கம்; ஒரே சீராக்கு : ஒரு படித்தாக இருக்கும்படி செய்தல், பாலில் உள்ள கொழுப்பு அணுக்களை உடைத்து அதனை நன்றாகச் செரிக்கத் தக்கதாகச் செய்தல்.
homogenous : ஓரின.
homogeny : ஒரு படித்தான நிலை : ஒரே மூலத்தினின்றும் தோன்றி யதனால் ஏற்படும் ஒரு படித்தான நிலை.
homologous : ஒத்திசைவு; ஒத்தமைப்பு : பண்பொத்த உடனொத்த தொடர்புடைய உயிரணுக்கள் பிளவுபடும்போது ஒவ்வொரு பிரிவும் கட்டமைப்புடன் இருத்தல்,
homo nomous :ஒரே வித வளர்ச்சிக்குட்பட்ட. homophil : குறித்த வகைத் தற் காப்பு மூலம் : குறிப்பிட்ட காப்பை மூலம் உருவாவதைக் தூண்டுகிற அந்தக் காப்பு மூலத்துடன் மட்டுமே வினைபுரிகிற ஒரு தற்காப்பு மூலத்தைக் குறிப்பது.
homosepiens : வாழும் மனித குலம் : இன்றைய வரலாற்றுக் காலத்தில் வாழ்கின்ற மனித இனம்.
homosexual : ஒருபால் புணர்; ஓரினச் சேர்க்கையாளர்; ஒரு பாலின விருப்பு; ஒரு பாலினம் : தன்னையொத்த பாலினத்தவர் மீதே பாலின விருப்புடையவர்.
homosexuality : ஓரினச் சேர்க்கை; ஓரின விழைவு : தன்னொத்த பாலினத்தவர் மீதே பாலின விரும்பமுடனிருக்கும் மனப்பாங்கு.
homothermic : வெம்பதக் குருதி உடைய.
homotonic, homotonous : ஒத்த குரல் தொனி கொண்ட.
homotransplant : மாற்று உறுப்பு இணைப்பு; ஓரின உறுப்பு மாற்றம் : ஒரே இனத்தைச் சேர்ந்த ஒப்புடையதல்லாத உறுப்பினர்களிடமிருந்து உறுப்புகளை அல்லது திசுக்களைப் பொருத்துதல்.
homotropic : ஓரிட நிகழ்வு : உடலின் ஒரே இடத்தில் அல்லது உறுப்பைக் குறிக்கிற அல்லது அதில் நிகழ்கிற.
homotype : ஒத்த உறுப்பு : உடனொத்த அமைப்புடைய உறுப்பு.
homozygote : இரட்டைப் பிறப்பில் ஒரே இணைவு : கரு முட்டை ஒத்த இரு பாலணுக்களாகப் பிரிந்து கருவுறுதல்.
homozygous : ஓவிய.
homunculus : குள்ளன்.
honey combing : தேனடைப் பின்னல் : சிற்றிடைவெளி சார்ந்த நுரையீரல் நோயின் இறுதி நிலைகள். இதில் கடும் வலைப் பின்னல்கள், 5 மி.மீ விட்டத்துக்கு அதிகமாகக் காற்று இடைவெளிகளைச் சூழ்ந்து கொண்டிருக்கும்.
honeymoon cystitis : தேனிலவு சிறுநீர்ப்பை அழற்சி : பெண்களுக்குச் சிறுநீர்க் குழாயில் ஏற்படும் கோளாறு. இது புணர்ச்சியுடன் தொடர்புடையது.
hookworm : கொக்கிப்புழு : நோய் உண்டாக்கும் கொக்கிப் புழு, கொக்கிப் புழு நோய் அல்லது சுரங்கத் தொழிலாளர் குருதிச் சோகை உண்டாக்கும் வட்டப்புழு ஒட்டுண்ணி.
hooping-cough : குத்திருமல்; கக்குவான் இருமல்.
Hoover's sign : ஹூவர் குறியீடு : நுரையீரல் உறையழற்சி அல்லது ஈரல் உறைக் கசிவு காரணமாக மார்பின் ஒரு பக்கத்தின் அசைவில் உண்டாகும் ஒரு சார்புப் பின்னடைவு சோதனையின் போது சோதனை செய்பவர் கையால் அழுத்தி ஆழமாக மூச்சிழுக்கும்படி செய்து இதனை உணர்ந்தறிகிறார். அமெரிக்க மருத்துவ அறிஞர் சார்லஸ் ஹஇவர் பெயரால் அழைக்கப்படுகிறது.
horizontal : கிடைக்கோடு; நிலைக் கோடு.
hormone : இயக்குநீர் (ஹார் மோன் : குருதியில் கலந்து உறுப்புகளைச் செயற்படத் தூண்டும் உட்சுரப்பு நீர்.
Horner's syndrome : ஹார்னர் நோய் : கழுத்து சார்ந்த பரிவு நரம்பின் நடுப்பகுதியில் ஏற்படும் வாதம் காரணமாக முகத்தின் ஒரு பக்கத்தில் இமைத்தொய்வு, இயக்கமாற்றம், கண்விழிச் சுருக்கம், வியர்வையின்மை ஆகியவை உண்டாகும். சுவிஸ் கண்ணியல் வல்லுநர் ஜோகான் ஹோர்னர் பெயரால் அழைக்கப் படுகிறது.
horny layer : மேல் தோல் படலம் : உண்மைத் தோலை அல்லது உட்தோலைப்பாது காக்கிற உணர்வுற்ற புறத்தோல் படலம் அல்லது தோல் மேலடுக்கு.
Horton syndrome : கடுந்தலைவலி : உடலில் ஹிஸ்டாமின் சுரத்தல் காரணமாக ஏற்படும் கடுமையான தலைவலி. இது ஒற்றைத் தலைவலியிலிருந்து வேறுபட்டது.
hospital : மருத்துவமனை; மருந்து நிலையம்; நோய்மனை : நோயா ளிகளைக் கவனித்துக் குணப்படுத்தும் ஒரு நிலவரம்.
hospital. infectious diseases : தொற்றுநோய் மருத்துவமனை.
hospital, leprosy : தொழுநோய் மனை.
hospital, maternity : மகப்பேறு மருத்துவமனை; மகப்பேறு மனை.
hospital, mental : மனநல மருத்தவ மனை; மனநல மனை.
host : ஒட்டுண்ணித் தாய் உயிர்; ஒட்டயிர்; தருநர் : ஒட்டுண்ணி உயிர்களுக்கு ஆதாரமாக உள்ள தாய்ப் பிராணிகள். விருந்தோம்பும் உயிர்.
hot dog headache : சூட்டுத் தலைவலி : உணவு உண்டபின் சோடியம் நைட்ரேட் அதிகமாவதால் உண்டாகும் சூட்டுத் தலைவலி.
hot flush : வெப்ப உணர்வூட்டம் : முகம், கழுத்து, மார்பு ஆகி யவை செம்மையடைதல். கடும் வெப்ப உணர்வு, வியர்வை ஆகியவை இதனால் உண்டாகிறது.
hourglass contraction : நாழிகை வட்டில் சுருக்கம் : இரைப்பை, கருப்பை போன்ற உட்புழையுள்ள உறுப்புகளின் மத்தியில் வடு ஏற்பட்டு அதனை இருபகுதிகளாகப் பிரிக்கும் மணல் நாழிகை வட்டில் போன்ற வட்டவடிவமான சுருக்கம். house dust : வீட்டுத் தூசு : வீடுகளில் காற்றில் சேகரமாகும் கலவைத் தூசு வீட்டுத் தூசியில் நுண்ணிய பூச்சிகள் முக்கியமாகக் கலந்திருக்கின்றன. இதனால் சிலருக்கும் ஒவ்வாமை விளைவுகள் ஏற்படுகின்றன.
house-surgeon : மனை மருத்துவர் : மருத்துவமனையிலேயே தங்கி யிருந்து மருத்துவப் பணியாற்றும் மருத்துவர்.
HRCT : எச் ஆர் சி டி (HRCT): உயர் சுழற்சிக்கணிப்பு ஊடுகதிர் உள் தளப்பட (High Resolution Computed Tomography) என்பதன் சுருக்கம்.
HSV : எச் எஸ் வி : படர்தாமரை என்னும் தோல் நோயை (தேமல்) உண்டாக்கும் நோய்க் கிருமி.
HTLV : எச்டிஎல்வி (HTLV) : மனித T உயிரணு வெள்ளணுப் புற்றுக் கிருமி (Human T-cell leukaemia / lymphoma virus) என்பதன் சுருக்கம்.
huckle : இடுப்பு; இடைபிட்டம்.
huckle-back : கூன்.
huckle-backed : கூன் முதுகுள்ள.
huckle-bone : இடுப்பெலும்பு.
human : மனிதர்; மாந்தர்; மனித மாந்த.
human chorionic gonadotrophin (HCG) : நச்சுக் கொடி இயக்குநீர் : நச்சுக் கொடியிலிருந்து சுரக்கும் இயக்குநீர், சில சமயம் பெண் மலடு நீக்கக் கொடுக்கப்படுகிறது.
human growth hormone : மனித வளர்ச்சி இயக்கு நீர் : முன்புறக் கபச்சுரப்பியினால் உற்பத்தி செய்யப்படும் ஒரு வேதியியல் முன்னோடிப் பொருள். இது உடல் இயல்பாக வளர்ச்சியடைவதைத் தூண்டுகிறது.
human immunodeficiency virus (HIV) : மனித நோய்த் தடைக்காப்புக் குறைபாட்டு நோய்க் கிருமி (HIV) : RNA என்ற மரபணு உயிர்மம் கொண்டுள்ளநலிவுறுத்தும் நோய்கிருமியின் மெதுவாகச் செயற்படும் ஒரு உட்குடும்பம். இந்த நோய்க் கிருமிச் செரிமானப் பொருள், மறுதலை படியெடுப்பினைச் செய்கிறது. இது தாய் உயிரணுவில் நோய்க் கிருமி ஊடுருவதைத் தொடர்ந்து, RNA மரபணு உயிர்மத்தின் DNA படியெடுக்கும் குணமுடையது இந்த DNA படியானது அங்கொன்றும் இங்கொன்றுமாக ஊடுருவிச் சென்று தாய் உயிரணுவுடன் ஒருங்கிணைகிறது. இது புதிய RNA படிகளை எடுப்பதற்கு ஒரு மென்தகடாகப் பயன்படுகிறது. இந்த HIV நோய்க் கிருமிகள், HIV-1, HIV-2 என்று இருவகையாக உள்ளன. HIV நோய்க் கிருமி CD4+ ஹெல்ப்பர் T என்ற சிறிய குருதி வெள்ளணுக்களைத் தாக்கி, CD4+ உயிரணுக்களுடன் உராய்ந்து, நோய்த் தடைக்காப்புச் செயற் பாட்டினைப் படிப்படியாகக் குறைக்கிறது.
human leucocyte antigens : மனித வெள்ளையணுக் காப்பு மூலம் : திசு ஒத்தியல்புத் திறனுடைய காப்பு மூலங்களில் முக்கியமான வகைகளில் ஒன்று. உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் நன்கொடையாளருக்கும் நன் கொடை பெறுபவருக்குமிடையே திசு ஒத்தியல்பு இருக்கிறதா என்பதை ஆராய இது உதவுகிறது. இந்தக் காப்பு மூலங்கள், குறிப்பிட்ட நோய்களுடன் தொடர்புடையவை.
human T-cell lymphotropic viruses (HTLV) : மனித T-உயிரணு நிணநீர்க் கிருமிகள் : மனிதருக்கு வெண்குட்டம் உண்டாக்கும் நோய்க்கிருமி. இது 'எயிட்ஸ்' என்னும் ஏமக்குறைவு நோய்க்கும் காரணமாகிறது.
human nature : மனித இயல்பு; மனிதத் தன்மை.
humanism : மனித குணநலக் கோட்பாடு.
human kind : மனித இனம்; மனித குலம்.
humerus : கைமேலெலும்பு; மேற்கையெலும்பு: புய எலும்பு : மனிதஉடலில் கையின் மேற்புறமுள்ள எலும்பு.
humor : தாதுநீர் : உடம்பின் தாதுக்களைச் சார்ந்த நீர்.
humoralism : உடல் நீரியல் கோட்பாடு : உடலின் நீரியல் தாதுப் பொருள்களின் நிலைகளினாலேயே நோய்கள் தோன்றுகின்றன என்னும் கோட்பாடு.
hump : கூன் : முதுகில் இயற்கையாக ஏற்பட்டுள்ள கூன்.
hump-back : கூனன் : கூனல் முதுகுடையவர்.
Humulin : ஹியூமுல்லின் : மனிதக்கணையச் சுரப்பு நீர்த் (இன்சுலின்) தயாரிப்பின் வணிகப் பெயர். இதில் விலங்குக் கணையச் சுரப்பு நீரோ, கணைய மாசு பாடுகளோ இருப்பதில்லை.
hunger : பசி, உணவு வேட்கை : பொதுவாக உணவை உண்பதற்கான விருப்பம். பசியினால் இரைப்பையில் வலி உண்டாகும். உணவு உண்டதும் வலி நீங்கிவிடும் முன் சிறுகுடலில் புண் ஏற்படுவதால் இந்த வலி உண்டாகிறது.
hunger, pain : பசிக்கொடுமை; பசி நோவு.
Hunter's syndrome : ஹன்டர் நோய் : குள்ளத்தன்மை, மன வளர்ச்சிக் குறைபாடு போன்ற நோய்களை உண்டாக்கும் ஒரு மரபணுப் கோளாறு. கானடா மருத்துவ அறிஞர் சார்லஸ் பெயரால் அழைக்கப்படுகிறது.
Hurler's syndrome : ஹார்லர் நோய் : கடும் மனவளர்ச்சிக் குறைபாட்டினை உண்டாக்கும் ஒரு மரபணுக் கோளாறு. ஜெர்மன் குழந்தை மருத்துவ அறிஞர் ஜெர்ட்ராட்ஹர்லர் பெயரால் அழைக்கப்படுகிறது.
Hutchinson's teeth : உளிப்பல் அகற்சி : மேல் உளிப் பல்லின் எகிற்று முனையான வெட்டு முனையை விட அகன்றிருக்கும் கோளாறு.
Hyalase : ஹையாலேஸ் : ஹையாலுரோனிடேஸ் என்னும் மருந்தின் வணிகப் பெயர்.
hyaline : படிக நிறப்பரப்பு : ஒளி புகும் பளிங்கு தெள்ளி இணைப்புத் திசுக்கள் சிதைவுற்று, கண்ணாடி போன்று ஒளி ஊடுருவும் தன்மையுடையதாகும்.
hyalitis : கண்படல அழற்சி; விழி நீர்ம அழற்சி : கண்ணின் மேற்படலத்தில் ஏற்படும் வீக்கம்.
hyaloid : கண்ணாடிப் படலம் : கண்ணின் கண்ணாடித் தாள் போன்ற புறப்படலம்.
hyaloid membrane : கண்மேற்படலம்.
hyaioplasm : ஒரணு ஊனிர்த் திரவம் : உயிரணுவின் ஒரணு ஊனிர்த் திரவம்.
hyalosome : உயிரணு உட்கரு மையம் : உயிரணுவின் கருமையத் தினுள் உள்ள முட்டை வடிவ அல்லது வட்டவடிவ கட்டமைவு: இது இலேசாக நிறம் மங்கி இருக்கும்.
hybrid : இனக்கலப்பு; ஒட்டு : இரு வெவ்வேறு இனங்களிலிருந்து உருவாக்கப்படும் பிராணி அல்லது தாவரம்.
hybridisation : கலப்பின உறுவாக்கம் : 1. டிஎன்ஏ அல்லது ஆர்என்ஏ குறை நிரப்பு இணையாக்கம். 2. ஒற்றைச் சர நியூக்ளிக் அமிலத்தை அடையாளங்காணல். அதே அமைப்புடைய அல்லது ஏறத்தாழ அதே அமைப்புடைய, பெயரிடப்பட்ட சரத்தை இணைத்து இவ்வாறு செய்யப்படுகிறது.
hibridoma : ஹிப்டோமா : ஒன்றுக்கொன்று சார்ந்துள்ள வளர்சிதை மாற்றச் செயல் முறையுடைய இரு உயிரணுக்களிலிருந்து தோன்றும் ஒரு கட்டி உயிரணுவரிசை. பெருமளவு தற்காப்பு மூலத்தை உற்பத்தி செய்யும் ஒர் இயல்பான சுண்டெலி உயிரணு வரிசையினால் உருவாக்கப்படுகிறது.
hydrogogue : நீரகற்று நீர்மம் : நீர் போன்ற நீர்மம் வெளியேறத் தூண்டுகிறது இது குடலில் நீர்மத்தை இருத்தி வைக்கிற பேதி, மருந்துகளைக் குறிக்கிறது. இது நீர்க்கோவை நீர்மத்தை அகற்ற உதவுகிறது. Hycal : ஹைக்கால் : சிவப்பு நிறமான நறுமணமுள்ள புரதமற்ற திரவ மருந்தின் வணிகப் பெயர்.
hydatid : நோய் நீர் தேக்கம்.
hydatid cyst : நாடாப்புழு நீர்க்கட்டி : நாடாப்புழுவின் முட்டைப் புழுவினால் உண்டாகும் நீர்க் கட்டி நாய், ஆடு ஆகியவற்றிலிருந்து இது மனிதருக்குத் தொற்றுகிறது. இதனை அறுவை மருத்துவம் மூலம் அகற்றலாம்.
hydatidiform : நோய் நீர்த்தேக்கம்; நீர்க்குமிழ் வடிவ : இழைக்கச்சைப் புழுவினாலாகி அதனை உட்கொண்ட நோய் நீர்த்தேக்கப் பை.
hydraemia : குருதிநீர் மிகுதி; குருதி நீர் மிகைப்பு : இரத்தத்தில் உயிரணு அளவைவிட நிணநீர் அளவு அதிகமாக இருத்தல். நிறைமாதக் கர்ப்பத்தின் போத இந்நிலை இருக்கலாம்.
hydralazine : ஹைட்ராலாசின் : இரத்த அழுத்தத்தைக் குறைக்க கூடிய செயற்கைக் கூட்டுப் பொருளின் வணிகப் பெயர்.
hydraminios : கருத்திரவ மிகைசுரப்பு; நீர்ச்சூலை; பனிக்குடநீர் மிகைப்பு; நீர் பனிக்குடம் : கருத் திரவம் அளவுக்கு அதிகமாகச் சுரத்தல்.
hydrargaphen : ஹைட்ரார்காஃபென் : சீழ் உண்டாகும் நுண் ணுயிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஒரு பாதரசப் பொருள். இது பாலேடு, தூள், திரவ வடிவில் கிடைக்கிறது.
hydrarthrosis : எலும்பு உயவு நீர்; நீர்ம மிகை மூட்டு; நீர் மூட்டு : எலும்பு முட்டிணைப்பினுள் கசிவுறும் ஒருவகை உயவு நீர். இது இளம்பெண்களிடம் தோன்றி சில நாட்கள் இருந்து விட்டு, மர்மமாக மறைந்து விடும்.
hydrate : ஹைட்ரேட்; நீரேறிய : தனிமத்துடன் அல்லது மற்றொரு சேர்மத்துடன் நீர் இணைந்த சேர்மப்பொருள்.
Hydrenox : ஹைட்ரினாக்ஸ்; ஹைட்ராஃபலூமெத்தியாசிட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
hydro : நீர் மருத்துவமனை : நீர் மருத்துவ முறையினைப் பின் பற்றும் மருந்தகம்.
hydroa : தோல் அழற்சி : வெப்ப மண்டலப் பகுதிகளில் வெயில் படும் தோல் பகுதிகளில் ஏற்படும் அழற்சி நோய். இது குழந்தைகளுக்கு அதிகம் உண்டாகும்.
hydrocarbon : ஹைடிரோகார்பன் : ஹைட்ரஜன், கார்பன் இரண்டை மட்டுமே கொண்டுள்ள ஒரு கூட்டுப்பொருள்.
hydrocele : ஒதம்; நீர்ம விரை வீக்கம்; நீரண்டம்; விதை நீரம் : மனித விரைப் பையில் நீர்க் கோர்ப்பதால் உண்டாகும் வீக்கம் hydrocephalus : மூளை நீர்க் கோவை; மூளை நீர் மிகைப்பு; நீர் கபாலம்; தலைநீர் தேக்க நோய் : தலையில் நீர் தங்குவதால் ஏற்படும் கோளாறு. மண்டையோட்டினுள் மூளைத் தண்டு வட நீர் அளவுக்க அதிகமாகத் தங்குவதால் இது உண்டாகிறது.
hydrochloric acid : ஹைட்ரோகுளோரிக் அமிலம் : இரைப்பை உயிரணுக்களில் சுரக்கும் அமிலம். 0.2% வலிவுள்ள அமிலமாகக் கலந்துள்ளது.
hydrochlorothiazide : ஹைட்ரோகுளோரோதையாசிட் : சிறுநீர்க் கழிவினைத் தூண்டும் மருந்து.
hydrocortisone : ஹைட்ரோகார்ட்டிசோன் : அண்ணீரகப் புறணியிலிருந்து சுரக்கும் இரு முக்கியமான குளுக்கோ கார்ட்டி காய்டுகளில் ஒன்று.
hydrocyanic acid : ஹைட்ரோ சயனிக் அமிலம் : இதனை நீர் சயனிக் அமிலம் என்றும் கூறுவர். இது 2% நீர்த்த அமிலம் இது வயிற்றுவலி அகற்றும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனை அதிக அளவில் உட் கொண்டாலும் ஆவியை உறிஞ்சினாலும் ஆபத்து ஏற்படும். மரணமும் விளையக் கூடும்.
hydrocytosis : சிவப்பணு வீக்கம் : குடும்ப நோயாக வரும் குருதிச் சோகை நோய். இதில் சவ்வுக் கோளாறு, நீர்க்கசிவு காரணமாக சிவப்பணுக்கள் வீக்கம் அடையும்.
hydrodissection : நீர்மச்செலுத்தம் : கண்புரை அறுவைச் சிகிச்சையின் போது பிளப்பாய்வுக்காகக் கண்வில்லையின் பொதியுறையினுள் நீர்மத்தை ஊசி மூலம் செலுத்துதல்.
hydrogen : ஹைட்ரஜன் நீர்வாயு); நீர்வளி : நிறமற்ற, மணமற்ற எளிதில் தீப்பற்றக்கூடிய வாயு. இது எடைமானத்தில் மிகக் குறைந்த தனிமம். இது, நீரில் மூன்றில் இரண்டு பங்கு அடங்கியுள்ளது.
hydrogen bomb : நீர்வாயுக் குண்டு : நீரகச் சேர்மம் செறியப் பெற்று உள்ளமைந்த அணு குண்டினால் ஹைட்ரஜன் கதிரகமாக மாற்றப்படுவதன் மூலம் பெரு விசையாற்றலை வெளிப்படுத்தும் குண்டுவகை.
hydrolysis : நீரால் பகுத்தல் : நீர் இயல்பின் துணை கொண்டு நீர்கலந்த சேர்மத்தில் நீர்க்கூறு சேர்மக் கூறுகள் சிதைவுற்றுக் கூறுபடும் நிலை.
hydromania : நீர்ப் பேரார்வம்.
hydrometer : நீர்ம எடைமானி : நீர்ம எடைமான ஒப்பீட்டளவைக் காட்டும் கருவி.
hydrometry : வீத எடைமான அளவீடு : நீர்ம எடைமானி மூலம் வீத எடைமானத்தை அளவிடுதல். hydronephrosis : நீர் நீரகம்.
hydropathic : நீர் மருத்தவமனை : நீர் மருத்தவ முறைக்குரிய தனி வசதிகளையுடைய மருந்தகம்.
hydropathist : நீர் மருத்தவர் : மூளை நீர் கோர்வை மருத்துவ முறை பற்றி கற்றவர்.
hydropathy : நீர் மருத்தவ முறை : அகப்புற நிலைகளில் நீரைப் பயன்படுத்தி நோய் குணப்படுத்தும் மருத்துவ முறை.
hydropericarditis : குலையுறை அழற்சி : நெஞ்சுப்பையை மூடிக் கொண்டிருக்கும் சவ்வு வீங்கி, நீர் வழிதல்.
hydropericardium : குலையுறை நீர்; நீர் இதயப்பை : குலையுறை யில் வீக்கமில்லாமலே திரவம் சேர்ந்திருத்தல். இது இதயமும் சிறுநீரகமும் செயலிழக்கும் போது உண்டாகும்.
hydrophobia : நீர் வெறுப்பு நோய்; நீர் அச்சம்; நீர் மருட்சி.
hydrophylic : நீர் வேட்கை : அளவுக்கு மீறி நீர் அருந்தும் விருப்பு உண்டாதல்.
hydropic : நீர் கோவைக் கோளாறு.
hydropneumopericardium : குலையுறைக் காற்று : இதயத்தைச் சுற்றியுள்ள குலையுறைச் சவ்வில் காற்றும் நீர்மமும் சேர்ந்ததிருத்தல்
hydropenumoperitoneum : வபை வாயு : அடிவயிற்று உட்பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப் பையில் (வபை) நீர்மமும் வாயுவும் சேர்ந்திருத்தல்.
hydropneumothorax : மார்புக் குழித் திரவம்; நீர்வளி மார்பகம் : மார்புவரிக் குழியில் திரவம் கசிந்து நெஞ்சுக் கூட்டில் ஏற்படும் கோளாறு.
hydrops : இழைம அழற்சி; நீர்க் கட்டு; நீர்க்கோவை : இழைமங் களின் நீர்க்கோவை.
hydropsy : மகோதரம் : நீர்க் கோவை நோய்.
hydrosalpinx : கருக்குழாய் விரிவாக்கம்; நீர் அண்டக் குழல் : மனிதக் கருப்பையிலிருந்து கரு வெளியேறும் குழாய்நீர் கோர்த்து உண்டாகும் விரிவாக்கம்.
hydrosaluric : ஹைட்ரோசலூரிக் : ஹைட்ரோகுளோரோத்தியா சைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
hydrostatic : நிலை நீர்மம் சார்ந்த : சமநிலையிலுள்ள நீர்மங்களின் அழுத்தம் அல்லது அவற்றின் குணங்கள் தொடர்புடைய.
hydrotaxis : நீர்ம இயக்கம் : நீரைப் பொறுத்து உயிரணுக்களின் அல்லது உயிரிகளின் இயக்கம்.
hydrotherapeutic : நீர் மருத்துவமுறை குறித்த. hydrotherapy : நீர் மருத்துவ முறை; குளியல் மருத்துவம் நீர் மருத்துவம் : அகப்புற நிலைகளில் நீரைப் பயன்படுத்தி நோயைக் குணப்படுத்தும் மருத்துவமுறை.
hydrothorax : மார்புநீர்க்கோவை; நீர்மார்பகம்; நுரையீரல் நீருறை : மார்புவரி உட்பள்ளத்தில் ஏற்படும் நீர்க்கோவை நோய்.
hydrotropism : ஈரச்சார்பியக்கம் : நீரை நோக்கி அல்லது நீரிலிருந்து விலகிச் செல்லும், வளரும் உயிரிகளின் குணம்.
hydrotubation : திரவ மருந்துச் செலுத்தம் : கருப்பைக் குழிவினுள் கருப்பை வாய் வழியாகத் திரவ மருந்தினை அல்லது உப்புக் கரைசலை ஊசிவழி செலுத்துதல் இது கரு வெளியேறும் குழாய்களை விரிவடையச் செய்வதற்காகச் செய்யப்படுகிறது.
hydroureter : சிறுநீர்க் குழாய்த்தடை நீக்கம் : சிறுநீரினால் அல்லது நீர்மத்தால் சிறுநீர்க் குழாயினை விரிவடையச் செய்து தடை நீக்குதல்.
hydroxycobalamin : ஹைட்ராக்சிகோபாலமின் : வைட்டமின் B12 என்ற ஊசி மருந்தின் வணிகப் பெயர்.
hydroxybutyrate (dehydroge nase) : ஹைட்ராக்சிபூட்ரேட் (டிஹைட்ரோஜினேஸ்) : நிண இயக்குநீர் (என்சைம்). இது நெஞ்சுப்பைத் தசைப்பகுதி வீக்கத்தைக் குறிக்கும்.
hydroxyl : ஹைட்ராக்சில் : ஒற்றை இணைதிறனுள்ள அயனி (OH). இதில் ஒர் ஆக்சிஜன் அணுவுடன் இணைந்துள்ள ஒரு ஹைட்ரஜன் அணு அடங்கியிருக்கும்.
hydroxy progesterone caprate : ஹைட்ராக்சிபுரோஜெஸ்டிரான் காப்ரோயேட் : அடிக்கடிக் கருச்சிதைவு ஏற்படுவதைத் தடுக்கத் தசையில் ஊசி வழி செலுத்தப்படும் மருந்து.
hydroxyurea : ஹைஇட்ராக்சி யூரியா : வெண்குட்டத்திற்கு வாய்வழி கொடுக்கப்படும் ஒரு கூட்டுப் பொருள்.
hydroxyzine : ஹைட்ரோக்சிசின் : குமட்டல், வாந்தி ஆகியவற்றை நிறுத்தப் பயன்படும் மருந்து.
hygiene, personal : தன் தூய்மை.
hygienist : உடல் நல வல்லுநர் : உடல் நலம் பேணும் கலையில் தொழில் நுட்பப் பயிற்சி பெற்ற வல்லுநர். பல் நலம் பேணும் வல்லுநர், தொழிலியல் உடல்நலம் பேணும் வல்லுநர் ஆகியோரும் இதில் அடங்குவர்.
hygiene : உடல்நல இயல்; தூய்மை; துப்புரவு :உடல் நலம் பேணுவது பற்றிய அறிவியல். hygraphen : ஹைக்ராஃபென் : தலைமுடி சார்ந்த கோளாறுகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்தின் வணிகப்பெயர்.
hygroma : கழுத்து நீர்க்கட்டி; நீர்மக் கட்டி : பிறவிலேயே கழுத்தில் அமைந்திருக்கும் நீர்மம் அடங்கிய வீங்கிய கட்டி.
hygrometer : ஈரமானி : ஈரநிலையை அளவிடும் கருவி.
hygrometry : ஈரக்கணிப்பு : ஈர நிலையை அளவிடும் கணிப்பு.
hydroscope : ஈரங்காட்டி : காற்று மண்டலத்தில் ஈரநிலை காண உதவும் கருவி.
hygroscopic : ஈரம் உறிஞ்சி; நீர்ம உறிஞ்சி; ஈரமீர்க்கும்; ஈரம் ஏற்பி : காற்று மண்டலத்திலுள்ள ஈரத்தை எளிதாக உறிஞ்சுகிற பொருள். எடுத்துக்காட்டு கிளிசரின்.
Hygroton : ஹைக்ரோட்டோன் : குளோரோத்தாலிடான் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
hymen : கன்னிமைத் திரைச் சவ்வு : கன்னிச் சவ்வு முதிரா இளமைப் பருவத்தில் பெண்குறியின் புற வாயை முடியுள்ள தாள் போன்ற சவ்வு.
hymen, imperforate : அறாச் சவ்வு.
hymenectomy : கன்னிச் சவ்வு; அறுவை மருத்துவம் : கன்னிமைத் திரைச் சவ்வினை அறுவை மருத்துவம் மூலம் கீறி விடுதல்.
hymenology : சவ்வு ஆய்வியல் : உடலின் சவ்வு மண்டல ஆய்வு தொடர்பான அறிவியல் பிரிவு.
Hymenoptera : சவ்வு இறகுப் பூச்சிகள் : நன்கு வளர்ச்சியடைந்த சவ்வு இறகுகள் இரண்டு இணைகள் கொண்ட பூச்சிகளின் தொகுதி. இதில் எறும்புகள், தேனிக்கள், குளவிகள் ஆகியவை இதில் அடங்கும்.
hyoid : நாவடி எலும்பு; கவை எலும்பு : நாக்கின் வேர்ப்பகுதியில் உள்ள "U" வடிவில் வளைந்த எலும்பு.
hyoid leone : நாவடி எலும்பு.
hyoscine : நச்சு செடிக்காரம் : நச்சுச் செடி வகையிலிருந்து எடுக்கப்பட்டு மருந்தாகப் பயன் படும் ஒரு காரப் பொருள்.
hyperacidity : மீமிகு அமிலத் தன்மை; அமில மிகைப்பு; மிகை அமிலச் சுரப்பு; அமிலப் பெருக்கம் : அளவுக்கு மீறிய அமிலத் தன்மை இரைப்பையில் அமிலம் அளவுக்கு மீறி உற்பத்தியாதல். இது முன் சிறு குடல் புண், அசீரணம் ஆகியவற்றில் உண்டாகும்.
hyperactivity : மிகை இயக்கம் : படபடத்துக் கொண்டிருத்தல், வலுச்சண்டைக்குப் போதல், கேடு விளைவித்தல் போன்ற அதீத நடவடிக்கையில் ஈடுபடுதல்.
hyperaemia : மீமிகு குருதிப் பாய்வு; குருதித் திரட்சி; மிகைக் குருதி; குருதிப் பெருக்கம் : உடலின் ஒருபகுதியில் அளவுக்கு மீறி குருதி பாய்தல்.
hyperaesthesia : மட்டற்ற கூருணர்வு நிலை; அதியுணர்வு : அள வுக்க மீறிய கூர் நரம்புணர்ச்சிக் கோளாறு.
hyperalgesia : மட்டற்ற வலியுணர்வு; மிகைத்த வலியுணர்வு; அதிவலி; வலி மிகை : வலியை அளவுக்கு மீறி உணரும் திறனுடனிருத்தல்.
hyperalimentation : மட்டற்ற ஊட்டம் : அளவுக்கு மீறி உணவு ஊட்டி வளர்த்தல்.
hyperaoidity : அமிலப் பெருக்கம்.
hyperaemia : குருதிப் பெருக்கம்.
hyperaesthesia : அதிதொடுகை.
hyperbaric : மிகை அடர்த்தி : 1. ஒன்றுக்கு அதிகமான வாயு மண்டல அழுத்தத்தைக் குறிப்பது. 2. நீர்த்த அல்லது நடுத்தரக் கரைசலை விட அதிக அடர்த்தியான கரைசல்.
hyperbaric oxygen treatment : அதிஅழுத்த ஆக்சிஜன் மருத்துவம் : கார்பன் மானாக்சைடு வாயு நச்சினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அழுத்தமூட்டிய ஆக்சிஜன் அடங்கிய ஒரு நீர் உருளைக்குள் செலுத்திச் சுவாசம் சீராக நடைபெறுவதற்குச் செய்யப்படும் மருத்துவம்.
hyperbarism : மிகை அழுத்தக் கோளாறு : ஒன்றுக்கு அதிகமான வாயு மண்டல அழுத்தம் காரணமாக உடலில் உண்டாகும் சீர்குலைவு,
hyperbilirubinaemia : மட்டற்ற பிலிரூபின் : இரத்தத்தில் அளவுக்கு மீறி பிலிருபின் இருத்தல். இதன் அளவு 100 மீ.லிட்டருக்கு 1-1-5மி. கிராம் அளவைவிட அதிகமாக இருக்குமாயின் அது மஞ்சள் காமாலை நோய் இருப்பதைக் குறிக்கும்.
hypercalcaemia : மட்டற்ற கால்சியம்; அதிகால்சியக் குருதி : குரு தியில் அளவுக்குமீறி கால்சியம் இருத்தல். இதனால், பசியின்மை, அடிவயிற்றில் வலி, தசைவலி, உடல் நலிவு உண்டாகிறது.
hypercalciuria : மட்டுமீறிய சிறுநீர் கால்சியம்; அதிகால்சிய நீரிழிவு: சிறுநீரில் அளவுக்கு மீறி கால்சியம் இருத்தல், இது எலும்பு கால்சிய கசிவின் காரணமாக ஏற்படுகிறது.
hypercapnia : குருதியில் மட்டற்ற கார்பன் டையாக்சைடு; அதிகரியம் :தமனி இரத்தத்தில் கார்பன் டையாக்சைடு (CO2) அளவுக்கு மீறி அதிகமாக இருத்தல். hypercatabolism : மட்டற்ற உயிர்ப் பொருள் சிதைபாடு : உடலினுள் சிக்கலான பொருள்கள் அளவுக்கு மீறிச் சிதைந்து எளிய பொருள்களாக மாறுதல்.
hypercellularity : மிகை உயிரணுப் பெருக்கம் : எலும்பு மச்சை போன்ற உடலின் எந்தப் பகுதி யிலுமுள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை அளவுக்கு மீறி அதிகரித்தல்.
hyperchloraemia : மட்டற்ற குளோரைடு குருதி; மிகை குளோரோடு அயனிப் பெருக்கம் : இரத்தத்தில் அளவுக்கு மீறி குளோரைடு இருத்தல். சுற்றோட்டமாகச் செல்லும் குருதியில் குளோரைடு அயனிகளின் அள்வு கணிசமாக அதிகரித்தல்.
hyperchlorhydria : மட்டற்ற ஹைடிரோகுளோரிக் அமிலம்; அமில மிகைப்பு : இரைப்பை நீரில் அளவுக்கு அதிகமாக ஹைட்ரோகுளோரிக் அமிலம் இருத்தல்.
hypercholesterolaemia : கொழுவிய மிகை.
hyperchromatism : மிகைக் கருமைய மாசு : 1. அளவுக்கு மீறிய நிறமியாக்கம். 2. உயிரணு கரு மையத்தில் குரோமாட்டின் அதிகமாக இருத்தல், 3. கரு மையத்தின் அளவுக்கு மீறிய மாசு.
hypercortism : மிகஅண்ணீரக இயக்குநீர் : உடம்பில் அண்ணீரகப் புறணி இயக்கு நீர் அதிகமாக உற்பத்தியாதல்.
hypercupraemia : மிகைக்குருதிச் செம்பு : குருதியில் அளவுக்கு மீறி செம்பு இருத்தல்.
hypercythaemia : மிகைக்குருதிச் சிவப்பீனு : சுற்றோட்டமாகச் செல்லும் இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருத்தல்.
hypercytosis : மிகைக்குருதி உயிரணு : சுற்றோட்டமாகச் செல்லும் குருதியில் அல்லது திசுக்களில் உயிரணுக்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருத்தல்.
hyperdynamia : தசை மிகை இயக்கம் : தசையின் மிகை இயக்கத்தைக் காட்டும் நோய்.
hyper electrolytaemia : நீர் வெளியேற்றம் : நிணநீர் அடங்கிய சோடியம் மற்றும் குளோரைடு அளவு அதிகமாகி, நீர் மிகுதியாக வெளியேறுதல்.
hyperemesis : மிகை வாந்தி; அதி வாந்தி : கருவுற்ற பெண்கள் அளவுக்கு அதிகமாக வாந்தி எடுத்தல்.
hyperemesis gravidarum : கடும் மசக்கை.
hypereosinophis syndrome : மிகைச் சிவப்பூதா உயிரணு நோய் : எலும்பு மச்சையில் சிவப்பூதாச் சாய உயிரணு மிகுதியாக இருத்தல். இதில் இதயம், தோல், தசை, துரையீரல், குடல் ஆகியவற்றில் முற்றிய சிவப்பூதா உயிரணு ஊடுருவி இருக்கும்.
hyperequilibrium : மிகைத்தலை சுற்றல் : மிகச் சிறிதளவு இயக் கத்தின்போதுகூடத் தலை சுற்றல் அதிகமாக இருக்கும் போக்கு.
hyperextension : மிகை நீட்சி; அதிநீட்டம்.
hyperextension injury : மிகை நீட்சிக்காயம் : ஒரு மூட்டு அதன் இயல்பான வரம்புகளைத் தாண்டி நீட்சியடைவதால் உண்டாகும் ஒரு காயம்.
hyper flexion : மிகை வளைவு; மிகை மடங்கு; அதிமடக்கம் : உறுப்பு அளவுக்கு மீறி வளைந்திருத்தல்.
hyperfractionation : கதிர்வீச்சுச் சிகிச்சை : ஒருவகைக் கதிர் வீச்சுச் சிகிச்சை முறை. இதில், பக்க விளைவுகளை இயன்ற அளவு குறைப்பதற்காக, ஒவ்வொரு ஒளிபடு நிலையின் போதும், ஒளிக்கதிர் அளவு குறைக்கப்படுகிறது.
hypergenesis : மிகை உறுப்பு வளர்ச்சி : உடலின் பகுதி அல்லது உறுப்புகள் அளவுக்கு மீறி வளர்ந்திருத்தல்.
hyperglycaemia : குருதியில் மிகைச் சர்க்கரை; அதி சர்க்கரைக் குருதி : குருதியில் சர்க்கரை அளவுக்கு அதிகமாக இருத்தல். இது நீரிழிவு நோயைக் குறிக்கும்.
hyperglycinaemia : மிகைக் கிளைசின் : நிணநீரில் அளவுக்கு மிகுதியாக கிளைசின் இருத்தல், இதனால், இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக அமிலம் உண்டாகும், மனவளர்ச்சியும் குன்றும்.
hyperhidrosis : மிகை வியர்வை; வியர்வை மிகைப்பு : உள்ளங்கை களில் வியர்வை அளவுக்கு அதிகமாகச் சுரத்தல்.
hypermetropia : தூரப்பார்வை; தொலைப்பார்வை.
hyperimmune : மிகைதற்காப்பு மூலம் : குருதி வடிநீரில் குறிப்பிட்ட தற்காப்பு மூலங்களின் அளவு அதிகமாக இருத்தல்.
hyperimmunoglobulinaemia : மிகைத்தடை காப்புப் புரதங்கள் : குருதி வடிநீரில் தடைகாப்புப் புரதங்களின் அளவுக்கு கணிசமாக அதிகமாக இருத்தல்.
hyperinsulinism : மிகைக்கணைய இயக்கு நீர்ச் சுரப்பு; இன்சுலின் மிகைப்பு : கணையத்தில் அளவுக்கு அதிகமாக இயக்கு நீர் சுரந்து, இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதாலும், இயக்கு நீரை (இன்சுலின்) அளவுக்கு அதிகமாகக் கொடுப்பதாலும் விட்டுவிட்டு அல்லது தொடர்ச்சியாக, வலிப்புடனோ, வலிப்பு இல்லாமலோ மயக்கம் உண்டாதல்.
hyperinolution : மிகை உட்சுருள்வு : மகப்பேற்றுக்குப் பிறகு கருப்பை இயல்பு அளவுக்குக் குறைவாக உட்கருளாக இருத்தல்.
hyperkalaemia : மிகைப்பொட்டாசியம் : குருதியில் அளவுக்கு மிகுதியாகப் பொட்டாசியம் இருத்தல். இதனால் குமட்டல், வயிற்றுப்போக்கு, தசை நலிவு உண்டாகும்.
hyperkeratosis : மிகைப் பொருமல் : மிகை ஊட்டத்தினால் ஏற்படும் உறுப்புப் பொருமல்.
hyperkinesis : மிகை இயக்கம்; அதிசலனம்.
hyperkinetic syndrome : மிகை இயக்க நோய் : பெரும்பாலும் 2-4 வயதுக் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய். இந்நோய் கண்ட குழந்தைகளுக்கு மன வளர்ச்சி மெதுவாக நடைபெறும். அளவுக்கு மீறிய முரட்டுத்தனம் ஏற்படும். அச்சமின்மையும், எந்தத் தண்டனையும் அஞ்சாத போக்கும் காணப்படும்.
hyperlipidaemia : உடல் திசுக்கொழுப்பு மிகைப்பு : சுற்றோட்டமாகச் செல்லும் கொழுப்பு அமிலங்கள், டிரைகிளிசரைடிகள், கொலஸ்டிரால் ஆகியவற்றின் அளவு அதிகமாக இருத்தல். இது மரபணு நோய், சீரணநோய் போன்ற சிக்கலான எதிரெதிர் விளைவுகளை உண்டாக்குகிறது.
hyperlipaemia : மிகைக்கொழுப்பு : இரத்தத்தில் அளவுக்கு அதிகமாகக் கொழுப்பு இருத்தல்.
hyperlithuria : மிகையூரிக் அமிலச் சுரப்பு : சிறுநீரில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாகச் கரத்தல்.
hyperlysinaemia : தன் இனக்கீற்றுக் குறைவு நோய் : குழந்தைப் பருவத்தில் ஏற்படும் தன் இனக் கீற்றுக் குறைவுநிலை. இதில் லைசின் அல்லது அதன் வளர்சிதை வினைமாற்றப் பொருள்கள் அதிகமாக இருக்கும்.
hypermagnesoemia : மிகை மக்னீசியம் : குருதியில் அளவுக்கு மீறி மக்னீசியம் இருத்தல். இதனால் சிறுநீரகச்செயலிழப்பு உண்டாகும். அதிக அளவு மக்னீசியம் அடங்கிய வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்தினை உட் கொள்வதாலும் இது உண்டாகும்.
hypermetabolism : மிகை வளர் சிதைமாற்றம் : உடலில் அளவுக்கு அதிகமாக வெப்பம் உண்டாதல்.
hypermetropia : தொலைப் பார்வைக் கேளாறு; தூரப்பார்வை : கண்தவறான இடத்தில் அமைந் திருப்பதால் ஏற்படும் கோளாறு. இதனால், ஒளிக்கதிர்கள், விழித் திரையின் மேல் விழுவதற்குப் பதிலாக, அதற்கு அப்பால் விழுகின்றன.
hypermobility : மிகை அசைவு; அதியசைவு : அளவுக்கு மீறி இயக்கத் தன்மையுடனிருத்தல்.
hypermorph : மிகை உறுப்பு நீட்சி : நீண்ட கைகால்கள் உடைய ஒர் ஆள். இதனால், இவருடைய நிற்கும் உயரம், உட்கார்ந்திருக்கும் உயரத்தை விட அதிகமாக இருக்கும்.
hypernatraemia : மிகை சோடியம்; குருதி உப்பு மிகைப்பு : அளவுக்கு மீறி நீர்வெளியேறுவதால் இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக சோடியம் இருத்தல்.
hypernephroma : சிறுநீரகச் சுரப்பிப்புற்று : சிறுநீரகச் சுரப்பிப் புற்றுநோய். வலியில்லாமல், இடைவிட்டு சிறுநீர்க்குருதி ஏராளமாகப் போகும்.
hyperonychia : மிகை நகம்;அதி நகம் : நகங்கள் அளவுக்கு அதிகமாக வளர்தல்.
hyperorthocytosis : மிகைவெள்ளணு : பல்வேறு வகை உயிர் அணுக்கள் இயல்பான வீதத்தில் இருக்கும்போது, குருதி வெள்ளணுக்கள் மிக அதிகமாக இருத்தல்.
hyperosmolar diabetic coma : மிகை நீரிழிவு மயக்கம் : குருதியில் மிக உயர்ந்த அளவுக்கு சர்க்கரை அதிகரிப்பதால் உண்டாகும் இயல்பு கடந்த, எல்லா உணர்ச்சிகளும் இழந்த முழு மயக்கநிலை.
hyperoxaluria : மிகை கால்சியம் ஆக்சாலூரியா : சிறுநீரில் அளவுக்கு மிகுதியாகக் கால்சியம் ஆக்சாலேட் இருத்தல்.
hyperperistalsis : மிகைத் தசைச் சுருக்கம்; அதியளவு : உணவு சாரம் எளிதில் செல்வதற்கு இசைவான தானியங்கிக் குடல் தசைகளின் சுருக்கு அலைகள் மிகுதியாக இருத்தல்.
hyperphagia : பெருந்தீனி அதியுணவு : அளவுக்கு அதிகமாக உண்ணுதல்.
hyperphosphataemia : மிகை ஃபாஸ்ஃபேட் குருதி : இரத்தத்தில் ஃபாஸ்ஃபேட்டுகள் மிகுதியாக இருத்தல்.
hyperpigmentation : மிகை நிறமியாக்கம்; அதி நிறமேற்றம் : நிறமியாக்கம் அளவுக்கு அதிகமாக நடைபெறுதல்.
hyperpituitarism : அரக்க வளர்ச்சி : உடல் வளர்ச்சிக்கு முக்கியமாக உதவுவதாகக் கருதப்படும் மூளையடிச் சுரப்பியில் அளவுக்கு அதிகமாக இயக்கு நீர் சுரந்து அரக்க உருவம் உண்டாதல்.
hyperplasia : மிகையணுவளர்ச்சி; அதி பெருக்கம் :உயிர் திசுவணுக்கள் அளவுக்கு அதிகமாக உருவாதல்.
hyperplasmia : மிகை உயிரணுப் பெருக்கம் : உயிரணுக்களின் எண்ணிக்கை மட்டுமீறிய எண்ணிக்கையில் இருத்தல். இதனால் ஒர் உறுப்பின் வடிவளவு அதிகரித்துவிடும்.
hyperploidy : மிகை இனக்கீற்று : இனக்கீற்றுகள் இயல்பான எண்ணிக்கையை விட ஒன்று அல்லது இரண்டு அதிகமாக இருக்கும் நிலை.
hypernoea : மூச்சுத் திணறல் : விரைவான ஆழ்ந்த சுவாசம்; மூச்சுத் திணறல்.
hyperproteosis : மிகைப் புரதம் : சீருணவில் புரதத்தின் அளவு அளவுக்கு அதிகமாவதால் ஏற்படும் நிலை.
hyperpyrexia : மிகைக் காய்ச்சல்; கடுங்காய்ச்சல்; கடுஞ்சுரம் : உடல் வெப்பநிலை 40-41°C-க்கு அதிகமாக இருத்தல்.
hypesecretion : மிகைச் சுரப்பு : உடலில் சுரப்புநீர் அளவுக்கு அதிகமாகச் சுரத்தல்.
hypersensitivity : ஒவ்வாமை; மிகைஉணர்வு கூறுணர்வு : ஒரு துண்டுதல் அல்லது ஊறு பொருள் காரணமாக அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவயப் படுதல்.
hypersplenism : மிகை மண்ணீரல் சுரப்பு : மண்ணீரலில் அளவுக்கு அதிமாகச் சுரப்பு ஏற்படுதல். இது மண்ணீரல் வீக்கம் காரணமாக ஏற்படுகிறது.
hypertalorism : மிகை மண்டைத் திரிபு; அதி விலகு புருவம் : மன வளர்ச்சிக் குறைபாடு காரணமாக உண்டாகும் மண்டையோடு சார்ந்த திரிபுக்கோளாறு (தாழ்ந்த நெற்றி, கூரிய உச்சித் தலை).
hypertension : மிகைக் குருதி அழுத்தம்; பேரழுத்தம்; குருதி உயர் அழுத்தம்; மிகை இரத்த அழுத்தம் : மிக மட்டுமீறி உயர்ந்த இரத்த அழுத்தம். இது மூளை இயக்கம் மற்றும் பல சுரப்பு சார்ந்த காரணங்களால் உண்டாகிறது.
hyperthermia : மிகை வெப்பநிலை; அதிவெப்பநிலை : ஒரு புற்றுக்கட்டியை வெப்பத்தின் மூலம் கரைப்பதற்கு உடலில் உண்டாக்கப்படும் மிக அதிக அளவு வெப்பநிலை.
hyperthyroidism : மிகைக் கேடயச் சுரப்பி நோய்; கேடயமிகை : கேடயச் சுரப்பியில் (தைராய்டு) சுரப்புநீர் மிக அதிகமாக சுரப்பதால் உண்டாகும் நோய்.
hypertonia : மிகைத் தசைத்திண்மை; அதி விறைப்பு : தசைக் கட்டமைப்பில் திண்மை அளவுக்கு அதிகமாக இருத்தல்.
hypertonic : மிகைத்தசை விறைப்பு : 1. தசையிறுக்கம், விறைப்பு அதிகமாதல், 2. ஒப்பீட்டுக் கரைசலை விட ஊடுகசிவு அழுத்தம் அதிகமாக இருத்தல்.
hypertonicity : மிகைத்தசை திண்மை : 1. உடல் நீர்மங்களின் ஊடுகசிவு அழுத்தம் அதிகமாக இருத்தல்.
hypertrichosis : மிகைமயிர் அடர்த்தி : பொதுவாக மயிர் அதிகமில்லாத இடங்களில் மயிர் அளவுக்கு அதிகமாக அடர்ந்திருத்தல் (எ.டு) நெற்றி.
hypertrophy : உறுப்புப் பொருமல்; மிகை வளர்ச்சி; பெருக்கம்; அதிவளப்பம்; வளர்வு மிகை : மிகை ஊட்டத்தால் ஏற்படும் உறுப்புப் பொருமல்.
hyperviscosity : குருதி நீர்மிகைக் குழைமம் : குருதி நீர்க் குழைமநிலை கணிசமாக அதிகரித்திருத்தல். இது பொதுவாக வால்டன்ஸ்டிராம் வேரில் காணப்படும். இதில் சுற்றோட்டமாகச் செல்லும் IgM குருதி நீர் உயிரணு அபரிமிதமாக அதிகரிக்கும். IgG, IgA குருதிநீர் உயிரணுக்கள் சற்று குறைவாக இருக்கும்.
hiperuricaemia : மிகை சிறுநீர் அமிலம் : இரத்தத்தில் சிறுநீர் அமிலம் அளவுக்கு அதிகமாக இருத்தல். இது கீல்வாதத்தின் அறிகுறி.
hyperventilation : மிகை மூச்சு : சாலிசைலேட் நச்சு, தலைக் காயம் போன்ற நேரங்களில் மிகுதியாக மூச்சுவிடுதல்.
hypervitaminosis : உயிர்ச்சத்து மிகைப்பு; மிகை வைட்டமின் : வைட்டமின்களை, முக்கியமாக வைட்டமின் D-ஐ அதிகஅளவு உட்கொள்வதால் உண்டாகும் நிலைமை.
hyper volaemia : மிகைக் குருதியோட்டம் : சுற்றோட்டமாகச் செல்லும் குருதியின் அளவு அதிகமாக இருத்தல்.
hypeaema : கண் அறைக் குருதி; குருதி முன்னறை : கண் முன்புற அறையில் குருதி இருத்தல்.
hyphema : விழித்திரைப்படலக் காயம் : விழித்திரைப்படத்தில் ஏற்படும் காயம். இதனால் முன்புற அறைக்குள் இரத்தம் ஒழுகும்.
hypnogenesis : துஞ்சுநிலை; தூண்டிவிடல்.
hypnology : அரிதுயிலில் : மன ஆற்றல் கொண்டு தூண்டப்படும் அரிதுயில் பற்றிய ஆய்வியல்.
hypnosis : அரிதுயில் நிலை : மன ஆற்றல் கொண்டு தூண்டப் படும் அரிதுயில், வலியற்ற மகப்பேறு, பல்பிடுங்குதல், அரிதாக சிறிய அறுவைச் சிகிச்சை ஆகியவற்றுக்கு இது பயன்படுத்தப்படுகிறது.
hypnotherapy : அரிதுயல் மருத்துவ முறை : மன ஆற்றல் மூலம் நீண்ட உறக்கத்தை அல்லது அரிதுயிலைத் தூண்டிச் சிகிச்சையளித்தல்.
hypnotic : 1, அரிதுயில் மருந்து; உறக்க ஊக்கயிம்; உறக்க மூட்டி; வசியம் : அரிதுயிலைத் தூண்டுகிற மருந்து, 2. அரிதுயிலாளர் : மன ஆற்றலால் தூண்டப்படும் அரிதுயில் நிலைக்கு ஆட்பட்டவர்.
hypnotism : உறக்க மமுடுக்கம்; அறிதுயிலுத்துவம் : புறத்தூண்டு தலின் மீது மட்டுமே செயலாற்றும் இயல்புடைய செயற்கையான அரிதுயில் நிலை.
Hypnovel : ஹிப்னோவல் : மெடா சோலம் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
hypoactivity : செயல்நலிவு : செயல்முறை குறைந்திருத்தல் அல்லது பின்னடைந்திருத்தல்.
hypoadrenocorticism : அண்ணீரகக் குண்டிக்காய் இயக்குநீர் சுரப்புக் குறைவு : அண்ணீரகக் குண்டிக்காய் இயக்குநீர் சுரத்தல் குறைதல். அல்லது அதன் விளைவு.
hypoaesthesia : குன்றுணைச்சி; தாழுணைர்வு : உடலின் ஓர் உறுப்பில் உணர்ச்சி குன்றியிருத்தல்.
hypoalbuminosis : கருப்புரத குறைபாடு : கருப்புரதம் அளவுக்கு மீறிக்குறைவாக இருத்தல்.
hypobaric : சுற்றோட்ட வாயு அழுத்தக் குறைவு : வாயு மண்டல அழுத்தத்தைவிட 1 குறைவாக இருக்கும் சுற்றோட்ட வாயுக்களின் அழுத்தம் தொடர்புடைய.
hypobarism : உடல் அழுத்தக் குறைபாடு : திசு ஆக்சிஜன் இல்லாமல் உடம்பில் பாரமானி அழுத்தம் குறைவதால் உண்டாகும் நிலை.
hypobaropathy : பாரமான அழுத்தக் குறைவு நோய் : பாரமானி அழுத்தம் குறைவதால் உண்டாகும் நோய்.
hypocalcaemia : கால்சியம் குறைபாடு : இரத்தத்தில் கால்சியம் குறைவாக இருத்தல்.
hypocapnia : கரியமில வாயுக் குறைவு : தமனி இரத்தத்தில் கார்பன்டையாக்சைடு (கரிய மில CO,வாயு) குறைவாக இருத்தல்.
hypochloraemia : குளோரைடுக் குறைபாடு : சுற்றோட்ட இரத்தத்தில் குளோரைடுகள் குறைவாக இருத்தல். hypochlorhydria : ஹைட்ரோ குளோரிக் அமிலக் குறைபாடு : அமிலக்குறை இரைப்பை நீரில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் குறைவாக இருத்தல்.
hypochlorite : ஹைப்போகுளோரைட் : ஹைப்போகுளோரஸ் அமிலத்தின் வணிகப் பெயர். காயங்களைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.
hypochondria : மனவாட்ட நோய்; நோய்மைக் கலக்கம்; நோயெண்ணம் : சூம்படைவுக் கோளாறு, கற்பனைப் பிணி, மெளட்டீக நோய்.
hypochondriac : மனவாட்ட நோயாளி : மெளட்டீக நோயாளி.
hypochondriasis : பீதி நோய்; மனப்பாடு; நோயெண்ணம் : நோய் குணமடைந்துவிடும் என்று மருத்துவ முறையில் உறுதி கூறியபிறகும் ஒருவரிடம் இடைவிடாமல் எரிச்சலூட்டும் பீதி குடிகொண்டிருத்தல்.
hypochondrium : கீழ்விலா எலும்புப் பகுதி; விலாவடி : கீழ் விலா எலும்புகளுக்குக் கீழே உள்ள அடிவயிற்றின் மேல் கிடைமட்டப் பகுதி (இடம், வலம்).
hypocholesteraemia : குருதிக் கொழுப்புக் குறைபாடு : சுற்றோட் டமாகச் செல்லும் குருதியில் கொழுப்புச் சத்து (Cholesterol) கணிசமாகக் குறைந்திருத்தல்.
hypochondroplasia : மிகை ஆட்டோசோமால் : ஆட்டோசோமால் ஆதிக்கம் பெற்றிருக்கும் நிலை. இதனால், குள்ள உருவம், குட்டை உறுப்புகள், வால்வழி உட்குழல் ஆகியவை உண்டாகும்.
hypochromasia : குருதிச் சிவப்பணுக் குறைபாடு : குருதிச் சிவப் பணுக்களில் குருதிச் சிவப்பணுக்கள் குறைவாக இருக்கும் நிலை.
hypochromia : சிவப்பணுக் குறைவு நோய் : 1. சிவப்பணுக் குறைபாடு, 2. குருதிச் சோகையின் ஒரு நிலை. இதில் குருதிச் சிவப்பணுக்கள் இயல்பான அளவை விடக் குறைந்த வீதத்தில் இருக்கும்.
hypochromic : நிறமிக்குறைபாடு : இரத்தச் சிவப்பணுக்களில் செந்நிறக் குருதியணுக்கள் குறைவாக இருப்பதன் காரணமாக வண்ணப் பொருள் அல்லது நிறமி குறைவாக இருத்தல்.
hypocythaemia : குருதி அணுக்கள் குறைபாடு : சுற்றோட்டமாகச் செல்லும் குருதியில் சிவப்பு, வெள்ளணுக்களும், தகட்டணுக்களும், கணிசமான அளவுக் குறைந்திருத்தல். இது புதுத் தசை வளர்ச்சியடையாத சோனக நோய் போன்ற நிலை. hypoderma : தோல் கூட்டுப்புழு: தோல் சார்ந்த புழுப் பருவத்திலுள்ள ஒற்றைத் தலைவலி உண்டாகும் குதிரை ஈ வகையைச் சேர்ந்த கூட்டுப் புழு.
hypodermiasis : படர் கொப்புளம் : அடித்தோல் சார்ந்த கூட்டுப்புழுவிலிருந்து தோலில் உண்டாகும் படர் கொப்புளம்.
hypodermic : அடித்தோல்;அடித்தோல் சார் : தோலின் அடிப்பகுதி.
hypoferraemia : குருதி அயக்குறைபாடு : சுற்றோட்டமாகச் செல்லும் குருதியில் அயம் குறைந்த அளவில் இருத்தல்.
hypofertility : இனப்பெருக்கத் திறன் குறைபாடு : இனப்பெருக்கம் செய்வதற்கானதிறன் குறைவாக இருத்தல்.
hypofunction : செயலின்மை; குறை இயக்கம்; தாழ்வினை : செயலியக்கக் குறைபாட்டு நோய்.
hypogastrium : அடியகட்டுப் பகுதி; உந்திக் கீழ்ப்பகுதி : அடி வயிற்றின் அடியகட்டுப் பகுதி.
hypogastrium : உந்திக் கீழ்ப்பகுதி : தொப்புள் குழிக்கும் அடியிலுள்ள அடிவயிற்றின் கீழ் மையப் பகுதி. பொது மண்டலம்.
hypogenesis : உறுப்புக் குறை வளர்ச்சி : உடம்பின் பகுதிகள் அல்லது உறுப்புகள் குறை வளர்ச்சியுடனிருத்தல்.
hypogenitalism : பாலுறுப்பு வளர்ச்சிக் குறைபாடு : புறப்பிறப் புறுப்புகள் பகுதி அல்லது பகுதி முதிரா நிலையில் இருத்தல். இது பொதுவாக, பாலணு உயிரணுக்களை உற்பத்தி செய்யும் உறுப்பு போதிய அளவு வளர்ச்சி பெறாததால் இது உண்டாகிறது.
hypoglassalmenue : நாநரம்பு.
hypophyseal : மூடிச் சுரப்பி; மூளை சரியச் சுரப்பி.
hypoglossal : நாவ்டி நரம்பு : நாவின் அடியிலுள்ள நரம்புப் பகுதி.
hypoglyaemia : கனிமக்குறை.
hypogonadism : குறை செனிப்பியம்.
hypoglycaemia : குருதிக் குளுக்கோஸ் குறைபாடு; குருதிச் சார்க் கரைக் குறை : குருதியில் குளுக்கோஸ் குறைவாக இருத்தல். இதனால், கவலை, மனக்கிளர்ச்சி, ஆழ்ந்த உறக்க நிலை, சன்னி ஆகியவை உண்டாகும். நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் அதிகமாகக் கொடுத்து விட்டால் இந்நிலை ஏற்படலாம். hypokalaemia : பொட்டாசியம் குறைபாடு : குருதியில் பொட்டாசியம் அளவு மிகமிகக் குறைந்து விடுதல்.
hypomagnesaemia : மக்னீசியம் குறைபாடு : குருதியில் மக்னீசியம் குறைந்து விடுதல்.
hypomania : கிளர்ச்சிக் குறைபாடு : நடத்தை முறையில் மிதமான மாறுதலுடன் ஏற்படும் இலேசான கிளர்ச்சி.
hypomere : இடைத்தோல் : 1. தசை வெட்டுப் பகுதியின் இடைமட்டப் பகுதி. இது தண்டுவட நரம்பின் முன்புறக் கிளை ஒன்றினால் தூண்டப்படும் உடல் சுவர் தசையாக அமைகிறது. 2. உடலின் உட் குழிவுகளுக்கு உள்வரிப்பூச் சினைக் கொடுக்கும் இடை மிட்ட இடைத்தோல்.
hypometabolism : உடல் வெப்பம் குறைதல், தாழ்வளர் சிதை மாற்றம் :மந்திப்புக் கோளாறு காரணமாக உடலில் வெப்பம் குறைவாக உற்பத்தியாதல்.
hypometria : தள்ளாட்டம் : ஒரு பொருளை அடைய அல்லது ஒரு குறிக்கோளை எட்டத் தவறுவதால் உறுப்புகள் ஒத்தியங்காமல் ஏற்படும் தள்ளாட்டம்.
hypomorph : குள்ளக்கால் மனிதன் : உடலின் நீளத்துடன் ஒப்பிடும்போது கால்களின் வீதஅளவு குறைவாக இருக்கும் ஒரு மனிதர்.
hypomotility : இயக்கக் குறைபாடு; குறையசைவு : இரைப்பையில் அல்லது குடல்களில் இயக்கம் குறைவாக இருத்தல்.
hyponatraemia : சோடியம் குறைபாடு : இரத்தத்தில் சோடியம் குறைவாக இருத்தல்.
hyponeocytosis : இடதுபுற விலகல் : இடதுபுறம் இடம்பெயர்ந் திருத்தல். இதில் வெள்ளணுக் குறைபாட்டுடன் வெளிக் குருதியில் இளம் மற்றும் முதிரா ஊனீர் நுண்மங்கள் இருப்பது தொடர்புடையதாகும்.
hyponychium : நகமேல்திசு : நகப்படுகையில், குறிப்பாகப் பின்புறப் பகுதியில் உள்ள மேல்திசு.
hypoorthocytosis : இயல்பளவு வெள்ளணு : வெள்ளையணுப் பெருக்கத்தில் வேறுவகை வெள்ளணுக்கள் இயல்பான அளவில் இருத்தல்.
hypopharynx : அடிக் குரல்வளை; அடித்தொண்டை : குரல்வளைக்குக் கீழே, குரல்வளையின் பின்புறமுள்ள குரல்வளையின் பகுதி.
hypophonia : குரல் தாழ்வு : சுவாசத்தசைகள் நலிந்திருத்தல் போன்ற தொண்டைத் தசைகள் ஒருங்கிணைந்து இயங்காமலிருக்கும்போது குரல் குறைந்திருத்தல். hypoporosis : தோல்காய்ப்புக் குறைபாடு : எலும்பு முறிவு ஏற்பட் டுள்ள இடத்தில் தோல்காய்ப்பு போதிய அளவு இல்லாதிருத்தல்.
hypoprosody : குரல் மார்றக் குறைபாடு : பேசும்போது அழுத்தம், தூக்கல், ஒத்திசைவு குறைந்த அளவு மாற்றத்துடன் இருத்தல்.
hypospadias : வழிக் கீழ்த்துளை.
hyposthenuria : சிறுநீர் ஒழுக்கு : சிறுநீரை ஒரு முகப்படுத்த இயலாதிருத்தல்.
hypothalamic-pituitary axis : மூளை கீழ்த்தள-கபச் சுரப்பி அச்சு : மூளையின் கீழ்த்தளம், கபச்சுரப்பி இரண்டின் நடவடிக்கைகளையும் ஒருங்கி ணைக்கும் பின்னூட்ட மண்டலங்களின் ஒரு தொகுதி. மூளையின் கீழ்த்தளம், கபச் சுரப்பியின் மீது செயற்படும் இயக்கு நீர்களை வெளியிட்டு ஒருங்கிணைக்கிறது. இதனால், அண்ணீரகச் சுரப்பி, கேடயச் சுரப்பி, ஈனுறுப்புகள், மார்பகம் ஆகியவற்றில் முனை உறுப்புத் துலங்கல் ஏற்படுகின்றன. இயக்குநீர் உடலுயிர் அச்சு வளர்வதற்கும் இது உதவுகிறது.
hypothemar : உள்ளங்கைத் தசைத் திரட்சி : உள்ளங்கையின் முன்கை எலும்புப் பக்கத்தின் தசைத் திரட்சி.
hypothermia : ஆழ் உறை நிலை மருத்துவ முறை : ஒரு நோயா ளியை இயல்பான உடல் வெப்ப நிலையிலிருந்து பல பாகைகள் குறைந்த குளிர்ந்த வெப்ப நிலையில் வைத்திருந்து நோயைக் குணமாக்கும் ஆழ்ந்த உறை நிலை மருத்துவ முறை.
hypophoria : காட்சி அச்சு முரண் தாழச்சு : ஒரு கண்ணிலுள்ள காட்சி அச்சு மற்றொன்றை விடக் கீழே இருக்கும் நிலை.
hypophosphataemia : ஃபாஸ்ஃபேட் குறைபாடு : இரத்தத்தில் ஃபாஸ்ஃபேட்டுகள் குறைவாக இருத்தல்.
hypophysectomy : கபச்சுரப்பி அறுவை மருத்துவம் : கபச்சுரப்பியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றதல்.
hypopigmentation : நிறமிக் குறைபாடு; தாழ் நிறமேற்றம் : நிறமி குறைந்த அளவில் இருத்தல்.
hypo pituitarism : கபச்சுரப்பிக் குறைபாடு : உடல் வளர்ச்சிக்கு முக்கியமாக உதவுவதாகக் கருதப்படும் தூம்பற்ற முளையடிச் கரப்பியான கபச்சுரப்பி போதிய அளவில் இல்லாமல் இருத்தல். இதனால் பெண்களுக்குக் கருப்பை மெலிவும் மாதவிடாய் தோன்றாமையும், பாலுணர்ச்சி உந்துதல் இன்மையும் உண்டாகும். குழந்தைகள் குள்ளமாக இருப்பார்கள்.
hypoplasia : திசு வளர்ச்சிக் கோளாறு; குறை வளர்ச்சி : திசுவில் ஏற்படும் குறைபாடான வளர்ச்சி. hypoproteinaemia : புரதக் குறைபாடு; புரதக்குறைவு; தாழ்புரதக் குருதி : இரத்த ஊனீரில் புரதம் குறைவாக இருத்தல்.
hypopyon : கண்ணறைச்சீழ்; சீழ் முன்னறை : கண்ணின் முன்பக்க அறையில் சீழ் சேர்ந்திருத்தல்.
hyposecretion : சுரப்புக் குறைபாடு; தாழ்சுரப்பி.
hyposensitivity : உணர்வுக் குறைபாடு : ஒரு தூண்டுதலுக்கு உணர்வு ஏற்படாதிருத்தல்.
hyposmia : மோப்ப நுகர்வுணர்வுக் குறைபாடு தாழ்மோப்பம் : இயல்பான நுகர்வுத்திறன் குறைந்திருத்தல்.
hypospadias : சிறுநீர்க் குழாய்; உருத்திரிபு; அடிநீர்த்துளை; வழிக் கீழ் துளை : ஆணின் முத்திர ஒழுக்குக் குழாய் பிறவியிலேயே உருத்திரிபுடன் இருத்தல்.
hypostasis : குருதி வண்டல்; அடித்தேக்கம் : குருதி ஒட்டக் குறைவினால் உடலுறுப்புப் பகுதிகளில் ஏற்படும் செயலற்ற தேக்கம்
hypotension : தாழ் குருதியழுத்தம்; தாழழுத்தம்; குறை அழுத்தம் : தாழ்ந்த குருதியழுத்த நிலை. நெஞ்சுப்பைச் சுருக்கம் (10 எம்எம் எச்.ஜி (mm Hg) அளவுக்குக் குறைவாகவும் நெஞ்சைப்பை விரிவியக்கம் 70 எம்எம் எச்.ஜி அளவுக்குக் குறைவாகவும் இருத்தல்,
hypothalamaus : கீழ்த்தளம் : உடலின் செயற்பாடுகளைக் கட்டுபடுத்தும் முன் மூளைப் பகுதி. இஃது உணர்ச்சிகளுக்கும் இயற்கைக் கடன் உந்துதல் களுக்கும் பிறப்பிடமாகும்.
hypothenar eminence : அடிமுழு எலும்பு மேடு; அங்கையடி மேடு : உள்ளங்கையில் சுண்டு விரலின் கீழுள்ள அடிமுடி எலும்புப் பகுதி மேடாக இருத்தல்.
hypothermia : வெப்பக் குறைபாடு; குறைவெப்பம்; தாழ் வெப்ப நிலை :உடலின் வெப்பநிலை இயல்பு அளவுக்குத் குறைவாக இருத்தல். இது மிக இளம் வயதினருக்கும் மிகவும் முதியவர்களுக்கும் ஏற்படுகிறது. தலைக் காயங்களைக் குணப்படுத்துவதற்கும், நெஞ்சுப்பை அறுவைச் சிகிச்சையின் போதும் செயற்கையான வெப்பக் குறைபாடு (30°C அல்லது 86°F) ஏற்படுத்தப்படுகிறது. hypothesis : கருதுகோள் : 1. வாத ஆதாரமாகத் தற்காலிகமாகக் கொள்ளப்படும் கருத்து. 2. மேலாராய்வுக்கு அடிப்படையான தற்காலிகப் பொதுவிளக்கக் கோட்பாடு.
hypothymism : கேடயச் சுரப்பி இயக்குநீர்; ஒருங்கிணைப்புக் குறைபாடு : கேடயச்சுரப்பி இயக்குநீர்கள் போதிய அளவு ஒருங்கினையாமல், வெளியேறுதால்.
hypothyroidism : கேடயச் சுரப்பு நீர் குறைபாடு; குறைக்கேடய நிலை : கேடயச் சுரப்பி நீர் குறைவாகச் சுரப்பதால் உண்டாகும் நிலை. இது இரகசியமாக உருவாகுகிறது. இதனால், சோர்வு, உறக்கம், உடல் எடை அதிகரிப்பு, தோல் உலர்தல், மந்திப்புக் கோளாறு, மிகை மாதவிடாய்ப் போக்கு, மலச்சிக்கல், தசை நாண் இயல் நரம்பியக்கம் தாமதமாக ஏற்படுதல் மனச்சோர்வு, பைத்தியம் போன்ற அறிகுறிகள் தோன்றும்
hypotonia : அரிதுயில் நிலை : 1. உடல்நலம் அல்லது விசை யுணர்வு குறைவாக இருக்கும் நிலை 2.தமனிகள் தளர்ச்சியடைந் திருத்தல். 3. தசைவிறைப்புக் குறைவாக இருத்தல்.
hypotropia : பார்வை அச்சு ஒரு புறச்சாய்வு : ஒரு கண்ணின் பார்வை அச்சு, கீழ்நோக்கிச் சாய்ந்திருத்தல்.
Hypovase : ஹைப்போவாஸ் : பிராசோசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
hypoventilation : உயிர்ப்புக் குறைபாடு.
hypovitaminaemia : வைட்டமின் குறைபாடு : குருதியில் வைட்ட மின்கள் குறைவாக இருத்தல்.
hypovitaminosis : வைட்டமின் குறைவு நோய்; தாழ் உயிர்ச் சத்துவம் : வைட்டமின்கள் குறைவாக இருப்பதால் ஏற்படும் நிலை.
hypovolaemia : மிகைக் குருதிக் குறைபாடு : சுற்றோட்டமாகச் செல்லும் குருதியின் அளவு மட்டுமீறிக் குறைவாக இருத்தல்.
hypoxaemia : ஆக்சிஜன் குறைபாடு : தமனி இரத்தத்தில் ஆக்சிஜன் குறைவாக இருத்தல்.
hypoxia : திசு ஆக்சிஜன் குறைபாடு; உயிர்வளிக் குறை : திசுக்களின் ஆக்சிஜன் அளவு குறைந்திருத்தல்.
hysterectomy : கருப்பை அறுவை மருத்துவம்; கருப்பை ஆக்கம்; கருவகம் எடுப்பு : கருப்பை சார்ந்த அடிவயிற்றுப் பகுதியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்.
hysteresis : காந்தத் தூண்டல் குறைபாடு : காந்த ஆற்றலுக்குக் காந்தத்தின் தூண்டுதல் இயக்கம் பிற்படும் நிலை.
hystereurysis : கருப்பை விரிவாக்கம் : கருப்பையின் கீழ்ப் பகுதியும், கழுத்துக் குழாயும் விரிவடைவதல்.
hysteria : அச்சவெறி; வெறுப்பு நோய்; நரம்பிழுவை : நரம்புக் கோளாறினால் அநேகமாக பெண்கள் உளப்பண்பு உரம் பாதிப்பால் தன் வயம் இழக்கும் இசிப்பு. முடக்கு வாதம், உணர்விழப்பு ஆகியவை இந்நோயின் அறிகுறிகள்.
hysterics : வலிப்புத் துடிப்புகள் : பெண்டிர் தன்வயம் இழப்புக் கோளாறில் உறுப்புகளில் இழுப்பு வலிப்புகள்.
hysterogeny : இசிப்பு நோய்த் தூண்டல் : இசிப்பு நோய்க் கோளாறு உண்டு பண்ணுதல்.
hysterography : கருப்பை ஊடு கதிர்ப்படம் : கருப்பைக் குழவினுள் ஒர் ஒப்பீட்டு ஊடகத்தைச் செலுத்திய பிறகு கருப்பையின் ஊடுகதிர்ப்படம்.
hysterology : கருப்பையியல் : கருப்பை பற்றிய ஆய்வியல்.
hysterolysis : கருப்பைத் துண்டிப்பு : கருப்பைக்கும் சுற்றியுள்ள கட்டமைப்புக்கு மிடையிலான ஒட்டினைத் துண்டித்தல்.
hysteromyoma : கருப்பைக் கட்டி : கருப்பைத் தசைக் கட்டி அல்லது நரம்புக் கட்டி.
hysteromyotomy : கருப்பை கட்டி அறுவைச் சிகிச்சை : கருப்பை இழைநார்த் தசைக்கட்டியை அகற்றுவதற்காகக் கருப்பைத் தசைக்குள் கீறுதல்.
hysteropexy : கருப்பை நிலைப்பாடு : தவறான இடத்தில் அமைந்துள்ள அல்லது அளவுக்கு மீறி அசைகிற கருப்பையை அறுவைச் சிகிச்சை மூலம் நிலையாகப் பொருத்துதல்.
hystero salpingectomy : கருப்பைக் குழாய்த் துண்டிப்பு : கருப்பைக் குழாய் அறுவை மருத்துவம் கருப்பையினையும் கருப்பைக் குழாய்கள் இரண்டையும் துண்டித்து எடுத்தல்.
hysterosalpingogram : கருப்பை குழாய் ஊடுகதிர்ப் படம் : கருப்பை, கருவெளியேறும் குழாய்கள் ஆகியவற்றின் ஊடுகதிர்ப் படம். இதில் வாயு அல்லது கருப்பை வாய் வழியாகச் செலுத்தப்படும், ஊடுகதிர் ஊடுருவாத பொருள் பயன்படுத்தப் படுகிறது.
hyterosalpingography : கருப்பை ஊடுகதிர் ஆய்வு : கருப்பை கருவெளியேறும் குழாய்கள் ஆகியவற்றை ஊடுகதிர் மூலம் ஆய்வு செய்தல். இது மலட்டுத் தன்மையை ஆராய்ந்தறியப் பயன்படுகிறது.
hysterosalpingoophorectomy : கரு அண்ட அறுவை மருத்துவம் : கரு அண்டங்கள், கரு வெளியேறும் குழாய்கள் ஆகிய இரண்டையும், அல்லது அவற்றில் ஒன்றை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல்.
hysterosalpingostomy : கருவக அண்டக் குழல் வாயமைப்பு : கருப்பைக்குள் கரு உட்புகும் குழாயில் உள்ள அடைப்புகளைக் களையும் அறுவை மருத்துவம். கருவண்டத்திலிருந்து கரு முட்டை அணுவை கருப்பைக்குள் கொண்டு சேர்க்கும் கருக்குழாயில் அடைப்பிருந்தால் அறுவை மருத்துவம் செய்து அடைப்பு அகற்றுதல்.
hysteroscope : கருப்பை ஆய்வுக் கருவி : கருப்பைவாய், கருப்பையின் உட்பகுதி ஆகியவற்றை ஆராய்வதற்கான பார்வைக் கருவி.
hysterotomy : கருவக அறுவை; கருப்பை துளைப்பு; கருவகத் திறப்பு : கருவை அகற்றுவதற்காகக் கருப்பையில் செய்யப்படும் அறுவை மருத்துவம்.
hysterotrachelorraphy : கருப்பைக் கழுத்துச் சீராக்கம்; கருவகக் கண்டத் தைப்பு : சிராய்த்துக் காயப்பட்ட கருப்பைக் கழுத்துப் பகுதியைச் சீர்படுத்துதல்.
hystorectomy : கருப்பை நீக்கம்.