உள்ளடக்கத்துக்குச் செல்

இளையர் அறிவியல் களஞ்சியம்/கணிப்பொறி

விக்கிமூலம் இலிருந்து

கணிப்பொறி : மின்னாற்றலால் இயங்கும் கணிப்பொறி இன்றைய வாழ்வில் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது எனலாம். நாம் பலமணி நேரம் செய்யவேண்டிய பணிகளை, கணிப்புகளை ஒருசில நொடிகளுக்குள்ளாகவே கணிப்பொறி கணித்துத் தந்துவிடுகிறது.

தொடக்கக் காலத்தில் கணக்குப் பொறியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கணிப் பொறிகள் (Camputers) மிகப் பெரியதாக உருவாக்கப்பட்டன. ஆனால் இன்று கையடக்கமாக

கணிப்பொறி

சிறு வானொலிப் பெட்டி வடிவில் கிடைக்கின்றன. நாம் தரும் தகவல்களைச் சேமித்தும் தேவைப்படும்போது அவற்றைத் தேவைக் கேற்பக் கணித்தும் தந்துதவுகின்றன.

இன்று கணிப்பொறிகள் மருத்துவத் துறையிலும் மிகப் பெரும் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றன. மிக நுண்மை வாய்ந்த அறுவை சிகிச்சைகளை கணிப்பொறி உதவியுடன் செய்ய முடிகிறது. எழுத்துக்களை எழிலுடன் அச்சுக்கோக்க இப்பொறி பயன்படுகிறது. கணிப்பொறிகளின் உதவியோடு செயற்கை மனிதனை உருவாக்கி இயக்க முடிகிறது. மனிதன் செய்ய வேண்டிய பணிகளை அவனைவிட விரைவாகவும் துல்லியமாகவும் செய்ய கணிப்பொறிகளால் முடிகிறது என்பது வியப்பூட்டும் செய்தியாகும்.