தமிழ்ப் பழமொழிகள் 3/14

விக்கிமூலம் இலிருந்து


நக்கத் தவிடும் இல்லை; குடிக்கத் தண்ணீரும் இல்லை.

நக்கல் வாய் தேட, நாறல் வாய் அழிக்க. 13475


நக்கவாரக் கச்ச வடம்போல.

(நிர்வாண தேச வியாபாரம்.)

நக்க விட்ட நாயும் கொத்த விட்ட கோழியும் நில்லா.

நக்கிக் கொண்ட நாயும் கொத்திக் கொண்ட கோழியும் போகா.

நக்கு உண்டார் நா எழார்.

நக்குகின்ற நாய்க்குச் செக்கு என்றும் சிவலிங்கம் என்றும் தெரியுமா? 13480


(உண்டா? தெரியாது.)

நக்குகிற பொழுது நாவு எழும்புமா?

நக சிகை பரியந்தம்.

நகத்தால் கிள்ளாததைக் கோடரி கொண்டு வெட்ட நேரிடும்.

நகத்தால் கிள்ளாவிட்டால் கோடரி வெட்டுக்கும் அசையாது.

நகத்தாலே கிள்ளுவதைக் கோடரி கொண்டு வெட்டுகிறதா? 13485


நகமும் சதையும் போல.

(வாழ்கிறார்கள்.)

நகரத்துக்கு இரண்டாமவனாக இருப்பதிலும் நாட்டுப் புறத்துக்குத் தலைவனாய் இருப்பதே நன்று.

நகரம் எல்லாம் நமக்குச் சொந்தம்; ஆனால் தங்கத்தான் இடம் இல்லை.

நகரிப் பெண் நாடு ஏறாது.

(நகரி-ஆழ்வார் திருநகரி.)

நகரேஷு காஞ்சி. 13490


நகரைக்குப் பெத்தை வழி காட்டுகிறதோ?

நகைக்கு மகிழ்ச்சி; நட்புக்கு நஞ்சு.

நகைச் சொல் தருதல் பகைக்கு ஏதுவாம். 

நகைத்து இகழ்வோனை நாய் என நினை.

நகை போட்டதும் இல்லை; போட்டவர்களைப் பார்த்ததும் இல்லை. 13495


நங்கும் நாளமும்.

நங்கூரம் பாய்ச்சிய கப்பல் போல.

நச்சுப் பேச்சு நாளும் தரித்திரம்.

நச்சு மரம் ஆனாலும் நட்டவர்கள் வெட்டுவார்களா?

நச்சுமரம் ஆனாலும் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான். 13500


நச்சுமரம் ஆனாலும் வைத்தவன் மரம்.

(வச்சவன்.)

நச்சுவாயன் வீட்டில் நாறல் வாயன் குடியிருந்தாற்போல.

நச்சுவாயன் வீட்டில் நாறல் வாயன் பெண் கொடுத்தது போல.

(பெண் கொண்டது போல.)

நசை கொன்றான் செல் உலகம் இல்.

(பழமொழி நானூறு.)

நஞ்சுக்குள் இருந்தாலும் நாகமணி, குப்பையில் இருந்தாலும் கோமேதகம். 13505


நஞ்சு நாற்கலம் வேண்டுமா?

நட்ட அன்றும் சாவி; அறுத்த அன்றும் பட்டினி.

நட்ட அன்று மழையும், கெட்ட அன்று விருந்தும் கேடு.

(இழவும் கேடு.)

நட்ட குழி நாற்பது நாள் காக்கும்.

நட்டது எல்லாம் மரம் ஆமா? பெற்றது எல்லாம் பிள்ளை ஆமா? 13510


நட்ட நடுவில் முழம் ஆனேன்; நடவு திரும்பிச் சாண் ஆனேன்; தட்டான் இட்ட வேளாண்மை தானாய்ப் பொன்னிறம் ஆச்சுது.

நட்டாலும் தில்லை நாயகம் நடவேண்டும்.

நட்டாற்றில் கைவிட்டாற் போல.

நட்டாற்றுக் கோரையைப் போல.

நட்டு அறான் ஆதலே நன்று. 13515


நட்டு ஆயினும், பட்டு ஆயினும்.

(பனை.)

நட்டுக் காய்ந்தால் நாழி நெல் காணாது.

நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா?

(நொட்டி)


நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டு அடிக்கத் தெரியாதா?

நட்டுவன் பிள்ளைக்கு நாட்டியம் கற்க வேண்டுமா? 13520


நட்டுவன் பிள்ளைக்கு முட்டு அடிக்கத் தெரியாதா?

நட்டுவனுக்கு உண்டு தட்டுவாணித் தனம்.

(நட்டுவச்சிக்கு.)

நட்டுவனுக்கு நொட்டுப் பழக்குகிறாயா?

(கொட்டிக் காட்ட வேண்டுமா?)

நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காதவழி.

(மாட்டாதவனுக்கு.)

நடக்கக் கற்ற பிள்ளை தவழக் கற்றதாம்; தாயார் செய்த தவம். 13525


நடக்கப் பால்மாறிச் சிற்றப்பன் வீட்டில் பெண்கட்டிக் கொண்டானாம்.

நடக்க மாட்டாத தலவாடிக்கு நாலு பக்கமும் சவாரி.

நடக்க மாட்டாதவன் சிற்றப்பன் வீட்டிலே பெண் கேட்டாற் போல.

நடக்கிறது நடக்கட்டும், தெய்வம் இருக்கிறது.

நடக்கிற பிள்ளை தவழ்கிறது; தாயார் செய்த தருமம். 13530


நடக்கிற வரையில் நாராயணன் செயல்.

(நடந்தவரைக்கும்.)

நடக்கும் கால் இடறும்.

நடக்குந்தனையும் நாடங்கம்; படுத்தான்தான் பாயும் தானும்.

(யாழ்ப்பாண வழக்கு.)

நடக்கும் கால் தவறுதலிலும் நாத் தவறுதல் கெட்டது.

நடத்தை தப்பினவன் அண்ணனாகிலும் தம்பியாகிலும் நறுக்கு. 13535


நடந்த காலிலே சீதேவி; இருந்த காலிலே மூதேவி.

நடந்தபிள்ளை நகருகிறது.

நடந்த மட்டும் நடக்கட்டும்; நஷ்டத்துக்கு உத்தரவாதம் பண்ணப் போகிறீரா?

நடந்தவரை நமது செயல்; நாளை நடப்பது நாயன் செயல்.

நடந்தவன் காலிலே சீதேவி; இருந்தவன் காலிலே மூதேவி. 13540


நடந்தார்க்கு நாடு எங்கும் உறவு; கிடந்தார்க்குப் பாயே உறவு.

நடந்தால் நடை அழகி; நாவிலும் பல் அழகி.

நடந்தால் நாடு எல்லாம் உறவு; படுத்தால் பாயும் பகை.

(நாடு எல்லாம் செல்லும் உறவு இருந்தால் படுத்த தலையணையும் பாயும்கூட உறவில்லை.)


நடபடி உண்டானால் மிதியடி பொன்னாலே.

நடலப் புடலங்காய் காய்க்கிறதாம்! நாழிக்குப் பத்தெட்டு விற்கிறாளாம். 13545

(காய்த்ததாம், விற்கிறதாம்.)


நடவாத காரியத்தில் பிடிவாதம் பிடிக்கிறது.

நடவில் சிரிப்பு; அறுவடையில் நெருப்பு.

நடவுக்குத் தெளி, நாலத் தொன்று.

(நாலில் ஒன்று.)

நடவு நட்டாலும் நாற்று மீந்தாலும் நான் நடக்கிற நடை இதுதான் என்று சொல்லுமாம் கடா.

நடு உழவிலே நத்தை தெறித்தது போல. 13550


நடு ஊரிலே நச்சுமரம் பழுத்து என்ன?

(பழுத்தாற் போல, பழுக்கலாமா?)

நடுக்கடல் போனாலும் மறுப்படாமல் வரக்கடவீர்.

(வடுப்படாமல்.)

நடுக்கடலில் விழுந்து அலைகிறவனுக்கு ஒரு தெப்பம் அகப்பட்டதைப் போல.

நடுக்கத் தட்டானுக்குக் கல்யாணம்; நாற்பத்தெட்டாந் தேதி.

(இருபத் தெட்டாந்தேதி.)

நடுக்காட்டில் போனாலும் வடுப்படாமல் வருவார். 13555


நடுங்க அடித்துப் பிடுங்குகிறதா?

நடுச் சமுத்திரத்திலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.

நடுச் செவியில் நாராசம் காய்ச்சி விட்டாற்போல.

நடுத்தரம் ஆனவருடைய தாங்கல் பொன்னின் பிளவு போலப் பற்ற வைத்தால் மாறும்.

நடுத் தெரு நாராயணன். 13560


நடுத்தெருப் பிச்சைக்கு நாணயம் பார்க்கலாமா?

நடுப்படையில் போனாலும் வடுப்படாமல் வருவான்.

(வருகிறது.)

நடுப்புடைவையில் கோவணம் கிழிக்கிற மாதிரி.

நடு மேட்டில் நரி கத்திற்றாம், தீர்த்த முடக்கில் தேள் கொட்டிற்றாம்.

நடைக்கு அஞ்சிச் சிற்றப்பன் வீட்டில் பெண் கொண்டானாம். 13565


நடைக்குச் சோம்பற்பட்டுச் சிற்றப்பன் வீட்டில் வாழ்க்கைப் பட்டாளாம். 


நடை சிறிது ஆகில் நாள் ஏறும்; படை சிறிது ஆகில் பயம் ஏறும்.

(நாக் குழறும்.)

நடை பாக்கியம்; இடை போக்கியம்.

நண்டு அளந்த நாழி போல.

நண்டு இழந்த நாழி போல. 13570


நண்டு இழந்த நாழியும் தொண்டு இழந்த கயிறும்.

(நண்டுக்குச் சிவன் போகிறது.)

நண்டு உதவும்; நண்டுகள் உதவா.

நண்டு ஊர நாடு செழிக்கும்.

நண்டு எழுத்துக் கண்டு எழுதலாமா?

நண்டு எழுத்துப் போல். 13575


நண்டுக்கு அழகு சேறும் கலங்கலும்.

நண்டுக்குக் கல்யாணம்; நரிக்குச் சங்கராந்தி.

நண்டுக் குடுவையை நடுத் தெருவில் உடைத்தது போல.

நண்டுக்குச் சீவன் போகிறது; நரிக்குக் கொண்டாட்டம்.

நண்டுக்குத் திண்டாட்டம், நரிக்குக் கொண்டாட்டம். 13580

(நண்டுக்குச் சீவன் போகிறது.)


நண்டுக்குப் பட்டால்தான் தெரியும்; குரங்குக்குச் சுட்டால்தான் தெரியும்.

நண்டுக்குப் புளியங்காய் இட்டு நறுக்கினாற் போல.

நண்டுக்கடி காலைவிட்டு ஓடியது போல.

நண்டு கால் விரித்தாற் போல.

நண்டு கொழுத்தால் வளையில் இராது; பள்ளி கொழுத்தால் பாயில் இரான். 13585


நண்டு பொரித்திட்டுத் திகைப்பூண்டு கண்டாற் போல.

நண்டு வளையிற் கை இட்டது போல.

நண்டு வளையைச் சுற்றிய நரியைப் போல.

நண்டைக் கொடுக்கு ஒடித்தாற் போல.

நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்தது போல. 13590

(நாயை.)


நண்டை நாழி கொண்டு அளக்கலாமா?

நண் பொருள் கொடுத்து நன்றாய் ஓது.

நத்தத்திலே நாய் பெருத்தது போல.

நத்த வாழைக்கு நித்தம் ஒரு காசு.

நத்த வாழையிலே நித்தம் காற் பணம். 13595


நத்துக்கும் சுழி, முத்துக்கும் சுழி, குன்றிமணிக்கும் பிட்டத்திலே சுழி.

நத்துப் புல்லாக்கு நாணயம் பார்க்கிறது; இரட்டைக் குண்டு அட்டிகை எட்டி எட்டிப் பார்க்கிறது.

நத்தையின் வயிற்றில் முத்துப் பிறந்தது போல.

நதி எல்லாம் பால் ஆனாலும் நாய் நக்கித்தான் குடிக்க வேண்டும்.

நதி மூலத்தையும் ரிஷி மூலத்தையும் விசாரிக்கக் கூடாது. 13600


நந்தன் தோல் காசு வழங்கினாற் போல.

நந்தன் படைத்த பண்டம் நாய் பாதி, பேய் பாதி.

(நாய்வந்தி ஆவாரி.)

நந்தன் படை வீடா?

நந்தோ ராஜா பவிஷ்யதி.

நபும்சகன் கையில் ரம்பை அகப்பட்டது போல. 13605


நம் நிழல் நம்மோடே.

நம்ப நட, நம்பி நடவாதே.

(யாழ்ப்பாண வழக்கு.)

நம்பமாட்டாதவன் பெண்சாதிக்கு நாற்பது பேர் மாப்பிள்ளைமார்.

நம்பவைத்து கழுத்து அறுக்கலாமா?

நம்பியான் விட்டதே தீர்த்தம். 13610


(வார்த்ததே.)

நம்பின பேருக்கு நடராஜா, நம்பாத பேருக்கு யமராஜா.

நம்பினவரை உண்மையில் காத்தான்.

நம்பினவரைக் காட்டில் விடலாமா?

நம்பினவரை நட்டாற்றில் விடலாமா?

(நம்பின பேரைக் கைவிடுவதா?)

நம்பினால் தெய்வம்; நம்பாவிட்டால் கல். 13615


நம்பூதிரி சொத்தை எழுதி வைத்த மாதிரி.

(நிறையச் சாப்பிட்ட சந்தோஷத்தில் இனி எதற்கு என்று எழுதிவைத்து விட்டானாம். பாலைக்காட்டு வழக்கு.)

நம்பூதிரி வெற்றிலை போட்டுக் கொண்ட மாதிரி.

(புதிய வெற்றிலையைக் கண்டு அருமை பாராட்டி உண்ண மனம் இன்றிப் பழைய வெற்றிலையைப் போட்டுக் கொள்வான்.)

நம்மாழ்வார் நம்மைக் கெடுத்தார்; கூரத்தாழ்வார் குடியைக் கெடுத்தார்.

நம்மைச் செருப்பால் அடித்தாலும் நம் அண்ணன் வீட்டுப் பயலை வாடா, போடா என்னலாமா? 


நம்மை நம்ப வேண்டாம்; அம்மாளைத் தாலி வாங்கச் சொல். 13620


நம்மை வணங்குகிறவனை நாம் வணங்குகிறதா?

நம் வீட்டு விளக்கென்று முத்தம் இடலாமா?

நமக்கு ஆகாதது நஞ்சோடு ஒக்கும்.

நமக்கு எல்லாம் எப்போது அமாவாசை? சூத்திரர்களுக்கு எப்போது அமாவாசை?

(கோமுட்டிகன் கேட்பது.)

நமது தலைமயிர் அவன் கையில் அகப்பட்டுக் கொண்டது. 13625


நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?

(இல்லை.)

நமன் அறியாமல் உயிர் போய் விடுமா?

நமன் எடுத்துக் கொண்டு போகும் பொழுது நழுவி விழுந்தவன்.

நமன் வாயிலே மண் போட்டாயா?

நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்க மாட்டான். 13630


நயத்தில் ஆகிறது பயத்தில் ஆகாது.

நய மொழியால் ஜயம் உண்டு.

நரசிம்மரை நரி மிரட்டியதாம்; நரியை நாய் மிரட்டியதாம்.

நரப்புப் புல்லைப் பிடுங்கினாலும் வரப்புப் புல்லைப் பிடுங்காதே.

நரா போகம் சரா போகம். 13635

(கரா போகம், சிலா போகம்.)


நரி அம்மணமாய்ப் போகிறதா?

நரி இடம் போனால் நல்லதா? வலம் போனால் நல்லதா என்றால் மேலே விழுந்து கடிக்காமல் போனால் நல்லது என்பது.

நரி ஊரை விட்டுப் புலி ஊருக்குப் போனேன்; புலி ஊரும் நரி ஊர் ஆயிற்று.

நரி ஊளையிட்டால் சமுத்திரம் மட்டும்.

நரி எதிர்த்தால் சிங்கம். 13640


நரி ஒரு சாலுக்கு உழப் போனது.

நரிக்கு அதிகாரம் கொடுத்தால் கிடைக்கு ஒரு கிடாய் கேட்கும்.

(இடம் கொடுத்தால், நாட்டாண்மை கொடுத்தால், கிடைக்கு இரண்டு ஆடு.)

நரிக்கு உபதேசம் செய்தாற் போல.

நரிக்குக் கல்யாணம்; நண்டுக்குப் பிராம்மணார்த்தம்.

நரிக்குக் கொண்டாட்டம்; நண்டுக்குத் திண்டாட்டம். 13645 


நரிக்குட்டிக்கு ஊளை இடப் பழக்க வேண்டுமோ?

நரிக்கு நண்டு ஆசை; நாய்க்கு எலும்பு ஆசை.

நரிக்கு மணியம் கொடுத்தால் கிடைக்குக் கிடை இரண்டு ஆடு கேட்கும்.

(இளக்காரம் கொடுத்தால், பெரிய தனம் கொடுத்தால்.)

நரிக்கு வால் முளைத்தாற்போல.

நரிக் குளிப்பாட்டி. 13650

(-தப்பித்துக் கொள்பவன்.)


நரிக் கூப்பாடு கடல் முட்டிப் போகும்.

(நரிக்கூச்சல். கடல்மட்டும்.)

நரிக் கொம்பு போல.

நரி கல்யாணத்துக்கு வெயிலோடு மழை.

நரி கல்யாணத்துக்கு நண்டு பிராமணார்த்தம்.

நரி கிணற்றில் விழுந்தால் தண்டடி தடியடி. 13655

(தண்டெடு, தடியெடு.)


நரி குசு விட்டதாம், கடல் கலங்கிப் போயிற்றாம்.

நரி கூக்குரல் சமுத்திரம் எட்டியது போல.

நரி கூப்பிட்டுக் கடல் ஒதுங்குமா?

(முட்டுமா?)

நரி கொழுத்தால் வளையில் இராது.

(நண்டு.)

நரி கொழுத்து என்ன? காஞ்சிரம் பழுத்து என்ன? 13660


நரி செத்த இடத்திலே நாய் வட்டம் போட்டது போல.

நரி தின்ற கோழி போல.

நரி நாலு கால் திருடன்; இடையன் இரண்டு கால் திருடன்.

நரி முகத்தில் விழித்தது போல.

நரி முன்னே நண்டு கரணம் போட்டது போல. 13665


நரியின் கல்யாணத்தில் வெயிலோடு மழை.

நரியின் கையில் இறைச்சியை வைத்த கதை.

நரியின் கையிலே குடல் கழுவக் கொடுத்தது போல.

நரியின் பிரசவத்துக்கு நாய் மருத்துவச்சி.

நரியை எழுப்பிப் புலியைக் கலைப்பது போல. 13670


நரியை ஏய்க்கப் பார்க்கிறதாம் தில்லை நண்டு.

நரியை நனையாமல் குளிப்பாட்டுவான்.

நரியை வெள்ளரிக்காய் மிரட்டினாற் போல.


நரி வாயிலே மண் போட்டாயா?

நரி வால்பற்றி நதி கடக்கல் ஆகாது. 13675


நரி வாலைக்கொண்டு கடல் ஆழம் பார்க்கிறது போல.

நரைத்த மயிர் கறுத்து நங்கை நாய்ச்சியார் கொண்டை முடிப்பாளாம்.

(கறுத்தால்தான்.)

நரைத்த தலைக்கு இட்ட எண்ணெயும் இதயமற்றவனுக்குப் போட்ட சோறும்.

நரைத்தவன் எல்லாம் கிழவனா?

நரைத்தவன் கிழவன், நாமம் இட்டவன் தாதன். 13680


நரை திரை இல்லை; நமனும் அங்கு இல்லை.

நல் இணக்கம் அல்லது அல்லற் படுத்தும்.

நல் இனத்தில் நட்பு வலிது.

நல் உடலுக்கு இளைப்பாற்றிக் கொடாவிடினும் நாவுக்குக் கொடு.

நல்ல அமைச்சு இல்லாத அரசு, விழியின்றி வழிச் செல்வான் போலாம். 13685


நல்ல ஆத்மாவுக்கு நாற்பது நாள்.

நல்ல ஆரம்பமே நல்ல முடிவு.

நல்ல இளங்கன்றே, துள்ளாதே.

நல்ல உயிர் நாற்பது நாள் இருக்கும்.

நல்ல எழுத்து நடுவே இருக்கக் கோணல் எழுத்துக் குறுக்கே போட்டது என்ன? 13690

(குறுக்கே போகிறது போல.)


நல்ல எழுத்து நடுக்கே; கோணல் எழுத்துக் குறுக்கே.

நல்ல கதை நீளம் இல்லை.

நல்ல காரியத்துக்கு நானூறு இடைஞ்சல்.

நல்ல காலத்திலேயே நாயகம்.

(நாளிலேயே,)

நல்ல குடிக்கு நாலத்தொரு பங்காளி. 13695

(நாளில் ஒரு.)


நல்ல குதிரை புல்லுக்கு அழுகிறது; நொண்டிக் குதிரை கொள்ளுக்கு அழுகிறது.

நல்ல குருவினை நாடிக் கொள்.

நல்லது எல்லாம் பொல்லாதது, நாய் எல்லாம் பசு.

நல்லதுக்கா நரையான் இடமாச்சு?

நல்லதுக்கா நாய்க்குணம்? 13700


நல்லதுக்கா நாய்மேல் சன்னதம் வந்தது?

நல்லதுக்கா வந்திருக்கிறது, நாய்மேல் சங்கராந்தி?

நல்லதுக்கு ஒரு பொல்லாதது; பொல்லாததுக்கு ஒரு நல்லது.

நல்லதுக்கு நாலு இடையூறு வரும்.

நல்லது கண்டால் இறைவனுக்கு என்பார் நல்லோர். 13705


நல்லது கண்டால் நாயகனுக்கு நல்குவார்.

நல்லது கெட்டது நாலுபேர் சொல்வார்கள்.

நல்லது கெட்டால் நாய்க்கும் கடை.

(வழங்காது.)

நல்லது செய்கிறவன் பெண்சாதியை நாய்க்குப் பிடித்துக் கட்டு.

நல்லது செய்து நடுவழியே போனால் பொல்லாதது போகிற வழியே போகிறது. 13710


நல்லது செய்வதில் நாலு இடையூறு வரும்.

நல்லது சொல்ல நாட்டுக்கு ஆகாது.

நல்லது சொல்ல நாடும் இல்லை; உற்றது சொல்ல ஊரும் இல்லை.

நல்லது சொல்லிக் கெட்டார் இல்லை.

நல்லது சொல்லி நடுவழியே போனாலும் பொல்லாதது போகிற வழியே போகும். 13715


நல்லது தெரியுமா நாய்க்கு?

நல்லது நாற்கலம்; ஊத்தை ஒன்பது கலம்.

நல்லது போனால் தெரியும்; கெட்டது வந்தால் தெரியும்.

நல்ல தேசத்துக்கு நாலு செம்பு.

நல்ல நாய் ஆனாலும் நரகலை நாடித்தானே செல்லும் 13720


நல்ல நாய்ச்சியார் கடைந்த மோர் நாழி முத்துக்கு நாழி மோர்.

நல்ல நாயைக் கிள்ளியா பார்க்க வேணும்?

நல்ல நாளில் நாழிப்பால் கறக்காது; அதிலும் கன்று செத்த கசுமாலம்.

நல்ல நாளில் நாழிப்பால் கறவாதது, கன்று செத்துக்கப்பால் கறக்குமா?

(கன்று செத்தால் கேட்க வேண்டுமா?)

நல்ல நாளில் நாழிப்பால் கறவாத மாடா ஆகாத நாளிலே அரைப்படி கறக்கும்? 13725 

நல்ல நாளிலே நாழிப் பால் கறவாதது, கோடை நாளிலே குறுணி கறக்குமா?

நல்ல நினைவை அநுசரித்தலே கெட்ட நினைவை நீக்கல்.

நல்ல பாம்பு ஆடியது கண்டு நாகப்பூச்சி ஆடியது போல.

நல்ல பாம்பை ஆட்டுகிற பிடாரன் நாகப்பூச்சியைக் கண்டு பயப்படுவானா?

நல்ல பிராணன் நாற்பது நாள். 13730


நல்ல பெண்டுக்கு ஒரு சொல்; நல்ல மாட்டுக்கு ஓர் அடி.

நல்ல மரத்தில் நச்சுக்கனி பழுக்காது.

நல்ல மரத்தில் நரையான் விழுந்த மாதிரி.

நல்ல மரத்தில் நல்ல பாம்பு குடியிருந்தாற் போல.

நல்ல மரத்தில் புல்லுருவி முளைத்தது போல. 13735

(புல்லுருவி பாய்ந்தாற் போல்.)


நல்ல மரம் நச்சுக் கனியைத் தராது; நச்சு மரத்திலே நல்ல கனியும் வராது.

நல்ல மனைவி நல்லதைக் கண்டால் நமது புருஷனுக்கு என்பாள்.

(என்று எடுத்து வைப்பாள்.)

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு; நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.

(பெண்ணுக்கு.)

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு; பட்டி மாட்டுக்குப் பத்துச் சூடு.

நல்ல மாட்டுக்கு ஓர் அடி; நல்ல மனுஷர்களுக்கு ஒரு சொல். 13740


நல்ல மாடு ஆனால் உள்ளூரில் விலை போகாதா?

நல்லவர் ஒரு நாள் செய்த உபகாரத்தை மறவார்.

நல்லவர் கண்ணில் நாகம் பட்டாலும் கொல்லார்

(கண்ணில் பட்ட நாகமும் சாகாது. அகப்பட்ட நாகமும்.)

நல்லவர்களுக்குச் சொல்லாமல் சாவு வரும்.

நல்லவர் கெட்டால் நாயும் சீந்தாது. 13745


நல்லவர் சங்காத்தம் நல்ல மணலில் விழுந்த நீர் போல உதவும்.

நல்லவரிடத்தில் நல்ல பாம்பும் சேரும்.

நல்லவரிடத்தில் நன்மை விளங்கும்.

நல்லவன் உறவை நாலு பணம் கொடுத்துச் சம்பாதிக்க வேண்டும்; கெட்டவன் உறவைப் பத்துப் பணம் கொடுத்து நீக்க வேண்டும்.

நல்லவன் என்று பெயர் எடுக்க நாள் செல்லும். 13750


நல்லவன் ஒருவன் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.

(ஒருவன் நடுவே நிற்... அற்றுப்போகும்.)

நல்லவனுக்கு அடையாளம் சொல்லாமற் போவது.

நல்லவனுக்கு ஒரு சொல்; நல்ல மாட்டுக்கு ஓர் அடி.

நல்லவனுக்குக் காலம் இல்லை.

நல்லவனுக்கு நாடு எங்கும் உறவு. 13755


நல்லவனுக்கு நாலு இடத்தில் மயிர்; போக்கிரிக்குப் பொச்சு வாயெல்லாம் மயிர்.

நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் நாட்டும் வேண்டாம்; சீட்டும் வேண்டாம்.

நல்ல வார்த்தை சொல்லி நாடியைத் தாங்குகிறான்.

(தாக்குகிறான்.)

நல்ல வார்த்தை சொன்னால் பொல்லாப்பு வராது.

நல்ல வீடு என்று பிச்சைக்கு வந்தேன்; கரியை வழித்துக் கன்னத்தில் தடவினார்கள். 13760


நல்ல வேலைக்காரன் ஆற்றோடே போகிறான்.

நல்ல வேளை முளைக்கிற இடத்தில் நாய் வேளையும்முளைக்கிறது.

நல்ல வேளையிலே ஞாயிற்றுக் கிழமையிலே.

நல்லறம் உள்ளது இல்லறம்.

நல்லறம் செய்வது, செய்யாது கேள். 13765

(கேள்-உறவினர்.)


நல்லாயிருந்தது தாதரே, பல்லை இளித்துக்கொண்டு பாடினது.

நல்லாக் கள்ளி விழித்தாற் போல.

நல்லார் ஒருவர்க்குப் பெய்யும் மழை எல்லார்க்கும் ஆம்.

(பெய்யும்.)

நல்லார்க்கு நாக்கில் உரை; பொன்னுக்குக் கல்லில் உரை.

நல்லார் கையில் நாகம் அகப்பட்டாலும் கொல்லார். 13770


நல்லார் சங்காத்தம் நல்ல மண்ணில் விழுந்த நீர்போல உதவும்.

நல்லார் நடக்கை தீயோர்க்குத் திகில்.

நல்லார் பொல்லாரை நடத்தையால் அறியலாம்.

நல்லாருக்குப் பெய்த மழை எல்லாருக்கும் ஆம்.

நல்லாரும் நல்ல பாம்பைப் போலத் தங்கள் வலிமையை அடக்கி மறைத்திருப்பார் சில வேளை. 13775


நல்லாரைக் கண்டால் நாய் போல; பொல்லாரைக் கண்டால் பூனை போல.

நல்லாரை நாவில் உரை; பொன்னைக் கல்லில் உரை.


நல்லாரை நாவு அழியப் பேசினால் பல்லாலே பதக்குப் புழுச் சொரியும்.

நல்லுடலுக்கு இளைப்பாற்றிக் கொடாவிடினும் நாவிற்குக் கொடு.

நல்லெருமை நாகு; நற்பசு சேங்கன்று; அடியாள் பெண்பெற. 13780

(இடையர் வழக்கு.)


நல்லோர்க்குப் பொறுமையே துணை.

நல்லோர் நடத்தை தீயோருக்குத் திகில்.

நல்லோரை ஏசினால் நாவு புழுக்கும்.

நல்லோரை நாடு அறியும்; பொன்னை நெருப்பு அறியும்.

நல்லோரை நாவில் உரை; பொன்னைக் கல்லில் உரை. 13785


நல்லோன் என வளர்.

நலம் உள்ளோன் கவலை தீர்க்க, நமக்கு அந்தக் கவலை ஏற்க நல்லது.

நவாபு அத்தனை ஏழை; புலி அத்தனை சாது.

நவாபு தர்பார்.

நவாபு நா அசைந்தால் நாடு அசையும்; பக்கிரி நாடு அசைந்தால் மோவாய்க் கட்டைதான் அசையும். 13790


நழுவ முடிந்தால் நம்பாதே.

நழுவப் போகிறவனைத் தழுவிப் பிடிக்கிறதா?

நளபாகம் பீமபாகம் போல.

நற்குணமே நல்ல ஆஸ்தி.

நற்சிங்கத்துக்கு நாயா முடி சூட்டுகிறது. 13795


நற் பெண்டாட்டிக்கு ஒரு சொல்.

நற் பெண்டிர் நல்லதைக் கண்டால் நமது நாயகனுக்கு என்பார்.

நற் பெண்டுக்கு ஒரு சொல்; நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.

நற் பெயரே பணத்தை விட மேலானது.

நறுக்குத் தெறித்தாற் போல நாலு வார்த்தை பேசு. 13800


நறுவிலிப்பழம் திருத்தினாற் போல.

நன்செய்க்கு ஏர் உழவு; புன்செய்க்கு நால் உழவு.

நன் பொருள் கொடுத்தும் நன்றாய் ஓது.

நன்மை ஆனதைக் கொடுத்தால் நஷ்டத்திலும் நஷ்டம்.

நன்மை கடைப்பிடி. 13805


நன்மை செய்தார் நன்மை பெறுவார்? தீமை செய்தார் தீமை பெறுவார்.

(தின்மை.)

நன்மை செய்திடில் நாலு இடையூறும் வரும்.


நன்மை செய்பவருக்கு இடையூறு செய்கிறதா?

நன்மை செய்யக் கன்மம் விடையாது.

நன்மை செய்யக் கனம். 13810


நன்மை செய்வார் நலம் பெறுவர்; தீமை செய்தால் தீமை பெற்று நலிவர்.

நன்மையும் தீமையும் இம்மையிலே தெரியும்.

நன்மையைப் பெருக்கித் தீமையைக் குறைத்தல் நன்னெறி.

நன்றாய் இருக்கிறது நாயகரே, பல்லை இளித்துக் கொண்டு ஆடுகிறது.

நன்றாய் இருந்தாலும், நல்லி சுட்ட பணியாரம். 13815


நன்றாய் இருந்தாலும் பார்க்க மாட்டார்கள்; கெட்டாலும் தாங்க மாட்டார்கள்.

நன்றாய் இருந்தாலும் பார்க்க மாட்டார்கள்; நலம் தப்பினாலும் பார்க்கமாட்டார்கள்.

(நலம் கெட்டாலும்.)

நன்றாய் முடிவது எல்லாம் நன்றே.

நன்றிக்கு நாய்; கர்வத்துக்குக் களிறு.

நன்றி கெட்ட நாய் தின்றதெல்லாம் மண்ணா? 13820


நன்றி கெட்டவன் நாயினும் கடையன்.

நன்றி செய்த கீரிப்பிள்ளையைக் கொன்ற கதை போல.

நன்றி செய்தவனை நாயின் கழுத்தில் கட்டு.

நன்றி மறந்தாரைத் தெய்வம் நின்று கொல்லும்.

நன்றி மறந்தாரை நடுங்கக் கேட்கும் தெய்வம். 13825


நன்றி மறவேல்.

நன்று செய் மருங்கில் தீது இல்.

(அகநானூறு.)

நன்னிலம் கரந்தை; நடு நிலம் கொளிஞ்சி.

நனவிலும் இல்லது கனவிலும் இல்லை.

(குறள், 1217 பரிமேலழகர் உரை.)

நனைத்துச் சுமக்கிறதா? 13830


நனைந்த கிழவன் வந்தால் உலர்ந்த விறகுக்குச் சேதம்.

(கிழவி.)

நனைந்த கோழி மயிர் போலே.

நனையா வறட்டி இல்லையெனில் ஆனைக்கால் நோய் இல்லை.

நஷ்டத்துக்கு ஒருவன், நயத்துக்கு ஒருவன்.

நஷ்டத்துக்குப் பலர்; நயத்துக்கு ஒருவனோ? 13835

நக்ஷத்திரத்தை எண்ண முடியாது; நாய்வாலை நிமிர்த்த முடியாது.

நா


நா அசைய நாடு அசையும்.

(நா அசைந்தால்.)

நா உள்ளவன் கழு ஏற மாட்டான்.

நா என்னும் அட்சரம் நாதன் இருப்பிடம்.

நாக்காலே போட்ட முடி பல்லால் கடித்து இழுத்தாலும் வருமா? 13840


நாக்கில் இருக்கின்றன நன்மையும் தீமையும்.

நாக்கில் தர்ப்பையைப் போட்டுப் பொசுக்க வேணும்.

நாக்கில் நரம்பு இல்லாமல் பேசுகிறான்.

நாக்கில் புண்ணாம்; நாய் நொண்டி நொண்டி நடந்ததாம்.

நாக்கிலே வெல்லம், நாவிலே விஷம். 13845


நாக்கிற்கு நரம்பு இல்லை.

(எலும்பு இல்லை.)

நாக்கு ஒன்றா இரண்டா?

நாக்குக்கு எலும்பு இல்லை; எப்படிப் புரட்டினாலும் புரளும்.

(நரம்பு இல்லை.)

நாக்குப் புரட்டர் போக்குப் புகல்வர்.

நாக்குப் புரண்டாலும் வாக்குப் புரளாது. 13850


நாக்கும் சீக்கும் பொல்லா.

நாக்கை அடக்கிப் பேசு.

நாக்கைத் தொங்கவிட்டுத் தலை ஆட்டும் நாய் போல.

நாக்கை நறுக்கி நாய்க்குப் போடவேண்டும்.

நாக்கைப் படைத்தவர்கள் நாலையும் சொல்வார்கள்; பல்லைப் படைத்தவர்கள் பத்தையும் சொல்வார்கள். 13855


நாக்கை விற்று ஆக்கித் தின்கிறது.

நாகசுரம் என்றால் தெரியாதா? மத்தம் போலக் கலகல என்னும்.

நாகசுரம் பொய், நாசனம் பொய், நாயினம் ஆயினேனே!

நாகப்பட்டினம்.

(-பைத்தியம்.) 


நாகப் பாம்பு ஆடினதைப் பார்த்து நாங்கூழ்ப் பூச்சியும் ஆடினதைப் போல. 13860


நாகம் கட்டினால் நாதம் கட்டும்.

நாகரிகப் பெண்ணுக்கு நாக்குத் தூக்கு மிச்சம்.

நாகலோகத்து நஞ்சு அமிர்தம் உண்டவன்.

நாகூர் உபசாரம்.

நாகைக்கும் காரைக்கும் காதம், காரைக்கும் கடவூருக்கும் காதம்; கடவூருக்கும் காழிக்கும் காதம்; காழிக்கும் தில்லைக்கும் காதம். 13865


நாகை செழித்தால் நாடு செழிக்கும்.

(நாகை பழுத்தால்.)

நாங்களும் கங்கணம் கட்டினது உண்டு; கழுத்துக்குக் கங்கணம் கட்டினது இல்லை.

நாங்கை நாலாயிரம்.

(-நாங்கூர்த்திருப்பதியில் நாலாயிரம் குடும்பத்தினர் வைணவர்கள்.)

நாச்சியாரும் ஒன்றைப் பற்றி வார்க்கிறாள்; நானும் ஒன்றைப் பற்றிக் குடிக்கிறேன்.

நாச்சியாரைக் காணாத இடத்திலே முணுமுணுப்பது போல. 13870


நாசியால் போகிற சீவனைக் கண்ட்ர கோடரியால் வெட்டுவதா?

நாசுவக் கிருதும் வண்ணான் ஒயிலும்.

நாசேத்தி மாத்ரா, வைகுண்ட யாத்ரா.

(நாசேத்தி மாத்ரா-என் கை மாத்திரை, தெலுங்கு.)

நாட்கள் பாரேல்.

நாட்டரசன் கோட்டை, நாலு பக்கம் ஓட்டை. 13875


நாட்டாண்மைக் காரனைப் பகைத்துக் கொண்டால் பழைய கந்தாயத்தைக் கேட்பான்.

நாட்டாண்மை யாரடா கொடுத்தார்? நானும் என் பெண்சாதியுமாக வைத்துக் கொண்டோம்.

நாட்டாள் பெற்ற குட்டி, நாகரிகம் பேச வல்ல குட்டி.

நாட்டாளுக்கு ஒரு சீட்டாள்; வெற்றிலை மடிக்க ஒரு வெற்றாளி.

நாட்டாளுக்கு ஒரு நீட்டாளோ? 13880


நாட்டான் பெண்சாதி என்றால் ஏன் என்பாள்; நாலு பேருக்குச் சோறு என்றால் ஊமை எனபாள்.

(ஊம் என்பாள்.)


நாட்டில் பஞ்சாங்கம் போனால் நட்சத்திரமும் போச்சோ?

நாட்டிலே விளைந்தால் நன்னாரி; மலையிலே விளைந்தால் மாகாளி.

நாட்டுக் கலப்பையால் நாலு முறை உழு.

நாட்டுக்கு அடுத்தது கொங்கராயனுக்கு. 13885


நாட்டுக்கு அரசன்; வீட்டுக்கு நாய்.

நாட்டுக்கு ஒரு தலைவன்; நாய்க்கு ஒரு எஜமானன்.

நாட்டுக்கு ஒரு மழை; நமக்கு இரண்டு மழை.

(ஓட்டைக் குடிசைக்காரன் கூற்று.)

நாட்டுக்குக் கரும்பு; வீட்டுக்கு வேம்பு

நாட்டுக்கு நல்ல துடைப்பம்;வீட்டுக்குப் பீற்றல் துடைப்பம். 13890


நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும் தோட்டிக்குப் புல் சுமை போகாது.

(தப்பாது.)

நாட்டுக்குப் பேச்சு; நாய்களுக்கு வார்த்தை.

நாட்டுக்குப் பொல்லான்; நாரணனுக்கு நல்லான்.

நாட்டுட்கு ராஜா; வீட்டுக்கு வேம்பு.

நாட்டுக் கோட்டைக் செட்டி, நாகபட்டினம் ராவுத்தர், மொட்டைப் பாப்பாத்தி மூவருக்கு மயிர்பிடி சண்டை நடந்தது போல. 13895


நாட்டுப் புறத்தான் மிட்டாய்க் கடையை விறைத்துப் பார்த்தது போல.

நாட்டை ஆளப் பெண் பிறந்தாலும் போட்ட புள்ளி தப்பாது.

நாட்டைக் கலக்கி நாளில் நாட்டினாலும் நாய் வாலை நிமிர்த்த அரனாலும் முடியாது.

நாடி அறிவான் நமன் அறிவான்.

நாடிக் கொடுப்பாரைக் கூடிக் கெடுக்கிறதா? 13900

(கெடுக்கிறது.)


நாடிய பொருள் கைகூடும்.

(கம்ப ராமாயணம்.)

நாடிய வரம் எல்லாம் நல்கும் நாயகன்.

நாடு அறிந்த பார்ப்பானுக்குப் பூணூல் ஏன்?

(வேணுமா? சாட்சியா? + பின்குடுமி எதற்கு?)

நாடு அறிந்த பெருச்சாளி.

நாடு ஆண்டதும் பாண்டவர்; காடு ஆண்டதும் பாண்டவர். 13905


நாடு ஆளப் பிறந்தானா? காடு ஆளப் பிறந்தானா?

நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை.

(எங்கும் மெலிந்தால் கேடு ஏதும் இல்லை.)


நாடு எல்லாம் உழைத்தாலும் நாய்வால் நேராகாது.

நாடு எல்லாம் பாதி; நாட்டை வாய்க்கால் பாதி ஜலம்.

நாடு ஏற்பன செய். 13910


நாடு ஓட நடு ஓடு.

(+ ஊர் ஓட ஒக்க ஓடு.)

நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகுமா?

(போகாது.)

நாடு காடு ஆயிற்று; காடு கழனி ஆயிற்று.

நாடு சுற்றியும் வீடு வந்து சேரவேண்டும்.

நாடு செழித்தால் கேடு ஒன்றும் இல்லை. 13915


நாடு செழித்தால் நாகரிகம் தானே வரும்.

நாடு பாதி; நங்கவரம் பாதி.

நாண் இல்லா நங்கை, பூண் இல்லா மங்கை.

நாணம் இல்லாக் கூத்தாடிக்கு நாலு திக்கும் வாசல்.

(சிறுக்கிக்கு நாலு புறமும்; நாணம் அற்றவனுக்கு.)

நாணம் இல்லாத பெண் நகைக்கு இடம் வைப்பாள். 13920


நாணம் இல்லாத கூத்தாடிக்கு நாலு திக்கும் கூத்தி.

நாணம் கெட்ட நாரி ஓணம் வந்தாள் வருவாளா?

நாணமும் அச்சமும் நாய்களுக்கு ஏது?

நாணமும் இல்லை; மானமும் இல்லை.

நாணி நடந்தாலும் மாமி குணம் போகுமா? 13925


நாணினால் கோணும்; நடந்தால் இடறும்.

நாணும் கால் கோணும்; நடக்கும் கால் இடறும்.

நாதமும் கீதமும் ஒத்திருப்பது போல வேதமும் போதமும் ஒத்திருக்க வேண்டும்.

நாதன் நாயைப் பிடித்தது போல.

நாதனின் பட்சம் ஆயிரம் லட்சம். 13930


நாதாரி வீட்டுக்கு நாலு பக்கம் வாசற்படி.

நாதி அற்றவன்.

நாதிக்காரன் பாதிக்காரன் போல.

நாம் ஒருவருக்குக் கொடுத்தால் நமக்கு ஒருவர் கொடுப்பார்.

நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும். 13935


நாம் நாயை மறந்தாலும் நாய் நம்மை மறக்குமா?

நாமம் போட்ட குரங்கு ஆனாலும் நடுத்தெருவிலே போக முடியுமா?


நாமம் போட்டவன் எல்லாம் தாதனா? விபூதி பூசினவன் எல்லாம் ஆண்டியா?

நாமம் போட்டு விடுவான்.

நாய் அங்கு ஓடியும் கெட்டது; இங்கு ஓடியும் கெட்டது. 13940


நாய் அடிக்கக் குறுந்தடியா?

(கோலா?)

நாய் அடிக்கக் கோல் தேவையா?

நாய் அடிக்கிற மாதிரி அடிக்கிறான்.

நாய் அடித்த துட்டு குரைத்தா காண்பிக்கிறது?

நாய் அடித்த படுபாவி சேய் இல்லாது அழுதானாம். 13945


நாய் அடையுமா, சிவலோக பதவி?

நாய் அறியுமா, ஒரு சந்திப் பானை?

நாய் அறியுமா, நறு நெய்யை.

நாய் அன்பு நக்கினாலும் தீராது.

நாய் ஆசை மலத்தோடு. 13950


நாய் ஆனாலும் அதற்கும் ஒரு வாயும் வயிறும் உண்டல்லவா?

நாய் ஆனாலும் சேய் போல.

நாய் இருக்கிற இடத்தில் சண்டை உண்டு.

நாய் இருக்கிற வீட்டில் திருடப் போனது போல.

நாய் இருப்பது ஓர் ஆள் இருக்கிற மாதிரி. 13955


நாய் இல்லா ஊரில் நரி அம்பலம் பண்ணிற்றாம்.

நாய் இறந்ததென்று ஓநாய் அழுததாம்.

நாய் உண்ட புலால் போல.

நாய் உதறினால் நல்ல சகுனம்.

நாய் உள்ள ஆட்டுக் கிடையில் நரி புகுந்தாற் போல. 13960


நாய் உளம்புதல் மாதிரி.

நாய் ஊளையிட்டா மழை பெய்ய வேண்டும்?

நாய் ஊளையிட்டால் ஊர் நாசம் ஆகும்.

நாய் ஊளையிட்டாற் போல.

நாய் ஊளையிடுவது நடுச்சாமத்துக்கு மேல். 13965


நாய் ஊளையும் சொல்லி நரி ஊளையும் சொல்லலாமா?

நாய் எங்கே? சிவலோகம் எங்கே?

நாய் எச்சில், தாய் எச்சில்.

நாய் என்றாலும் நாயகன்; பேய் என்றாலும் புருஷன்.

நாய் ஏறினாலும் உப்பு மூட்டை நாழி குறையும். 13970


நாய் ஒரு சிறு எலும்புக்கும் சந்தோஷம் அடையும்.

நாய் ஓட்டமும் சில்லறைப் பாய்ச்சலும்.

நாய் ஓட ஓட நரியும் விரட்டும்.

நாய் ஓடினால் துரத்தும்; துரத்தினால் ஓடும்.

நாய்க் கடிக்குச் செருப்படி. 13975


நாய்க் கடிக்கு நாற்பது நாள் பத்தியம்.

நாய்க்கடி பட்டவன் நாற்பதாம் நாள் குரைத்தாற் போல.

நாய்க்கடி பட்டவனுக்கு நாட்டில் ஒரு மூலிகை இல்லாது போகாது.

நாய்க்கடி போதாதென்று செருப்படி பட்டானாம்.

நாய்க்கடி விஷம் நாற்பத்தெட்டு நாள். 13980


நாய்க்கருக்கு அவசரம்; நாலு மூன்று மாசப் பாடு.

நாய்க்கால் சிறு விரல் போல.

நாய்க் காவல் தாய்க்காவல் போல.

நாய்க்கு அழகு வாலும், வாய்க்கு அழகு பல்லும்.

நாய்க்கு இரும்புக் கடையில் அலுவல் என்ன? 13985


நாய்க்கு உண்டான நல்லறிவும் இல்லை; பேய்க்கு உண்டான பெரிய அறிவும் இல்லை.

நாய்க்கு உண்டோ நாளும் கிழமையும்?

நாய்க்கு உண்டோ மலப் பஞ்சம்? நாவிதனுக்கு உண்டோ மயிர்ப் பஞ்சம்?

நாய்க்கு உபசாரம் நாள் முழுக்கச் சொன்னாலும் வள்வள் என்பதை விடாது.

நாய்க்கு உள்ள அறிவு கூட இல்லையா? 13990


நாய்க்கு உள்ள நன்றி நல்லவர்க்கும் கிடையாது.

நாய்க்கு எங்கே அடிப்பட்டாலும் காலைத்தான் நொண்டும்.

நாய்க்கு எச்சில் இலை; பேய்க்கு வேப்பிலை.

நாய்க்கு எதற்கு நன்னாரிச் சர்பத்து?

நாய்க்கு எதிரே நாய் வராமல் இருந்தால் காசிக்குப் போய்த் திரும்புமாம். 13995


நாய்க்கு எலும்புத் துண்டம் போட்ட மாதிரி.

நாய்க்கு என்ன வேலை? கஞ்சியைக் கண்டால் குடிக்க வேண்டியது; கதுப்பைக் கண்டால் குரைக்க வேண்டியது.

நாய்க்கு ஏது சேமியா பாயசம்?

(பால் பாயசம்?)


நாய்க்குத் தெரியுமா ஒரு சந்திப் பானை?

நாய்க்குத் தெரியுமா கொக்குப் பிடிக்க? 14025


நாய்க்குத் தெரியுமா தீவட்டி வெளிச்சம்?

நாய்க்குத் தெரியுமா தேங்காய் ருசி?

நாய்க்குத் தெரியுமா தோல் தேங்காய்?

நாய்க்குத் தெரியுமா நல்லெண்ணெய்ப் பானை?

நாய்க்குத் தேனீக் கொட்டினால் சுற்றிச் சுற்றிக் குரைக்குமாம். 14030


நாய்க்குத் நக்கத் தெரியும்; முதலைக்கு முழுங்கத் தெரியும்.

நாய்க்கு நடை போட்டால் நாய்க்கு அழகா? நாயகனுக்கு அழகா?

நாய்க்கு நடவாத நடப்பு நடக்கும்.

நாய்க்கு நரகல் சர்க்கரை.

நாய்க்கு நரிக் குணம். 14035


நாய்க்கு நருள் வேண்டும்; பூனைக்கு இருள் வேண்டும்.

நாய்க்கு நல்ல காலம் என்றால் நான்கு எச்சில் இலை கிடைக்கும்.

நாய்க்கு நல்ல தனம்; பேய்க்குப் பெரிய தனம்.

நாய்க்கு நல்ல ருசி தெரியுமா?

நாய்க்கு நறு நெய் இணங்காது. 14040

(தகுமோ?)


நாய்க்கு நாக்கில் வேர்க்கும்; காக்கைக்கு மூக்கில் வேர்க்கும்.

நாய்க்கு நாக்கில் ஜலம் சொட்டுகிறது போல.

(கொட்டுகிறது.)

நாய்க்கு நாணயம் எதுக்கு?

நாய்க்கு நாய் பகை; கோழிக்குக் கோழி பகை; வைத்தியனுக்கு வைத்தியன் பகை, தாசிக்குத் தாசி பகை.

நாய்க்கு நாலு சலாம் போட்டாலும் நன்றி கெட்டவனுக்குச் சலாம் போடாதே. 14045


நாய்க்கு நாலு மாசம்; பூனைக்கு ஆறு மாசம்.

நாய்க்கு நாறல் கஞ்சி வார்த்தாலும் அது வீண் போகாது.

நாய்க்கு நோய் ஏது?

நாய்க்குப் பகை நாயேதான்.

நாய்க்குப் பட்டம் கட்டினால் நாயகன் பேரைச் சொல்லும். 14050


நாய்க்குப் பயந்து நரியிடம் ஒளிந்தாற் போல.

நாய்க்குப் பல் நாற்பத்திரண்டு.


நாய்க்குப் பிறந்த நாயே.

நாய்க்குப் பிறந்தவனை இப்போதுதான் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

நாய்க்குப் பின்னால் வால் வளைவு; ஆனைக்கு முன்னால் கை வளைவு. 14055


நாய்க்குப் புண் வந்தால் நக்கும்; கோழிக்குப் புண் வந்தால் கொத்தும்.

நாய்க்குப் பூர்வ ஜன்ம வாசனை வந்தது போல.

நாய்க்குப் பெயர் முத்துமாலை; அதற்கு ஆக்கிப் படைக்கிறது வரகந் தவிடு.

நாய்க்குப் பெரிய தனம் தந்தால் விநாடிக்கு ஒரு தரம் கடிக்காதா?

நாய்க்கும் ஈக்கும் தடை இல்லை. 14060


நாய்க்கும் உண்டு சூல் அழகு.

(சூல் அழகிடும்.)

நாய்க்கும் உதவாது; நளவனுக்கும் உதவாது.

நாய்க்கும் தன் வீடுதான் பெரிது.

நாய்க்கும் தெளியும் நாலாம் மாதம்.

நாய்க்கும் நரிக்கும் கல்யாணம் ஆனால் உனக்கு என்ன ஆச்சு? எனக்கு என்ன ஆச்சு? 14065


நாய்க்கும் நாகத்துக்கும் தலை உயிர் நிலை.

நாய்க்கும் நாய்க்குடைக்கும் என்ன சம்பந்தம்?

நாய்க்கும் பருத்திக் கடைக்கும் என்ன சம்பந்தம்?

நாய்க்கும் பேய்க்கும் உறவு இல்லை.

நாய்க்கும் பேய்க்கும் கோவில் பெயராம். 14070


நாய்க்கு மட்டையோடு தேங்காய் கிடைத்தது போல.

நாய்க்கு மீசை முளைத்தால் நாவிதனுக்கு என்ன வேலை?

நாய்க்கு முழுத் தேங்காய் கிடைத்தாற் போல

(முழுத் தேங்காய் தக்குமா? தகுமா?)

நாய்க்கு முறை இல்லை.

நாய்க்கு மூத்தாள் தாய்க்கும் ஈயாள். 14075

(மூத்தாள்.)


நாய்க்கு வால் போனால் என்ன? கழுதைக்குப் பல் போனால் என்ன?

நாய்க்கு வாழ்க்கைப் பட்டால் குரைக்க வேணும்; பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளிய மரத்தில் ஏற வேணும்.


நாய்க்கு வாழ்ந்து நாலு பிள்ளை பெற்றாலும் தாய்க்கு உதவி.

நாய்க்கு வெண்டயம் கட்டினால் நாயகனுக்கு அழகு.

(நாயகனுக்குப் பெருமை.)

நாய்க்கு வெண்டயம் போட்டது போல. 14080


நாய்க்கு வேர்வை நாக்கிலே சொட்டும்.

நாய்க்கு வேலை இல்லை; அதைப் போல் அலைச்சல் இல்லை.

நாய்க்கு வேலையும் இல்லை; நிற்க நேரமும் இல்லை.

நாய்க் கூத்துக் கட்டினால் குரைக்க வேணும்.

நாய் கக்கித் தின்றது போல. 14085


நாய் கடித்ததற்கும் செருப்பால் அடித்ததற்கும் சரி.

(அடித்தாற் சரி,)

நாய் கடித்ததும் அல்லாமல் செருப்படியும் படவேண்டும்.

நாய் கடித்த வீட்டில் நீராகாரம் சாப்பாடு.

நாய் கடித்தால் கூட வைத்துக் கட்டக் காசு இல்லை.

நாய் கடித்தால் செருப்பால் அடிக்கலாமா? 14090

(அடி)


நாய் கத்தினால் நமனும் பயப்படுவான்.

நாய் கருப்புக் கட்டியைக் கடித்தாற் போல.

நாய்களிலுமா ஜாதி வித்தியாசம்?

நாய் காசிக்குப் போன மாதிரி.

நாய் காணிற் கற்காணாவாறு. 14095

(பழமொழி நானூறு.)


நாய் கிழடானாலும் மலம் தின்னும் புத்தி போகாது.

நாய் குட்டி போட்ட இடமும் நாரத்தை பட்ட இடமும் பாழ்.

நாய் குப்பை மேட்டிலே; பேய் புளிய மரத்திலே.

நாய் குரைக்கப் பேய் நடுங்கும்.

நாய் குரைத்துக் காது செவிடானது; நாய் கடித்து கால் ரணமானது. 14100


நாய் குரைத்துக் குட்டி தலையில் வைத்தது போல.

நாய் குரைத்து நத்தம் பாழாகுமா?

நாய் குரைத்து நந்தவனம் பாழாகாது.

நாய் குரைத்து விடியுமா? கோழி கூவி விடியுமா?

நாய் கெட்ட கேட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு சந்தி. 14105

(ஞாயிற்றுக் கிழமை விரதமாம்.)


நாய் கெட்ட கேட்டுக்குத் தேங்காய்ப் பாலும் சோறுமா?

நாய் கெட்ட கேட்டுக்கு நடு வீட்டில் ஒரு சந்தியா?

நாய் கெட்ட கேட்டுக்குப் பூமரம் நிழலாம்.

நாய் கெட்ட கேட்டுக்கு மாமரத்து நிழல்; அது கெட்ட கேட்டுக்குப் புளி போட்ட கறி.

நாய் கெட்ட கேட்டுக்கு வெள்ளிக் கிழமை விரதமா? 14110


நாய் கெட்டால் குப்பையிலே.

நாய் கொடுத்ததாம் அரசு பதவி; சிங்கமும் அதை ஏற்றுக் கொண்டதாம்.

நாய் கொண்டு போன பானையை ஆர் கொண்டு போனால் என்ன?

நாய் கோவிலுக்குப் போவானேன்? கோவில் காத்தவன் தண்டம் இறுப்பானேன்?

நாய்ச் சகவாசம் சீலையைக் கிழிக்கும். 14115


நாய் சண்டை நாலே விநாடிதான்.

நாய் சத்திரத்திலே போனாலும் நக்குத் தண்ணீர்.

நாய் சந்தைக்குப் போகிற மாதிரி.

நாய் சந்தைக்குப் போச்சாம்; அங்கும் தராசுக் கோலால் அடிபட்டதாம்.

நாய் சந்தைக்குப் போய் மொந்தையடி வாங்கிற்றாம். 14120


நாய் சந்தைக்குப் போனதென்று நரியும் சந்தைக்குப் போனதாம்.

நாய் சாம்பலிற் சுருட்டினாற் போல.

நாய் சிங்கத்துக்குப் பட்டம் கட்டுமா?

நாய் சிலிர்த்தால் நல்ல சகுனம்.

நாய் சொப்பனம் கண்டாற் போல. 14125


நாய்த் தூக்கம் போல.

நாய்த் தோல் செருப்பு ஆகுமா?

நாய்த் தோலில் கட்டி வரும் நல்லதொரு பெருங்காயம்.

நாய் தன் கடமையில் தவறியதென்று கழுதை ஆத்திரப் படுவானேன்?

நாய் தின்றதோ, நரி தின்றதோ, யார் கண்டார்கள்? 14130


நாய் துப்பட்டி வாங்கினாற் போல.

நாய் தொட்ட சட்டி நல்லதுக்கு உதவாது.

(சட்டிக்கு விமோசனம் ஏது?)

நாய் தொட்ட பாண்டம். 


நாய் நக்க நக்கக் கல் தேயும்.

நாய் நக்கிக் குளம் வற்றி விடுமா? 14135


நாய் நக்கிச் சமுத்திரம் குறையுமா?

நாய் நக்கிப் பிழைக்கும்; காக்கை கத்திப் பிழைக்கும்.

நாய் நக்கிப் பிழைக்கும்; கோழி குத்திப் பிழைக்கும்.

நாய் நக்கிய கற்சட்டி.

நாய் நக்கிய சட்டியை நாய்க்கே போடு. 14140


நாய் நக்கினாற் போல.

நாய் நடு ரோட்டில் உறங்கும்; சேய் தாய் மடியில் உறங்கும்.

நாய் நம்மைக் கடித்தால் நாம் நாயைக் கடிக்கிறதா?

நாய் நல்லதானால் குணம் நல்லதாகுமா?

நாய் நல்ல வழி காட்டும்; பூனை பொட்டை வழி காட்டும். 14145


நாய் நன்றி மறவாது; பசு கன்றை மறவாது.

நாய் நாலு காதம் ஓடினாலும் குதிரை வேகம் ஆகுமா?

நாய் நுழையலாம்; நான் நுழையக் கூடாதாம்.

நாய் நொண்டி ஆனாலும் எச்சில் இலை கண்டால் ஓடத்தான் செய்யும்.

நாய்ப் பஞ்சம் நக்கித் தீரும்; கோழிப் பஞ்சம் கொத்தினால் போல. 14150

(கொத்தினால் தீரும்.)


நாய் நடு ரோட்டில் உறங்கும்; சேய் தாய் மடியில் உறங்கும்.

நாய்ப் பிட்டத்தில் தேள் கொட்டினால் நாய்தான் நக்க வேணும்.

நாய்ப் பிட்டத்தில் தேன் வைத்த மாதிரி.

நாய்ப் பிறவி.

நாய்ப் பீயை மிதிப்பானேன்? நல்ல தண்ணீர் வார்த்துக் கழுவுவானேன்? 14155


நாய்ப் புண்ணுக்குச் சாம்பல் மருந்து.

நாய்ப் புத்தியைச் செருப்பால் அடி.

நாய் பகைத்தால் நாழி அரிசியோடே; பேய் பகைத்தால் ஒரு பிள்ளையோடே.

நாய் பட்ட பாடு தடிக் கம்புக்குத் தெரியும்.

நாய் பல்லைக் கெஞ்சுகிறாற் போல. 14160


நாய் பிடிக்க மனிதன் குரைத்தானாம்.

நாய் பிடுங்கினாற் போல.


நாய் பின்னோடே நாலைந்து குட்டிகள்; பீப்பன்றிகள் பின்னோடே பத்தெட்டுக் குட்டிகள்.

நாய் பூபாளம் பாடுகிறது.


நாய் பெற்ற தெங்கம் பழம். 14165


நாய் பொல்லாதது ஆகுமா? நல்ல பசு மாடு ஆகுமா?

நாய் போல அலைகிறான்.

நாய் போல் அலைந்தாலும் நாலு காசு கிடைக்கும்.

நாய் போல் உழைத்தாலும் வாய்ச் சோறு இல்லை.

நாய் போல் ஏன் எறிந்து விழுகிறாய்? 14170

(எரிந்து.)


நாய் போல் குரைத்து நடுத் தெருவில் நிற்பானேன்?

நாய் மடி சுரந்தால் என்ன? சுரக்காமற் போனால் என்ன?

நாய் மலையைப் பார்த்துக் குரைத்ததாம்; பேய் மரத்தைப் பிடித்துக் குலுக்கிற்றாம்.

நாய் மனிதனைக் கடித்தால் அதற்காக மனிதன் நாயைக் கடிப்பதா?

நாய் மாதிரி இளைப்பு வாங்குகிறது. 14175


நாய் மாதிரி காத்துக் கிடந்தேன்.

நாய் மாதிரி சுருட்டிக் கொண்டு படுத்துக் கிட.

நாய் மாதிரி விழுவான்; நரி மாதிரி குழைவான்.

நாய் முகத்திலே மீசை முளைத்தால் அம்பட்டனுக்கு என்ன லாபம்?

நாய் முழுத் தேங்காயை உருட்டுகிற மாதிரி. 14180


நாய் முன் தின்னாதே; கொதி வந்து விடும்.

நாய் மூத்திரம் குத்துக் கல்லில்.

நாய் மேல் ஏறி வையாளி விட்டால் என்ன? வீழ்ந்தால் என்ன?

நாய் மேல் ஏறி வையாளி விட்டாற் போல.

நாய் மோப்பம் பிடிக்கிற மாதிரி. 14185


நாய் ராஜ்யத்தில் காதல் ஏது? கல்யாணம் ஏது?

நாய் ராஜாவுக்கு எச்சில் இலை கப்பம்.

நாய் வந்தால் நாழி எண்ணெய்க்குக் கேடு; பேய் வந்தால் ஒரு பிள்ளைக்குக் கேடு.

நாய் வயிற்றில் நரி பிறக்குமா?

நாய் வயிற்றில் நாலு; பன்றி வயிற்றில் பத்துப் பிறந்தது போல. 14190


நாய் வயிற்றைப் போல்.

நாய் வளர்த்தால் நல்வழி காட்டும்.

நாய் வாசலைக் காத்து என்ன? கையில் இல்லாதவன் பணக்காரனைக் காத்து என்ன?

நாய் வாய்ச் சீலை போல.

நாய் வாய்ப்பட்ட தேன் நல்லது ஆகுமா? 14195


நாய் வாய் வைத்தது போல.

(+ வேலையைச் செய்கிறது.)

நாய் வாயில் அகப்பட்ட முயல் போல.

நாய் வாயில் கோல் இட்டால் லொள் லொள் என்றுதானே குரைக்கும்?

நாய் வாயில் கோல் இடலாமா?

(கொடுத்தது போல, விட்டது போல.)

நாய் வாயில் நெய் சொட்டுகிறது என்றால் கேட்பவருக்கு மதி இல்லையா? 14200


நாய் வாயிலும் நாலு சோறு.

நாய் வாயை வைத்தது போல் வேலை செய்கிறது.

நாய் வால் அசைந்தாலும் பிடுங்க வராது.

நாய் வாலிலே தேன் வைத்தால் ஆருக்குக் கூடும்?

நாய் வாலுக்கு மட்டையை வைத்துக் கட்டினாற் போல. 14205

(புளிச்சையை வைத்து.)</small


நாய் வாலைக் குணக்கு எடுக்கலாமா?

(+ பொல்லாக் குணத்துக்கு நல்ல மருந்து உண்டா?)

நாய் வாலைக் குறை நீக்கலாமா?

நாய் வாலைக் கொண்டு சமுத்திரத்தை அடைக்கலாமா?

நாய் வாலை நறுக்க நாவிதன் வேண்டுமா?

நாய் வாலை நிமிர்த்தப் பேயால் ஆகுமா? 14210


நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

நாய் வாலை நிமிர்த்தவும் முடியாது; பேய்க் காலைப் பார்க்கவும் முடியாது.

நாய் வாலைப் பற்றி ஆற்றில் இறங்கலாமா?

(வாலை நம்பி ஆற்றைக் கடக்கலாமா? ஆற்றில் நீந்தலாமா?)

நாய் வாலைப் பிடித்துக் கொண்டு காவிரியைக் கடக்க முடியுமா?

நாய் வாழ்ந்தால் என்ன? உறி அறுந்தால் என்ன? 14215


நாய் வாழ்ந்தால் என்ன? பூனை தாலி அறுத்தால் என்ன?

நாய் விற்ற காசு குரைக்குமா? மீன் விற்ற காசு நாறுமா?

(+ நாரத் தேங்காய் விற்ற காசு கசக்குமா? வேப்பெண்ணெய் விற்ற காசு கசக்குமா?)

நாய் விற்ற துட்டைக் குரைத்தா காண்பிக்கிறது?

நாய் வீட்டைக் காக்கும்; புலி காட்டைக் காக்கும்.

நாய் வீட்டைக் காக்கும்; பூதம் பணத்தைக் காக்கும். 14220


நாய் வீட்டைக் காக்கும்; பூனை அடுப்படியைக் காக்கும்.

நாய் வீட்டைக் காக்கும்; பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்.

நாய் வீட்டைச் சுற்றும்; நோய் உடலைச் சுற்றும்.

நாய் வேட்டை ஆடும்; குதிரை ஓட்டம் ஓடும்.

நாய் வேண்டும் என்றால் நரியைக் கொண்டு வருகிறான். 14225


நாய் வேதம் படித்தது போல.

நாய் வேஷம் போட்டால் குரைக்க வேண்டும்; பேய் வேஷம் போட்டால் ஆடவேண்டும்.

நாய் வேஷம் போட்டால் குரைத்துத்தான் ஆகவேண்டும்.

நாயகன் பட்சம் ஆயிரம் லட்சம்.

நாயம் கேட்டுக் கொண்டா காயம் உரைக்கிறார்கள்; அம்மியைக் கேட்டுக் கொண்டா மிளகாய் அரைக்கிறார்கள்? 14230


நாயன் இல்லாத நங்கை இருந்தென்ன போயென்ன?

நாயாகக் கத்திப் பேயாகப் பறந்தாலும் முடியாது.

நாயா சிங்கத்துக்கு நற்பட்டம் கட்டுகிறது?

நாயாடி மக்களோடு போய் ஆட வேண்டாம்.

நாயாய்ப் பிறந்தாலும் நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும். 14235


நாயால் ஆகுமா கொக்குப் பிடிக்க?

நாயிடம் தேன் இருக்கிறது; நக்கவா, துக்கவா, எதுக்கு ஆகும்?

நாயின் அவசரம் வாலுக்குத்தான் தெரியும்.

நாயின் கழுத்தில் நவரத்தினம் கட்டினாலும் நாய்க்குத் தெரியுமா அதன் மகிமை?

நாயின் காதில் தேன் அடை வைத்தது போல. 14240


நாயின் கோபத்தைப் பற்றிப் பூனையைக் கேட்டால் தெரியும்.

நாயின் நிழல் போல வாழ் நாள், கடிகம் பால் கழிவது போல.

நாயின் பின்னோடு நாலைந்து; பன்றியின் பின்னோடு பத்தெட்டு.

நாயின் புண்ணை நாய் கக்கும். 


நாயின் மலத்தை மிதிப்பானேன்? நல்ல தண்ணீர் வார்த்துக் கழுவுவானேன்? 14245


நாயின் முதுகில் அம்பாரியைக் கட்டினது போல.

நாயின்மேல் ஏறி வையாளி விட்டால் என்ன? விழுந்தால் என்ன?

நாயின் வாயில் கோலைக் கொடுக்கிறதா?

நாயின் வாயில் சிக்கிய எலியைப் போல.

நாயின் வாலைக் குணக்கு எடுக்கலாமா? 14250


நாயின் வாலைப் பன்னீராண்டு குழலில் இட்டாலும் எடுக்கும்போது வளைந்துதானே இருக்கும்?

நாயின் விசுவாசம் பூனைக்கு வருமா?

நாயின் வீரம் தன் வீட்டு வரையில்தான்.

நாயினும் கடையேன்.

நாயும் எறும்பும் போல. 14255


நாயும் கரிச் சட்டியும் போல.

(களிச் சட்டியும்.)

நாயும் காகமும் போலச் சண்டை போடாதே.

நாயும் சரி, நாவியும் சரி உனக்கு.

நாயும் தன் நிலத்துக்கு ராஜா.

நாயும் தீண்டாத உணவு; புலையனும் தீண்டாத யாக்கை. 14260


நாயும் நரியும் ஊளையிட.

நாயும் நரியும் ஒன்றாகுமா?

( நன்றாகுமா?)

நாயும் நரியும் போல.

நாயும் நாயும் போல.

நாயும் பசுப்பட்டு மோரும் விலை போகிறபோது பார்க்கலாம்.{{float_right|14265} }

நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு.

(பாரதியார்.)

நாயும் பூனையும் அடித்துக் கொண்டது போல.

நாயும் பூனையும் போல.

நாயும் பேயும் பிள்ளை ஆகுமா?

நாயும் வர உறியும் அறுந்தவன் சீலம். 14270


நாயும் வயிறு வளர்க்கும் நடு ஜாமத்திலே.

நாயும் வளர்த்து நரகலையும் வாருவானேன்?


நாயே நல்லப்பா, பேயே பெரியப்பா.

நாயே பேயே, நங்கண்ண, செங்கண்ண, தாயார் வளர்த்த தறிதலையே, பாட்டுக்கும் உனக்கும் எவ்வளவு தூரம்?

நாயேன் சொல் அம்பலத்துக்கு ஏறுமா? 14275


நாயை அடக்க நாலு பேர்; நாவை அடக்க நாலாயிரம்.

நாயை அடிக்கக் குறுந்தடி வேண்டுமா?

நாயை அடிக்காதே; நாய் முள்ளைச் சுமக்காதே.

நாயை அடித்த பாவம் குரைத்தால் போகுமா?

நாயை அடித்தால் காலைத் தூக்கும். 14280


நாயை அடித்தாலும் நாலு காசு கிடைக்குமா?

நாயை அடித்துப் பல்லியைப் பார்ப்பானேன்?

நாயை அடித்துப் போட்டது போல.

நாயை அடிப்பதற்கு நல்ல தடி வேண்டுமா?

நாயை அடிப்பானேன்? காலைக் கடிப்பானேன்? 14285


நாயை அடிப்பானேன்? காலைப் பிடிப்பானேன்?

நாயை அடிப்பானேன்? பல் இழிவு பார்ப்பானேன்?

நாயை அடிப்பானேன்? நடு வீடெல்லாம் கழிவானேன்?

நாயை அடிப்பானேன்? மலத்தைச் சுமப்பானேன்?

நாயை உசுப்பச் செய்து நரி உள்ளே நுழைந்து கொண்டது. 14290


நாயை எங்கே அடித்தாலும் காலில்தான் நோக்காடு.

நாயை ஏய்க்குமாம் நரி, அதையும் ஏய்க்குமாம் ஒற்றைக் கால் நண்டு.

நாயை ஏவினால் அது தன் வாலை ஏவுமாம்.

(ஏவுகிறது.)

நாயை ஓட்டிப் பேயைக் கூட்டி வந்தானாம்.

நாயை ஓட்டிவிட்டு நடுக் குப்பையில் உட்காரவா வேண்டும்? 14295


நாயைக் கட்டிக் கொண்டு அழுவது போல.

நாயைக் கட்டி மாரடித்து நல்ல மனிதனும் நாயாய்ப் போனான்.

நாயைக் கண்டா காயம் கரைக்கிறது?

நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.

நாயைக் கண்டால் நகர்ந்து போ. 14300


நாயைக் கண்டால் நரிக்கு லட்டுண்டை மாதிரி.

நாயைக் கண்டால் பேயும் விலகும்.


நாயைக் கண்டால் மனிதனுக்குப் பயம்; மனிதனைக் கண்டால் நாய்க்கும் பயம்.

நாயைக் கண்டு காயம் கரைக்கிறதா?

(கண்டுதானா கரைக்கிறது?)

நாயைக் கண்டு பயந்த முயல் போல. 14305


நாயைக் கிளப்பிவிட்டு முயலைப் பிடிப்பது போல.

நாயைக் குளிப்பாட்டி நட்டுள்ளே வைத்தாலும் வாலைக் குழைத்துக் கொண்டு மலம் தின்னப் போகும்.

நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும், அது வாலைக் குழைத்துக் கொண்டு வாசலில்தான் படுக்கும்.

நாயைக் குளிப்பாட்டிப் பல்லக்கில் ஏற்றினாலும் எலும்பைக் கண்டால் வள்ளென்று தாவும்.

நாயைக் கூப்பிடுகிற நேரத்தில் மலத்தையும் எடுத்துச் சாணத்தையும் பூசிவிடலாம். 14310


நாயைக் கொஞ்சினால் வாயை நக்கும்.

(மூஞ்சியை.)

நாயைக் கொண்டு போனால் மிளாவைக் கொண்டு வரலாம்.

நாயைக் கொழுக்கட்டையால் எறிந்தது போல.

நாயைக் கொன்ற பாவம் நாலு ஜன்மம் எடுத்தாலும் போகாது.

நாயைச் சீ என்றால் காத வழி போகும். 14315


நாயை நல்லம்மா என்றும், பேயைப் பெத்தப்பா என்றும் பேச வேண்டிய காலம்.

நாயைப் பற்றிக் கேட்பாரும் இல்லை; நடு வீட்டில் வைப்பாரும் இல்லை.

நாயைப் பார்க்க நரி தேவலை; ஊரைப் பார்த்து ஊளை இட.

(இடுகிறது.)

நாயைப் பிடித்துக் கட்டிப் பிச்சை போட்டாற் போல.

நாயைப் பிடித்து நரிக்குக் கல்யாணம் செய்து வைத்தது போல. 14320


நாயைப் பூஜித்தாலும் அதனிடம் புனுகு உண்டாகுமா?

நாயைப் போல் அலைந்தாலும் நாலு காசுக்கு வழி இல்லை.

நாயைப் போல் குழைகிறான்.

நாயைப் போல் நாக்கு நாலு முழம்.

நாயைப் போல் நான்கு யுகம் வாழ்ந்து என்ன? 14325


நாயைப் போல் பல்லை இளிக்காதே.

நாயைப் போல் பாடுபட்டால் ஆனையைப் போல் அரசாளலாம்.

நாயையும் சூக் காட்டி முயலையும் எழுப்பி விடுவது போல.

நாயையே திருடன் அடித்துக் கொண்டு போனால் யார் ஐயா குரைப்பது?

நாயை வளர்த்தால் நல்ல வழி காட்டும்; பூனையை வளர்த்தால் பொட்டை வழி காட்டும். 14330


நாயை விரட்டிவிட்டு நடுவழியில் படு.

நாயை வெட்டிச் சூக் காட்டினாலும் அது தன் வாலை ஆட்டும்.

நாயை வைத்துக் கொண்டு தானே குரைத்தாற் போல்.

நாயோடு சேர்ந்தாலும் நல்ல முயல் கிடைக்கும்.

நாயோடு படுப்பானேன்? தெள்ளுப் பூச்சியோடு எழுந்திருப்பானேன்? 14335


நார் அற்றால் கூடும்; நரம்பு அற்றால் கூடுமா?

நார் அறுந்தால் முடியலாம்; நரம்பு அறுந்தால் முடியலாம்; மனம் அறுந்தால் முடியலாகாது.

நார் இல்லாமல் மாலை தொடுக்கலாமா?

நாரசிங்கமும் இரணியனும் போல.

நாரத்தங்காய்க்கு இட்ட உப்பும் நாத்தனாருக்கு இட்ட சாதமும் எவ்வளவானாலும் போதா. 14340


நாரத்தங்காய்க்குப் போடுகிற உப்பும் நாத்தனாருக்குப் போடுகிற சாதமும் வீண் போகா.

(நாட்டுப் பெண்ணுக்கு.)

நாரத்தங்காய் விற்ற காசு கசக்குமா?

நாரத்தை காய்க்க நாய்ப்பலி இட வேண்டுமாம்.

நாரதா, கலகப்ரியா.

நாராசம் காய்ச்சி நடுச் செவியில் விட்டாற் போல். 14345

(பார்த்தாற் போல.)


நாராயணன் ஒருவன்தான்; இரண்டாமவன் ஒருவனும் இல்லை.

நாராயணன் குடுமியை நாராலே பின்னிக் கோபாலன் குடுமியைக் கோரையாலே பின்னி.

நாராயணன் கோவிலுக்கு நாலு வாசல்.

நாரும் பூவும் போல.

நாரை அறியாத குளமும் நமன் அறியாத உயிரும் உண்டோ? 14350

நாரையைப் பார்க்க நரியே தேவலாம், ஊரைப் பார்த்து ஊ ளை இட.

நால்வர் கூடினால் தேவர் சபை.

(தேவர் வாக்கு.)

நால்வர் வாக்குத் தேவர் வாக்கு.

(வேதவாக்கு.)

நால்வரோ தேவரோ?

நாலடி இரண்டடி கற்றவனிடம் வாயடி கையடி அடிக்காதே. 14355

(நாலடி-நாலடியார், இரண்டடி-குறள்.)


நாலாம் தலைமுறையைப் பார்த்தால் நாவிதனும் சிற்றப்பன் ஆவான்.

நாலாம் பாதம் நாழி பிடித்து உட்காரும்; எட்டாம் மாதம் எடுத்து அடி வைக்க வேணும்.

(குழந்தை.)

நாலாம் பிறை பார்த்தால் நாய் அலைச்சலாய்த்தான் முடியும்.

நாலாம் பேற்றுப் பெண் நாதாங்கியை விற்று உண்ணும்.

நாலாவது பெண், நாதாங்கி முளைக்கும் திக்கு இல்லை. 14360

(பெண் பிறந்தால் நாதாங்கியும் கிடையாது.)


நாலு அடி அடித்துப் போர்மேல் போட்டாயிற்று.

நாலு ஆறு கூடினால் பாலாறு.

(நாலாறு-கெளண்டின்ய ஆறு, அகஹரம் பெண்ணையாறு; செய்யாறு, கிளியாறு.)

நாலு கரண்டி நல்லெண்ணெய்; நாற்பத்தாறு தீவட்டி; வாரார் ஐயா சுப்பையா; வழிவிடடி மீனாட்சி.

நாலு காரை கூடினால் ஒரு பழுதை.

நாலு கால் சோமாரியும் ஒரு காலிலே இறங்கினாற் போல. 14365

(இரண்டு காலிலே.)


நாலு காலிலே நரி கள்ளன்; இரண்டு காலிலே இடையன் கள்ளன்.

நாலு செத்தை கூடினது, ஒரு கத்தை.

நாலு தடவை தப்பினவனுக்கு நமன் பயம் ஏது?

நாலு தலைமுறைக்கு முன் நாவிதனும் சிற்றப்பன் ஆவான்.

நாலு பறையனடி, நானூறு பள்ளனடி; ஆள் இல்லாப் பாவமல்லோ ஆளேற்றம் கொள்கிறான்? 14370

(-நானூறு பள்ளிகளின் ஓலம்.)


நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுத்தெருவிலே சோறு; ஒரு பிள்ளை பெற்றவளுக்கு உறியிலே சோறு. 


நாலு பிள்ளையும் நல்ல பிள்ளையானால் மேலும் பிள்ளை பெறுவானேன்?

நாலு பேர் கூடினது சபை.

நாலு பேர் போன வழி.

(இரு பொருள்.)

நாலு பேர் போன வழியில் நாமும் போக வேண்டும். 14375


நாலு பேர் வாக்குத் தெய்வ வாக்கு.

நாலு பேர் வாழ நடுவிலே நாம் வாழ.

நாலு பேருக்குச் சொல்லி மனசிலே போட்டு வைக்கிறவன்.

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி; ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி.

நாலும் கிடக்க நடுவிலே நாத்தனார் தலையைச் சிரைத்தாளாம். 14380


நாலு மாதம் வரையில் நாய்கூடப் பிள்ளையை வளர்க்கும்.

நாலு முழத்தில் நடுவில் ஒரு முழம்.

நாலு வீட்டில் கல்யாணம்; நாய்க்கு நாய் தொங்கோட்டம்.

நாலு வீட்டில் நக்கிக் குடிக்கிற நாய்க்கு ஏன் இந்த வாய்?

நாலு வீட்டுச் செல்ல நாய் நடுத் தெருவில் அலைகிறது. 14385


நாலு வீடு ஆடுது; ஒரு வீடு ஆடுது.

நாலு வேதமும் தெரியும்; ஆறு சாஸ்திரமும் தெரியும்; வாய் மட்டும் ஊமை.

நாவல் பழுத்தால் நாடு செழிக்கும்.

நாவலும் பாவலும் ரத்த புஷ்டிக்கு.

நாவாய் கவிழ்த்த நாய்கன் போல. 14390


நாவிதன் செய்தி அறிந்து குடுமியைப் பத்திரப் படுத்தினானாம்.

நாவில் பிறக்கும் நன்மையும் தீமையும்.

நாவு அசைய நாடு அசையும்.

நாவுக்கு இசைந்தால் பாவுக்கு இசையும்.

நாவுக்கு எலும்பு இல்லை; எப்படிப் புரண்டாலும் புரளும். 14395


நாவை அடக்கி ஆளாவிட்டால் அது தன்னையே ஆளும்.

நாவைச் சுற்றிப் பிடிக்கிற தாரத்துக்கு நாள் கேட்டானாம் கிணறு வெட்ட.

(நாள் பார்த்தானாம்.)

நாழி அரிசிச் சாதம் சாப்பிட்டாலும் நாய் நாலு வீட்டில் நக்கித் தான் தின்னும்.


நாழி அரிசி சோறு உண்டவன் நமனுக்கு உயிர் கொடான்.

நாழி அரிசிச் சோறு தின்றாலும் நாய்க்குக் குடல் நிறையாது. 14400


நாழி அரிசி நாய் கொண்டு போனால் ஞானமும் கல்வியும் பேய் கொண்டு போகும்.

நாழி உடைந்தால் நெல்லுக்குச் சேதமா?

நாழி உப்பும் நாழி அப்பும் நாழி ஆன வாறு போல.

(சிவ வாக்கியர்.)

நாழி உள்ளார்க்கு நானாழி கடனோ?

(கடன் நொய்.)

நாழி நெல்லுக்கு ஓர் அந்து. 14405


நாழி நெல்லுக்கு ஒரு புடைவை விற்றாலும் நாய் நிர்வாணந்தான்.

(நாய்ப் பிட்டம் அம்மணம்.)

நாழிப் பணம் கொடுத்தாலும் மூளிப்பட்டம் போகாது.

நாழிப் பால் வார்த்தாலும் நடுச் சொல்வர் அறிவுடையோர்.

நாழி மாவுக்கு நானாழி வெள்ளம்.

(வெல்லம்.)

நாழி முகவாது நானாழி. 14410

(நல்வழி.)


நாழியாய சமுத்திரத்தில் நானாழி மொள்ளலாமா?

நாழியை மூளி என்றால் மரக்காலைப் பொட்டை என்பது போல்.

நாழிவர மூதேவி; மரக்கால் வரச் சீதேவி.

(நாழிவரச் சீதேவி...மூதேவி.)

நாள் ஆற்றுகிறது நல்லார் ஆற்றார்.

நான் ஏர் உழும் போதே வரப்பிலே ஏற்றினாளாம். 14415


நான் ஒரு மேனியும் பொழுது ஒரு வண்ணமும்

நான் ஏறினால் கீழ் ஏறும்.

நாள் செய்வது நல்லுற்றார் செய்யார்.

(நல்லோர்.)

நாள் சென்ற கொடை நடைக்கூலி ஆகும்.

நான் சென்ற கொடை நடைக் கூலியும் ஆகாது. 14420


நாள் வருமட்டும் நாராய்த் தோலாய் இழுத்துக் கொண்டிருக்கும்.

நாளுக்கு நாள் நகர்ந்தது சாண் அம்மானை.

நாளுக்கு நான் நரியாய்ப் போகிறது. 


நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை.

(நாளும் கோளும், வெற்றிவேற்கை)

நாளும் கோளும் நன்மை செய்யும். 14425


நாளை என்பது இல்லை என்பதற்கு அடையாளம்.

(ஏமாற்றுவதற்கு.)

நாளை என்பது நமன் நாள் ஆகும்.

நாளை என்பதைவிட இல்லை என்பவர் நல்லவர்.

நாளைக்குக் கல்யாணம்; பிடியடி பாக்கு வெற்றிலையை.

நாளைக்குத் தாலி கட்டுகிறேன்; கழுத்தே சுகமாய் இரு. 14430


நாளைக்குத் தின்கிற பலாப்பழத்திலும் இன்றைக்குத் தின்கிறகளாப் பழம் நல்லது.

நாளைக்குத் தெரியும் நாச்சியாத்தாள் மாரடி.

(நாளைத் தெரியும்.)

நாளைக்கும் சீர் நடக்கத்தான் போகிறது; இன்றைக்கும் சீர் இருக்கத்தான் போகிறது.

நாளைக் குறைத்தால் தன்னைக் குறைக்கும்.

நாளை மடக்கினால் நம்மை மடக்கும். 14435


நாளை வரும் நெற்குவியலிலும் இன்று உள்ள படி விதை பெரிதென்று விழுங்கலாமா?

நாளை வரும் பலாக்காயை விட இன்று வரும் களாக்காய் நல்லது.

(தின்கிற பழத்தைவிட)

நாற்கலக் கூழுக்கு நானே அதிகாரி.

நாற்பதுக்குமேல் சென்றால் நாய்க் குணம்.

(நாய்க்குச் சரி.)

நாற்பதுக்குமேல் நாய்க்குணம்; அம்பதுக்கு ஆட்டம்; அறுபதுக்கு ஓட்டம். 14440


நாற்பது வந்தால் நரை வரும்.

நாற்றக் கூழுக்கு அழுகல் மாங்காய்.

நாற்று முப்பது சாற்று முப்பது.

நாறல் சடலம் நலம் இல்லா மட்பாண்டம்.

நாறல் சாணியை மிதிப்பானேன்? நல்ல தண்ணீர் வார்த்துக் கழுவு வானேன்? 14445

(நாறல் மலத்தை.)


நாறல் சோற்றுக்குப் பதம் பார்க்கிறது ஏன்?

நாறல் தூற்றல் நரிக்குக் கொண்டாட்டம். 


நாறல் மலத்தை மிதிக்கவும் வேண்டாம்; நல்ல தண்ணீர் விட்டுக் கழுவவும் வேண்டாம்.

நாறல் மீனைப் பூனை பார்த்தாற் போலே.

நாறல் வாயன் சேர்த்து வைக்கக் கர்ப்பூர வாயான் அநுவிக்கிறான். 14450

(தேடியதை அழிக்கிறான்.)


நாறல் வாயன் சேர்த்து வைத்தான்; சர்க்கரை வாயன் செலவு செய்தான்.

நாறல் வாயன் தேட ஊத்தை வாயன் உண்டானாம்.

நாறல் வாயன் தேடினதை நல்ல வாயன் தின்றாற்போல்.

நாறல் வாயன் தேடினான்; கர்ப்பூர வாயன் அழித்தான்.

நாறல் வாயனிடத்தில் இருந்தாலும் நச்சு வாயனிடத்தில் இராதே. 14455


நாறலையும் மீறலையும் கண்டால் நாத்தனாருக்குக் கொடுப்பாள்.

நான் ஆம் ஆம் என்றால் ஹரி ஹரி என்கிறான்.

நான் இட்ட மருந்தும் போக ஒட்டாது; நன்னாரி வேரும் சாக ஒட்டாது.

நான் இருக்கு மட்டும் ஊர் இருக்கும்.

நான் உங்கள் கடனைத் தீர்க்கிறவரைக்கும் நான் சாப்பிடுகிற சாப்பாடு சாப்பாடு அல்ல; மலம். 14460


நான் என்றால் இளக்காரம்; என் மலம் என்றால் பலகாரம்.

(என் சொத்து.)

நான் என்றால் உனக்குக் கடை வாயில் மலம்.

நான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைத்தது.

நான் ஒன்றை எண்ண, விதி ஒன்றை எண்ணிற்று.

நான் கண்டதே காட்சி; நான் கொண்டதே கோலம். 14465

(கொள்கை.)


நான் கண்ணாரக் கண்டேன், நாராயணக் குழம்பு வேண்டாம்.

நான் கத்தை கொடுத்தேன்; அவன் மெத்தை கொடுத்தான்.

நான்காம் மாதம் நாய்க்கும் மெருகிடும்.

நான் காய்ச்சிக் குடிக்கிறேன்: நீ பீய்ச்சிக் குடி.

நான் கிடக்கிறேன் வீட்டிலே; என் பேச்சுக் கிடக்கிறது நாட்டிலே. 14470 


நான் கெட்டாலும் எதிரி வாழ வேண்டும்.

நான் கொக்கோ? கொங்கு நாட்டானே.

நான் சாப்பிட்டது சாப்பாடு அல்ல; மலம்.

நான் செத்த நாளும் இல்லை; நீ அழுத நாளும் இல்லை.

நான் செத்து ஏழு பிறப்புப் பிறந்தாலும் அவன் செய்த நன்கொடையை மறக்க மாட்டேன். 14475

(நன்றியை.)


நான் செய்கிறதற்கு நீதான் ஆர்?

நான் செருப்பு விடுகிற இடத்தில்கூட அவன் நிற்க யோக்கியன் அல்ல.

நான் தேடிப் பிச்சை போட, நாரிகள் எல்லாம் வந்தார்கள் தெய்வம் ஆட.

நான் நட்டேன்; நாதன் பயிர் ஆக்கினான்.

நான் நீட்டின விரலை மடக்க மாட்டேன்; நீட்டி நீட்டிப் பேசுவேன். 14480


நான் நோகாமல் அடிக்கிறேன்; நீ ஓயாமல் அழு.

நான் நோகாமல் அடித்தேன்; நீ ஓயாமல் அழுதாய்; அவன் போகாமல் வந்தான்.

நான் பட்ட பாடு நாய்கூடப் படாது.

நான் படும் பாடு பஞ்சுதான் படுமோ?

(அருட்பா.)

நான் பிடித்த முயலுக்கு மூன்றேகால் என்கிறதா? 14485


நான் பெண் பிறந்து தெருவிலே நிற்கிறேன்.

நான் பெற்றால் என்ன? என் அண்ணன் பெற்றால் என்ன?

நான் போனால் சண்டை வரும்; எங்கள் அக்காள் போனால் மயிரைப் பிடித்து இழுத்து வருவாள்.

நான் போனால் மோட்சம் போகலாம்.

(நான்-அகங்காரம்.)

நான் வந்தேன் நாற்றமும் போச்சு. 14490


நான் வருகிறேன் பெண்ணுக்கு இருக்க; என் அம்மாள் வருகிறாள் பிள்ளையை எடுக்க.

(பெண்ணைக் காத்திருக்க.)

நான் வாழ்ந்த வாழ்வைக் சொல்லுகிறேன்; அண்டை வீட்டுக்காரன் இருக்கிறானா? பார். 

நான்று கொண்டு சாகச் சாண் கயிறு பஞ்சமா?

நானிலந் தன்னில் நாயகம் கல்வி.

நானும் அறியேன், அவளும் பொய் சொல்லாள். 14495

(கம்பர் கூற்று.)


நானும் ஓட்டை; என் நடு வீடும் பொத்தல்.

நானும் நரைத்து நரை மண்டை ஆனேன்; காடு கடக்கக் கண்டது புதுமை.

நானும் பிழைத்தேன்; என் கந்தலும் பிழைத்தது என்றானாம்.

நானும் பூசாரி; எனக்கும் சுவாமி ஆட்டம் உண்டு.

நானும் வந்தேன், மாமியார் வீட்டு நாற்றமும் போயிற்று. 14500


நானோ நானல்லவோ என்று திரிகிறான்.

(அகம்பாவம்.)

நி


நிச்சயம் இல்லாத வாழ்வு; நிலை இல்லாத காயம்.

நிசங்கனுக்குக் கோட்டை முற்றுகை கண்டது உண்டா?

நிசம் ஒன்று பல தீங்கு நீக்கும்.

நிசம் நிச போகம்; வியாசம் வியாச போகம். 14505


நித்தம் என்றால் முத்தமும் சலிக்கும்.

(முற்றமும்.)

நித்தம் சாவார்க்கு அழுவார் உண்டா?

நித்தம் நடந்தால் முற்றமும் சலிக்கும்.

(நித்தம் போனால்.)

நித்திய கண்டம் பூர்ணாயுசு.

நித்திய கல்யாணம்; பச்சைத் தோரணம். 14510


நித்திய தரித்திரத் தகப்பனாரை நின்ற நிலையில் வரச் சொன்னாள்.

நித்திய தரித்திரனுக்கு ஆசை அதிகம்.

நித்தியம் கிடைக்குமா அமாவாசைச் சோறு?

நித்திரைக்கு நேரிழை சத்துரு.

(நித்திரை சத்துரு, நேரிழை சத்துரு.)

நித்திரை சுகம் அறியாது; பசி ருசி அறியாது. 14515


நித்திரையிலும் தண்ணீர்ப்பால் குடிக்கிறது இல்லை.

நிதம் கண்ட கோழி நிறம் கொடுக்கும்.

(நிறம் கெடும்.)

நிதானியே நேராணி.

நிதி அற்றவன் பதி அற்றவன்.

நிந்தனை சொல்லேல். 14520

(+ நீதியைக் கடைப்பிடி.)


நிமித்தம் பார்க்கிறவன் இரண்டகக்காரி மகன்; பொருத்தம் பார்க்கிறவன் பொல்லாங்கன் மகன்.

நிமிர்ந்தால் வானம்; குனிந்தால் பூமி. 

நிமிர்ந்து போட்டது என்ன? குனிந்து எடுத்தது என்ன?

நிமிஷ நேரம் நிற்கும் இன்பம் சிற்றின்பம்.

நிமிஷ நேரம் நீடிய இன்பம். 14525


நிமைப் பொழுதேனும் நில்லாது நீச உடல்.

நியாய சபைத் தீர்ப்பு, சேற்றில் நாட்டிய கம்பம் போல; மதில்மேற் பூனை போல.

நிர்வாண தேசத்தில் சீலை கட்டினவள் பைத்தியக்காரி.

நிர்வாண தேசத்தில் நீர்ச் சீலை கட்டினவன் பைத்தியக்காரன்.

(நிர்வாணப் பட்டணத்தில்.)

நிரக்ஷர குக்ஷி. 14530


நிருபன் ஆன போதே கருவம் மெத்த உண்டு.

நில்லாத காலடி நெடுந்தூரம் போகும்.

நில்லாது ஏதும்; நிலையே கல்வி.

நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் அழிய வேண்டும்.

(மடிய வேண்டும்.)

நிலத்து அளவே பயிர்; குலத்து அளவே குணம். 14535


நிலத்துக்கு ஏற்ற நீரும் குலத்துக்கு ஏற்ற சீரும்.

நிலத்துக்கு ஏற்ற விதை; குலத்துக்கு ஏற்ற பெண்.

நிலத்துக்குத் தகுந்த களியும் குலத்துக்குத் தகுந்த குணமும்.

(சனியும்.)

நிலத்தைப் பொறுத்து எரு விடு.

நிலம் ஓய்ந்து வாழ்க்கைப்பட முடியுமா? 14540


நிலம் கடக்கப் பாயலாமா?

நிலம் பொட்டல் அல்ல; தலைதான் பொட்டல்.

நிலவுக்கு ஒளித்துப் பரதேசம் போனதுபோல.

(அஞ்சி போகலாமா?)

நிலாக் காய்கிற இடமும் தெரியாது; நெல் விளைகிற பூமியும் தெரியாது.

நிலாப் புறப்பட எழுந்தானாம்; நெல்குழி வரைக்கும் நகர்ந்தானாம். 14545


நிலை இல்லான் வார்த்தை நீர்மேல் எழுத்து.

நிலை குலைந்தால் சீர் குலையும்.

நிலைமை தப்பியவனுக்கு நீதி.

நிலையாமை ஒன்றே நிலையானது.

நிலையிற் பிரியேல். 14550 

நிலைவிட்டால் நீச்சல்.

நிழல் அருமை வெயிலில் தெரியும்.

நிழல் கடக்கப் பாயலாமா?

நிழல் நல்லது; முசிறு ஒட்டாது.

(கெட்டது பொல்லாதது.)

நிழலின் பெருமை வெயிலில் போனால் தெரியும். 14555


நிழலுக்கு இடம் கொடுத்தாலும் நீருக்கு இடம் கொடாதே.

நிழலுக்கும் கனவுக்கும் ஒத்தது ஆக்கை.

நிற்க நிழல் இல்லை; சாயச் சுவர் இல்லை.

(உட்காரச் சுவர் இல்லை.)

நிற்க ஜீவன் இல்லாமல் போனாலும் பேர் நிரப்புக் கட்சி.

நிறம் சுட்டாற் போம்; குணம் கொன்றாற் போம். 14560


நிறை குடத்தில் பிறந்து நிறை குடத்தில் புகுந்தவன்.

நிறைகுடம் தளும்பாது.

நிறைகுடம் நிற்கும்; குறை குடம் கூத்தாடும்.

நிறைகுடம் நீர் தளும்பல் இல்.

(பழமொழி நானூறு.)

நிறைந்த ஆற்றிலே பெருங்காயம் கரைத்தது போல. 14565


நிறைந்த சால் நீர் கொள்ளுமா?

நிறை பொதியிலே கழுதை வாய். வைத்தாற் போல்.

நிறையக் குளித்தால் கூதல் இல்லை.

நிறையக் குறுணி வேண்டாம்; தலை தடவிக் குறுணி கொடு.

நிறையக் கேள்; குறையப் பேசு. 14570


நிறைய முழுகினால் குளிர் இல்லை.

நின்ற இடத்தில் நெடுநேரம் போனால் நின்ற மரமே நெடு மரம்.

(போனாலும்.)

நின்ற மரமே நெடுமரம்.

நின்ற வரைக்கும் நெடுஞ்சுவர்; விழுந்தாற் குட்டிச் சுவர்

(நின்றால்)

நின்ற வெள்ளத்தையும் வந்த வெள்ளம் கொண்டு போயிற்று. 14575


நின்றால் நெடு மரம்; விழுந்தால் பன மரம்.

நின்றாற்போல் விழுந்தால் தலை உடையும்.

நின்று தின்றால் குன்றும் மாளும்.

(கரையும், குறையும்.)

நின்று போட்டதும் இல்லை; குனிந்து எடுத்ததும் இல்லை.

நினைக்க முத்தி அண்ணாமலை. 14580


நினைக்கும் முன் வருவான்; நினைப்பதும் தருவான்.

நினைத்தது இருக்க, நினையாதது எய்தும்; நினைத்தது வந்தாலும் வந்து சேரும்.

நினைத்ததும் கறி சமைத்ததும்.

நினைத்த நேரம் நெடு மழை பெய்யும்.

நினைத்த போது பிள்ளை பிறக்குமா? 14585


நினைத்துக் கொண்டாளாம் கிழவி, வயசுப் பிள்ளைக்கு வாழ்க்கைப்பட.

(மாலையிட.)

நினைப்பின் வழியது உரை.

நினைப்பு எல்லாம் பிறப்பு.

நினைப்புக் குடியைக் கெடுத்ததாம்; நேர்வானம் பிட்டத்தைக் கெடுத்ததாம்.

நினைப்புப் பிழைப்பைக் கெடுத்தது; நீர்த்த தண்ணீர் உப்பைக் கெடுத்தது. 14590


நினைவே கனவு.

நிஜமாகத் தூங்குகிறவனை எழுப்பலாம், பொய்யாகத் தூங்குகிறவனை எழுப்ப முடியாது.

நிஜாம் அலி தண்டில் நிஜார்க்காரனைக் கண்டாயா?

(கண்டதுண்டா?)
நிஷ்டூரன் கண்ணைத் தெய்வம் கெடுக்கும்; நீதிமான் கண்ணைப் பரிதானம் கெடுக்கும். 
நீ


நீ அவல் கொண்டு வா; நான் உமி கொண்டு வருகிறேன்; ஊதி ஊதித் தின்னலாம். 14595


நீ அறையில் ஆட்டினாய்; நான் அம்பலத்தில் ஆட்டினேன்.

நீ இருக்கிற அழகுக்கா திருட வந்தாய்?

நீ இழு, நான் இழு, மோருக்கு வந்த மொட்டச்சி இழு.

நீ உளறாதே; நான் குழறுகிறேன்.

நீக்குப் போக்குத் தெரியாமல் நேர்ந்தபடி. 14600


நீ கஜகர்ணம் போட்டாலும் நடக்காது.

நீ கூத்திக்கு வாழ்க்கைப்பட்டுக் குடியிருப்பு வீடு, செப்பனிட்டாலும் நான் வாத்திக்கு வாழ்க்கைப்பட்ட வயிற்றெரிச்சல் தீராது.

நீ கோபம் மா லாபம்.

(-உன் கோபம் என் லாபம். தெலுங்கு.)

நீச்சம் அறியாதவரை வெள்ளம் கொண்டு போகும்.

நீச்சக் கடலிலே நெட்டி மிதிக்கிறது போல. 14605


நீச்சத் தண்ணீருக்குக் கெஞ்சினவன் பசும்பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான்.

நீச்சு நிலை இல்லாத ஆற்றிலே நின்று எப்படி முழுகுகிறது?

நீசர் ஆனவர் நிலைபெறக் கல்லார்.

நீசனை நீசன் நோக்கில் ஈசன் ஆவான்.

(ஜோதிடம்.)

நீ செத்தால் உலகம் எல்லாம் எறும்பாய்ப் போகுமா? 14610


நீ செய்த நன்றிக்கு நான் நன்றியாப் பெற்றுப் பேர் இட வேணும்.

நீ சொம்மு நா சொம்மே, நா சொம்மு நீ சொம்மே.

(உன் சொத்து என் சொத்தே; என் சொத்து உன் சொத்தே. தெலுங்கு.)

நீ சொல்கிறது நிஜம் ஆனால் நாக்கினால் மூக்கைத் தொடு.

நீட்டவும் மாட்டார்; முடக்கவும் மாட்டார்.

(மடக்கவும்.)

நீட்டிச் சுருக்கின் மூண்டது நெடும்பகை. 14615

(நீட்டிக் குறுக்கினால்.) 

நீட்டி நீட்டிப் பேசுகிற வேளாளப் பையா, உங்கள் துரைசாணி எங்கள் சிறைச்சாலையில் இருக்கிறான்.

நீட்டின விரலில் பாய்வது போல.

நீட்டு வித்தை ஏறாது.

(ஏறுமா?)

நீண்ட கை குறுகாது.

(+ சொத்திக்கை நீளாது.)

நீண்ட கை நெருப்பை அள்ளும். 14620


நீண்ட தச்சும் குறுகிய சொல்லும்.

(தச்சனும்.. கொல்லனும்.)

நீண்ட பல்காரன் சிரித்தாலும் அழுவது போல் இருக்கும்.

நீண்ட புல் நிற்க நிழலாமா?

நீ தடுக்கிலே நுழைந்தால் நான் கோலத்திலே நுழைவேன்.

நீதி அற்ற பட்டணத்திலே நிறை மழை பெய்யுமா? 14625


நீதி இல்லா ஊருக்குப் போகிறதே வழி.

நீதி இல்லாத நாடு நிலவு இல்லாத முற்றம்.

நீதி கேளாமல் தலை வெட்டுவார்களா?

நீதிமான் தீவினை செய்யிற் பிழைப்பானா? நீதி இல்லாதவன் நீதி புரிந்தால் மரிப்பானா?

(பீதி இல்லாதவன்.)

நீந்த அறியாதவனுக்கு வெள்ளம். 14630


நீந்த அறியாதவனை ஆறு இழுத்துப் போகும்.

(கொண்டு போகும்.)

நீந்தத் தெரியாமல் குளத்தில் இறங்கமாட்டேன் என்றானாம்.

நீந்த மாட்டாத மாட்டை வெள்ளம் கொண்டு போகும்.

நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போகிறது.

நீ நட்சத்திரந்தான். 14635

(நட்சத்திரம் - குரங்கு.)


நீ படித்த பள்ளியிலேதான் நானும் படித்தேன்.

நீ பிறர்க்கு உதவி செய்தால் தெய்வம் உனக்கு உதவி செய்யும்.

நீ போய் அலப்பிவிட்டு வராதே; நான் போய் உளறிவிட்டு வருகிறேன்.

நீயும் நானும் அடா, சாறும் சோறும் அடா.

நீயும் நானும் அடி, எதிரும் புதிரும் அடி. 14640 


நீர் அடித்தால் நீர் விலகுமா?

(விலகாது.)

நீர் அழியச் சீர் அழியும்.

நீர் அளவே ஆகுமாம் நீராம்பல்.

நீர் ஆழம் கண்டாலும் நேரிழையார் நெஞ்சாழம் காண முடியாது.

நீர் ஆனாலும் மோர்; பேய் ஆனாலும் தாய். 14645


நீர் இருக்க மோருக்கு என்ன குறை?

நீர் இல்லா நாடு நிலவு இல்லா முற்றம்.

நீர் இல்லா நாடும் சீர் இல்லா ஊரும்.

நீர் இல்லையானால் மீன் இல்லை.

நீர் உயர நெல் உயரும். 14650


உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.

(நீர் போனால் மீன் துள்ளுமா?)

நீர் என்று சொல்லி நெருப்பாய் முடிந்தது.

நீர் என்று சொன்னால் நெருப்பு அவியுமா?

நீர் என்று சொன்னால் நெருப்பு அவிவதும் சர்க்கரை என்று சொன்னால் அதனால் வாய் இனிப்பதும் உண்டா?

நீர் ஏற நெல் ஏறும் 14655


நீர் ஓட்டித்தில் தெப்பம் செல்வதைப் போல.

நீர்க்கடன் நிழற்கடன் கொடுத்து வைத்தமட்டும் இருக்கும்.

நீர்க்குள் பாசிபோல் வேர்க் கொள்ளாது.

(வெற்றி வேற்கை.)

நீர் கண்ட இடத்தில் சாப்பிடு; நிழல் கண்ட இடத்தில் படுத்து உறங்கு.

நீர்க்குமிழி போல. 14660


நீர்ச்சிலை இல்லை; நெடு முக்காடா?

நீர்ச்சோறு தின்று நிழலில் இருந்தால் மலடிக்கும் மசக்கை வரும்.

(நிழலில் படுத்தால்.)

நீர்ப்பாடு மெய்யானால் கெளபீனம் தாங்குமா?

(நீர்ப்பாண்டு.)

நீர்ப்பாம்பு கடித்தாலும் ரஸப்பட்டியாகும்.

நீர் பெருத்தால் நெல் சிறுக்கும். 14665


நீர் போனால் மீன் துள்ளுமா?

(துள்ளும்.)

நீர் மடையும் அம்பலமும் நின்றவனுக்கு உண்டு.

நீர்மேல் எழுத்துக்கு நிகர்.


நீர்மேல் குமிழிபோல் நிலையில்லாக் காயம்.

நீர் மோருக்கும் கதியற்ற வீட்டிலே ஓமத்துக்கும் பசு நெய் கேட்டாற்போல. 14670


நீர் மோரும் சாதமும் நெடுநாளைக்கு இருந்தால் போதும்.

நீர் வளம் உண்டானால் நெல்வளம் உண்டாகும்.

நீர் வறண்டால் மீன் துள்ள மாட்டாது.

நீர் விளையாடேல்.

நீர் விற்ற காசு நீரோடு பேச்சு; மோர் விற்ற காசு மோரோடு போச்சு. 14675


நீர் வேலி கோப்பாய் நிலை செல்வம் ஆவார்.

(யாழ்ப்பாண வழக்கு.)

நீரகம் பொருந்திய ஊரகத்திரு.

நீரளவே ஆகுமாம் நீராம்பல்.

நீராலே விலகினாய் நீ; நான் நெருப்பாலே விலகினேன்.

நீரில் இறங்கினால் தவளை கடிக்குமா? 14680


நீரில் எழுத்தாகும் யாக்கை.

(நீதிநெறி விளக்கம்.)

நீரில் குமிழி இளமை.

(நீதிநெறி விளக்கம்.)

நீரும் கொல்லும்; நெருப்பும் கொல்லும்.

நீரும் சோறும் தின்று நிழலில் படுத்தால் மலடிக்கும் மயக்கம் வரும்.

(மசக்கை.)

நீரும் பாசியும் கலந்தாற் போல. 14685


நீரே பிராணாதாரம்.

நீரை அடித்தால் நீர் விலகுமா?

நீரை அடித்தால் வேறாகுமா?

நீரைக் கழுவி நிழலைப் புதைப்பது போல.

நீரைச் சிந்தினையோ? சீரைச் சிந்தினையோ? 14690


நீரைச் சுருக்கி மோரைப் பெருக்கு.

நீரைத் தொட்டாயோ, பாலைத் தொட்டாயோ?

நீரைத் தொட்டுத் தேனைத் தொட்டாற் போல.

நீரோடு வந்தது ஆற்றோடே போச்சு, பாலோடு வந்தது காலோடே வந்தது.

நீலம் கட்டுப்படப் பேசுகிறாள். 14695


நீலம் பிடிக்கிற வார்த்தை.

(பொய்.)

நீலத்துக்குக் கறுப்பு ஊட்ட வேண்டுமா?

நீலிக்குக் கண்ணீர் நிமையிலே,

(இமையிலே.)

நீலிக்குக் கண்ணீர் நெற்றியிலே; மாலிக்குக் கண்ணீர் மடிமேலே.

நீலிக்கு நிலக்கண்ணில் தண்ணீர். 14700


நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.

நீறு இல்லா நெற்றி பாழ்.

(+ நெய் இல்லா உண்டி பாழ்,)

நீறு பூத்த நெருப்புப் போல்,

நு


நுகத்துப் பகலாணி போல.

(பழமொழி நானூறு.)

நுங்கு தின்றவள் போகக் கூந்தல் நத்தியவன் அகப்பட்டது போல. 14705


நுட்பப் புத்திமான் திட்டச் சித்தனாவான்.

நுண்ணறிவுடையார் நண்ணுவார் புகழே.

நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.

நுண்ணிய ஞானம் உரைப்பார்கள்; சொன்னபடி ஒன்றும் நடவார்கள்.

(சொன்னதில்.)

நுண்பொருள் கொடுத்து நுண்ணியர் ஆவர். 14710


நுண்மை நுகரேல்.

நுணலும் தன் வாயாற் கெடும்.

(நாலடியார்.)

நுரை ஒத்ததுவே தரையில் பவிஷு.

நுரையைத் தின்றால் பசி போகாது.

(பசி போகுமா?)

நுழையாத வீடு இல்லை; அடிக்காத செருப்பு இல்லை. 14715


நுழை விட்டுச் செய், நூல் கற்று அடங்கு.

நுளையன் அறிவானா, ரத்தினத்தின் பெருமை?

நுளையன் பேச்சு அம்பலம் ஏறாது.

(அம்பலத்தில் ஏறுமா?)

நுனையிலே ஆசாரமா?

நுனிக்கொம்பில் ஏறி அடிக் கொம்பை வெட்டுவார்களா? 14720


நுனிப்புல் மேய்தல்.

(மேயந்தாற் போல.)

நுனி மரத்தில் இருந்து அடி மரத்தை வெட்டுபவன் போல்,

(மரத்தில் ஏறி.)

நுனியில் மேய்கிறது.


நூ


நூரணிப் பெண் ஊருணி தாண்டாது.

(நூரணி மலையாளத்தில் உள்ளதோரூர்.)

நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு. 14725

(நல்வழி.)


நூல் இல்லாமல் மாலை கோத்தது போல.

நூல் இழந்த நங்கை போல.

நூல் கற்றவனே மேலவன் ஆவான்.

நூல் முறை அறிந்து சீலத்து ஒழுகு.

நூலுக்கு ஏற்ற சரடு. 14730


நூலும் சூலும் சேரக் கூடாது.

(நூல்-பூணூல் கல்யாணம்; சூல்-சீமந்தக் கல்யாணம்.)

நூலும் புடைவையும் நூற்றெட்டுக் காலமா?

நூலைக் கற்றோர்க்கு உண்டு நுண்ணறிவு.

நூலைப் போல் சேலை; தாயைப் போல் மகள்.

நூற்க வேண்டுமானால் வெண்ணெய்க் கட்டிபோல் நூற்கலாம். 14735


நூற்றில் ஒன்று; ஆயிரத்தில் ஒன்று.

நூற்றுக் கிழவி போல் பேசுகிறாள்.

(பேசுகிறாள்.)

நூற்றுக்கு இருந்தாலும் கூற்றுக்கு அறைக்கீரைதான்.

(இரைதான்.)

நூற்றுக்கு இருப்பார் ஐம்பதில் சாகார்.

நூற்றுக்கு ஒரு பேச்சு. 14740


நூற்றுக்கு ஒரு பேச்சு; ஆயிரத்துக்கு ஒரு தலை அசைப்பு.

நூற்றுக்குத் துணிந்த துற்றுக் கூடை.

(கூற்றுக் கூடை.)

நூற்றுக்கு மேல் ஊற்று,

(+ ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.)


நூற்றெட்டு அடிக் கம்பத்திலே ஆடினாலும் பூமியில் வந்துதான் தானம் வாங்க வேண்டும்.

நூற்றைக் கெடுத்ததாம் குறுணி, 14745


நூறு ஆண்டு ஆயினும் கல்வியை நோக்கு.

நூறு குற்றம், ஆறு பிழை கொண்டு பொறுக்க வேண்டும்.

நூறு நாள் ஓறி ஆறு நாள் விடத் தீரும்.

நூறு பலம் மூளையை விட ஒரு பலம் இதயம் உயர்ந்தது.

நூறு பிள்ளை பெற்றவளுக்கு ஒரு பிள்ளை பெற்றவள் மருத்துவம் பார்க்கப் போனாளாம். 14750


நூறு வயசுக் கிழவன். ஆனாலும் நுழைந்து பார்க்க ஆசை.

நூறோடு நூற்றொன்று.

நூறோடு நூறு ஆகிறது; நெய்யிலே சுட்ட பணியாரம்.

நெ


நெகிழ்ந்த இடம் கல்லுகிறதா?

நெகிழ்ந்த இடம் பார்த்துக் கல்லுவது போல. 14755


நெசவாண்டிக்கு ஏன் கோதிபில்லா?

(கோதிபில்லா-குரங்குக் குட்டி தெலுங்கு.)


நெசவு நெய்பவனுக்குக் குரங்கு எதற்காக?

நெஞ்சில் ஈரம் இல்லாதவன்.

நெஞ்சிலே கைவைத்துச் சொல்.

நெஞ்சு அறி துன்பம் வஞ்சனை செய்யும். 14760


நெஞ்சு அறியப் பொய் சொல்லலாமோ?

நெஞ்சு அறியாத பொய் இல்லை.

நெஞ்சு இலக்கணம் தெரியாதவனுக்குப் பஞ்ச லட்சணம் தெரிந்து பயன் என்ன?

நெஞ்சு ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை.

நெஞ்சு மிக்கது வாய் சோறும். 14765


நெஞ்சைப் பஞ்சைப் போட்டுத் துவட்டியிருக்கிறது.

நெட்டி ஒரு பிள்ளை, சர்க்கரைக்குட்டி ஒரு பிள்ளையா?

நெட்டைக் குயவனுக்கும் நேரிட்ட கம்மாளனுக்கும் பொட்டைக்கும் புழு ஏர்வை.

நெட்டையனை நம்பினாலும் குட்டையனை நம்பக்கூடாது.

நெடியார் குறியாரை ஆற்றிலே தெரியலாம். 14770


நெடுங்கடல் ஓடியும் நிலையே கல்வி.

நெடுங்காலம் நின்றாலும் நெல் முற்றிப் பணம் இரட்டி.

நெடுங் கிணறும் வாயாலே தூரும்.

நெடுந்தீவான் சரக்கு வாங்கப் போனது போல.

(சரக்கு-பிரசவ மருந்துச் சரக்கு; யாழ்ப்பாண வழக்கு.)

நெடும் பகலுக்கும் அஸ்தமனம் உண்டு. 14775


நெடு மரம் விழுந்தால் நிற்கிற மரம் நெடுமரம்,

நெய் இல்லாத உண்டி பாழ்.


நெய் உருக்கி மோர் பெருக்கி நீர் அருக்கிச் சாப்பிட வேண்டும்.

நெய்க் குடத்தில் எறும்பு மொய்த்தாற் போல.

நெய்க் குடத்தைத் தலையில் வைத்து எண்ணமிட்டவனைப் போல. 14780


நெய்க் குடம் உடைந்தால் நாய்க்கு விருந்து.

(வேட்டை.)

நெய்க்குத் தொன்னை ஆதாரமா? தொன்னைக்கு நெய் ஆதாரமா?

நெய்கிறதை விட்டு நினைத்துக் கொண்டானாம் கைக்கோளன்.

நெய்கிறவனுக்கு ஏன் குரங்குக்குட்டி?

நெய் நேத்திர வாயு; அன்னம் அதிக வாயு. 14785


நெய் முந்தியோ, திரி முந்தியோ?

நெய்யும் திரியும் போனால் நிற்குமா விளக்கு?

நெய்யும் நெருப்பும் சேர்ந்தாற் போல.

நெய்யை உருக்கித் தயிரைப் பெருக்கிச் சாப்பிட வேண்டும்.

நெய்வதை விட்டு நினைத்துக் கொண்டானாம் கைக்கோளன். 14790


நெய் வார்த்த கடன் நின்று வாங்கினாற் போல.

நெய் வார்த்த பணம் முழுகிப் போகிறதா?

நெய் வார்த்து உண்டது நெஞ்சு அறியாதா?

நெருக்க நட்டு நெல்லைப் பார்; கலக்க நட்டுக் கதிரைப் பார்.

நெருஞ்சி முள் தைத்தாலும் குனிந்தல்லவா பிடுங்க வேண்டும்? 14795

(ஆனாலும்.)


நெருஞ்சி முள்ளுக்குக் கோபம் வந்தால் கவட்டை மட்டுந்தானே?

நெருப்பால் வெந்த குழந்தை நெருப்பைப் பார்த்தால் பயப்படும்; சூடுண்ட பூனை அடுப்பங்கரை போகாது.

நெருப்பில் ஈ மொய்க்குமா?

(நெருப்பை.)

நெருப்பில் நெய் விட்டது போல.

நெருப்பில் பஞ்சு போட்டாற் போல. 14800


நெருப்பில் பட்ட மெழுகைப் போல.

நெருப்பில் புழுப் பற்றுமா?

நெருப்பில் போட்டாலும் நெஞ்சு வேகாது.

நெருப்பில் போட்டாலும் வேகுமா?

நெருப்பில் மெழுகைப் போட்டாற் போல. 14805


நெருப்பில் விழுந்த புழுப் போல.

(+ துடிக்கிறது.)

நெருப்பினும் பொல்லாச் செருப்பு.

நெருப்பினும் பொல்லாது கருப்பின் வாதை.

(கருப்பு-பஞ்சம்.)

நெருப்பு அருகில் செத்தை கிடந்த கதை.

நெருப்பு ஆறு, மயிர்ப்பாலம். 14810


நெருப்பு இருக்கிற காட்டை நம்பினாலும் நீர் இருக்கிற காட்டை நம்பக் கூடாது.

(நாட்டை.)

நெருப்பு இல்லாமல் நீள் புகை எழுமா?

நெருப்பு இல்லாமல் புகை கிளம்பாது.

நெருப்பு என்றால் வாய் சுடுமா?

நெருப்பு என்றால் வீடு வெந்து போகுமா? 14815


நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்து விடாது.

நெருப்புக்கு ஈரம் உண்டா?

நெருப்புக்குத் தீட்டு இல்லை; எச்சிலும் இல்லை.

நெருப்புககு நீர் பகை.

நெருப்புச் சிறிது எனறு முன்றானையில் முடியலாமா? 14820


நெருப்புச் சுட்டு உமிக் காந்தலில் விழுந்தது போல.

நெருப்பு நிறை காட்டில் ஏதாவது நிற்கும்; நீர் நின்ற காட்டில் ஒன்றும் நிற்காது.

நெருப்புப் பந்தம் கட்டிக் கொண்டு நிற்கிறான்.

நெருப்புப் பந்தலிலே மெழுகுப் பொம்மை ஆடுமா?

நெருப்பும் சரி; பகையும் சரி. 14825


நெருப்பு ஜ்வாலையில் தண்ணீர் விட்டு அணைத்தது போல.

நெருப்பை அறியாமல் தொட்டாலும் சுடும்.

நெருப்பை ஈ மொய்க்குமா?

நெருப்பைக் கண்டு மிதித்தாலும் சுடும்; காணாமல் மிதித்தாலும் சுடும்.

நெருப்பைச் சார்ந்த யாவும் அதன் நிறம் ஆகும். 14830


நெருப்பைச் சிறிது என்று நினைக்கலாமா?

நெருப்பைச் செல் அரிக்குமா?

நெருப்பைத் தலைகீழாய்ப் பிடித்தாலும் அதன் ஜ்வாலை கீழ் நோக்குமா?


நெருப்பை நம்பினாலும் நீரை நம்பக்கூடாது.

நெருப்பைப் புழுப் பற்றுமா? 14835


நெருப்பை மடியில் கட்டிக் கொண்டிருக்கிறான்.

(கட்டிக்கொண்டிருப்பது போல.)

நெருப்பை மடியில் முடிகிறதா?

(முன்றானையில்.)

நெல் அல்லாதது எல்லாம் புல்.

நெல் இருக்கப் பொன்; எள் இருக்க மண்.

நெல் எடுக்கவும் புல் எடுக்கவும் ஆச்சே. 14840


நெல் ஏறக் குடி ஏற.

நெல் குறுணி; எலி முக்குறுணி.

நெல்லால் அடித்தால் கல்லால் அடிப்பான்.

நெல்லிக்காய் மூட்டை.

நெல்லிக்காயைத் தின்று தண்ணீர் குடித்தால் உடன் பிறந்தவர்களுடன் பேசினமாதிரி இருக்கும்; மாம்பழம் தின்று தண்ணீர் குடித்தால் மாமியாருடன் பேசினமாதிரி இருக்கும். 14845


நெல்லுக்கடை மாடு கன்று போடட்டும்.

நெல்லுக் காய்ச்சி மரம் என்று கேட்டவன் போல.

(நெல்லுக் காய்க்கிற.)

நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பாயும்.

நெல்லுக்குத் தாளும் பெண்ணுக்குத் தோழனும்.

நெல்லுக் குத்தினவனுக்கு நேர் உடன் பிறந்தாள். 14850

(உறவு இல்லை என்ற குறிப்பு.)


நெல்லுக் குத்துகிறவளுக்குக் கல்லுப் பரீட்சை தெரியுமா?

நெல்லுக்கு நேரே புல்.

நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்.

நெல்லுக்குள் அரிசி இருக்கிறது என்றானாம்.

நெல்லுக்குள்ளே அரிசி இருக்கிறது; எள்ளுக்குள்ளே எண்ணெய் இருக்கிறது. 14855


நெல்லுடன் பதரும் சேர்ந்தே இருக்கும்.

நெல்லும் உப்பும் பிசைந்து உண்ணக்கூடுமா?

நெல்லூர் மாடுபோல இருக்கிறாள்.

நெல்லைக் காணாத காக்கை அரிசியைக் கண்டாற் போல.

நெல்லை விற்ற ஊரில் புல்லை விற்பதா? 14860


நெல்லோடு பதரும் உண்டு.

நெல்வகை எண்ணினாலும் பள்ளுவகை எண்ண முடியாது.

நெல் விளைந்த பூமியும் அறியாய்: நிலா எறித்த முற்றமும் அறியாய்.

(நிலமும் தெரியாது; நிலாக் காய்கிற இடமும் தெரியாது.)

நெல் வேர் இடப் புல் வேர் அறும்.

நெற் செய்யப் புல் தேய்ந்தாற் போல. 14865

(பழமொழி நானூறு.)


நெற்பயிர் செய்யின் பிற்பயிர் விளையும்.

நெற்றிக் கண் காட்டினாலும் குற்றம் குற்றமே.

(நக்கீரர் கூற்று: திருவால. 16.27)

நெற்றிக்குப் புருவம் தூரமா?

நெற்றியில் கண்.

நெற்றியில் கண் படைத்தவனா? 14870


நெற்றியில் மூன்று கண் படைத்தவன் வரவேண்டும்.

நெற்றி வேர்வை நிலத்தில் விழ உழைத்தான்.

நெறி தப்புவார்க்கு அறிவிப்பது வீண்.


நே


நேசம் உள்ளளர் வார்த்தை நெல்லிக்கனி தின்றது போல.

நேசமும் பாசமும் நேசனுக்கு உண்டு. 14875


நேத்திர மணியே சூத்திர அணியே.

நேயமே நிற்கும்.

நேர் உத்தரம் சென்மப் பழி.

நேர்ந்து நேர்ந்து சொன்னாலும் நீசக் கசடர் வாசமாகார்.

நேர்பட ஒழுகு. 14880


நேர்மை இல்லா மந்திரியும் நீதி இல்லா அரசும் பாழ்.

நேர்மை உண்டானால் நீர்மையும் உண்டு.

நேர்வழி நெடுக இருக்கக் கோணல் வழி குறுக்கே வந்ததாம்.

நேரா நோன்பு சீர் ஆகாது.

நேருக்கு நேர் சொன்னாலும் கூர் கெட்டவனுக்கு உறைக்காது. 14885


நேரும் சீருமாக.

நேரும் சீருமாய்ப் போக வேண்டும்.

நேரே போனால் எதிரும் புதிரும்.

( : சொந்தம் என்னவென்றால் சொல்லும் வழக்கம்.)

நேற்று இருந்தவனை இன்றைக்குக் காணோம்.

நேற்று உள்ளார் இன்று மாண்டார். 14890


நேற்றுப் பிறந்த நாய்க்கு வந்த பசியைப் பார்.

நேற்றுப் பெய்த மழையில் முளைத்த காளான்.

நேற்று வந்த மொட்டைச்சி நெய் வார்த்து உண்ணச் சிணுங்குகிறாள்.

நேற்று வந்தாளாம் குடி; அவள் தலைமேல் விழுந்ததாம் இடி.

நேற்று வெட்டின கிணற்றில் முந்தா நாள் முதலை புறப்பட்டதாம். 14895

(குளத்தில், முந்தாநாள் வந்த முதலை.)


நேற்றே நெருப்பு அணைந்துவிட்டது என்பாளே அவள்.


நை


நைடதம் புலவர்க்கு ஒளடதம்.

நைபவர் எனினும் நொய்ய உரையேல்.

(நையவா.)

நையக் கற்கினும் நொய்ய நன்குரை.

நையப் புடைத்தாலும் நாய் நன்றி மறவாது. 14900


நைவினை நணுகேல்.


நொ


நொடிக்கு நூறு கவி.

நொடிக்கு நூறு குற்ற நொடிக்கு நூறு வசனம் சொல்வாள்.

நொடிப் போதும் வீண் கடேல். 14905


நொண்டி ஆயக்காரன் கண்டு மிரட்டுகிறது போல.

நொண்டி ஆனைக்கு நூறு குறும்பு.

நொண்டி ஆனை நொடியில் அழிக்கும்.

நொண்டிக் கழுதைக்குச் சறுக்கினது சரக்கு.

நொண்டிக்கு உண்டு நூற்றெட்டுக் கிறுக்கு. 14915

(நூறு கிறுக்கு.)


நொண்டிக்குக் குச்சோட்டமா?

நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.

நொண்டிக் குப்பன் சண்டைக்குப் போனான்.

நொண்டிக்கு நூற்றெட்டுக் கால்.

நொண்டிக்குப் பெயர் தாண்டவராயன்; நொள்ளைக் கண்ணனுக்குப் பெயர் செந்தாமரைக் கண்ணன். 14920


நொண்டிக்கு விட்ட இடத்திலே கோபம்.

நொண்டிக் கோழிக்கு உரல் கிடை தஞ்சம்.

நொண்டி நாய்க்கு ஓட்டமே நடை.

நொண்டி நொண்டி நடப்பானேன்? கண்டதற் கெல்லாம் படைப்பானேன்?

நொண்டி புரத்தான் முயல் போச்சு. 14925


தொண்டியால் முயல் போயிற்று.

நொண்டுகிற மாடு பொதி சுமக்காது.

நொந்த கண் இருக்க நோக்கக் கண்ணுக்கு மருந்து இட்ட மாதிரி.

நொந்ததை உண்டால் நோய் உண்டாகும்.

நொந்த புண்ணிலே வேல் கொண்டு குத்தலாமா? 14930


நொந்த மாட்டில் ஈ ஒட்டினது போல.

நொந்தவர்களைக் கொள்ளை இடுகிறதா?

நொந்து அறியாதவன் செந்தமிழ் கற்றோன்.

(அறியார்.)

நொந்து நூல் அழிந்து போகிறது.

நொந்து நொந்து சொன்னாலும் நீசக்கயவர் வசமாகார், 14935


நொய் அரிசி கொதி பொறுக்குமா?

(தாளாது?)

நொய் அரிசி பொரி பொரிக்காது.

நொய்யர் என்பவர் வெய்யவர் ஆவார்.

நொள்ளைக் கண்ணனுக்கு நோப்பாளம்.

(கண்ணுக்கு.)

நொள்ளைக் கண்ணனுக்கு மை இடுகிறதா? 14940


நொள்ளைக் கண்ணு நரிவிழுந்து லோகம் மூணும் சென்ற கதை.

நொள்ளைக் கண் மூடி என்ன? விழித்தென்ன?

நொள்ளை நாய்க்கு வெள்ளை காண்பித்தாற் போல.

நொறுங்கத் தின்றால் நூறு ஆயிசு.

(வயசு.)

நொறுங்குண்டவனைப் புறங்கொண்டு உரைப்பான். 14945

(நொறுக்குண்டவணை உரைப்பாய்.)

நோ


கத்துக்கு ஒதுங்கு.

நோக்க நோக்குவ, நோக்காமுன் நோக்குவான்.

நோகாது உணர்வோர் கல்வியை நோற்பார்.

நோகாமல் அடிக்கிறேன்; ஓயாமல் அழு.

(அடித்தேன், அழுதான்.)

நோஞ்சல் பூனை மத்தை நக்குகிறது போல. 14950


நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

நோய் அற்ற வாழ்வே வாழ்வு; குறைவற்ற செல்வமே செல்வம்,

நோய் ஒரு பக்கம்; சூடு ஒரு பக்கமா?

நோய்க்கு இடம் கொடேல்.

நோய்க்கும் பார்; பேய்க்கும் பார். 14955


நோய் கண்டார் பேய் கண்டார்.

(கொண்டார்.)

நோய் கொண்டால் பார்ப்பாரும் தின்பார் உடும்பு.

(பழமொழி நானூறு.)

நோய் தீர்ந்தபின் வைத்தியனை மதிக்கமாட்டார்.

நோய்ந்த புலியானாலும் மாட்டுக்கு வலிது.

(நோய் பிடித்த.)

நோய்ப்புலி ஆகிலும் மாட்டுக்கு வல்லது. 14960


நோய் பிடித்த கோழி போலத் தூங்கி வழிகிறான்.

நோய் போக்குவது நோன்பு; பேய் போக்குவது இரும்பு.

(வேம்பு)

நோயாளிக்கு ஆசை வார்த்தை சொன்னாற் போல,

நோயாளிக்குத் தெரியும் நோயின் வருத்தம்.

நோயாளி தலைமாட்டில் பரிகாரி இருந்து அழுதாற் போல. 14965

(பரிகாரி-வைத்தியன்.)


நோயாளி விதியாளி ஆனால் பரிகாரி பேதாளி ஆவான்,

(விழியாளி.)


நோயைக் கண்ட மனிதன் போல்; நாயைக் கண்ட திருடன் போல்.

நோயோடு நூற்றாண்டு.

நோயோ, பேயோ?

நோலா நோன்பு சீர் ஆகாது. 14970


நோலாமையினால் மேலானது போம்.

நோவு ஒரு பக்கம் இருக்கச் சூடு ஒரு பக்கம் போட்டாற் போல.

நோவு ஒன்று இருக்க, மருந்து ஒன்று கொடுத்தது போல.

நோவு காடு எறிப் போச்சு.

நோன்பு என்பது கொன்று தின்னாமை. 14975



நௌ


நௌவித் தொழில் நாசம்.

நௌவியில்தானே கல்வியறிவைக் கல்.

நௌவியும் முதுமையும் நடுவும் அற்றவன்.

நௌவியும் வாழ்க்கையும் அழகு அல்ல. நற்குணம் ஒன்றே அழகு.

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழ்ப்_பழமொழிகள்_3/14&oldid=1481915" இலிருந்து மீள்விக்கப்பட்டது