இளையர் அறிவியல் களஞ்சியம்/ஒளியாண்டு
Appearance
ஒளியாண்டு : தரைப்பகுதியில் ஒரு இடத்துக்கும் மற்றொரு இடத்திற்கும் இடையே உள்ள தூரத்தைத் துல்லியமாக அளந்து கிலோமீட்டர் கணக்கில் குறிக்கிறோம். ஆனால் வானில் ஒரு கோளுக்கும் இன்னொரு கோளுக்கும் இடையேயுள்ள தூரத்தை கிலோமீட்டரில் குறிப்பதில்லை. ஏனெனில் விண்வெளியை தரைப்பகுதியை அளப்பது போல் கிலோமீட்டர் கணக்கில் அளக்க இயலாது. எனவே வானத் தொலைவுகளை ஒளியாண்டு என்ற கணக்கிலே அளக்கிறார்கள். ஒளி ஒரு விநாடிக்கு 8,00,000 கிலோமீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்கிறது எனக் கணக்கிட்டுள்ளார்கள். இந்தக் கணக்கின் அடிப்படையில் ஓராண்டுக் காலத்தில் பாயும் ஒளியின் வேகமே ஒளியாண்டு என அழைக்கப்படுகிறது. இது வான தூரத்தை அளக்கும் அளவியாகவும் கொள்ளப்படுகிறது.